தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 17, 2007

சிதம்பரம் மெளலவி(?)யின் ஆட்டகாசம்

Filed under: இஸ்மாயில் நாஜி, ததஜ, PJ யின் பல முகம், TNTJ, TNTJ Fraud — முஸ்லிம் @ 11:18 முப
பெரிதாக்கி படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்

குறிப்பு : முஸ்லிம் பேரவைத் தலைவராக பி.ஜே யால் தேர்ந்தெடுக்கப்பட்டு “தவ்ஹித் வாதிகள் மற்றும் சுன்னத் ஜமாத்” இருபாலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் இவர் மட்டும்தான் என்ற புகழாரம் சூட்டப்பட்ட கணியூர் இஸ்மாயில் நாஜி என்பவரைப்பற்றி அதே பி.ஜே தனது களவாடப்பட்ட உணர்வு பத்திரிகையில் “சிதம்பரம் மெளலவியின் அட்டகாசம்” என்ற தலைப்பில் பொய்கள் நிறைந்த ஒரு அவதூற கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதற்கு மறுப்பாக ஜனாப் இஸ்மாயில் நாஜி அவர்கள் முட்டாள்தனமாக கிரிமினல் பி.ஜே யை பின்பற்றும் அதன் தொண்டர்களுக்கு ஒரு பதிலை எழுதியுள்ளார் அதை மக்களின் பார்வைக்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

மாட்டு ஈ

பரிதாபத்திற்குரிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு நேர்வழியுடன் கூடிய சாந்தியும் சமாதானமும் உண்டாகுமாக.

ஈக்களில் மாட்டு ஈ என்று ஒன்று இருக்கிறது. உடம்பில் உள்ள நல்ல பகுதிகளை விட்டுவிட்டு புண்ணான பகுதியில் அமர்ந்து நோண்டுவது அதன் இயல்பு. உங்கள் தலைவரும் அந்த ரகம்தான். அடுத்தவரின் நல்ல இயல்புகளை பாராமல் பிறரின் குறைகளைத் தேடுவதுதான் உங்கள் தலைவரின் நபிவழி.

மதரஸாவில் 200, 300 என்று சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவரை 1000 ரூபாய் சம்பளத்தற்கு அழைத்து வந்து நஜாத் என்ற பத்திரிக்கைக்கு ஆசிரியராக்கி அழகு பார்த்த அபு அப்துல்லாஹ்வை அசிங்கப்படுத்தியவர் உங்கள் தலைவர். கட்டுக்கோப்பான ஜாக் அமைப்பின் அமீர், கமாலுதீன் மதனியை கலங்கப்படுத்தியவர் உங்கள் தலைவர். அவர் நுழையமுடியாத ஊருக்கெல்லாம் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மேடையேற்றிவர்கள் த.மு.மு.க தொண்டர்கள். அந்த அமைப்பின் தலைவர்களை தரம் தாழ்த்தி விமர்ச்சித்து அந்த அமைப்பையே அழிக்க முயன்றவர் உங்கள் தலைவர். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய அவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமான உங்கள் கட்சியின் பொதுச் செயலாளரை விபச்சாரம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியவர். தன்னிடம் கேள்வி கேட்டார் என்ற காரணத்திற்காக உங்கள் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் கலீமுல்லாவை கேவலப்படுத்தயவர். ஆலிம்களை கிண்டல் செய்தார். இமாம்களை நக்கல் செய்தார். சஹாபாக்களை கிரிமினல் மோசடி பேர்வழி என்று விமர்சித்தார். மக்களை பக்குவபடுத்த வந்த பெருமானார் (ஸல்) அவர்களை அச்செயலை பூரணமாக செய்ய முடியவில்லை என்று பெருமானாரிடமே குறை கண்டவர்.

அத்தகைய யோக்கிய சிகாமணி தான் இஸ்மாயில் நாஜியைப் பற்றி உணர்வு பத்திரிக்கையில் எழுதியது வியப்புக்குரியதல்ல. உங்கள் தலைவர் காட்டும் நபி வழி அவதூறு பேசு, அமைப்பில் பிளவுபடுத்து, சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய் என்பதுதான். அந்த அடிப்படையில்தான் உங்கள் தலைவர் காட்டும் நபி வழியில் சிதம்பரம் ஈதுகாவை நீங்கள் ஆக்கிரமிக்க முயன்றீர்கள். எந்த ஒரு பள்ளியிலும் எந்த ஒரு முஸ்லீமும் தொழலாம். ஆனால் தொழுகை நடத்துவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன, அந்த அடிப்படையில்தான் ஜமாத் நடைபெறும் பள்ளிகளில் இரண்டாவது ஜமாத் நடத்துவது கூடுமா? கூடாது? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் ஈதுகா பள்ளியில் யாரும் தொழுவதற்கு தடையில்லை. ஆனால் ஜமாஅத்தாக தொழுவதற்குத்தான் அனுமதி தேவை. அந்த அடிப்படையில்தான் ஈதுகா கமிட்டியிடம் அனுமதி பெற்று ஜமாஅத்தாக தொழுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டது. உண்மையிலேயே நீங்கள் நபியின் சுன்னத்தை நிறைவேற்றும் எண்ணம் இருந்திருந்தால், அனுமதிப் பெற்று தொழுகை நடத்தியிருப்பீர்கள், ஆனால் உங்கள் நோக்கமோ உங்கள் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப அந்த இடத்தை ஆக்கிரமிப்பதுதான், இதனை புரிந்து கொண்ட ஜமாஅத்தார்கள் இதுரை இல்லாத அளவிற்கு ஒன்றிணைந்து காவல் நிலையத்திற்கு வந்தார்கள். அனுமதி கேட்டு தொழுங்கள் என்று கூறியும் அவர்கள் அனுமதி கேட்க மறுத்துவிட்டார்கள் என்ற எங்களின் வாதம்தான் காவல்துறை அதிகாரிகளை சிந்திக்க வைத்தது. உங்களின் நோக்கம் ஜமா அத்தை பிளவுப்படுத்துவதுதான் என்று உணர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கம்போல உங்கள் தலைவர் கால்துறையையும் கையூட்டுப் பெற்றதாக களங்;கப்படுத்துகிறார்.

ஜமாஅத்தார்களும் டவுன் காஜியும்:

டவுன் காஜியை கலந்து ஆலோசிக்கமல் கால்துறையிடம் பொய்த்தகவல் கொடுத்ததாக உணர்வு பத்திரிக்கையில் எழுதுவதன் மூலம் டவுன் காஜிக்கும், ஜமாஅத்தார்களுக்கும் இடையே உங்கள் தலைவரின் நபி வழி படி பிளவுப்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்கள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால் 01-10-2007ல் நவாப் பள்ளியில் மரியாதைக்குரிய டவுன் நாயிப் காஜி அவர்கள் முன்னிலையில் ஜமாஅத்தார்கள் மூன்று முக்கிய முடிவுகள் எடுத்தார்கள்.

