தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 19, 2008

இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் – மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:20 பிப

இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

Advertisements

தமிழகம் முழுவதிற்கும் ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு எண்களுடன்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:18 பிப
லால்பேட்டை, ஆக.13-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழகமெங்கும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் எனும் அவசர ஊர்தி சேவையை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

தனது இந்த சேவையின் மூலம் தமிழகத்தில் ஏற்ப்பட்ட சுனாமி போன்ற பெரும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் ஜாதி, மதம் பாராது இந்த ஊர்திகளின் மூலம் சேவையாற்றி வருகின்றதுஇந்த அமைப்பு.

ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த சேவையை எப்படி பெருவது என்று தெறியவிலலை அதை மக்களுக்கு அறியப்படுத்தும் முயற்சியாக, தமிழகம் முழுவதும் ஊர்வாரியாக தமுமுக எங்கெல்லாம் தனது ஆம்புலன்ஸ் எனும் அவசர ஊர்தி சேவையை வைத்துள்தோ அங்கு அவசரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி என்களுடன் இந்த பக்கத்தை கட்டமைத்துள்ளேன்.

கீழே கொடுக்கப்பட்டள்ள இணையச் சுட்டியை சொடுக்கி அதன் பயனை பெறவும், மின்னஞ்சல்கள் மூலமாக மற்றவர்களுக்கும் இந்த தகவலை தெறிவித்து பயனடையச் செய்யவும்.

இந்த தகவல் மனித நேயத்தின் அடிப்படையில் லால்பேட்டை டாட் காம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.தகவல் அளித்து உதவிய தமுமுக லால்பேட்டை கிளை நிற்வாகிகளுக்கு எங்கள் நன்றியை தெறிவித்து கொள்கின்றோம்.

தமிழகம் முழுவதிற்குமான அவசர ஊர்தி(ஆம்புலன்ஸ்) சேவை தொடர்பு எண்கள் – இங்கு சொடுக்கவும்:CLICK HERE TO ACCESS AMBULANCE SERVICE NUMBERS ALL OVER TAMILNADU

பறக்கட்டும் நம் தேசியக் கொடி! சிறக்கட்டும் நம் தேசம்!!

Filed under: IDMK — முஸ்லிம் @ 5:17 பிப

பறக்கட்டும் நம் தேசியக் கொடி! சிறக்கட்டும் நம் தேசம்!!

FLAG

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைத் தொட்டு இருக்கிpறோம். முகில் கிழித்து அசைந்தாடும் நம் தேசியக் கொடியைப் பார்க்க விழிகள் தாவுகின்றன. சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆர்த்து எழுந்து ஜாதி மதம் இனம் மொழி கடந்து போராடினோம். ஆம், 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதி கூற்றுக்கு அர்த்தம் கொடுத்தோம். ஆகஸ்ட் 15, தித்திப்பான நாள். வெள்ளை ஆதிக்கம் வெளியேற்றப்பட்ட நாள், நம்மை நாமே ஆளுவதற்கு வழி கண்ட நாள்.

நம்முடைய தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைப்பற்றி சர்.மௌண்ட்பேட்டன் பிரபு வேதனையோடு கண்ணீர் மல்க கூறிய வார்த்தைகளை மறந்து விட முடியாது. அடிமை இந்தியாவில் பீரங்கிகளுக்கும், டாங்கிகளுக்கும் இடையில் வந்த போது, ஆம், அடிமை இந்தியாவில் வலம் வந்த போது நாங்கள் அவரைப் பாதுகாத்தோம், ஆனால் சுதந்திர இந்தியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திரத்தை நீங்கள் எங்கே காக்கப் போகிறீர்கள் என்று வேதனையோடு கூறினார். மிச்சமுள்ள தோட்டாக்கள் ஆங்காங்கே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், எதிராக வெடித்துக் கொண்டு இருக்கின்றன இன்றும். வறுமை, இல்லாமை, கல்லாமை, மூட நம்பிக்கை, ஜாதி, மத மோதல் என் தாய்த் திருநாட்டில் நடப்பது கண்டு வேதனை அளிக்கிறது. நம் தேசியக் கொடியின் மூன்று நிறங்கள் – தியாகம், பசுமை, தூய்மை போன்றவற்றை பாரத மக்களுக்கு பகர்கின்றன.

