தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 7, 2007

மேலப்பாளையம் மும்தாஜ் படுகொலை நியாயமா? (VIDEO)


நாம் கடந்த மாதம் நம்து வலையில் “தமிழகம் பாகிஸ்த்தானாக மாற்றப்படும் அபாயம்” என்ற தலைப்பில் மேலப்பாளையத்தில் ஒரு முஸ்லிம் பென் விபச்சாரக் குற்றத்திற்காக இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றப்போகின்றோம் என்று கூறித்திறியும் சில முஸ்லிம் பெயர் தாங்கி தீவிரவாதிகளால் நடு ரோட்டில் படு கொலை செய்யப்பட்டது குறித்து எழதியிருந்தோம்.

இந்தக் கொலையில் தமிழக அரசும், காவல் துறையும் கொலையின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யாதல் கொலை செய்தவர்களை மட்டும் கைது செய்ததன் விளைவு மும்தாஜ் கொலையின் இரத்தம் காய்வதற்குள் அதே காரனத்திற்காக மற்றோர் கொலை அதே மேலப்பாளையத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

காவல்துறையும் வழக்கம்போல் தனது பெயர் கெட்டுவிடாமல் இருப்பதற்காக சாக்கடை நீரை விடுவதில் தகறாறு அதனால் பென் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற ரீதியில் வழக்கை சித்தரிக்கின்றது. இன்னும் முந்தைய வழக்கிலும் இந்த வழக்கிலும் “அல் உம்மா தீவிரவாதிகள்” என்ற ரீதியிலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மும்தாஜ் படுகொலையில் கைதான தீவிரவாதிகள்
தமிழக அரசையும் காவல்துறையையும் எச்சரிக்கின்றோம், இன்னும் நீங்கள் “அல் உம்மா தீவிரவாதிகள்” என்ற ரீதியிலேயே அணைத்து வழக்குகளையும் பதிந்தீர்கள் என்றால் தமிழகம் பாகிஸ்த்தான், ஈரான் என்று பல நாடுகளின் பண உதவி பெறும் தீவிரவாதிகளின் கொலைக்களமாக மாறி சட்டம் ஒழுங்கு சீரழிவதை யாராலும் தடுக்க இயலாது.

இன்று தமிழகத்தில் ஒரு இரகசிய இயக்கம் படுகொலைகளையும் சதிச்செயள்களையும் “அல் உம்மா” அல்லாஹ்வின் அடிமைகள்”
என்றும் இன்னும் பல போலி PROXY பெயர்களில் செய்து வருகின்றது. இந்த உண்மை குற்றவாளிகளையும் அதன் தலைவர்களயும் தமிழக அரசு கைது செய்து நசடவடிக்கை எடுக்காமல் “அல் உம்மா” அல்உம்மா என்று கூறி வந்தால் மீண்டும் கோவை மற்றும் மும்பை கொடூரத்தை விட படுபயங்கர பாதகச் செயல் ஒன்று தமிழக மன்னில் நடக்கவிருப்பதை தவிர்க்க இயலாது.

மும்தாஜை அடுத்து நேற்று முன்தினம் மேலப்பாளையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஹைருன் நிஷா உள்பட எந்தக் கொலையிலும் “அல் உம்மா” என்ற செத்துப்போன அமைப்பின் பங்கு இல்லை. இந்தப் பெயரிலும் இன்னும் பல பெயர்களிலும் தமிழகத்தில் PROXY ஆக இயங்கி வரும் வெளி நாட்டு ஆதரவை பெறும் தீவிரவாத அமைப்பையுமு் அதன் மூல காரணகர்த்தாக்களையும் கண்டுபிடிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹைருன் நிஷா படுகொலையில் கைதான தீவிரவாதிகள் சிலர்
நேற்று முன்தினம் மேலப்பாளையத்தில் விபச்சாரக் குற்ற்றத்திற்காக கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஹைருன் நிஷா என்பவரின் படு கொலை சம்பந்தமாக வந்த செய்திகள் :

செய்தி 1

செய்தி 2

மேலும் தமிழக முஸ்லிம்கள் இவ்விஷயத்தில் மிக உஷாராக இருப்பது மிக்க அவசியம் இல்லையெனில் இந்தக் கூட்டத்தினரால் கூடிய விரைவில் தமிழக முஸ்லிம்களுக்கு பேராபத்து குஜராத், மும்பையில் ஏற்ப்பட்டது போல் ஏற்படுவதை தடுக்க இயலாது.

ஜனாப்.பஸ்லுல் இலாஹி
மேலப்பாளையம் மும்தாஜ் படுகொலையை கண்டித்து “மும்தாஜ் படுகொலை நியாயம்தானா?” என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜனாப் க.அ. முகம்மது பஸ்லுல் இலாஹி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோவை இங்கு சொடுக்கி காணவும்.

இந்த வீடியோ இரண்டு சிடிக்களாக உள்ளது அவசரத்தில் தெளிவாக இல்லாமல் பதிவேற்றம் செய்துள்ளார் நமது இந்திய செய்தியாளர். கூடிய விரைவில் இரண்டு செய்திகளும் முழுமையாக இங்கு வெளியிடப்படும்.

மீண்டும் தமிழக அரசுக்கும் மத்திய மாநில உளவத்துறை மற்றும் காவல் துறையினருக்கு நமது எச்சரிக்கை என்னவென்றால் இந்த அல் உம்மா” பூச்சான்டியை விட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகளையும், தமிழகத்தில் பேராபத்தாய் வளர்ந்து வரும் இந்திய மற்றம் உலக அளவில் அணைத்த தீவிரவாத அமைப்புக்களுடனும் தொடர்புள்ள ஒரு இரகசிய தீவிரவாத இயக்கத்தையும் கண்டுபிடித்து உடணடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்னர் அதற்காக வருந்த நேரிடும்..
Advertisements

Create a free website or blog at WordPress.com.