1-ஈதுகா சம்மந்தப்பட்டது
2-ஃபித்ரா தொகை நிர்ணயித்தது
3-பிறை சம்மந்தப்பட்டது.

ஃபித்ரா தொகையை பொறுத்தவரை நபி (ஸல்) அவர்கள் கொடுத்த அளவு தற்கால கிலோ கிராம் எவ்வளவு என்பதில் சென்னை தலைமை காஜிக்கும், மாநில ஜமாஅத் உலமா சபைக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. 2.400 கிலோகிராம் என்பது தலைமை காஜியின் கருத்து. 1.600 கிலோகிராம் என்பது ஜமாஅத் உலமாவின் கருத்து இந்த கருத்து வேறுபாட்டை இருவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

குறைவாக நிர்ணயித்தால் அதிகம் பேர் கொடுப்பார்கள், எனவே அந்த தொகையையே கொடுக்கலாம் என்பது ஜமாஅத் உலமாவின் வாதம். ஏழைகளுக்கு எவ்வளவு அதிகமாக கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கலாம் என்பது காஜியின் விருப்பம். நீண்ட விவாத்திற்கு பின் அந்தந்த பள்ளி இமாமும் முத்தவல்லியும் இதன் இரண்டில் ஒன்றை நிர்ணணயித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சிதம்பரம் நகரில் பெரும்பாலான பள்ளிகளில் இஸ்மாயில் நாஜி நிர்வாகம் செய்யும் இப்ராஹிம் நகர் பள்ளி உள்பட பெரும்பாலான பள்ளிகளில் டவுன் காஜி நிர்ணயித்த 38 ரூபாய்தான் அறிவிக்கபட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்னால் டவுன் காஜிக்கும் ஜமாஅத்தார்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பெருநாள் தொழுகை விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டது. அதுபோன்று குழப்பம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பிறை பார்க்கும் கமிட்டி அமைக்கபட்டு பெருநாள் சம்பந்மான அறிவிப்புகளை கமிட்டியின் சார்பாக டவுன் காஜி அறிவிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே சிதம்பரம் நகரைப் பொருத்தவரைக்கும் டவுன் காஜியும் சிதம்பரம் ஜமாஅத்தார்களும் இணைந்தே செயல்படுகிறார்கள். பிளவுபடுத்த வேண்டுமென்ற உங்களின் முயற்சி எந்நாளும் பலிக்காது. உங்களுக்கு மார்க்க அறிவும் இல்லை, பொது அறிவும் இல்லை. அன்று காவல்நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் வரவே இல்லை. ஆனால் அவருக்கு கையூட்டு கொடுத்தாக எழுதியுள்ளீர்கள் அதேபோன்று மறுநாள் நடந்தது வட்டாட்சியர் முன்னிலையில் நீங்கள் ஆர்.டி.ஓ. என்று எழுதியுள்ளீர்கள்.

நபிவழி நடப்பவரா நீங்கள்?:

நபிவழி நடப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழியில் நடக்காமல் உங்கள் தலைவர் காட்டும் நபி வழியில்தான் நடக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் நபிவழி நடக்கின்றீர்கள் என்றால் மார்க்கம் கற்க வந்த மாற்று மத சகோதரியுடன் உங்கள் கட்சி பொதுச் செயலாளர் விபச்சாரம் செய்தார் என்று இணைய தளத்தின் மூலமும், பொதுமக்கள் முன்னிலையிலும் உங்கள் தலைவர் கூறியபோது ஒரு முஸ்லீமை இப்படி கேவலப்படுத்துவது கூடுமா? இது நபிவழிதானா? என்று கேட்கும் அறிவோ, ஞானமோ இல்லாத நீங்கள் சுன்னத்தான காரியங்களை இஸ்மாயில் நாஜி தடுத்துவிட்டார் என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

விபச்சாரம் செய்தார் என்று குற்றம் சாட்டிய பொதுச் செயலாளாரை எப்படி மீண்டும் கட்சியில் பதவிக் கொடுத்தீர்கள் என்று கேள்வி கேட்ட கடலூர் மாவட்ட தலைவர் கலீமுல்லாவை கட்சியில் நீக்கியவுடன் அவர் கட்சியின் letter Pad ஐ தவறாக பயன்படுத்தினார் என்றும் இன்னும் சில குற்றச்சாட்டுக்களை உங்கள் தலைவர் கூறி முபாஹலா செய்தபோது இப்படி ஒரு தனி மனிதனை கேவலப்படுத்தி முபாஹலா செய்வது நபி வழிதானா? என்று நீங்கள் கேட்டிருந்தால் நீங்கள் உண்மையான நபி வழி நடப்பவர்கள்.

உண்மையில் கலீமுல்லா அவர் தவறு செய்திருந்தால் உங்கள் தலைவரை எதிர்த்து கேட்கும்வரை தவறு செய்தவரை மாவட்ட தலைமை பொறுப்பில் வைத்தது ஏன்? உங்களை ஆதரித்தால் அவர் தவ்ஹீத்வாதி. உங்கள் தலைவரை எதிர்த்தால் தவ்ஹீத் விரோதியா? என்று உங்கள் தலைவரை கேட்க துப்பில்லாத நீங்கள் நபிவழி நடக்கிறோம் என்று சொல்லுவது நகைப்பிற்குரியது. நபிகளின் பொன்மொழிகள் லட்சக்கணக்கானது இருக்க எதைச் செய்தால் சமுதாயத்தில் குழப்பமும், பிளவும் ஏற்படுமோ அந்தக் காரியத்தைத்தான் செய்ய முயல்கிறீர்கள். ஒற்றுமை ஒளி கொடுத்த நபிகளின் பெயரையே குழப்பித்திற்கு பயன்படுத்தி குற்றவாளி ஆகிறீர்கள்.

இஸ்மாயில் நாஜியைப் பற்றி:

ஈதுகா ஆக்கிரமிப்பு என்றவுடன் ஒட்டுமொத்த சிதம்பரம் ஜமாஅத்தாரர்களும், இளைஞர்களும் ஒன்றிணைந்து காவல்நிலையம் சென்றார்கள். ஒரு பள்ளியின் நிர்வாகி என்ற முறையில் இஸ்மாயில் நாஜியும் சென்றார். பொய் செய்திகளை வெளியிடுவதில் மஞ்சள் பத்திரிக்கை அளவுக்கு வந்ததால் சிதம்பரம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கையில் ஈதுகா பிரச்சனைக்கு முழுக்க முழுக்க இஸ்மாயில் நாஜியே காரணம் என்ற ரீதியில் எழுதியிருக்கிறார்கள்.

