தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 26, 2008

IGC குவைத் நடத்தும் – "உணர்வாய் உன்னை" மற்றும் "அல்ஹம்துலில்லாஹ்" நிகழ்ச்சிகள்

Filed under: உணர்வாய் உன்னை, kuwait, kuwait igc, kuwait tamil muslims — முஸ்லிம் @ 10:55 முப
بسم الله الرحمن الرحيم

எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலைமையை தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை (அல்குர்ஆன் 13:11)

தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான் (அல்குத்ஆன் 87:14)

குவைத் வரலாற்றில் முதல் முறையாக
(IGC) குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் நடத்தும்

இஸ்லாமிய வழியில்
உணர்வாய் உன்னை

ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

* நம் உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுதல்.
* கோபம், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுதல்.
* அனைவரிடமுமட் அன்பை பேணுதல்.
* நாட்டிலும், வீட்டிலும் அமைதி மற்றும் சமாதானத்தை நிலைபெறச் செய்தல்.
* நம்மிடம் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
* எண்ணங்களை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல்.
* கடந்த கால பாதிப்புகளில் இரந்து விடுபட்டு நிகழ்கால வாழ்வில் வெற்றிபெறுதல்.
* இறைவன் நம்மை படைத்த நோக்கத்தினை அறிதல்

அறிவின் எல்லை விரிய…ஈமானின் சுவையை உணர …இனிய தமிழில் எளிய நடையில்….திருமறை நிழலில் ….சம்பிக்கையூட்டும் ஒரு உன்னத பயிற்சி முகாம்!!

நாள் : 31-07-2008, வியாழக் கிழமை
நேரம் : மாலை 03.30 – 09.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா

அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய சிறப்பு ஒலி-ஒளி தொகுப்ப நிகழ்ச்சி
SPECIAL VISUAL PRESENTATION – ISLAMIC PERSPECTIVE

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல)அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளெயேம் (பல) அத்தாட்சிகளும் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா. (அல்குர்ஆன் 51:20, 21)

இத்திருமறை வசனங்களில் றகூறியுள்ள அத்தாட்சிகளை கன்ணாலும், கருத்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் ஓர் அறிய காட்சித் தொகுப்பு நிகழச்சி.

நாள் : 01-08-2008, வெள்ளிக் கிழமை
நேரம் : மாலை 05.00 – 08.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா

தொடர்புக்கு : 3925612, 9619827, 6412875, 2470159

நிகழச்சிகளை தொகுத்து வழங்குபவர்
சகோ. ஜலாலுதீன், துபை

ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலீஃபா, மஹ்கூலா மற்றும் சிட்டி பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டள்ளது.

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

ஒக்ரோபர் 21, 2007

பாசிச வெறியர்களுக்கு குவைத் அனைத்து கட்சிகள் கண்டனம்(KUWAIT)

Filed under: குவைத் தமிழ் முஸ்லி, kuwait tamil muslims — முஸ்லிம் @ 9:01 பிப
குவைத் வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து கட்சிகளும் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாசிஸ இந்தி வெறியர்களைக் கண்டித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடத்திய மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம். குவைத் – மிர்காப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சை உணவகத்தில் 5-10-2007 இரவு 10 மணிக்கு துவங்கப்பட்ட இப்பொதுக்கூட்டம் நள்ளிரவு 12-30 வரை நடைபெற்றது. குவைத் நாட்டில் பரவலாக வசித்து வரும் தமிழ் உணர்வாளர்களும், சமுதாய ஆர்வளர்களும் எதிர்பாராவண்ணம் பெருந்திரளாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பி்த்தனர்.

இப்பொதுக்கூட்டத்தை அபுஜைனப் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். வந்திருந்தவர்களை சகோ. நிஜாம்தீன் அவர்கள் வரவேற்றார்கள். சகோ. கா. ரஹ்மத்துல்லாஹ்-தலைவர் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் அவர்கள் தலைமையேற்றார்கள். முன்னிலை ஷாஹின்ஷா-சென்னை புளியந்தோப்பு நகர செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிறப்புரையாக டாக்டர். கே.எஸ். அன்வர் பாஷா-தலைவர், குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.


ஏ.எம்.ஏ. தீன் – குவைத் அமைப்பாளர் திமுக, முஹம்மது இக்பால் – பாட்டாளி மக்கள் கட்சி, அன்பரசன் – செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள், ஆர். கே. சரவணன் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாஞ்சில். சுரேஷ் – அகில இந்திய காங்கிரஸ், கலீல் அஹமது பாகவீ – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம். இராவணன் – பெரியார் சுயமரியாதை இயக்கம், அமானுல்லாஹ் – தலைவர், தமுமுக மற்றும் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் ஏபிசி நஜீர், மார்க்கப் பிரச்சாரகர் தாஜ்தீன், அமீர் பாட்சா- திருச்சி மாவட்ட துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதிக்கச்சக்திகளின் சதிவேலைகளையும், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த இராமவிலாஸ் வேதாந்தி அவர்கள் மீதான கண்டனத்தையும் அழுத்தமாகவே பதிவு செய்தனர். ரமலான் மாதத்தில், இஸ்லாமிய நாட்டில், மார்க்கக் கூட்டங்களுக்கு மத்தியில் கடைந்தெடுத்த அரசியல் கூட்டமாக நடைபெற்றது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடல்லாமல் இக்கூட்டத்தைத் தவற விட்டவர்கள் வருத்தப்படுமளவிற்கு மிகவும் விறுவிறுப்பாகவும்,அனல் பறக்கும் கருத்துக்களோடும் நடந்த இக்கண்டேனக் கூட்டத்திற்கு நன்றியுரை – புத்தாநத்தம் அப்துல் நாஸர் அவர்கள் வழங்க தேநீர் விருந்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.

செய்தித் தொகுப்பு:

அப்துல் ரஹ்மான்
மக்கள் தொடர்பு அலுவலர்
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.