தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 24, 2007

ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2008

Filed under: ஷெய்கு சதக்கத்துல்ல — முஸ்லிம் @ 2:08 பிப
ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2008சென்னை சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம் ஆண்டு தோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு வழங்கி வருகிறது.

2008 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெறும் சிறந்த நூலுக்கு ரூ. 30,000/- பரிசு வழங்கப் பெறும். இப்பரிசுக்காக இவ்வாண்டு “வன்முறைக்கு எதிரானது இஸ்லாம்” என்னும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நூல்கள் ஏ4 அளவில் கணினி அச்சில், இடம் விட்டு ( Space ) 200 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இது புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ புத்தக அளவு 200 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

தாளில் ஒருபுறம் மட்டும் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.3.2008 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு அனுப்பப் பட வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு :

சீதக்காதி அறக்கட்டளை
எண் 688 ( புதிய எண் 272 ) அண்ணா சாலை
சென்னை 600 006

செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

Advertisements

Create a free website or blog at WordPress.com.