தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 6, 2008

பாம்பனில் ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்து மீட்பு!!

Filed under: தமுமுக, பாம்பன், வக்ஃப் — முஸ்லிம் @ 11:27 முப
பாம்பன் த.மு.மு.க.வினர் துரித நடவடிக்கையால் வக்ஃப் சொத்து மீட்பு!

பாம்பனில் இருந்து இராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலத்திற்கு கீழ்புறம், முஸ்லிம் ஜமாஅத்திற்கு சொந்தமாக 6 சென்ட் இடம் இருந்தது. சுமார் கடந்த 25 வருடங் களுக்கு முன்னால் வின்சென்ட் என்பவர் அந்த இடத்திற்கு வாடகை யாக ரூபாய் 10/லி செலுத்தி குடிசை போட்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பத்து வருடங்கள் மட்டும் வாடகை செலுத்திவந்த அவர் சிலரின் தூண்டுத லால் தனது பெயருக்கு வரியையும் பட்டாவையும் மாற்றிக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு பின் கடந்த 20.01.2008 அன்று ஜமாஅத் தார்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் மேல் முறையீடு செய்து கூட, சில ரவுடி களை வைத்து மிரட்டி காலி செய்யாமல் இருந்து வந்தார். இராமேஸ்வரம் டி.எஸ்.பி. கமலாபாய் வசம் முறையிட்டும் வின்சென்ட்க்கு சாதகமாகவே டி.எஸ்.பி. யும் பேசி, காலி செய்ய மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ஜமாஅத்தார்கள் தமுமுகவின் மாவட்ட து.தலைவர் ஹுமாயுன் கபீரை அணுகி ”எங்களின் இடத்தை மீட்டுத் தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டதன் பேரில் மாவட்ட து.தலைவர், சக த.மு.மு.க. நிர்வாகி களுடன் வேலிகளை அப்புறப்படுத்த சென்றபோது காவல்துறை தலையிட்டு, ”பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ளுங்கள்; ஜாதி மோதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது” என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஹுமாயுன் கபீர் மற்றும் மாவட்டத் தலைவர் சலிமுல் லாஹ்கான் ஆகியோர், கடந்த 13.02.2008 அன்று ஜமாஅத் சந்திப்பிற்காக வருகை தந்த தமுமுக பொதுச் செயலாளரும், வக்ஃபு வாரியத் தலைவருமான
செ. ஹைதர் அலி அவர்களை பாம்பன் ஜமாஅத்தார்களுடன் சந்தித்து பிரச்சினையை விளக்கினர். இதையடுத்து வக்ஃபு வாரியத் தலைவர், வாரிய அதிகாரிகளுக்கு சம்பவ இடத்திற்கு உடனே சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ôவட்டத் தலைவர் எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில் காவல்துறை உதவியுடன் கடந்த 14.02.2008 அன்று மாவட்ட நிர்வாகிகளும் சர்வேயர்களின் உதவி யுடன் குறிப்பிட்ட இடத்தை அளந்து ஆறு சென்ட் இடத்தை ஜமாஅத்திடம் ஒப்படைத்தது. இதற்காக பெரும் முயற்சி செய்த அமீர் சுல்தான், செய்யது அகமது கபீர், இபுனு உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகள், 15 ஆண்டுகள் போராடியும் கிடைக்காத வக்ஃபு சொத்தை 15 தினங்களில் மீட்டுத் தந்த வக்ஃபு வாரிய தலைவருக்கும் த.மு.மு.க மாவட்ட நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.