இதற்கு முன்பும் அதே பத்திரிக்கையில் இஸ்மாயில் நாஜியைப் பற்றி கோழை என்றும் போலீஸ் என்றாலே தொடை நடுங்கி என்றும் போலீஸ் பிடித்துக்கொள்வார்கள் என்று பயந்து வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டார் என்றும் பொதுமக்களின் பிரச்சினைக்கு ஒத்துழைப்பு தராதவர் என்றும் எழுதினார்கள். இன்று அதற்கு நேர் மாற்றமாக அவரை காவல்துறை அதிகாரிகளையும், ரவுடிகளையும் சரிகட்டும் அளவிற்கு பெரிய ஆளாக சித்தரித்துள்ளார்கள். அன்று எழுதியதும் பொய்தான், இன்று எழுதியதும் பொய்தான். அன்றைய ஈதுகா பிரச்சினையின் போது வேறு ஒரு பிரச்சினையினால் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை. மாறாக இரண்டு துணை ஆய்வாளர்கள்தான் விசாரித்தார்கள். ஆனால் உணர்வு பத்திரிக்கை இன்ஸ்பெக்டரை சரிகட்டும் விதத்தில் சரிகட்டியதாகவும், ரவுடிகளுக்கும் ஜமாஅத் தலைவர்களுக்கும் ஏற்ப சாவிகொடுத்த பொம்மைபோல் இன்ஸ்பெக்டர் நடந்து கொண்டார் என்றும் காவல் நிலையத்திற்கே வராத இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுதியிருக்கிறார்கள்.

மறுநாள் நடைபெற்றது ஆர்.டி,ஓ. என்று எழுதியுள்ளார்கள். இப்படி ஆத்திரம் கண்ணை மறைக்க உண்மை எதுவென தெரியாதவர்கள் பொய் சொல்வதில் கைதேர்ந்த இஸ்மாயில் நாஜி கும்பல் டவுன் காஜியின் பேரில் பொய் சொல்லி அதிகாரியை நம்ப வைத்ததாக எழுதியுள்ளார்கள். ஆனால், உண்மையில் முதல் நாள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் முதல் கையெழுத்தே டவுன் காஜி கையெழுத்துதான். வட்டாட்சியர் விசாரணையின் போது வயது முதிர்வு காரணமாக காஜி அவர்கள் வராமல் அவர்கள் சார்பாக காஜியின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் வந்திருந்தார். வராத இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், நடக்காத ஆர்.டி.ஓ. விசாரணை நடந்ததாகவும், காஜியின் ஒப்புதல் நடைபெற்ற புகாரை காஜியின் ஒப்புதல் இன்றி நடைபெற்றதாகவும் எழுத்துப் பூர்வமாக பொய் சொல்லும் இவர்கள்தான் நாஜியை பொய்யர் என்கிறார்கள்.

பாம்புக்கு வாலையம், மீனுக்கு தலையையும் காட்டி நடிப்பதில் கைதேர்ந்தவரான இவரைப் பற்றி வண்டி வண்டியாக எழுதும் அளவுக்கு வண்டவாளங்கள் உள்ளன. நீடூரிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை நடந்த கதைகளை எழுதினால் நாறிப்போகும், அவற்றை இப்போதைக்கு நாம் எழுத விரும்பவில்லை என்று இஸ்மாயில் நாஜியைப் பற்றி உணர்வு பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்.

சுன்னத்துல்வல் ஜமாஅத்தினரும், தவ்ஹித் வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் மனிதர் இஸ்மாயில் நாஜி என்று முஸ்லீம் பேரவைக்கு தலைவராக முன்மொழிந்தவரின் கரங்கள்தான் இன்று இப்படி எழுதியள்ளது.

இஸ்மாயில் நாஜிக்கும் நீடுருக்கும் 37 ஆண்டுகளாக தொடர்பு இருக்கிறது இன்றும் நீடுர் செல்கிறார், பள்ளிவாசலில் பேசுகிறார், மதராஸவிற்கு செல்கிறார், முக்கிய திருமணங்களில் கலந்து கொள்கிறார், சிதம்பரத்தில் 22 ஆண்டுககளாக வசித்து வருகிறார். சிதம்பரத்தில் நடக்கும் அனைத்து சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பது சிதம்பரத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் தெரியும். இஸ்மாயில் நாஜி டிராவல்ஸ் தொழிலை விட்டு 13 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இப்பொழுது என்ன தொழில் செய்கிறார் என்று கூட தெரியமல் டிராவல்ஸ் தொழில் செய்யும் மௌலவி இஸ்மாயில் நாஜி என்று எழுதியிருப்பவர்கள் தான் அவரைப் பற்றி வண்டிவண்டியாக எழுதும் அளவுக்கு வண்டவாளங்கள் உள்ளன என்று எழுதியிருக்கிறார்கள்.

அப்படித்தான் இஸ்மாயில் நாஜியைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்? உங்கள் தலைவரை அறிமுகப்படுத்திய அபுஅப்துல்லாவைப் பற்றி சொல்லாததா? த.மு.மு.க. தலைவர்களைப் பற்றி சொல்லாததா? ஷம்ஷுதீன் காஸிமைப் பற்றி சொல்லாததா? த.த.ஜ. வின் கடலூர் மாவட்ட முன்னாள் தலைவரைப்பற்றி சொல்லாததா? எல்லாவற்றிக்கும்மேலாக உங்கள் தலைவரின் வளர்ச்சிக்கு முழு பாடுபடுகின்ற பொதுச் செயலாளர் மார்க்கம் பயில வந்த மாற்று மத சகோதரியிடம் விபச்சாரம் செய்தார் என்று பகீரங்கமாக சொன்னாரே! இதைவிட மோசமான வண்டவாளத்தையா சொல்லப்போகிறீர்கள்? தன்னை ஆதரிப்போர்கள் எல்லாம் தவ்ஹீத் வாதி என்றும் தன்னை வெறுப்போர்கள் எல்லாம் தவ்ஹீத் விரோதி என்றும் அவர் குறிப்பிடுவதும், அவரது ரசிக கூட்டமான நீங்கள் அவர் கூறுவது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நபிவழியா என்று ஆராயமல் அவருக்கு ஜே போட்டு பின்னால் செல்வதுதானே உங்கள் வழக்கம்.

உங்கள் தலைவரின் பேச்சால் கவரப்பட்டு அவரைப் பாராட்டிக் கொண்டிருந்த பல பெரியேர்கள் உங்கள் தலைவரின் இரட்டை வேடத்தைப் புரிந்து மனம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்க எத்தகைய அவதூறையும் சொல்லலாம் என்பது உங்கள் தலைவர் காட்டும் நபிவழி.

