தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 9, 2008

இலங்கை மூதூர் றிஷானா நஃபீக் – வழக்கின் மறுவிசாரனை

Filed under: றிஷானா நபீக், Rizana Nasik, Srilankan maid — முஸ்லிம் @ 8:22 முப

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை அளிக்கப்பட்டு இந்த விசயம் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த விசயம். இது குறித்து நமது வலைப்பதிவிலும் SRILANKA முஸ்லிம் பென்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உலகெங்கும் உள்ள மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த பாரிய அழுத்தத்தின் காரனமாக இந்த வழக்கை சவுதி அரேபியாவின் அரசாங்கம் திரும்ப விசாரிக்க உத்தரவிட்டு மீண்டும் எந்த நீதி மன்றத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை விதிக்கப்பட்டதோ அங்கே மறு விசாரனைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று 08-04-2008 அன்று இந்த வழக்கின் விசாரனையின் போது கைகளில் விலங்கிடப்பட்டு இஸ்லாமிய உடையான பர்தா அனிந்த நிலையில் ரிஸானா நஃபீக் நீதி மன்றத்தில் உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார். உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி அவர்கள் தனது உத்தரவில் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து எதிர்ப்புக்களும் சுப்ரீம் ஜீடிசியல் கவுன்சில் என்ற அமைப்பின் முன்பாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரிஸானா நஃபீக்கின் வழக்குறைஞர் திரு. கதாதிப் ஃபஹத் அல் ஷம்மேரி தெறிவிக்கையில், இந்த வழக்கை மீண்டும் மறு விசாரனைக்காக பழைய இடத்திற்கே (எங்கே தண்டனை வழங்கப்பட்டதோ) அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

சவுதி அரேபியாவின் அப்பீல் கோர்ட்டால் ரிஸானா நஃபீக்கின் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு சவுதி அரேபியாவின் உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை எடுத்து மறு விசாரனக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கால் கொல்லப்பட்டதாக (குழந்தை கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரங்களுமோ அல்லது, பிரேத பரிசோதனை அறிக்கையோ ஒன்றும் இது வரை இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்படவில்லை வெறும் வாதங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் ரிஸானா நஃபீக்கிற்கு தண்டனை அளிக்கப்பட்டது குழந்தை பால் குடிக்கும்போது பொறையேறி மூச்சு தினறி இறந்ததாகவே கூறப்படுகின்றது) கூறப்ப்படும் குழந்தையின் தந்தையான திரு. நாயிப் ஜிஸியான் கலப் அல் ஒத்தைபி என்பவரும் உடணிருந்தார்.

தவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் எனபவர்தான் இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கின் மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றினார்.

இவ்வழக்கின் ஆரம்பத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மொழிபெயர்பாளராக பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பழைய மொழிபெயர்ப்பாளரையும் கோர்ட்டில் ஆஜராக அழைத்திருந்தும் அவர் விசாரனைக்கு வரவில்லை. இந்நிலையில் இதை நீதி மன்ற அவமதிப்பாக கருதி அவர் மீது நடடிவடிக்கைக்கு நீதி மன்றம் உத்தரவிடுமா என்பது தெறியவில்லை. ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக இருந்த பெயர் குறிப்பிடப்படாத இந்த நபர்தான் ரிஸானா நஃபீக் கொலையை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் தவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் என்பவர் ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றுகின்றார்.

ரிஸானா நஃபீக் சிறுமியாக (மைனர்) இருந்தபோது அனைத்து சட்ட விதிமுறைகளும் மீறப்பட்டு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு அனுப்பபட்டவர் என்பதும் அவர் வந்து இரன்டொரு வாரங்களிலேயே இந்த குற்றம் சுமத்தப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. இலங்கையில் இருந்துதான் அதிகளவில் சிறுமிகளாக இருக்கும் பலர் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் அவ்வாறு வரும் இவர்கள் பலத்த பாலியல் சித்திரவதைகளுக்கும் வண்புணர்வுகளுக்கும் கெடூரங்களுக்கு ஆடபடுத்தப்படுகின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்கள் என்பது வருந்ததக்க விசயம். இந்த நிகழ்வுகளை தடுக்கவும் முஸ்லிம் பெனகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாமல் தடுக்கவும் இலங்கையில் உள்ள அணைத்து இசுலாமிய அமைப்புகளும் கட்டாயம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தங்கள் பென் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அந்நிகழ்வுகளை கண்டு கட்டாயம் சிந்திக்க வேண்டும். உங்கள் பென் மக்கள் வேலைக்கு வரும் நாடுகளில் கட்டாய பாலியல் வண்புனர்வுகளுக்கும் பலவித கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். முக்கியமாக சமுதாய ஆர்வலர்கள் இந்த விசயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.

தொடர்புடையது : 09-04-2008 அரப்நியுஸ் பத்திரிகை செய்தி

ஜூலை 16, 2007

SRILANKA முஸ்லிம் பென்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்

Filed under: றிஷானா நபீக், Rizana Nasik, Srilankan maid — முஸ்லிம் @ 3:02 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களுக்கு,

இந்த விடயம் குறித்து உலகின் அணைத்து அமைப்புக்களும் எழுதியும் பேசியும் வரகையில் சகோ. ரிஷானா நஃபீக் ஒரு முஸ்லிமாக இருந்தும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் குரல் இந்த விசயத்தில் இது வரை ஓங்கி ஒலிக்காததன் காணம் என்னவென்று தெறியவில்லை. இந்த இலங்கை முஸ்லிம் பென்னிற்காக குரல் கொடுக்க கூடிய அணைத்து அமைப்புகளும் முஸ்லிம் அல்லாத தமிழ் அமைப்புக்களாகவும் தமிழ் மக்களாகவுமே உள்ளனர். இது வருத்தப்படக்கூடிய ஒரு விடயம்.

இந்த பென்னின் உயிர் காக்க வேண்டி பல ஆன்லைன் பெட்டிசன்கள் உருவாக்கப்பட்டுள்ன. நீங்களும் அதில் ஒரு கையெழுத்திட்டு செல்லுங்களேன். இரன்டு நிமிடங்கள் கூட பிடிக்காது.

ஐ பெட்டிசன் ஃபாரம் :

http://www.ipetitions.com/petition/SaveRizanaNasik/

பெட்டிசன் ஆன்லைன் ஃபாரம் :

http://www.petitiononline.com/rizana1/

அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பின் ஃபாரம் :

http://www.amnesty.org.uk/actions_details.asp?ActionID=295


நன்றி.

மரணத்தின் வாசலில் தவிக்கும்
இலங்கை இளம் பெண்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார்.

பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது.

மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.

அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.

-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.

-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.

-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

– றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.

– றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Choking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

– கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

– இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் (அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.

மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.

அன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள். தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப் பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை.

அதாவது வேலைக்குப் போகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப் போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப் போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை. இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.

இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது’ வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப் பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது.

சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது.

இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப் பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது.

நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.

றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் (33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)

படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம்.

வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப்பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.

இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும்.

இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும்.

றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும்.

இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.

ஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக் குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒரு மாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள்.

அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.

குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.

இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச்செய்வோம்.

காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி – இமெயில் மூலமாகவோ பேக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.

தயவு செய்து, உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.

Father of the dead child,(re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi
c/o, Sri Lankan Embassy,
Po Box,94360
Riyadh-11693
Soudi Arabia

Fax.00 9661 460 8846, e mail–. lankaemb@sabakah.net.sa

என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும்.

ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ( rajesbala@hotmail.com)
நன்றி: கீற்று

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.