தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 22, 2008

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது


துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.

‘சிராஜுல் உம்மத்’ விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.

பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.