தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 23, 2008

சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை

Filed under: சுதந்திரம், IDMK, ilahi, Riyadh TMMK — முஸ்லிம் @ 9:43 முப
“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை”

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் …..தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை.

” உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக” என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. “ஐடிஎம்கே” அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.

தமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ

{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே!) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே! ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே!

ஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு! இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும்? என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.

தமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும்? இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ்ளத் தெளிவாக புரியும்.

* ஜமாஅத்தே இஸ்லாமியா? மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.

* தௌஹீத் ஜமாஅத்தா? பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.

* சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)

* தரீக்கா குரூப்பா? முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.

* தப்லீக் ஜமாஅத்தா? தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.

மேலே சொன்ன இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

நீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிலை சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்

பாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது! அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையம் அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

எம்.ஏ.முஹம்மது அலீ

நன்றி : க.அ. முகம்மது பஸ்லுல் இலாஹி அவர்களின் வலைப்பதிவு

பிப்ரவரி 5, 2008

தென்காசி குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள RSS, BJP முக்கிய புள்ளிகளை கைது செய்ய TMMK கோரிக்கை

Filed under: B.J.P, Riyadh TMMK, rss, terrorists, Thenkasi — முஸ்லிம் @ 8:06 முப
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு உண்மைக் குற்றவாளிகளை கைது செய்த நெல்லை காவல்துறையைப் பாராட்டுகின்றோம். மாநிலம் தழுவிய முக்கியப் புள்ளிகளையும் விசாரிக்க வேண்டும்.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை


கடந்த ஜனவரி 24 அன்று தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் பைப் வெடிகுண்டு வெடித்ததாக செய்தி வெளியானது. அப்போதே இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று கூறினோம். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் இது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டியிடம் காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.

இந்நிலையில், நெல்லை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேர்களை கைது செய்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட சங்பரிவார் பிரமுகர் குமார் பாண்டியனின் தம்பி ரவியும் ஒருவர். இவர் இக்கும்பலின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிகிறது.

தங்கள் கொள்கையைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இவர்களே குண்டுகள் மூலமாகத் தாக்கி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட இக்கும்பல் திட்டமிட்டிருந்ததும் இதன் மூலம் தெரிகிறது. சமூக அமைதியைக் குலைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதே இவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது.

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் குண்டு வெடித்த இடத்தில் கிடைக்கப் பெற்ற வெடி மருந்துகளும் இப்போது தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளும் ஒரேமாதிரியாக இருப்பதாக டி.ஐ.ஜி கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.

எனவே, ஹைதராபாத் மக்கா பள்ளி குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் ஈடுபடும் மத்திய புலனாய்வு குழு தமிழக காவல்துறையிடமிருந்து தென்காசியில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்து தடயங்களைப் பெற்று அவ்வழக்குத் தொடர்பாக மறு விசாரணையை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தென்காசி வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இக்கும்பலுக்கு பின்னணியில் வேறு பலமான சக்திகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றோம். எனவே இது குறித்து மாநில அளவில் செயல்படும் சங்பரிவார் அமைப்புகளின் முக்கியப் புள்ளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.

சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வேலை கொடுக்காமல் துரிதமாகவும் நுட்பமாகவும் செயல்பட்ட நெல்லை காவல்துறையை பாராட்டுகின்றோம். தொடர்ந்து இவ்வழக்கை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றோம்.

சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் கேடு விளைவிப்பவர்களை சட்டத்தின் துணை கொண்டு உறுதியுடன் ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மார்ச் 8, 2007

டெல்லியில் தமிழக முஸ்லிம்கள் போராட்டம்!! TMMK RALLY

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், டெல்லியில் பேரணி

டெல்லி சென்ற முஸ்லிம்களின் ஒரு பகுதி

தமுமுக வின் டெல்லி பேரணி மற்றும் அதில் தலைவர்கள் ஆற்றிய உரையை பார்ப்பதற்கு இங்கு சொடுக்கி தமுமுக வின் இணையத் தளம் செல்லவும் அங்கு மிகத் தெளிவாக் இதன் வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி, மார்ச்.8-

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

பேரணி

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற 13 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது.

காலை 10 மணிக்கு ராமலீலா மைதானத்தில் தொடங்கிய பேரணி, பாராளுமன்றத்தை நோக்கி வந்தது. இந்த பேரணியை பாராளுமன்ற தெருவில் உள்ள போலீஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு பேரணியில் பங்கேற்ற தொண்டர்களிடையே பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் உரையாற்றினார்கள்.