ஆனால், எங்களின் இறையச்சம் உள்ள இமாம்மார்கள் எங்கள் ஆசிரிய பெருந்தகைகள் எங்களுக்கு காட்டிய நபிவழி என்னவென்றால் அவதூறு அல்ல, உண்மையான பாவமான காரியத்தை செய்திருந்தாலும் ஒரு முஸ்லீமை அவமானப்படுத்துவது அல்லாஹ்வுக்கு விருப்பமானதல்ல என்பதுதான். இல்லாவிடின் பெரம்பூர் கிராமத்தில் சிறிய அளவில் மளிகை கடை வைத்துக்கொண்டு தொடை தெரிய வேட்டியை மடித்துக் கொண்டு ரோட்டில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவர் எப்படியெல்லாம் யார், யார் தோள் மேல் ஏறி சவாரி செய்துகொண்டு ஏற்றிவிட்ட ஏணிகளை எல்லாம் எட்டி உதைத்துவிட்டு இன்று எந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதையும் அவருடைய திருவிளையாடலைப் பற்றி அவருடைய முன்னாள், இன்னாள் சஹாக்கள் சொன்னதாக இணைய தளங்களில் உலாவருகின்ற அருவெறுப்பான செய்திகளையெல்லாம்; சிதம்பரம் நகர வாசிகள் முன்னால் வைக்க முடியும்.

வேலைக்காரியிடம் வீரியத்தைக் காட்டியவர் என்று புகைப்படத்துடன் தமிழ்முரசு பத்திரிக்கையில் வந்தவர்தான் அவரின் செயலாளரில் ஒருவர் என்பதையும், மாற்றான் மனைவியை அபகரித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட இரு நபர்கள்தான் அவருடைய கொள்கை பிரச்சாரகர்கள் என்பதையும் த.த.ஜ தின் முன்னாள் தலைவரைப் பற்றி ஊர்மக்கள் கொடுத்த புகாரைப் பற்றியும் எழுத்துபூர்வமாக வந்த நோட்டீஸ்களை மக்கள் முன்னால் வைக்க முடியும். ஆனால் உங்கள் தலைவரைப்போன்று தரந்தாழ்ந்திட இஸ்மாயில் நாஜி தயாராக இல்லை.

நிச்சயமாக அல்லாஹ் அவரை அம்பலப்படுத்தும்போது மக்கள், உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக.

இவண்,

இஸ்மாயில் நாஜி

பின்குறிப்பு:

நான், என்னை என எழுத வேண்டிய இடங்களில் இஸ்மாயில் நாஜி என்று எழுதியுள்ளேன். காரணம் அவருக்கு நேரடியாக எந்த தொல்லையும் தராத என்னைப்பற்றி ஏற்கனவே ஒருமுறை உணர்வு பத்திரிக்கையிலும், இட ஒதுக்கீடு பற்றி விண் டிவியில் நடந்த கலந்துரையாடலிலும், சிதம்பரம் ஈத்கா பிரச்சனையிலும் இஸ்மாயில் நாஜி என்றப் பெயரை இழுத்துள்ளார். அவருக்கு இஸ்மாயில் நாஜி என்ற பெயர் பிடித்திருப்தால் எல்லா இடத்திலும் இஸ்மாயில் நாஜி என்றே எழுதியுள்ளேன்.

ஜூன் 11, 2007

பதிலை எதிர்பார்த்த பி.ஜேக்கு ஐக்கிய தவ்ஹித் ஜமாத்தின் (KADALOOR ITJ) பதில்

Filed under: ITJ, mubahala, PJ யின் பல முகம், TNTJ sex scandal — முஸ்லிம் @ 12:04 பிப
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தேதி : 10.06.2007

அனுப்புதல்:

முன்னால் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள்

சார்பாக அ.கலிமுல்லாஹ்,

93.பெரிய கடை தெரு,

பரங்கிப்பேட்டை – 608502.

பெறுதல்:

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநில டிஎன்டிஜே தலைவர்,

30. அரன்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை-1.

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

எங்களுடனான முபாஹலா சம்மந்தமாக தங்களின் 06.06.2007 தேதிய தபால் கிடைக்கப் பெற்றோம். எங்களுடைய முபாஹலா பிரசுரத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த 03.06.2007. கடலூர் கூட்டத்தில் 16.06.2007 அன்று முபாஹலாவுக்கு தயார் என்று அறிவித்ததாக கடிதத்தில் ஆரம்பமாக கூறும் தாங்கள்; அடுத்தடுத்த வரிகளில் தாங்கள் கூறிய பல விசயங்களை கணடுக்கொள்ளாத வகையில் எங்கள் கடிதம் அமைந்துள்ளதாக தாங்கள் கூறுவது சரியல்ல. காரணம் நாங்கள் முபாஹலா பிரசுரத்தில் நான்கு வகையான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது கூறி அதற்கு முபாஹலாவுக்கு தயாரா? ஏன்று கேட்டிருந்தோம். அதற்கு தாங்கள் அந்த பிரசுரத்தை குறிப்பிட்டு கூறியே அதற்கு தயார்! என்று கூறினீர்கள்.

(கடலூர் கடிதத்திற்கு பி.ஜே யின் பதில் கடிதம் – ததஜ அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள கடிதம் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்)

உண்மையாளர்களாகவும, உண்மையில் அல்லாவுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்.

முபாஹலா சம்மந்தமான குர்ஆன் வசனம் 3:61 கூட ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரச்சினையின் வெளிப்பாடாகத்தான் கூறப்பட்டுள்ளதே தவிற, ஒரு சமுதாய முக்கிய பிரச்சினையில் குற்றச்சாட்டை நிரூபிக்க வருபவர் மீது வேறொரு குற்றச்சாட்டை கூறி சமப்படுத்திக்கொள்ளவோ, நியாயப்படுத்திக்கொள்ளவோ அல்ல, என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். முபாஹலாவுக்கு தங்களின்; இஷ்டத்திற்கு கற்பனையாக விளக்கமளித்து முபாஹலாவிலிருந்து நழுவிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே, முபாஹலா சம்மந்தமாக நாங்கள் கூறிய நான்கு விசயங்கள் மற்றும் அதை ஒட்டி தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இரண்டு விசயங்கள் ஆக ஆறு விசயங்களுக்கு மட்டுமே நாங்களும் நீங்களும் முபாஹலா செய்வதற்கான விசயங்களாகும்;. இந்த முபாஹலா அறிவிக்கப்பட்டதே மேற்படி விசயங்களுக்கு மட்டுமே.

அதை விடுத்து, நாங்களும் நீங்களும் வேறு எந்தெந்த விசயங்களில் பரஸ்பரம் அநீதி இழைக்கப்பட்டோமோ அவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, குழாயடி சன்டை நடத்துவதற்கு அல்ல. அவைகள் இந்த முபாஹலாவிற்கு தேவையற்றது.

முபாஹலா செய்வதற்கு தெளிவான விசயங்களை இனங்காட்டி அழைத்து அதை ஏற்றுக்கொண்டப்பின் வேறு விசயங்களை காட்டி தாங்கள் நழுவ பார்ப்பது உங்களிடம் உண்மையில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும்.