தேசியக் கொடியை ஏற்றுவோர்களே! ஆட்சியாளர்களே! அரசு அதிகாரிகளே! உங்கள் இதயத்தில் ஒன்றை ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள். தேசியக் கொடி துணியாலும், நூலாலும் நெய்யப்பட்டது அல்ல, இந்திய பன்மைச் சமுதாய மக்களின் இரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் பின்னப்பட்டது. அதை உடைக்கும் உளுத்தர்களை இனம் கண்டு ஊதையில் துரும்பு போல் ஆக்கிவிடுங்கள். ஆம், நீதி, நேர்மை, வாய்மையை உயரே பறக்க விடுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை உயரே பறக்கட்டும், மானுடம் சிரிக்கட்டும், இந்தியா உயர்ந்து நிற்கட்டும், உலகமே நம்மைப் பார்த்து படிப்பினை பெறட்டும், பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்ற பாடல் பட்டுத் தெறிக்கட்டும் எட்டுத்திக்கும் என்று சுதந்திரப் பொன்நாளை வற்றாத வாஞ்சையோடு வாழ்த்துகிறோம்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு

50/330, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

சென்னை – 600 005

தமிழ்நாடு செல்: 9943802111, 9786011679, 9344510369

ஓகஸ்ட் 12, 2008

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தவுள்ளது.

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:07 முப

எதிர்வரும் 15.08.2008 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு, நேதாஜி சாலை – மரப்பாலம் அருகிலுள்ள மகாத்மா நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) ஆகியன அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தவுள்ளது.

இம்முகாமிற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர்.கலீபுல்லாஹ் தலைமையேற்கிறார்.

மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஏ.சாதிக் அலீ வரவேற்புரையாற்றுகிறார்.

வி.ஐ.பி. டெய்லர் பாக்யராஜ், எம்.ஜபருல்லா (எம்.எஸ்.எஃப்.), ஏ.எஸ்.சுஹைல் அஹ்மத் (எம்.எஸ்.எஃப்.), எம்.அன்வர் ஹ{ஸைன் (ஸ்டார் விஷன்), எஸ்.மீரா ஹ{ஸைன் (எம்.எஸ்.எஃப்.), ஏ.பிலால் (எம்.எஸ்.எஃப்.). பி.தவ்ஃபீக் (எம்.எஸ்.எஃப்.), ரியாஜ் முஹம்மது (எம்.எஸ்.எஃப்.) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அ.பஜ்லுர்ரஹ்மான் நன்றியுரையாற்றவுள்ளார்.

இம்முகாமின் சிறப்பம்சங்களாக, இரத்த வகை தெரியாதோருக்கு இலவசமாக அவற்றைக் கண்டறிதலும், பள்ளிக்கூடத்திற்கு மரக்கன்றுகள் அர்ப்பணிப்பும் நடைபெறவுள்ளன.

லால்பேட்டை இணைய தளம்

முஸ்லிம் இந்தியா!! சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகம்!! (மீள் பதிவு)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:06 முப

தியாகத்தின் நிறம் பச்சை!!
இந்திய சுதந்திரப்போரில் இஸ்லாமியரின் பங்களிப்பு

குறிப்பு : ஆகஸ்ட் 10,2007 தினமனி நாளிதழ் குருமூர்த்தி அய்யர் என்ற வந்தேறி பார்ப்பான் எழுதிய “முஸ்லிம் இந்தியன் – பெயர் மாறுகின்றது” என்ற தலைப்பில் ஒரு துவேஷக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. இந்த கட்டுரையை (தியாகத்தின் நிறம் பச்சை) டவுன்லோட் செய்து படித்தபின்பு சொல்லுங்கள் “முஸ்லிம் இந்தியன்” என்று மட்டுமில்லை “முஸ்லிம் இந்தியா” என்று பெயர் மாற்றக்கூடிய அளவிற்கு முஸ்லிம் இந்தியர்கள் இந்த இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்துள்ளார்கள்.

குருமூர்த்தி அய்யரின் ஜாதிக்காரர்களாகிய வாஜ்பாய், அத்வானி போன்று சுதந்திரப்போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்து சேவகம் செய்து வாழ்ந்தவர்களல்ல எம் முஸ்லிம்கள் மாறாக சுதந்திரத்திற்காக ஆங்கிலேய தோட்டாக்களையும், ஈட்டிகளையும் மாரில் தாங்கி தம் செங்குருதி சிந்தி இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த உண்மை செம்மள்கள் எம் முஸ்லிம்கள். தேசத்துரோகிகளான கோட்சேயின் கூட்டங்கள் தேச பக்தர்களாக வேஷம் போடும் இந்தியாவில் இன்று இந்த தேசத்தை பூர்வீகமாக கொண்ட எம்இனம் தேச துரோகிகளாக குருமூர்த்தி போன்ற வந்தேறி அந்நிய பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்படுவது வேடிக்கையானது. – முகவைத்தமிழன்.

