தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 22, 2008

மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானா கலைஞர் கருனாநிதி

Filed under: முஸ்லிம் லீக், லீக் — முஸ்லிம் @ 6:46 பிப

தி.மு.கழகத்திற்கும் எங்களுக்கும் தொப்புள் கொடி உறவு
கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேச்சு (நன்றி – முரசொலி – 20.01.2004 இதழில் வெளிவந்தது)

கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும். தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் உள்ள உறவு தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள தொப்புள் கொடி உறவாகும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் அக்கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் கலைஞர் தலைமையிலான மதநல்லிணக்க முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேர்கிறது என்பதைத் தெரிவித்தோம். கலைஞர் அவர்களும் நம்மை அன்போடு சேர்த்துக் கொண்டார்கள்.

கலைஞருக்கு முழு ஆதரவு

தமிழ்நாட்டிலே வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்தினருக்கு அங்கீகரிக்கப்பட்ட, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே அரசியல் பேரியக்கமாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைஞருக்கும் அவரது முற்போக்கு கூட்டணிக்கும் தன்னுடைய முழு ஆதரவையும் தந்து கலைஞருடைய தலைமையை ஏற்றுக் கொள்கிறது.

இந்த முடிவினை உங்களுக்கு தெரிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகினைச் சேர்ந்த நாம், கலைஞர் அவர்களை புதிதாகப் பார்க்கக் கூடியவர்கள் அல்லர். நாம் அவர்களோடு இல்லாத நேரத்தில் கூட அவர்கள் அருகிலேதான் இருந்திருக்கிறோம்.

அவர்களிடமிருந்து நாம் தூரத்திலே சென்றிருந்தாலும் கூட அவர்களோடு நாம் இதயபூர்வமான உறவை தொடர்ந்தே வந்திருக்கிறோம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய ஸ்தானத்திலே இச்சமுதாயம் கலைஞர் அவர்களை அன்று முதல் இன்று வரை வைத்துப் போற்றி வருகிறது என்பதை இத்தருணத்திலே சொல்ல வேண்டியது என்னுடைய கடமை!

கலைஞரின் அற்புதமான உரை:

கலைஞர் அவர்களை விமர்சித்த காலம் எல்லாம் கூட உண்டு. அந்த சமயத்தில் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தார். முரசொலியிலே அந்த உரை வெளியாகியிருந்தது. அந்த உரை ஒரு அற்புதமான உரை அதனைச் சொல்வது பல பேருக்கு அதிசயமாக் கூட இருக்கலாம். திருக்குரானிலே உள்ள 6,666 வசனங்களில் ஆண்டவனைப் பற்றிய வர்ணனை: ஒரு வசனம்:

இறைவன் வானம் பூமிக்கெல்லாம் ஒளிமயமாக இருக்கக்கூடியவன், ஒளியாய் இருக்கக்கூடியவன் – என்று ஒளியைப் பற்றி திருக்குரானிலே இறைவனை சம்பந்தப்படுத்தி வருகிற அந்த ஆயத்துக்கு வசனத்துக்கு நானும் எனது 50 ஆண்டு கால ஆராய்ச்சிpலே தமிழ்நாட்டிலே உள்ள வியாக்யான கர்த்தாக்கள், உலகளவிலே உள்ள திருக்குரானுடைய காமெண்டேட்டர்கள், மாபெரும் அறிஞர்களுடைய உரைகளையெல்லாம் படித்திருக்கிறேன். அந்த ஆராய்ச்சிpயிலே நான் 40 ஆண்டு காலமாக என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த திருக்குரான் வசனத்திற்கு தமிpழிலே ஒரு அழகான இரத்தினச் சுருக்கமான விளக்கத்தை சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்த நேரத்திலேதான் கலைஞர் அவர்கள் தந்திருந்த அந்த உரையினை படித்து மெய்சிலிர்த்துப் போனேன்.

இது சாதாரண மனிதர் சொல்லக்கூடியது அல்ல. இது வலியுல்லாக்களும், ஆன்மீகச் செல்வங்களும், சொல்லக்கூடிய விளக்கம் என்று அவர்களுக்கே நான் எழுதினேன். இதை எப்படி நீங்கள் சொன்னீர்கள். எதைப் படித்துச் சொன்னீர்கள்? என்று கேட்ட போது சிரித்துக் கொண்டார்.

பட்டது சொன்னேன் என்றார். என்ன சொன்னார் தெரியுமா?

கற்பனைக்கு எட்டாத வெட்;ட வெளியிpலிருந்து தானே எழுந்து வெளிக் கிளம்பி வருகிற ஒளி வெள்ளம் என்று அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

உங்களுடைய இந்த விளக்கம் : கலைஞர் அவர்களே உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. சரித்திரம் காணாத அளவிற்கு உங்களது பெயரும் புகழும் உயர்ந்திருக்கிறது.

உண்மையாகச் சொல்கிறேன், திருக்குரானில் இந்த வசனத்திற்கு யாரும் சொல்லாத அழகிய அர்த்தத்தை, அழகிய தெளிவுரையைச் சொன்ன உங்களை எங்களுடைய மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஆன்மீக குருவாக நான் என்னைப் பொருத்தவரை ஒப்புக் கொள்கிறேன். ஆன்மீக ரீதியாக எனக்கு அறிவுரை கூறிய மிகப் பெரிய அறிஞராக நான் கலைஞரை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வில்தான் அவர்களோடு நாம் என்றும் பழகி வந்திருக்கிறோம். அவர்களைப் போற்றி வருகிறோம். அவர்களைப் பாராட்டி வருகிறோம்.


