தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 24, 2008

மேலப்பாளையத்தில் தமுமுக வின் திட்டத்தால் கைதான மாநகராட்சி ஊழியர்

Filed under: தமுமுக, மேலப்பாளையம், லஞ்சம் — முஸ்லிம் @ 4:02 பிப
மாட்டிக் கொண்ட மாநகராட்சி ஊழியர்

நெல்லை, மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவைச் சார்ந்தவர் மௌலவி காசிம் பிர்தௌசி, இவர் ஹாமீம்புரம் தவ்பா பள்ளியில் இமாமாகவும் உள்ள இவர் த.மு.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளரும் ஆவார். இவரது மாமியார் ஜெய்லானி தனது பழைய வீட்டைப் புதுப்பித்து மாடியுடன் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு புதிதாக தீர்வை செலுத்த வேண்டி மாநகராட்சிக்கு மனு செய்திருந்தார்.

இதனை அறிந்த நெல்லை மாநகராட்சி ஊழியர் 34வது வார்டு பில் கலெக்டர் பரமசிவம் (47) ஜெய்லானி அவர்களிடம் ‘உங்கள் வீட்டின் மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து தீர்வையும் விரைவில் பெற்று தருகிறேன். அதற்கு நீங்கள் எனக்கு ரூ.5000ஃ- தர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இத்தகவல் காசிம் அறிந்தவுடன் மேலப்பாளையம் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு அவர் நகர நிர்வாகிகளுடன் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டத்தின்படி ரூ.5000ஃ-த்திற்கான நோட்டுகளில் இராசயன பவுடர் பூசப்பட்டது. பின்பு பரமசிவத்திடம் காசிம் இன்று மாலை 5.00 மணிக்கு என்னுடைய வீட்டில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தகவல் தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு முன்பாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் காசிம் பிர்தௌசி வீட்டில் மறைந்திருந்தனர். சரியாக 5 மணிக்கு அங்கு வந்த பரமசிவத்திடம் காசிம் பிர்தௌசி ரூ.5,000ஃ- த்தை வழங்கினார். பரமசிவம் அதனை பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். த.மு.மு.க வினரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.