 

நன்றி கொல்வதை வாழக்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் இஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள்.

தேசப் பிரிவினை;க்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள்.

இந்த பாசிஸ்டுகள் மேலே நாம் குறிப்பிட்ட பொய்யைப் பரப்புவதோடு நின்று விடவில்லை. வரலாற்றின் ஒரு முக்கியப்பகுதியைக் குழி தோண்டிப் புதைக்கவும் செய்தார்கள். அப்படி அவர்கள் புதைத்த வரலாறுதான் இந்திய விடுதலைப் பேரில் முஸ்லிம்களின் பங்கு.

இந்த பாசிஸ்டுகள் இன்னொரு பாதகத்தையும் எந்தத் தயக்கமுமின்றி செய்து வருகின்றார்கள். அது இந்தியாவுக்கு இரண்டகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்றொரு வடி கட்டின பொய்யையும் பரப்பி வருகிறார்கள்.

இந்தப் பொய்கள் அவர்கள் எதிபார்த்த பலனை அவர்களுக்குத் தராமல் போய்விடவில்லை இந்தப் பொய்கள் இன்றைய முஸ்லிம்களிiயே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தித் தலைதாழ்த்தச் செய்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

இந்த நூல் மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட உண்மைகளை அகழ்ந்து வெளியே கொண்டு வந்து ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தருகின்றது.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம்!! இந்த வiலாறு, அதாவது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடுத்த போர் ஒரு நீண்ட நெடியகாலம் வரை நீடித்தது. ஆகவே முஸ்லிம்களின் விடுதலை;ப் போர் வரலாறு மிகவும் நீண்டதொரு வரலாறு.

இந்த வரலாறு இல்லாத வரலாறு குறையுடையதொரு வரலாறே!!

ஆதலால் இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக மக்கள்முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.

இந்த வகையில் நூலாசிரியர் அப்துல் சமது அவர்கள் பக்கம் 11ல் குறிப்பிட்டுள்ளபடி ஆய்வுகள் தொடர வேண்டும்.

இதனாலெல்லாம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிரான இந்திய விடுதலைப் போர் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. ஒரு பெரும் இடைவெளி கொண்டதாகவே இருக்கின்றது. இந்தியாவில் ஒரு வரலாற்றுப் படுகொலை ஒரு பலாத்காரத்தோடு திணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் ர்ளைவழசல ழுக குசநநனழஅ ளுவசரபபடந in ஐனெயை ஓர் எடுத்துக்காட்டு.

இதேபோல்தான், யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரும் ஒரு டிபாய் வரலாறாக வரையப்பட்டு அரசு அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த நூல் இன்னும் இரடடிப்பு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

இந்தியாவின் விடுதலை வரலாற்றை வரைகின்றவர்கள் இந்த வரலாற்றை – இஸ்லாத்தின் சீரிய பங்கை மறந்து விடக்கூடாது! இதை இன்னும் குறிப்பாகச் சொன்னால் ‘தேசியம்’ என்பது பிற்றை நாட்களில் தோன்றிய ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்களின் விடுதலைப் போர் ‘தேசியம்’ என்ற கொள்கை அறிமுகப்படுத்;தப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது.

இந்தியாவில் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிராக போராடினார்கள். அதே காலகட்டத்தில் கவ்காஸ் பகுதியில் ஸார் மன்னர்களின் ஆதிக்கத்திற்கெதிராக இமாம் காசிமுல்லாஹ் ஷஹீத் இமாம் ஷாமில் ஆகியோர் போihடினார்கள்.

ஆங்கிலேயர்கள் தோல்வியை முதலில் முத்தமிட்டது ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் கைகளில்தான் (இந்த நூலின் பக்கம் 6). ஆங்கே முஸ்லிம்களை ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறுத்தியது இஸ்லாம்தான்.

இந்த நூலின் பக்கம் 16,17ல் குறிப்படப்படும் செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களை ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்தது இஸலாம்தான். ஷஹீத் செய்யத் அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் அல் மியான் என்ற அபுல் ஹஸன் அலி நத்வீ அவர்கள் இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள்

ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்தியாவில் முஸ்லிகள் போராடி தங்கள் உயிரைத் தந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் எகிப்தில் ஆங்கிலேயர்களுக்கெதிராக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து உற்சாம் தந்தது இஸ்லாம்தான்.

