தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஒக்ரோபர் 19, 2007

இடஒதுக்கீடு-முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு(MNA)

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு


ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 13.10.2007 சனிக்கிழமை துபாய் மம்சார் பூங்காவில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

துவக்கமாக ஏ.பக்ருதீன் அலி அஹமது இறைவசனங்களை ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் N.S.A . நிஜாமுதீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு அனைவரும் தங்களது ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக் கொண்டார். A.H. ஜாஹிர் ஹ ¤ சைன் முன்னிலை வகித்தார்.

M. காஜா நஜுமுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் S. சம்சுதீன் தனது துவக்கவுரையில் எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணங்கள் தான் முக்கியம் என்றார்.

www.mudukulathur.com இணையத்தளத்தை ஆடிட்டர் H. அமீர்சுல்தான் துவக்கி வைத்தார். அமீரகத்தில் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட சூழலையும், அதற்கு அடிகோலியவர்களையும் நினைவு கூர்ந்தார்.


ஆவூர் மெளலவி இஸ்மாயில் ஹஸனி தனது சிறப்புரையில் மருத்துவம் , விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கிய முஸ்லிம் சமுதாயத்தின் வரலாறு மறைக்கப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்தார். கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் முதுகுளத்தூர் ஜமாஅத்தின் சேவை சிறப்புற வாழ்த்தினார். இதுபோன்ற சேவைகளுக்கு உதவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பொதுச்செயலாளர் K முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் ( முதுவை ஹிதாயத் ) ஆண்டறிக்கையும், ஒருங்கிணைப்பாளர் H. இப்னு சிக்கந்தர் எதிர்கால திட்டத்தையும் விவரித்தனர்.

S. அமீனுதீன் , A. ஜஹாங்கீர், A. சிக்கந்தர் ஹ ¤ சைன், A. பக்ருதீன் அலி அஹ்மது, N. ஜெஹ்பர் சாதிக் , S.N. பக்ருதீன், M. ஹபிப் திவான் , M. ஜாஹிர் ஹ¤ சைன், N.J. சீனி முஹம்மது, முஹம்மது ஜாபர், A. அஹ்மது இஸ்மத்துல்லா , S. தாஹா முஹம்மது உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளர் A. அஹ்மது இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

Create a free website or blog at WordPress.com.