தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 13, 2008

நெல்லை ஏர்வாடியில் மேற்படிப்பு வழிகாட்டி முகாம் – 2008

Filed under: ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, united students front, USF — முஸ்லிம் @ 7:29 பிப
மேற்படிப்பு வழிகாட்டி முகாம் – 2008

மேடையில் விருந்தினர்கள் மற்றும் கல்வியாளர்கள்

யுனைடெட் ஸ்டூடண்ஸ் ஃபிரண்ட் சார்பாக ஏர்வாடி O.K. திருமண மஹாலில் வைத்து மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் S. சாதிக் M.B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

சகோதரர் ரியாஸ் M.B.A., அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். ராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். USF ன் மாநில பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் USF ஐ பற்றி அறிமுகப்படுத்தி பேசினார்கள். மேலும் மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டாக்டர்.முஸ்தபா M.B.B.S., DCA., டாக்டர் ஸ்ரீகுமார் M.B.B.S., ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவிகள்

பொறியியல் துறை சம்மந்தப்பட்ட கருத்துக்களை பேராசிரியர் ஹைதர் அலி (HOD, PET Eng, College) பேராசிரியர் S. பாபு ரெங்க ராஜன் (HOD, IT) ஆகியோர் வழங்கினார்கள். அறிவியல் துறை சார்பாக பேராசிரியர் சேக் அப்துல் காதர் மற்றும் பேராசிரியர் அஹமது கனி ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள். சட்டப்படிப்பு பற்றி அட்வகேட் பெல்மான் அவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். கலந்து

நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவர்கள்

கொண்ட பேராசிரியர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இடையே USF தயாரித்துள்ள மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை USFன் பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் வெளியிட திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். முடிவில் சகோதரர் முகைதீன் B.Sc., நன்றியுரை கூறினார்.

விழாவில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு : மூலக்கரைப்பட்டி ஜவாஹிர் ஹஸன், ஏர்வாடி, நெல்லை

மே 11, 2008

மதுரையில் USF நடத்திய வழிகாட்டி முகாம்

Filed under: united students front, USF — முஸ்லிம் @ 9:37 பிப

யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக 10.05.2008 சனிக்கிழமை மதுரை ஃப்ரென்ட்ஸ் மஹலில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

மெளலவி ஜமால் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓத விழா தொடங்கியது USF ன் மாவட்ட தலைவர் திரு. ஃபக்ருதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். USF ன் மாநில தலைவர் திரு. பின்னர் தலைமையுரையாற்றினார்கள். USF ன் மாநில பொது் செயலாளர் திரு.முகம்மது அன்வர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

வழிகாட்டு உரைகளாக வழக்குறைஞர் திரு. ஜின்னா, பேரா. பஷீர் அஹமது, ஆடிட்டர் முகம்மது கான், மருத்துவர் அஹமது கலீல், உள்ப் பலர் மாணவர்களுக்கு எதிர்கால படிப்பு குறித்தும் திட்டமிடுதல் குறித்தும் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியாக சட்டக் கல’லுர்ரி மாணவர் திரு. ராஜா முகம்மது அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

மே 9, 2008

USF நடத்தும் மாணவ – மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

Filed under: united students front, USF — முஸ்லிம் @ 12:16 பிப
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா

யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்தாவதுஇ யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக நாளை 10.05.2008 சனிக்கிழமை சென்னை, திருவல்லிக்கேணி, ஆதம் மாக்கெட், அஹமது அலி பார்பியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழச்சியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல கல்வியாளர்களும், பிரபலங்களும் கலந்து கோண்டு மாணவுமாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.

டாக்டர் ஜீலானி MBBS, BCH

டிரஸ்ட்டி, ஜான் டிரஸ்ட்

டாக்டர் ஆயிஷா ஹமீது

மேனேஜி்ங் டிரஸ்ட்டி – ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்ட்

ஜனாபா. A. நஷீமா பேகம் M.A

முதல்வர் – அஹமது அலி பார்பியா மெட்ரிக் பள்ளி

பேராசிரியர் M. ஹமீது ஹீசைன் M.E

ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லுர்ரி

ஜனாப் N. முஹம்மது B.E

சீனியர் நெட்வொர்க் இன்ஜினியர்

ஆகியோர் உட்பட பலர் கலந்து நமது மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள் ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி இந்நிகழச்சியில் கலந்து கொண்டு பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் தெறிவித்துள்ளார்கள்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.