இந்த உண்மைகளின் ஒளியில் இஸ்லாத்தின் பங்கு உரிய அழுத்தத்தோடு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இந்த நூலை ‘இலக்கியச்சோலை’யின் வெளியீடாக வெளியிட முன்வந்து, இசைவும் தந்த பேரா. அப்துல் சமது அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

‘இலக்கிச்சோலை’யின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் வல்லோன் அல்லாஹ்வின் பெருங்கருணையினால் தொடருகின்றது. அல்ஹம்ந்துலில்லாஹ்.

வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தருவர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இவண்,

மு. குலாம் முஹம்மது

காப்பாளர், இலக்கியச்சோலை

 

கட்டுரையை முழுமையாக படிப்பதற்கு இங்கு சொடுக்கி டவுன்லோட் செய்யவும்.

தியாகத்தின் நிறம் பச்சை (WORD DOCUMENT)

தியாகத்தின் நிறம் பச்சை (AS PDF FILE)

 

தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி அவர்கள் கூறுவது என்ன?

Filed under: IDMK — முஸ்லிம் @ 9:01 முப

IDMK தலைவரின் தமிழன் TV பேட்டி (ஆடியோ) FULL INTERVIEW

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த சகோதரர்களே!

கடந்த 03.08.2008 அன்றைய கல்ஃப் நியூஸ் (GULF NEWS) பத்திரிகையில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் டெல்லியில் கடந்த 02.08.2008 அன்று இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தால் (IICC) நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பேசியதாக சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் கூறுவது என்ன?

முஸ்லிம்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்த தவறி விட்டார்கள் அன்றியும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முஸ்லிம்களை கைவிட்டதில்லை. காரணம்,,

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் எல்லா குடிமக்களுக்கும், இந்திய பிரஜைகளுக்கும் சரிசமமான அந்தஸ்து வழங்கி இருக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம் முஸ்லிம்களாகிய நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை முறைப்படி நம் சமுதாய நன்மைகளை கருத்தில்கொண்டு தீர்க்கமாக சிந்தித்து சட்டரீதியாக அடைய முயற்சிக்க வேண்டும்.

அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்த முயற்சியுடன் அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை மற்ற சமுதாயத்திரைப்போல் பெற்று சமூக, பொருளாதார, அரசியலில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

தீர்வு : அனைத்து தரப்பு முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு அரசியல் ரீதியாக நம் வாக்குகளை ஒன்றினைத்து சட்டம் இயற்றும் சபைகளில் நம் பிரதிநிதிகளை அதிகமதிகமான அளவில் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று அனுப்பி நம் இழந்த உரிமைகளைப் பெறவும், இருக்கின்ற உரிமைகளை தக்க வைத்துக்கொள்ளவும், கல்வி-உயர்கல்வி, குறிப்பாக அரசாட்சி செய்யும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ் போன்ற கல்வி இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் உரிய இடத்தை எட்டவும் அரசாங்க அதிகாரிகளாகவும், பொது நிறுவனங்களில் இயக்குநர்களாகவும் அமர்வதற்கான ஏற்பாடுகளை சமுதாயத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டும். இதற்கு முதற்படியாக இந்திய தேசிய மக்கள் கட்சியை அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கிய உரிமைக்கு ஏற்ப, தலைமை தேர்தல்கமிஷனின் தக்க அங்கீகாரத்துடன் அமைத்துள்ளோம். தமிழகத்தில் 48 அரசியல் கட்சிகள் தேர்தல்கமிஷனின் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உட்பட, ஆனால் அந்தோ பரிதாபம் முஸ்லிம் லீக் உட்பட, தமுமுக, ததஜ மற்ற லீக்குகள் என்று எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் எந்த அங்கீகாரத்தையும் பெறாமலேயே களத்தில் கவிபாடிக்கொண்டு நிற்கின்றன. இப்படி இருந்தால் தலைமைநீதிபதி அஹமதி கூறுவதைப்போன்று எப்போது நமது அங்கீகாரத்தை எப்படி அடைவது?

தீர்ப்பு உங்கள் கையில்.

இவண்,
அப்துல் ரவூப்.
அபுதாபி

ஓகஸ்ட் 7, 2008

வக்பு வாரிய கல்லூரி விவகாரமும், ததஜவின் போராட்டமும்!