நாடித்துடிப்பை அறிந்தவர்

கலைஞர் அவர்கள் ஏதோ இன்று நேற்று இந்த சமுதாயத்Nhடு உறவு கொண்டவரல்லர். இந்த சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த சமுதாயத்தினுடைய ஒவ்வொரு நாடித்துடிப்பையும் அறிந்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பற்றி அணு அணுவாகப் புரிந்து கொண்டிருக்கிற மாமேதை அவர். நான் வெட்கப்படாமல் சொல்வேன், வெளிப்படையாகச் சொல்வேன் – திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்த காலத்திலேதான் நாங்கள் மதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன. எங்களுக்கு கண்ணியம் காக்கப்பட்டிருக்கிறது.

உங்களோடு இருந்த காலத்திலே எங்களுக்கு அருகிலே எம்.பி. என்ற பட்டம் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே ராஜ்ய சபை உறுப்பினர்களாக நாங்கள் ஆக முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலேதான் சட்டமன்றத்திலே எம்.எல்.ஏக்கள் என்ற அந்த பட்டங்கள் எல்லாம் எங்களால் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே தான் முனிசிபாலிட்டியிலே மாநகராட்சிpயிலே தலைவர்களாக துணைத் தலைவர்களாக எங்களால் வர முடிந்தது.

இதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள உறவு மற்ற கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு போன்றதல்ல. இது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது.

இது தொப்புள்கொடி உறவு என்று சொல்வார்களே அப்பேர்ப்பட்ட உறவு. யாதும் ஊரே யாவரும் கேளீர், ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று தமிழ் நெறியை நீங்கள் (கலைஞர்) வரிவரியாக விளக்கி விவரித்து இந்த நாட்டு மக்களுக்கு போதனையாகச் செய்து கொண்டிருக்கிறீர்களே அந்த போதனையை தமிழ்நெறியை அந்தத் தமிழ்த் தத்துவங்களை உலகமெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மார்க்கத்திலே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த முஸ்லிம் சமுதாயம் தமிழ் நெறியின் தத்துவ மேதையாக தங்களை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்லாமல், இஸ்லாமிய நெறியின் போதகராக தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சொல்ல வேண்டியது எனது கடமை!

கலைஞரோடு இருப்பது பொற்காலம்

உங்களோடு இருந்தகாலம், எங்களுக்குப் பொற்காலம். உங்களோடு இல்லாத காலம் எங்களுக்கு கற்காலம். அந்த கற்காலம் சில காலம் ஆனால் உங்ளோடு இருக்கக்கூடிய அந்த பொற்காலம் மீண்டும் திரும்பி விட்டது என்று அன்றைக்கு சொன்னீர்களே, அந்த பொற்காலம் இன்று திரும்பி விட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும், தி.மு.க.விற்கும் உள்ள இந்த உறவு ஏதோ அரசியல் ரீதியான உறவல்ல. குடும்ப ரீதியான உறவல்ல. பண்பாட்டு ரீதியிலான உறவு. தத்துவ ரீதியான உறவு. இதய பூர்வமான உறவு. உணர்ச்சி பூர்வமான உறவு. உண்மையான உறவு. யாராலும் தவிர்க்க முடியாத அற்புதமான நிரந்திர உறவு என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அரசியலில் அவ்வப்போது சில விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டது உண்டு. ஆனால் இத்தகைய மாற்றங்கள் இனி ஒரு போதும் ஏற்படமுடியாது ஏற்படக்கூடாது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அத்தகைய பழைய கால பண்பாட்டு உறவை நினைவிலே வைத்து உங்களுடைய நடவடிக்கை அத்தனையும் எங்கள் மீது இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த அன்பும் பாசமும் என்றும் தழைக்கும், நாளையும் தழைக்கும், நிரந்தரமாக தழைத்து நிற்கும்.

கலைஞருக்கு துணை நிற்போம்

இந்தச் சமுதாயம் உங்கள் பின்னே நின்று உங்களுக்கு ஒத்தாசையாக, நீங்கள் எடுக்கக்கூடிய எந்த முடிவாக, நீங்கள் செல்லக்கூடிய எந்த வழியாக இருந்தாலும், நீங்கள் ஆற்ற கூடிய பணி எதுவாக இருந்தாலும் அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை மட்டுமல்ல, தமிழக முஸ்லிம் சமுதாயம் அனைத்தும்.. அதற்கு உறுதுணையாக நிற்போம், எங்களது அழைப்பை ஏற்று நீங்கள் சிறப்பாக வருகை தந்து எங்களுக்கு அறிவுரை கூற வந்திருப்பது கண்டு நாங்கள் மெத்தவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களது அகில இந்திய பொதுச்செயலாளர் அகமது அவர்கள் பல்வேறு பணிகளுக்கிடையிலும் நீங்கள் வருகிறீர்கள் என்று சொன்னவுடன் உடனே நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க வின் பார்வையில் அன்று கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள்

தி.மு.க வின் பார்வையில் இன்று கண்ணியமிழந்த முனீருல் மில்லத்??? அவர்கள்

அதிர்ச்சியடையாமல் முகவைத்தமிழனின் இந்த பதிவையும் பார்க்கவும்….

Create a free website or blog at WordPress.com.