முபாஹலாவோ விவாதமோ எதுவானாலும் ஒரு பக்கச் சார்பாக அவை இருக்கக் கூடாது என்று எழுதும் நீங்கள்,; விவாதத்தில் எதைப்பற்றி விவாதம் செய்ய போகிறோம் என்று தெரியாமல் அங்குப்போய் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விவாதம் செய்வீர்களா? அல்லது விவாதம் எது பற்றியானது என்பதை முன்பே அறிந்து அதற்குள்ள தயாரிப்போடு செல்வீர்களா? உங்களிடம் ஏன் இந்த முரன்பாடு?.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வரவேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும், தெரிந்து வருபவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் ஏதும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று கூறுவது மோசடித்தனமும் முனாபிக்தனமும் ஆகும் அதை தாங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் இது விசயத்தில் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

குறிப்பிட்டுள்ள சமுதாய இயக்கத்தின் தலையாய பிரச்சினையில்; எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டுபவர், குற்றச்சாட்டுகளை தெளிவாக கூறி அதுப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இதை மறுத்து எதிர் தரப்பினரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதை தவிற, குற்றம் சாட்டப்படுபவர் குற்றம் சாட்டுபவர் மீது வேறு எந்த குற்றசாட்டையும் எழுப்ப அனுமதிக்க முடியாது. மேலும், இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

தாங்கள் கற்பனையாக உங்கள் விருப்பத்திற்கு எழுதியதெல்லாம், மேடையில் அறிவிப்பதெல்லாம் முபாஹலாவின் சட்டம் அல்ல. முபாஹலாவிற்கு நாங்களும், எங்கள் மனைவிகளும், எங்கள் பொறுப்பில் இருக்கும் எங்கள் புதல்வ புதல்விகளுடனும் தான் வருவோம். யாரும் யாருக்காகவும் அடையாள அணி வகுப்பு நடத்தமுடியாது. இதிலும் தாங்கள் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

மேலும், முக்கியமாக 16.06.2007 அன்று நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மன்டபத்தில் மாலை 7 மணிக்கு முபாஹலா என்று தாங்கள் அறிவித்தீர்கள், அதற்கு நாங்களும் எங்களின் 05.06.2007 தபாலில் ஒப்புதல் அளித்தோம். ஆனால், தாங்கள் 06.06.2007 தபாலில் 16.06.2007 அன்று காலை முதல் மேற்படி அந்த மண்டபத்தில் தங்கள் அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். தங்களின் செயல் வீரர்கள் கூட்டமும் முபாஹலாவும் ஒரே மண்டபத்தில் நடக்க இருப்பதால் அதில் கலந்துக்கொள்ளும் எங்கள் பெண் மக்களுக்கு பாதுகாப்பு இன்மையும், தங்கள் செயல் வீரர்களால் சன்டை சச்சரவு வரவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, ஒன்று தாங்கள் செயல் வீரர்கள் கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள், அல்லது முபாஹலாவை அதே நாளில் வேறு இடத்தில் மாற்றி வைய்யுங்கள், உங்களால் அது முடியாவிட்டால் அதே நாளில் முபாஹலாவிற்கு வேறு இடத்தை ஏற்பாடு செய்யும் பொருப்பை எங்களிடம் விட்டு விடுங்கள். இன் ஷாஅல்லாஹ் நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம். இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்;பதே பொருள்.

மேலும், நாங்கள் 05.06.2007ல் தங்களுக்கு எழுதிய தபாலில், முபாஹலா பிரச்சினையின்றி நடைபெற இரு தரப்பிலும் இரு கட்டுப்பாட்டாளரை நியமிப்பது சம்மந்தமாக குறிப்பிட்டிருந்தோம் அதை தங்கள் வசதிக்கு கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளீர்கள் அந்த விசயத்திற்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

முபாஹலா நடைபெறும் இடத்திற்கு உங்கள் தரப்பில் உங்கள் குடும்பத்தை தவிற 25 நபர்களும், எங்கள் எட்டு பேர் தரப்பில் எங்கள் குடும்பங்களை தவிர, எட்டு பேர் சார்பிலும் 25 நபர்களும் மட்டுமே கலந்துக்கொள்ள நாங்கள் சம்மதிக்கின்றோம். இதை, முன்பு எங்கள் தபாலிலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

மேற்படி நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களும் நடைமுறைக்கும், உண்மையில் கண்டிப்பாக முபாஹலா நடைப்பெற வேணடும் சத்தியம் வெளிப்படவேண்டும் அதற்கு எதுவும் தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்குத்தான். இதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இத் தபால் தங்களுக்கு இன் ஷாஅல்லாஹ் 12.06.2007 ல் கிடைக்கும், இதற்கு தங்களின் உடனடியான ஒப்புதல் தபாலை எங்களுக்கு 14.06.2007 க்குள் அனுப்பவும்.

இன்ஷா அல்லாஹ், தங்கள் ஒப்புதல் தபால் கிடைத்தவுடன் குடும்பத்துடன் முபாஹலாவில் சந்திப்போம். நன்றி, வஸ்ஸலாம்.

எங்கள் எட்டு பேர் தரப்பில் முபாஹலாவில் கலந்துக்கொள்ளும் எங்கள் குடும்பத்தினர் விபரம் வறுமாறு:

1. அ.கலிமுல்லாஹ், கவுஸ்ஹமீதா(மனைவி), காமிலா பர்வீன்(மகள்), முஹம்மது முஜாஹித்(மகன்), அப்துல் காதிர்(மகன்), அப்துல் அலீம்(மகன்)

2. எஸ். ஷேர்அலி, நூரா(மனைவி), ஹய்தர்அலி(மகன்), யாஸ்மின்(மகள்).

3. இசட். ஷாஹீல் ஹமீது, ஹாஜிரா பேகம்(மனைவி), உமர் முக்தார்(மகன்)

4. எம். செய்யது ஹமீது, ஆபிதாபி(மனைவி), சையத்யாசீன்(மகன்).

5. டி.எம்.பக்கீர் முஹம்மது, ஆமினா(மனைவி), N ஷக்முஹம்மது(மகன்), மூமினா(மகள்), பஹீமா(மகள்), முனவ்வரா(மகள்).

6. எ.எஸ்.எம்.ரசூல் பா ஷா, ஷர்மிலி(மனைவி), மெஹ்தாப்(மகள்), மரியம்(மகள்), அப்துர்ரஹ்மான் சையது(மகன்).

7. எஸ். அப்துர்ரஹ்மான், தவ்லத்நி ஷா(மனைவி), இப்ராஹிம்(மகன்);, ரஹீமுன்னிசா(மகள்), அப்துல்லாஹ்(மகன்).

8. ஐ. ஷேக் உமர், பாரூன்பேகம்(மனைவி), முஹம்மதுஇத்ரீஸ்(மகன்), ஷமீமா நஸ்ரின்(மகள்).