பிருந்தா கரத்

பேரணியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தவிர, டெல்லி மற்றும் அண்டை மாநில முஸ்லிம் அமைப்புகளும் பேரணியில் திரளாக கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் தங்கள் உரையில் வலியுறுத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பலர் உரையாற்றினர்.

சோனியாவை சந்திப்போம்

பேரணியில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியும், அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து தீர்மான அறிக்கையை அளிக்க உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

நன்றி : தினத்தந்தி

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

மார்ச் 6, 2007

TMMK மீதான தென்காசி தாக்குதல் முழு விபரம்

Filed under: crime, Riyadh TMMK, rss assault, Thenkasi — முஸ்லிம் @ 7:32 பிப

நெல்லை மாவட்ட த.மு.மு.க. தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்! படுகாயத்துடன் உயிர் தப்பினார்!


மார்ச் 2ஆம் தேதி மாலை நேரம்! தமுமுக தலைமையகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. டெல்­ பேரணி குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களும் அப்போதுதான் முடிந்திருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி­ருந்து இரண்டாவது நாளாக மக்கள் டெல்­ பேரணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்!

அப்போதுதான் அச்செய்தி எதிர்பாராத வண்ணம் சுமார் 8:30 மணியளவில் தலைமையகத்திற்கு கிடைத்தது.

இரவு 8 மணியளவில் தென்காசியில் நெல்லை மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கானை சிலர் சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும், அவர் உயிருக்குப் போராடுவதாகவும் அந்த தொலைபேசி செய்தி பதறியது.

உடனடியாக தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் இச்செய்தியை உறுதிபடுத்திக் கொண்டார். நெல்லை மாவட்டச் செயலாளர் பகத்சிங் முஹம்மது வும் தொலைபேசியில் நடந்த விவரங்களை கூறினார்.

சம்பவம் நடந்தது எப்படி?

டெல்­ பேரணி குறித்த ஏற்பாடுகளையும் பயண ஆயத்த வேலைகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மைதீன் சேட்கான், தனக்கிருந்த அச்சுறுத்தலை யும் பொருட்படுத்தாமல் தனியாகவே சுற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில்தான் சேட்கான் அவர்கள் அம்மன் சன்னதி தெருவில் செல்லப்பா உணவகத்திற்கருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை வழி மறித்து, ‘டெல்­க் காடா போறீங்க.. எப்படிப் போறீங்கன்னு… பார்ப்போம்டா…’ என வெறிக் கூச்சல் எழுப்பியபடியே சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். அவர் சுதாரிப்பதற்குள் 9 வெட்டு களில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் சேட்கான்!

கோழைகள் அப்போதும்கூட சேட்கானுடன் நேருக்கு நேராக நிற்காமல் அவரது முதுகில்தான் முதல் தாக்குதலை நடத்தியுள்ளனர்! அப்போது மணி சரியாக 8.05.

மூன்று பேர் கொண்ட கும்பல்தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மோட்டார் பைக்கில் வந்தவரை திடீரென குறுக்கே சைக்கிளை நிறுத்தி, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதல் பற்றிக் கூறிய நகர நிர்வாகி நெய்னா, பலமான வெட்டுகளுடன் தற்காப்புக்காக சேட்கான் அருகிலிருந்த செல்லப்பா ஹோட்டலுக்குள் நுழைந் திருக்கிறார். அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் உடனடியாக கூடிவிட வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது.

சில நூறு அடி தூரத்தில் எதேச்சையாக நின்று கொண்டிருந்த சாதிக், மசூது உள்ளிட்ட தமுமுகவினர், விபரம் புரியாமல் அங்கு ஓடிவர அப்போதுதான் தாக்கப்பட்டது சேட்கான் எனத் தெரிய வந்திருக்கிறது.

உடனடியாக ஆம்புலென்ஸில் சேட்கானை ஏற்ற, பின்னால் பாதுகாப்பிற்கு ஒரு காரில் தமுமுகவினர் தொடர, மின்னல் வேகத்தில் ஆம்புலென்ஸ் நெல்லை அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது. ஆம்புலென்ஸ் வாகனம் புறப்படும்போதே ‘நடுபல்க்’ என்ற இடத்தில் நின்று கொண்டு, சங்பரிவார தீவிரவாதிகள் ஆம்பு லென்ஸ் மீது கற்களை எறிந்துள்ளனர்!

மக்கள் கொந்தளிப்பு!

