தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 15, 2007

யு.ஏ.இ விசிட் விசாவிற்கு ஆப்பு!!

Filed under: யு.ஏ.இ, uae, visit visa — முஸ்லிம் @ 8:59 பிப

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007

அபுதாபி:

சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்தால் அவர்களுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிகளையும் அது வகுத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை இணைச் செயலாளர் ஓபைத் ரஷீத் அல் சஹாமி கூறுகையில், சுற்றுலா விசாவில் வந்து வேலையில் சேருபவர்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள். அவர்கள் எமிரேட்ஸுக்கு மறுபடியும் வரவே முடியாது.

மேலும், இவர்களுக்கு வேலை தரும் நிறுவன உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும். அவர்களை வேலையில் சேர்த்து விடுவோருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும்.

இன்னும் சில வாரங்களில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றார் சஹாமி.

Thanks : Thats Tamil

Create a free website or blog at WordPress.com.