தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 5, 2007

ஸ்பெயினில் இஸ்லாம் ஆவணப்படம் (VIDEO)

Filed under: CMN Salim, coastal media network, saleem, Spainil Islam — முஸ்லிம் @ 12:41 பிப

முஸ்லிம் லீக்கின் இளைஞரணி தலைவரும் கோஸ்ட்டல் மீடியா நெட்வொர்க்கின் நிறுவனருமான சகோ. CMN. சலீம் அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் நமது தமிழ் முஸ்லிம் சமுதாயம் கட்டாயம் உணர்ந்து அறிவு பெற வேண்டும் என்ற நற்சிந்தனையில் மிகுந்த பொருளாதாரமும் நேரமும் செலவி்ட்டு உண்டாக்கியது தான் “ஸ்பெயினில் இஸ்லாம்” என்ற வரலாற்று ஆவனப்படம்.

ஸ்பெயினில் இஸ்லாம் ஆட்சியை பிடித்த வரலாற்றையும் அங்கு அது எவ்வாறு வீழந்தது என்ற வரலாற்றையும் எழுத்துக்கலாக நாம் படித்துள்ளோம். ஸ்பெயின் முஸ்லிம்களின் அந்த வறலாறு நமது இந்திய முஸ்லிம்களுக்கும் பொருந்திப்போகும். நாம் எழுத்தில் படித்ததை விட ஆவணப்படமாக காணும் போது இன்னும் நாம் விளக்கம் பெறலாம். அந்த வகையில் சகோ. சலீம் அவ்களால் உண்ணடாக்கப்பட்ட “ஸ்பெயினில் இஸ்லாம்” என்ற இந்த வரலாற்று ஆவணப்படம் நாம் அறியாத நிறைய வரலாற்று செய்திகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக காண வேண்டிய வரலாற்று ஆவணப் படம் இது. நாம் ஒவ்வொருவரும் வீட்டில் பேண வேண்டிய படமும்ட கூட இது. கோஸ்ட்டல் மீடியா நெடவொர்க் இந்த ஆவணப்படத்தை டிவிடி க்களாக வெளியிட்டுள்ளது . ஒரு டிவிடி யி்ன விலை இந்திய மதிப்பில் ரூ.100/- மட்டும் கிடைக்கும் இடம் :

கோஸ்ட்டல் மீடியா நெட்வொர்க்
நம்பர் 44, லிங்கி செட்டி தெரு
மன்னடி
சென்னை – 1
தொலைபேசி : 0091-9382155780

நமது சகோதரர்கள் தயவு செய்து இந்த வரலாற்று ஆவணப்பட டிவிடி யை ஆர்டர் செய்து வாங்கி பார்க்கவும். ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்து பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம் இது.

அந்த வரலாற்று ஆவணப்படத்தை காண்பதற்கோ அல்லது பதிவிறக்கம் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும். அல்லது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் மீடியா என்ற தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

WWW.TAMILMUSLIMMEDIA.COM
காரைக்குடி. இஸ்லாம், முஸ்லிம்,ஸ்பெய்ன் இந்திய முஸ்லிம்கள்

Create a free website or blog at WordPress.com.