அதற்குள் தீயாய் செய்தி பரவ, தென்காசி பொதுமக்கள் கொந்தளித்து வீடுகளை விட்டு வீதியில் குழுமத் தொடங்கினர். சிலர் பேருந்துகளை உடைக்க.. நிலைமை விபரீதமானது. உடனடியாக தமுமுகவின் நகரச் செயலாளர் நெய்னா, வர்த்தகரணி சாதிக், ஆட்டோ சங்கத் தலைவர் பீர், தொழிலாளரணி மசூது ஆகியோர் பொது மக்களை கலைந்து போகச் கூறினர். கூட்டம் ஆவேசத்தில் கூச்ச­ட, அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் அவர்கள், பொதுமக்களிடம் பேசி அமைதி காக்குமாறும், குற்றவாளி கள் விரைந்து பிடிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

அதன் பின்னர் நள்ளிரவுக்குப் பிறகு தென்காசியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. எனினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செய்தி பரவ, கோப உணர்ச்சிகள் இயல்பாகவே வெளிப் பட்டன. ஆங்காங்கே தமுமுகவினர் மக்களை அமைதிக் காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தயார் நிலை!

மறுபுறம் ஆம்புலென்ஸ் வாகனம் 40 நிமிடத்தில் சீறிக் கொண்டு அரசு மருத்துவ மனையை வந்தடைந்தது. ஏற்கெனவே மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக சேட்கான் அவசர சிகிக்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதற்குள் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர். மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தாழையூத்து பகுதிகளி­ருந்து தமுமுகவினரும் விரைந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் அசோக்குமார்தாசும், மாவட்ட கலெக்டரும் மருத்துவமனைக்கு வந்து அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தினர்!

நள்ளிரவு ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அவசர சிகிக்சையளித்தது. இறைவனின் பெரும் கிருபை யால் அபாயக் கட்டத்தைத் தாண்டி, சேட்கான் உயிர் பிழைத்து விட்டார்! அதன் பிறகே மருத்துவமனை வளாகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் பொதுமக்கள்!

மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கோவையிலிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைக் கண்காணித்து மக்களை அமைதிப்படுத்தினர்.

காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கான் மீது தொடுக்கப் பட்ட கொலைவெறித் தாக்குதலை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் வருவார்!

ஃபாஸிஸத்தின் கோரக் கரங்கள் சேட்கானை குதறியிருக்கின்றன. தமுமுக தொண்டன் என்றுமே கோழையாக வீழ மாட்டான். இந்த சமுதாயத்திற்காக ரத்தம் சிந்துவதற்கும், உயிர் துறப்பதற்கும் அவனே முன்வரிசையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பான்.

இதுவரை சேட்கான் நெல்லை மாவட்டத் தமுமுக தலைவராக மட்டுமே வலம் வந்தார்! இனி ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட மக்களின் தளபதியாக மீண்டும் களமிறங்குவார்! இன்ஷா அல்லாஹ்!

நன்றி : தமுமுக இனையத் தளம்

பிப்ரவரி 28, 2007

தமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)

தமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)

சமுதாய கொடுமைகளுக்கெதிராகவும், சமூக அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தமுமுக இது தனது துவக்க காலத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களையும், விழிப்புனர்வு பிரச்சாரங்களையும் நடத்தி நமது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்த வரதட்சினை எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக களமிரங்கி போராடி நற்பெயரினை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தியுள்ளது. அதுபோல் பல வரதட்சினை ஒழிப்பு திருமணங்களையும் தமுமுக நடத்தி வைத்து சமுதாயத்தில் வரதட்சினை மற்றும் சமூக அவலங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று வரதட்சினைக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக தன்ன அடையாளப்படுத்தியுள்ளது தமுமுக.