அன்புடன்.

முன்னாள் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள். (கையொப்பமுடன்).

1.எ.கலிமுல்லாஹ் :

2.எஸ்.ஷேர் அலி :

3.இசட். ஷாஹீல் ஹமீது :

4.எம். செய்யது ஹமீது :

5.டி.எம். பக்கீர் முஹம்மது :

6.எ.எஸ்.எம். ரசூல் பாஷா :

7.எஸ்.அப்துர்ரஹ்மான் :

8.ஐ.ஷேக் உமர் :

ஒக்ரோபர் 28, 2006

வானை விஷமாக்கும் வதந்திகள் (EXCLUSIVE ARTICLE)

Filed under: அவதூறு பொய்கள் TNTJ Fraud, PJ யின் பல முகம் — முஸ்லிம் @ 1:52 பிப
வானை விஷமாக்கும் வதந்திகள்
REAL FACE EXPOSED!!

விண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில் செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன..

தொலைக்காட்சிகளில் வெளிச்சமிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும். செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும். அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (SMS) ஆகட்டும். மின் அஞ்சல்களில் வந்து குவிகின்ற கொத்துக் கொத்தான கடிதங் களாகட்டும். எல்லாமே வானில் மிதக்கும் செயற்கைக் கோள்களால் தான்.

இந்த வகையில் வானம் வசப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அதே சமயம் அந்த வானம் விஷப்பட்டு விட்டது என்றும் சொல்லலாம்.
ஆம்! இன்று இ-மெயில்களிலும்இ எஸ்.எம்.எஸ்.-களிலும் பொழிகின்ற வதந்தி மழை – வசந்த மழையை மிஞ்சி விட்டது. அதனால் வானம் விஷப்பட்டு விட்டது என்று தெளிவாகச் சொல்லலாம்.

அரிவாள் முதல் அணு சக்தி வரை உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவது போன்று அழிவிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் அழிவிற்குப் பயன்படுவது தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம்.
அது போன்று தான் இந்த அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அற வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுவதைப் போல்இ ஆபாசம் – அவதூறு வகைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம்இ இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் ஆபாசத்திற்கும்இ அவதூறுக்கும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தக் கண்ணோட்டத்தின் படி பார்க்கும் போது இன்றைக்கு முஸ்லிம்கள் இந்தத் தகவல் தொடர்பு சாதனங்களை இதற்காக சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். அதிலே ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது முன்னாள் சகாக்கள்இ இந்தச் சாதனங்களை சாதாரணத்திலும் சர்வ சாதாரணமாக இந்த வகைக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

அவர்களை விட்டு நாம் பிரிந்தவுடன்இ ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டு இவர்கள் எங்கே வளரப் போகின்றார்கள் என்று மனக் கணக்குப் போட்டார்கள். ஆனால் அவர்களது கணக்கையும்இ கணிப்பையும் பொய்யாக்கிஇ அல்லாஹ்வின் அருளால் அவர்களை விடப் பன்மடங்கு மிகப் பெரிய சக்தியாக நமது ஜமாஅத் உருவெடுத்துள்ளது. இதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் இன்று அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அவதூறுகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதாகும். நேரில் வாய் மொழியாகவும் மறைமுகமாக SMS இ-மெயில் மூலமாகவும் கள்ள வெப்சைட் மூலமாகவும் அவதூறுகளைஇ வதந்திகளைப் பரப்புவதைப் பகுதி நேரப் பணியாக அல்ல; முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு களமிறங்கிய இவர்களுக்கு மார்க்கமோ மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைப்படுவதெல்லாம் தூய்மையான ஏகத்துவக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பவர்கள் கூட அவர்கள் விரிக்கும் ‘வலைத் தளத்தில்’ வீழ்ந்து” அதை நம்பி ஏமாந்து விடுவது தான். மேலும் படிக்க….. (ஏப்ரல் 2006) ஏகத்துவம் மாத இதழ்)

மேற்கூறிய அனைத்தும் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் பத்திரிகையான ஏகத்துவம் ஏப்ரல் 2006 இதழில் ததஜ வின் மாநில நிர்வாகி ஷம்சுல்லுஹா என்பவரால் எழுதப்பட்டது.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) ஹராம் என்றும் அதை செய்பவர்களுக்கு மார்க்கமோ, மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றெல்லாம் எழுதியுள்ளார்களோ அதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) தங்களுக்கு 2005 லேயே ஹலாலாக்கி கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் புனித மக்கா நகரில் கூடி தீர்மானம் போட்டு அதை ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே அவர்களும் அங்கீகரித்து எழுத்து மூலமாக ஃபத்வா வழங்கியுள்ளது நிறைய பேருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

இதுதான் இந்த ததஜ என்ற தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் உண்மை முகம். இவர்கள் தங்களின் கூற்றிற்கும் செயலிற்கும் மாறுபட்டவர்கள். எதை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையே தாங்கள் செய்தால் அது நல்லதாம். உதாரனம் விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்வார்கள் ஆனால் அதையே தங்களது முழு நேரத்தொழிலாக இதன் நிர்வாகிகள் செய்வார்கள் அதை கண்டுபிடித்து எழுதினால் அவதுர்று என்றும் வேறு வகையிலும் தங்களின் இந்த செயலை நியாயப்படுத்த முயல்வார்கள். வட்டி வாங்ககூடாது, வரதட்சினை வாங்க கூடாது, தவ்ஹித் முறைப்படி திருமனம்…எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் நிர்வாகிகள் இவை எதையும் செயல்படுத்த மாட்டார்கள் மாறாக ஹராமாக்கப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு தவ்ஹித் பெயரில் நியாயப்படுத்தவார்கள். இதுதான் இவர்கள் போடும் இரட்டை வேடம். இது பல முறை பல சகோதரர்களாலும் ததஜ வில் இருந்து விலகிய முன்னால் நிர்வாகிகளாலும் நிறுபிக்கப்பட்டுள்ளது.


கடந்த 10.08.2005 அன்று புனித மக்கா நகரில் கூடிய ததஜ வின் சவுதி நிர்வாகம் போட்ட தீர்மானத்தில் கள்ள வெப்சைட் நடத்துவதென்றும் அதன் மூலம் தங்களது பழைய சகாக்களையும்( தமுமுக) மற்ற எதிரிகளையும் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்தி நாரடிப்பது என்றும் அதை கள்ளத்தனமாக நடத்துவதென்றும் தீர்மானம் போட்டுள்ளார்கள். (தீர்மான நகல் 5 ம் பக்கம், புதிய விஷயங்கள் கருத்துக்கள் பற்றிய ஆய்வு பகுதியில் 14 வது பாய்ன்ட்) இந்த கூட்டத்தில் கழந்து கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பக்கம் 1 மற்றும் பக்கம் 2 .

