தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 7, 2008

காயிதே மில்லத் பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்

Filed under: IDMK, Qaid-e-Millat — முஸ்லிம் @ 10:42 பிப

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சிந்திப்பீர்!! ஓர் இறை! ஓர் குலம்!!

காயிதே மில்லத் பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்
அவர் படம் அல்ல, பாடம்.

கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள்

WWW.IDMK.ORG

காயிதே மில்லத் என்கிற பெயர் தனி மனித பெயர் அல்ல. அது ஒரு சரித்திரம். விடுதலை வரலாற்றோடும், இந்திய அரசியலோடும், முஸ்லிம்களோடும், பின்னிப் பினைந்த பெயர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். காயிதே மில்லத் ஒரு விளம்பரப் பொருள் அல்ல. இஸ்லாமிய சமூகத்தின் அரசியல் விடியலுக்கு வித்திட்டவர். உன் வீடு தேடி ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் அரசியல்வாதிகள் வந்ததுண்டு, இன்றோ உன் கல்லறையை நோக்கி தன்னை விளம்பரப் படுத்தி ஓட்டு வாங்க சிலர் வருகிறார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை அந்த சாக்கடையை சந்தனக் காடாக மாற்றிய பங்கு உமக்கு மட்டும் உண்டு. ஒரு மனிதர் ஒரே நேரத்தில் அரசியல்வாதியாகவும், மனிதனாகவும் இருக்க முடியாது என்ற கூற்றை உடைத்து எரிந்த மாமனிதர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ணியம் என்ற வார்த்தை இந்த மண்ணில் இருக்கும் வரை காயிதே மில்லத் புகழ் இருக்கும் என்றார். இன்று அவரைப் பின்பற்றுவதாக போலி வேஷம் போடுபவர்கள் அவர் கட்டிக் காத்த கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். பதவி என்பதே ஒரு கண்ணியம் அந்த கண்ணியத்தை இழந்து அற்ப எம்.பி. பதவியை பெறுவதற்கு தன்னை நிறம் மாற்றிக்கொண்டு தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராகி பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக கையெழுத்து இடுகிறார். அய்யோ பாவம்!! தாய்ச்சபை தடுமாறி, உருமாறி, நிறம்மாறி நிற்கிறது. வரலாற்று பேரியக்கம் வத்தலாய் வாடி வதங்கி தொத்தலாய் நிற்கிறது. ஆம்! மரணித்த பிறகு மணி விழாவா? மரணித்த இதயங்களால் மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

தி.மு.க.வின் கொறடா எப்பொழுது எதைப் பற்றி பேச அனுமதி அளிக்கிறாரோ அப்பொழுதுதான் பேச முடியும். இவர் எப்படி சமுதாயத்தின் குரலை ஒலிக்க முடியும்? திராவிட கட்சிகள் காயிதே மில்லத் கண்ட முஸ்லிம் லீக்கையும், முஸ்லிம் லீக்கை குறை சொல்லி எழுந்த இயக்கங்களையும் கற்கண்டாய் நினைத்து, கடவாய் பற்களில் போட்டு மென்று விழுங்கி ஏப்பம் விட்டு விட்டன. காயிதே மில்லத்தின் ஒற்றை அடையாளத்தை அழித்து விட்டனர். தயவு செய்து காயிதே மில்லத்தின் நினைவு நாளில் அவர் பெயரை களங்கப்படுத்தாதீர்கள். அவர் பெயர் கூட உங்களை காரி உமிழும். காயிதே மில்லத் வெறும் படம் அல்ல. அவர் ஒரு பாடம். அந்தப் பாடத்தை மறுபடியும் படியுங்கள். அவர் பிறந்த நாளில் சமுதாயச் சிந்தனைவாதிகளாக மாறுங்கள். சிந்திப்பவர்களுக்கு மட்டுமே.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369, 9443021050

Qaid-e-Millat M. Muhammad Ismail Saheb

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.