ஆனால் சமீபத்தில் நமக்கு கிடைக்கப்பெற்ற தமுமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமன வைபவ சிடிக்கள் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கின. தமுமுக வின் இந்த சவடால்கள் எல்லாம் வெறும் வெளித்தோற்றத்திற்கு தானா? என்ற கேள்விக்குறியையும் நம்முள் எழுப்பின. காரனம், நமக்கு கிடைக்கப்பெற்ற அந்த தமுமுக முக்கிய நிர்வாகியின் இல்லத் திருமனம் முழுக்க, முழுக்க இஸ்லாத்திற்கெதிரான முறையில் நடைபெற்றதாகும். மற்றும் எவற்றையெல்லாம், எந்த ஆடம்பரங்களையெல்லாம், எந்த பித்அத்துக்கைளயெல்லர்ம ஒழிக்க வேண்டும் என்று தமுமுக பிரச்சாரம் செய்து வருகின்றதோ அவை அணைத்தும் மற்றும் அதனையும் விட மேலான வகையில் மாாக்க் புறம்பான காரியங்களை உள்ளடக்கியதாக இருந்தது அந்த தமுமுக நிர்வாகியின் இல்லத் திருமணம். முக்கியமாக அந்நிகழ்வின் கொடுமையின் உச்சகட்டம் அந்த தமுமுக நிர்வாகி அந்த திருமனத்திற்காக லட்சக் கணக்கில் வரதட்சினையாக ரொக்கமும் நகையும் வாங்கியிருப்பதாக காண்பிக்கப்பட்டது தான்.

நாம் இதற்கு மன்னர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற தரங்கெட்ட ஜமாத்தின் சவுதி அரேபிய (அல்கோபர்) கிளை நிர்வாகி ஒருவர் தனது தாடியை எடுத்து விட்டு தனது
தலைவர் பி.ஜே காட்டித்தந்த தூய தவ்ஹித் முறைப்படி அனைத்து அநாச்சாரங்களையும் செய்து தனது திருமனத்தை நடத்தியிருந்தார். அது குறித்து நமது வலைப்பதிவில் எழுதப்பட்ட பின்னர் உடனடியாக அந்த ததஜ நிர்வாகியை நீக்கினார்கள் அல்லது நீக்கப் பட்டதாக நாடகமாவது ஆடினார்கள் ததஜவினர்.

இவ்வளவு சீரும் சிறப்பும் வாய்ந்த உலகில் உள்ள இஸ்லாத்திற்கு புறம்பான அனைத்து அநாச்சாரங்களும் மிகுற்த திருமனத்தை நடத்திய பெருமை தமுமுக வின் ரியாத் மாகான தலைவர் உயர்திரு. ஆரிப் மறைக்காயாட அவர்களையே சேரும். இவர் தனது மகன் ஃபஹத் மறைக்காயருக்கு ரமீஸ் பர்வீன் என்ற பென்னுடன் நடத்திய திருமனத்தில் தான் இத்தனை அநாச்சாரங்களும். இத்திருமனம் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில் இது பற்றிய தகவல் தமுமுக தலைமை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதது அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தமுமுக வின் பிரச்சாரம் அனைத்தும் ஊருக்கத் தான் உபச்சாரம் என்ற்ற நிலைதானோ?

தமுமுக வின் ரியாத் மன்டல தலைவர் உயர்திரு. ஆரிப் மரைக்காயர் தனது மகன் ஃபஹத் மரைக்காயருக்கு இஸலாத்திற்கு புறம்பாகவும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பாகவும் (தமுமுகவின் பைலாவில் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவது முக்கிய பாயின்டாகும்) மிக விமரிசையாக நடத்திய திருமன சிடிக்களை பார்ப்பவர்கள் இப்படிப்பட்ட இயக்க விரோத, இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை செய்யும் ஒருவரை தனது நிர்வாகியாக இன்னும் வைத்திருப்பதற்காக தமுமுக மீது காறித் துப்புவார்கள் அந்த அளவிற்கு மோசமாக சமூக விரோத, மார்க்க விரோத திருமனமாக அது நடைபெற்றிருந்தது தான். ஆரிப் மறைக்காயர் யாரோ ஒருவராக இருந்திருந்தால் இந்த கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது ஆனால் இவர் சமூக அவலங்கள், மற்றும் வரதட்சினை போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எதிராக களம் கண்ட தமுமுக வின் நிர்வாகியாக இருப்பதால்தான் இந்த கட்டுரை.

தான் முன்னி்ன்று நடத்திய தனது மகனின் திருமனத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களையும், நகைகளையும் வரதட்சினையாக அணவைரின் முன்னிலையில் பெற்றுள்ளார் தமுமுகவின் நிர்வாகியான ஆரிப் மறைக்காயர். அத்துடன் நின்றுவிடாது பல லட்சம் மதிப்புள்ள சீர் வகைகளையும் பெற்றுள்ளார், அத்துடன் இந்த திருமனத்தில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஆனும் பென்னும் ஹிஜாபின்றி விளையாடுதல் , அரிசியை ஒருவர் மீது மற்றவர் அள்ளி வீசி விளையாடுதல், பல்லாங்குழி போன்ற அனைத்து காரியங்களும் அரங்கேறியுள்ளன. தனது பகட்டினை காட்டுவதற்காக எழுதுகோலுக்கே கூசும் வகையில் தனது மகனின் முதலிரவு அறை வரை கேமரா சென்று புகுந்து விளையாடியுள்ளது.

