தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 18, 2008

சவுதி அரேபியாவில் மாபெரும் தமிழ் இஸ்லாமிய மாநாடு

Filed under: ஜீபைல், JUBAIL — முஸ்லிம் @ 8:41 பிப
அல்ஜீபைல் இஸ்லாமிய மாநாட்டு செய்திகள்

அல்ஜீபைல் : 18-04-2008 வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியா கிழக்கு மாகனம் அல்ஜீபைல் நகரில் செயல்படும் “இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்” (ஜீபைல் தஃவா நிலையம்) சார்பாக சார்பாக மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடத்தப்பட்டது.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்களின் உரைகளுடன் இரவு சுமார் 7.00 மணி வரை நடந்தது. இதில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி சிறப்பித்தனர்

சகோதரர் முகம்மத் ஸமீம் (ஸீலானி ) அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய மாநாட்டில் முதல் அமர்வில் தலைமை உரையை சகோ. முகம்மது அஸ்ஹர் (ஸீலானி) அவர்கள் நிகழ்த்தினார்கள்

அதன் பின்னர் ரியாத்தில் இருந்து வந்திருந்த அழைப்பாளர் அவர்கள் “நபிமார்களும் அழைப்பு பணியும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் சிறப்புரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பார்வையாளர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டது.

அதன் பின்னர் அதன் பின்னர் ” அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தில்” இருந்து வருகை தந்திருந்த சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் “ஹராம்-ஹலால் பேணுவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அதன் பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழச்சி நடத்தப்பட்டது.பின்னர் ஜீம்ஆ தொழுவதற்கான இடைவுளை விடப்பட்டது.

பின்னர் சுமார் 12.20 மணி அளவில் இரன்டாவது அமர்வு சகோ. ஜமால் முகம்மது மதனி அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமாகியது. இந்த அமர்வில் இலங்கையில் இஐந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த சகோ. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் “ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன் பின்னர் மதிய உணவுக்கான இடைவேளை விடப்பட்டு “அல்ஜீபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தின்” சார்பில் வந்திருந்த அணைவருக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.

இம்மாநாட்டின் மூன்றாவது அமர்வாக சுவையான பட்டி மன்றம் ஒன்று நடத்தப்பட்து, “தற்கால முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரனம்…1) முஸ்லிம்களே 2) அந்நியர்களே என்ற தலைப்பில் சகோ. அலாவுத்தீன் பாக்கவி அவர்கள் தலைமை தாங்கி தனது சுவையான தமிழ் மொழியில் நடத்த இரு அனிகளாக பிறிந்து சகோ.ஜமால் முகம்மது மதனி, சகோ, ளாபிர் அவர்கள், சகோ. மன்சூர், சகோ. அலி அக்பர் உமரி என சுவைபட தங்கள் தரப்புக்காக வாதாடினார்கள்.

மகிழ்வுடன் நடந்த இந்த பட்டிமன்றத்திற்கு பிறகு மஃரிப் தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டது பின்னர் கேள்வி பதில்கள் நிகழ்ச்சி உட்பட பல போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக சகோ. ழமீருல் ஹஸன் அவர்கள்(மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரை வழங்க இந்த ஒரு நாள் மாநாடு இனிதே நிறைவுற்றது.

இம்மாநாட்டில் சவுதி அரேபியாவின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 1400 க்கும் மேற்ப்பட்ட தமிழ் பேச்கூடிய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சியின் இடையிடையே சுவையான தேனீர் வழங்கப்பட்டது, காலையில் அனைவருக்கும் சிற்றுன்டியுடன் தேனீரும், பின்னர் மதியம் சுவையான உணவும் பறிமாறப்பட்டன. மாநட்டிற்கான ஏற்பாடுகளை “இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்” (ஜீபைல் தஃவா நிலையம்) செய்திருந்தது மாநாட்டின் பணிகள் அணைத்தையும் அல் ஜீபைல் தஃவா நிலையத்தின் தன்னார்வ தொண்டர்கள் மிக்ச சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு : சகோ. அபு இஸாரா / முகவைத்தமிழன்

ஏப்ரல் 1, 2008

மாபெரும் இஸ்லாமிய ஒரு நாள் 10வது மாநாடு

Filed under: DAWA, JUBAIL — முஸ்லிம் @ 1:36 பிப
இறைவனின் திருப்பெயரால்…

மாபெரும் இஸ்லாமிய ஒரு நாள் 10வது மாநாடு
நிகழ்ச்சி ஏற்பாடு – இடம்: ஜூபைல் தஃவா நிலையம் – சவூதி அரேபியா
இன்ஷா அல்லாஹ் வரும்;: 18-04-2008 – வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8.00 மணி முதல் இரவு 7.30 வரை
உரையாற்றயிருக்கும் தலைப்புகளின் விவரம்:
நபிமார்களும் அழைப்புப் பணியும்
ஹலால் – ஹராம் பேணலின் அவசியம்
ஊடக வலையில் உலக முஸ்லிம்கள்

இத்துடன் :
தற்கால முஸ்லிம்களின் பின்னடைவுக்குப் பெரிதும் காரணம்.. முஸ்லிம்களே! அந்நியர்களே!!
என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போக்கு வரத்து மற்றும் இதர ஏற்பாடுகளின் விவரம்:
கேம்ப் களுக்கான வாகன வசதி
– அனைத்து பெண்களுக்கான தனி இட வசதி
– காலை – மதிய உணவு மற்றும் தேனீர் வசதி
– பெறுமதி மிக்க பரிசில் பொருட்கள்
எனவே தமிழறிந்த சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிப்பதுடன் மற்றவர்களுக்கும் தெரிவித்து எல்லாம் வல்ல இறைவனின் அருளினால் அறிவமுதம் பெற்று பயன் பெற்றுச் செல்லுங்கள்.
தொடர்புகளுக்கு:
0553603792 , 0502561645 & 033625500 Ext. 1015, 1026

Create a free website or blog at WordPress.com.