தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 13, 2008

த.மு.மு.க.கொடி எரிப்பு

Filed under: வாவா நகரம் — முஸ்லிம் @ 10:16 பிப
த.மு.மு.க.கொடி எரிப்பு

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகில் அமைந்துள்ளது வாவா நகரம் என்ற சிறிய கிராமம். இங்கு பேருந்து நிலையத்திற்கு எதிரே த.மு.மு.க. உட்பட அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்களும் உள்ளன. 11.04.2008 அன்று அங்கு நடைபெற்ற த.மு.மு.க.பொதுக் கூட்டத்தின்போது கழக கொடி த.மு.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.04.2008 அன்று சில விஷமிகள் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கொடிகளை இறக்கி அரைக் கம்பத்தில் பறக்கவிட்டதோடு த.மு.மு.க.கொடியை இறக்கி தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர். காலையில் இதைப் பார்த்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். செய்தி கேள்விப்பட்டு அருகில் உள்ள அச்சன்புதூர் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து த.மு.மு.கவினர் குவிந்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த தென்காசி துணை கண்காணிப்பாளர் திரு.மயில் வாகனன் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என உறுதியளித்தார். வாவா கிளைத் தலைவர் செய்யது மசூது கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தி : நெல்லை உஸ்மான்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.