பென்கள் அதிகமான அளவில் ஹிஜாபின்றி இருப்பதாலும் சிலரின் நன்மை கருதியும் முழு சிடியும் வெளியிடாமல் மக்கள் சமூக அநீதியான வரதட்சினைக்கெதிராக குரல் கொடுக்கும் தமுமுக வின் நிர்வாகி எப்படி தனது மகனுக்கு தனது இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும் தான் சார்ந்துள்ள மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் வரதட்சினை வாங்கி திருமனம் முடித்துள்ளார் என்பதை இந்த சமுதாயம் காண வேண்டும் என்பதற்காகவும், உண்மையிலேயே தமுமுக சமூக கொடுமையான வரதட்சினைக்கு எதிராகவும் மற்றும் பல சமமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடக்கூடியதாக இருந்தால் உடனடியாக தனது நிர்வாகியான சவுதி அரேபியா நியாத் மன்டல தலைவர் ஆரிப் மறைக்காயர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி அதற்கு பொருப்பான் தூய ஒருவரை நியமித்து தனது பரிசுத்த தன்மையை நிறுபிக்கும் என்று நம்புகின்றோம்.

தமுமுக தனக்கு இது போன்ற மார்க்க நம்பிக்கை இல்லாத, தனது இயக்க கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவோர் வசூல் செய்து தருகின்றார்கள் என்பதற்காகவும், இவர்கள் நன்கொடைகள் அளிக்கின்றார்கள் என்பதாலும் இவர்களுக்கு தனது அமைப்பில் பதவிகள் கொடுத்து நிர்வாகிகளாக வைத்திருப்பது தமுமுக வின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைக்க கூடியதாகவே அமையும். மற்றும் தமுமுக வில் உள்ள தவ்ஹித் வாதிகளும் சமுதாய அக்கறையுள்ளவர்களும் இதுபோன்ற நிர்வாகிகளின் செயலால் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாதவர்களாக, அவமானப்பட்டவர்களாக தமுமுக வை விட்டு விலகும் வாய்ப்புக்களும் ஏராளம்.

தமுமுக இது போன்ற நிர்பந்தங்களுக்கு தன்னை ஆட்படுத்தியதால் இராமநாதபுரம் மாவட்டம் போன்று தமிழகததில் பல இடங்களிலும் இயக்கத்தை மூன்றாக உடைக்க கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டும் இன்னும் பல வலைகுடா நாடுகளிலும் ஏற்கனவே பலமுறை சரிவுகளை சந்தித்து உள்ளது. ஆரிப் மறைக்காயர் பிரச்சினையால் ஏற்கனவு ரியாத் மன்டல நிர்வாகிகள் பலர் தமுமுக வில் இருந்து தங்களது பொருப்புக்களை ராஜினாமா செய்துள்ளனர் இந்நிலையிலும் ஆரிப் மறைக்காயர் போன்ற நிர்வாகிகளை நிர்வாகத்தில் வைத்து அழகு பார்ப்பது தனது கொள்கைகளுக்கு எதிராக தமுமுக செயல்படுகின்றதோ என்ற ஐயத்தையும், தமுமுக வின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிகையின் மீது கேள்வி எழுப்பக்கூடிய வகையிலுமே அமையும். தமுமுக வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இது குறித்து நன்கு அறிந்திருக்க கூடிய நிலையில் அவரிடம் இருந்து ஏனை தமுமுக சகோதரர்களும், பொதுமக்களும் ஆரிப் மறைக்காயர் மீது உடனடி நடவடிக்கையை எதிர் பார்க்கின்றனர்.

ஆரிப் மரைக்காயர் தனது மகனுக்கு வரதட்சினை வாங்கி முதலிரவு அறை வரை தனது ஆடம்பரத்தை காண்பித்து நடத்திய கல்யானத்தின் முக்கிய காட்சிகள் மட்டும் தொகுக்கப்பட்ட வீடியோவை காண கீழே சொடுக்கவும்:

வீடியோவை காண்பதற்கு CLICK HERE TO VIEW

வீடியோவை பதிவிறக்கம் செய்வதற்கு CLICK HERE TO DOWNLOAD

நன்றி : செய்திகள் மற்றும் வீடியோ சிடிக்கள் – புதுவை எம். அனஸ்

இஸ்லாம், காரைக்குடி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.