தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 24, 2008

மேலப்பாளையத்தில் தமுமுக வின் திட்டத்தால் கைதான மாநகராட்சி ஊழியர்

Filed under: தமுமுக, மேலப்பாளையம், லஞ்சம் — முஸ்லிம் @ 4:02 பிப
மாட்டிக் கொண்ட மாநகராட்சி ஊழியர்

நெல்லை, மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவைச் சார்ந்தவர் மௌலவி காசிம் பிர்தௌசி, இவர் ஹாமீம்புரம் தவ்பா பள்ளியில் இமாமாகவும் உள்ள இவர் த.மு.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளரும் ஆவார். இவரது மாமியார் ஜெய்லானி தனது பழைய வீட்டைப் புதுப்பித்து மாடியுடன் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு புதிதாக தீர்வை செலுத்த வேண்டி மாநகராட்சிக்கு மனு செய்திருந்தார்.

இதனை அறிந்த நெல்லை மாநகராட்சி ஊழியர் 34வது வார்டு பில் கலெக்டர் பரமசிவம் (47) ஜெய்லானி அவர்களிடம் ‘உங்கள் வீட்டின் மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து தீர்வையும் விரைவில் பெற்று தருகிறேன். அதற்கு நீங்கள் எனக்கு ரூ.5000ஃ- தர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இத்தகவல் காசிம் அறிந்தவுடன் மேலப்பாளையம் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு அவர் நகர நிர்வாகிகளுடன் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டத்தின்படி ரூ.5000ஃ-த்திற்கான நோட்டுகளில் இராசயன பவுடர் பூசப்பட்டது. பின்பு பரமசிவத்திடம் காசிம் இன்று மாலை 5.00 மணிக்கு என்னுடைய வீட்டில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தகவல் தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு முன்பாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் காசிம் பிர்தௌசி வீட்டில் மறைந்திருந்தனர். சரியாக 5 மணிக்கு அங்கு வந்த பரமசிவத்திடம் காசிம் பிர்தௌசி ரூ.5,000ஃ- த்தை வழங்கினார். பரமசிவம் அதனை பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். த.மு.மு.க வினரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

ஏப்ரல் 25, 2008

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

Filed under: தமுமுக, மேலப்பாளையம் — முஸ்லிம் @ 9:41 பிப

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் நகர செயற்குழு கூட்டம் 20.04.2008 ஞாயிறு இரவு 8.30 மணிக்கு நகர த.மு.மு.க.அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாளை ளு.ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான் முன்னிலை வகித்தார். நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன், நகர செயலாளர் யு.ஆ.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, துணை தலைவர் மு.மு.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் நு.ஆ.அப்துல் காதர் உட்பட அனைத்து வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. சொத்து வரியை உயர்த்திய நெல்லை மாநகராட்சியை வன்மையாக கண்டிப்பது.

2. தொடர் மின்வெட்டை சரி செய்யாத மின் வாரியத்தை வன்மையாக கண்டிப்பது.

3. விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

4. ரேசன் கார்டு பெயர் திருத்தம் செய்யும் நடைமுறையில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் பாளையங்கோட்டை வட்ட வழங்கல் துறையை கண்டிப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு சரி செய்ய கோருவது.

5. ஹாமீம்புரம் 12 தெருக்கள், ஞானியரப்பா நகர் 8 தெருக்கள், பங்களப்பா நகர் 5 தெரு, ரஹ்மானியாபுரம் 2 தெரு, ராஜா நகர், தாய் நகர், அமுதா நகர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரு அடக்கஸ்தலம் (மயானம்) தான் உள்ளது. எனவே, மேலும் ஒரு அடக்கஸ்தலத்திற்கு அரசு ஒரு இடத்தை ஒதுக்கி தர அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6. மே 10 அன்று மேலப்பாளையத்தில் த.மு.மு.க. தலைவர் ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நகர தலைவர் மு.ளு.ரசூல் மைதீன் நன்றி கூறினார்.

செய்திகள் : K.S.ரசூல் மைதீன்

ஏப்ரல் 17, 2008

மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்

Filed under: மேலப்பாளையம் — முஸ்லிம் @ 9:38 பிப
மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்.


மேலப்பாளையம் I.P.P .சார்பில் 06.04.2008 அன்று மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவில் வைத்து மார்க்க விளக்கப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேர்க்கிளம்பி J.A.Q.H இமாம் யாஸின் இம்தாதி, சமூகக் கொடுமைகள் என்ற தலைப்பிலும், மௌலவி K.S. காசீம் பிர்தௌசி, இழிவுபடுத்தப்படும் இறை இல்லங்கள் என்ற தலைப்பிலும், மீரான் தாவூதி முஸ்லிம்களும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து பயனடைந்தார்கள்.


ஏற்பாடுகளை நகர த.மு.மு.க.தலைவர் K.S..ரசூல் மைதீன், செயலாளர் மைதீன் பாதுஷா, பொருளாளர் காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், E.M. அப்துல் காதர், தக்வா ஜமாத் தலைவர் இனாயத்துல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி : நெல்லை உஸ்மான்

Create a free website or blog at WordPress.com.