Filed under: Uncategorized — குறிச்சொற்கள்:, , — முஸ்லிம் @ 8:38 முப

கேள்வி : வக்பு வாரியக் கல்லூரி விவகாரத்தில் வாரியத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ததஜ போராட்டம் நடத்தியுள்ளதே…?

பதில் : அணுசக்தி ஒப்பந்தம், மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற வற்றில் போராட்டங்களை நடத்தாதவர்கள், வக்பு வாரியத்தை மட்டும் குறிவைக்கிறார்கள் எனில், அவர்களது பொறாமை குணம்தான் இதற்கு காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி விளக்கத்திற்கு வருவோம். அதாவது வக்பு வாரியக் கல்லூரியை முன்னேற விடாமலும், கண்ணியக் குறை வான செயல்களை செய்துக் கொண்டும் ஒரு கூட்டம் தொடர்ந்து செய்து வந்த பித்தலாட்டத்திற்கு, எதிராக மதுரை மக்கள் வெகுநாட்களாக குமுறிக் கொண் டிருந்தார்கள். அதனடிப்படையில் அக்கல்லூரியை எல்லா வகையிலும் மேம்படுத்துவதற்காக வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறார்.

இதற்கு சிலர் அழகிரி பெயரை சொல்லி இடையூறு செய்தனர். அங்கு புதிதாக போடப்படும் 9 பேராசிரியர் களையும் முஸ்லிம் அல்லாதவர் களையே போட வேண்டும் என அடம்பிடித்தனர். இதற்கு வக்பு வாரியத் தலைவர் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு முதல்வர் கலைஞரை சந்தித்து வாரியத் தலைவர் முறையிட்டார். அதன் பிறகுதான் ஒன்பது பேரில் குறைந்தது ஐந்து முஸ்லிம் பேராசிரியர்களையாவது நியமிக்க வேண்டும் என முடிவானது. ஹைதர் அலி இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 9 பேராசிரியர்களும் முஸ்லிம் அல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டிருப் பார்கள் என்பது மனசாட்சி உள்ளவர் களுக்கு தெரியும்.

முதல்வரின் மகன் பெயரை பயன் படுத்தி சிலர் துஷ்பிரயோகம் செய்ய வந்த போதும், அதை முதல்வரிடமே முறையிட்டு 9 பேரில் 5 பேரை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக நியமித் ததற்கு முறைப்படி பார்த்தால் பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பொறாமை காரணமாக குறை சொல்கிறார்கள்.

இத்தனை வருடங்கள் மோசமான நிலையில் வக்ஃபு வாரியம் இருந்தபோது, அதற்கு எதிராக போராடாதவர்கள் இப் போது தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரியத்திற்கு தலைவராக பொறுப்பேற்ற பிறகு போராடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? யார் துண்டுதல் என்பதை மக்களின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்.

தமுமுக இணையத்தளம்

சிமி மீதான தடை நீக்கம்: பயங்கரவாத மாயை தகர்ந்தது

Filed under: Uncategorized — குறிச்சொற்கள்:, — முஸ்லிம் @ 8:38 முப
சிமி மீதான தடை நீக்கம்: பயங்கரவாத மாயை தகர்ந்தது

டெல்லி: இஸ்லாமிய தீவிரவாத மாணவர் இயக்கம் என்று குற்றம் சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்ட சிமி அமைப்புக்கு 2010 வரை விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்குவதாக டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் சிமியின் தொடர்பு இருப்பதாகக் கூறி மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமிக்கு 2 ஆண்டுகள் தடை வித்தித்து.

பின்னர் இத் தடை ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 2010-ம் ஆண்டு வரை தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது சிமி.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது சிமி. மத்திய அரசு புதிதாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் இப்படி பொத்தாம் பொதுவாக தடையை நீட்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த இயக்கம் தனது மனுவில் கூறியிருந்தது.

இவ்வழக்கை நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம் விசாரித்தது. இந்த தடை நீட்டிப்புக்கு போதிய ஆதாரங்களைத் தருமாறு அவர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் கடைசி நிமிடம் வரை, சிமிக்கு எதிராக எந்தப் புதிய ஆதாரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவே இல்லை.