கள்ள வெப்சைட் நடத்தவும் மற்றவர்கள் மீது அவதூறு பரப்பவும் ததஜ போட்ட தீர்மானத்தின் நகல்

இந்த தீர்மானத்தை அங்கீகரித்தும் கள்ள வெப்சைட் எப்படி நடத்துவது, அதற்கு நிர்வாகிகள், மற்றும் அவதூறுகளை எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் பரப்புவது என்றும் அதற்கு உதவுவதற்கு மாநிலத் தலைமை தயாராக உள்ளதாகவும் உலகத்திலேயே முதல் முறையாக இது போன்று ஒரு அவதூறு பரப்புவதற்காக வேண்டி தனது இயக்கத்தில் தனி ஒரு டிபார்ட்மென்டை உருவாக்கிய பெருமை தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநிலத் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீனையே சாரும்.

கள்ள வெப்சைட் நடத்த அனுமதித்து அதன் மூலம் அவதூறுகளை பரப்ப ஐடியா வழங்கி பி.ஜே எழுதிய கடிதம்

இப்போது மக்கள் அனைவருக்கும் விளங்கியிருக்கும் யார் உண்மையில் பல பெயர்களில் வெளிச்சம், ஓன் ஹார்ட், tmmktmmk என்று கள்ள வெப்சைட்டுக்களை நடத்துவது என்றும் யார் உண்மையில் கறுப்பு இ.மெயில்களை தீன் முஹம்மது, ரஸ்மி, முகம்மது அலி, சைதை அலி, உ.உ.கூ உமர் தற்போது புதிதாக செந்தமிழ் செல்வி (ததஜ வின் இந்த மெயில் கிடைக்கப்பெறாதவர்கள் இங்கு கிளிக் செய்து ததஜ வின் புதிய தவ்ஹித் பிரச்சாரம் படிக்கவும்) என்ற பெயர்களிலும் அவதூறுகளையும் பொய்களையுமு் பரப்பி வருவது என்று.

இந்த கிரிமினல் பி.ஜேயும் அவரின் ஜமாத்தும் மக்களை பல முட்டாலாக்குவதற்கென்று தனி பிரிவையே அமைத்து செயல்படுவதை இதன் மூலம் அறிந்திருப்பீர்கள். இவர்கள் இப்படித்தான் மற்ற அமைப்பினரை தாக்கி மற்றவர்கள் பெயரில் கள்ள நோட்டிஸ் போடுவது சமயங்களில் தங்களை யேதாக்கி தமுமுக மற்றும் ஜாக் போட்டது போல் கள்ள நோட்டிஸ் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர்களால் “இணையங்களும் இயக்கங்களும்” என்ற தலைப்பில் மிகவும் புத்திசாலித்தனமாக மற்றவர்களும் நம்பும் விதமாக தந்திரமாக நடுநியைாளர் எழுதுவது போன்று இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் பைத்தியக் காரர்கள் என்றும் ததஜ வை விமர்சிப்வர்கள் ஏதோ ஒரு பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதனால் மனநிலை பாதித்தவர்கள் என்றும் அதனாலேயே இது போல் ததஜ வின் தலைமையை பற்றி அவதூறு பரப்புகின்றார்கள் என்றும் எழுதப்பட்டு கள்ள மின்னஞ்சல்கள் மூலம் பரப்ப பட்டது.

இந்த கட்டுறை அப்படியே உணர்வு லே-அவுட்டில் இருந்ததன் மூலமே விளங்கியிருக்க முடியும் இதை யார் எழுதியிருப்பார்கள் என்று. இப்போது இந்த பதிவை படித்து விட்டு அந்த “இணையங்களும் இயக்கங்களும்” என்ற ததஜ வினரின் கட்டுரையை படியுங்கள் உண்மை விளங்கும்.

“எச்சரிக்கை” என்ற கட்டுரையை நாம் வெளியிட்டதும் பல இலங்கை இந்திய சகோதரர்களிடம் இருந்தும் இன்னும் பல நடுநிலை சகோதரர்களிடம் இருந்தும் கண்டனங்கள் கிளம்பின ஆத்தூர்வாசி போன்ற ததஜ வின் சகோதரர்களும் இதற்காக தங்களது எதிர்ப்புக்களை தெறிவித்தனர். நாம் அந்த விஷயத்தை சற்று வண்மையாக கையான்டிருப்பது உண்மைதான் ஆனால் அதுதான் உண்மை அதை இவர்கள் யாராலும் மறுக்க இயலாது. தவ்ஹிதை கூறக்கூடியவர்கள், முஸ்லிம்கள் இப்படியும் இருப்பார்களா? என்ற ஆதங்கத்தில் அதை படிக்க கூடிய நம்மாள் அதை ஜீரனிக்க இயலவில்லை. ஆனால் என்னதான் நம்மாள் ஜீரனிக்க இயலாவிட்டாலும் உண்மைகளை மறைக்க இயலாதுதானே!.

தங்களுக்கு ஏற்ப்பட்ட சங்கடங்களையும் இன்னும் இந்த விஷயத்தை (அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர்) எளிமையாக வண்மையின்றி கூறியிருந்தால் இன்னும் மிகுந்த
மக்களை சென்றிருக்கும் என்றும். இனிமேல் வண்மையாக எழுத வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கிய இந்திய இலங்கை சகோதரர்களுக்கும் நாம் தவறு செய்யும் போதெல்லாம்
சுட்டிக்காட்டி திருத்தி கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மற்றும் உங்கள் உணர்வுகளை புன்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.

அத்துடன் ஒவ்வொரு முறையும் தங்கள் மீது யாராவது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்களை வைத்தால் ஒன்று அந்த நபரை தங்களது எதிரி இயக்கத்துடன் இணைத்துவிடுவது இல்லையென்றால் ஏதாவது ஆபாசமாக எழுதியோ அல்லது பைத்தியம் அந்த சின்ட்ரோம் இந்த சின்ட்ரோம் என்று எழுதியோ நிகழ்வை திசை திருப்பி விடுவது அதன் மூலம் மக்களை தங்கள் மீதான் குற்றச்சாட்டுக்களை மறக்க செய்வது.

நாம் தற்போது இங்கு ததஜ வினருக்கும் “இணையங்களும் இயக்கங்களும்” போன்று திறமையாக விஷமங்களை பரப்பி் ததஜ என்னமோ கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மாபெரும் சமுதாய இயக்கம் போல மாயை ஏற்படுத்தி பிலிம் காட்டுபவர்களுக்கும் சவால் விடுக்கின்றோம்.

முகவைத்தமிழனாகிய நான், ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அமைப்பிலோ உறுப்பினராகவோ அல்லது நிர்வாகியாகவோ இருப்பதாகவோ அல்லது எப்போதாவது ஏதாவது ஒரு கால கட்டத்தில் இருந்ததாகவோ அல்லது ஏதாவது ஒரு அமைப்பில் பதவியில் இருந்து
நீக்கப்பட்டதாகவோ ஆதாரங்கள் மூலம் நிறுபித்தால் நாம் உடணடியாக நமது எழுத்தை நிறுத்துவதற்கு தயாராக உள்ளோம் அத்துடன் எமது வலைப்பதிவும் மூடப்படும்,இனிவரும் காலங்களிலும் நாம் எழுத மாட்டோம்.

நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், ததஜ வின் சகோதரர்களுக்கும் நாம் ததஜ வின் தலைமையின் தவறுகளையும் ஊழல்களையும் ஆதாரப்புர்வமாக நிறுபித்தும் அம்பலப்படுத்தியும் வருகின்றோம் இது அவதூறு பரப்புவதற்காக அல்ல மாறாக “ஒரு முஸ்லிமின் குறைகளை மற்ற முஸ்லிம் மறைக்க வேண்டும்” என்ற ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்குள் மறைந்து கொண்டு தவறுகளை திரும்ப திரும்ப செய்வதாலும் எதையெல்லாம் மற்றவர்கள் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ அதையெல்லாம் தானும் தனது நிர்வாகிகளும் செய்து வருவதாலும். ததஜ என்ற இந்த இயக்கம் தவ்ஹித் பரப்ப வந்த இயக்கம் அல்ல மாறாக அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர் போன்ற விபச்சாரார்களையும் பி.ஜே பாக்கர் அலாவுதீன் போன்ற கிரிமினல்கள் தங்களுக்கு சொத்து சேர்க்கவும், கைதாவதில் இருந்து தப்பிக்கவும், தங்கள் தவறுகளுக்கும் வயாபாரத்திற்கும் இந்த சமுதாயத்தை உபோயோகப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டதே ததஜ என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கோவை ஜாபர் மீதும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி மீதும் நாம் வைத்த குற்றச்சாட்டுக்களையும் பாலியல் புகாரையும் தைரியமிருந்தால் மறுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். ததஜ வின் சகோதரர்கள் இது குறித்து தங்கள் தலைமை சொல்வதை நம்பாமல் கேள்வ கேளுங்கள். இவர்களை இன்னும் மாநில நிர்வாகிகளாக வைத்திருப்பது ஏன் என்று கேளுங்கள். இல்லையென்றால் இவர்கள் செய்தது எந்த வகையில் சரி என்று கேளுங்கள்.

அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபர் போன்றவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாவ்லா காட்டும் உங்கள் தலைமை தனது இயக்கத்தின் பெரிய தலைகள் அனைவர் மீதும் பெரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதில்லை? அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபரை நீக்கியது போல் பாக்கரையும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி கோவை ஜாபர் போன்றோரையும் நீக்காதது ஏன்?

பொது மக்களும், ததஜ வின் சகோதரர்களும், மற்ற நடுநிலை சகோதரர்களும் இங்கு நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் மூலம் உண்மை என்ன என்பதை உணர்ந்திரப்பீர்கள். இவர்கள் இங்கு இடப்பட்டுள்ளவை அனைத்தும் அவதூறு உண்மை இல்லை என்று மறுப்பதற்கும் நிறைய நேரம் ஆகாது. ஆனால் இறைவன் முன் இவை அனைத்தும் ஒரு நாள் உண்மைப்படுத்தப்படும். அன்று ததஜ வின் அனைத்து குற்றங்களும் உங்கள் முன் ஆதாரங்களோடு கொண்டு வரப்பட்டும் மெளனிகளாக இருந்ததற்காக நீங்களும் பதில் கூற வேண்டிவரும்.

இந்த பதிவின் மூலம் நாம் கள்ள வெப்சைட் நடத்துவது யார், கறுப்பு இ.மெயில் அனுப்புவது யார், அவதுர்று பரப்புவது யார் என்று நிறுபித்துள்ளோம். இவையனைத்தையும் தானே செய்து கொண்டு உலகத்திலேயே தானும் தனது இயக்கமும் மட்டும் தான் யோக்கியம் எனவும் மற்ற இயக்கங்களும் மற்ற அனைவரும் அயோக்கியர்கள் எனவும் மற்ற இயக்கங்கள் அனைத்தும் கள்ள வெப்சைட் மூலமும் கள்ள நோட்டிஸ் மூலமும் அல்லாஹ்விற்கு அஞ்சாது அவதுர்று பரப்புவதாக முகாரி பாடும் இந்த அயோக்கிய கூட்மான ததஜ வையும் அதன் கிரிமினல் தவைர்களையும் மக்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும்.

குறிப்பு : இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் ததஜ வின் செயல் பாடுகள் பிடிக்காமல் (டான் ஊலல், பாலியல் குற்றங்கள், சுனாமி பிதடரா ஊலல்) அதை எதிர்த்து தலைமையை கேள்வி கேட்டதால் அறிவிப்பே இல்லாமல் கட்டம் கட்டி நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகிகளால் நமக்கு கையளிக்கப்பட்டதாகும். சரியான தளம் கிடைக்காததால் அவர்கள் இத்தனை காலமும் மெளனியாக இருந்தார்கள். இனி அவர்கள் பேசுவதற்கும் ஆதாரங்களை வெளியிடுவதற்கும் தயாராக உள்ளார்கள். இவர்களும் மனநோயாளிகளா?

நாம் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்த போதிலும் உண்மைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் இப்பணியை தொடர்வோம்…சிலர் கேட்கிறார்கள் ஏன் ததஜ வின் செய்தியே 80% உள்ளது என்று. ததஜ மட்டுமல்ல தமுமுக, விடியல். மு.லீக், ஜாக் என் யாருடைய ஏமாற்று வேலைகளும் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றால் நாம் அதை மக்களுக்கு அம்பலப்படுத்துவேலாம்.. ஆனால் தற்போது மற்ற இயக்கங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அரசியல் இயக்கங்களாகவோ அல்லது கமுதாய இயக்கங்களாகவோ உள்ளன அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தவறு செய்வதில்லை. ஆனால் இஸ்லாத்தை கேவலப்படுத்தும் விதமாக இந்து சாமியார்களுக்கு சிறதும் குறைவில்லாமல் மதத்தை கூறி அக்கிரமங்கள் புறிந்த காஞ்சிமட சங்கராச்சாரியாரின் காம லீலைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் ஏகத்துவம் தவ்ஹித் என்ற பெயரில் ததஜ வினர் மதத்தின் பெயரில் ஆன்மீகத்தின் பெயரில் தவறுகள் செய்வதால் நாம் மக்கள் முன் நல்லவர்களாக வல்லவர்களாக வேடமிடும் இந்த தரங்கெட்ட ததஜ வினரின் லீலைகளை அம்பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்..

நன்றி
முகவைத்தமிழன்
இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

Create a free website or blog at WordPress.com.