பழைய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு இயக்கத்துக்கு தடையை நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது என்றும், ஆதாரமில்லாமல் தடைவிதித்து யாருடைய அடிப்படை உரிமையையும் பறிக்க முடியாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

சிமி என்றழைக்கப்படும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியும், சிமி மீதான தடையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாணையத்தின் தலைவருமான நீதிபதி கீதா மிட்டல் அளித்துள்ள தீர்ப்பைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. 267 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பில் சிமி மீதான தடையை நியாயப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கீதா மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்திய முஸ்லிம் இளைஞர்களின் முகத்தில் அள்ளிவீசப்பட்ட தீவிரவாத முத்திரையை இந்தத் தீர்ப்பு கனிசமான அளவு துடைத்துள்ளது. நமது நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் போது சிமி மீது பழிப்போடுவதைத் தான் செய்தி ஊடகங்களில் ஒரு சாராரும், புலனாய்வு நிறுவனங்களும் வழக்கமாகக் கொண்டிருந்தன. இருப்பினும் சமீபக்காலப் பயங்கரவாத நடவடிக்கைகளில் சிமி ஈடுபட்டு வந்தது என்பதை நிரூபிக்கும் துளிஅளவு ஆதாரத்தையும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் காட்ட இயலவில்லை என்பது நீதிபதி கீதா மிட்டலின் தீர்ப்பில் இருந்து தெரிய வருகின்றது. சிமியை பயங்கரவாதத்தின் பிம்பமாகக் கருதி கானல்நீரைத் தான் செய்தி ஊடகங்களில் ஒரு சாராரும், அரசு புலனாய்வு நிறுவனங்களும் துரத்தி வந்து வந்துள்ளன என்பதை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது. இப்படிக் கற்பனையான ஒரு தேடலில் புலனாய்வு துறையினர் ஈடுபட்டதின் காரணமாகத் தான் அஜ்மீர் முதல் பெங்களூர் அஹமதாபாத வரை நடைபெற்ற பல பயங்கரவாதத் தாக்குதகளில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினரால் கைதுச் செய்ய முடியவில்லை.

இந்திய நீதி பரிபாலனத் துறையின் சுயாட்சித்தன்மையை நீதிபதி கீதா மிட்டல் வழங்கியுள்ள தீர்ப்பு மீண்டும் நிரூபித்துள்ளது. தனது பாரபட்சமற்ற தீர்ப்பின் மூலம் இந்திய நீதித்துறையின் அப்பழுக்கற்ற நிலையை நீதிபதி கீதா மிட்டல் கட்டிக்காட்டியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம்.

தடைநீக்கப்பட்ட நிலையில் சிமி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காகவும், நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுடன் நல்லுறவு வலுப்பெறுவதற்காகவும் சிமி சகோதரர்கள் முழு அற்பணிப்புடன் பாடுபட வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

IDMK தலைவரின் தமிழன் TV பேட்டி (ஆடியோ) FULL INTERVIEW

Filed under: Uncategorized — குறிச்சொற்கள்:, — முஸ்லிம் @ 8:37 முப

“ஓற்றுமையை நோக்கி” கலந்துரையாடல் (FULL AUDIO)

04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் தமிழன் தொலைக்காட்சியில் பிரபல சமூக ஆர்வலர் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவர்களால் நடத்தப்பட்டு வரும் மக்கள் மன்றத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்கள் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவாகளோடு “ஓற்றுமையை நோக்கி” என்ற தலைப்பில் நடந்த கலந்துறையாடலில் காரசாரமான பதில்களை அளித்துள்ளார்.

இன்றைய அரசியில் சூழலில் விடையை எதிர்நோக்கி காத்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான விடைகளை வழங்க கூடியதாக இருந்தது இவரது இந்த கலந்துரையாடல்.

04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் ஒளிபரப்பான இந்த சூடான கலந்துரையாடலின் ஒலி மட்டும் Windows Audio (WMA) ஃபார்மட்டில் இங்கு வெளியிடப்படுகின்றது. நிகழச்சியின் ஆடியோவை கேட்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.
.

“ஓற்றுமையை நோக்கி” கலந்துரையாடல் (FULL AUDIO)

உறுப்பினர்களுக்கு பயிற்சி? மனித நீதி பாசறை மறுப்பு

Filed under: Uncategorized — குறிச்சொற்கள்: — முஸ்லிம் @ 8:37 முப
உறுப்பினர்களுக்கு பயிற்சி? மனித நீதி பாசறை மறுப்பு

ஆகஸ்ட் 05,2008,00:00 IST

சென்னை: தங்கள் அமைப்பைச் சேர்ந்த யாருக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படவில்லை என, மனித நீதிப் பாசறை மாநில செயலர் பக்ருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பக்ருதீன் அறிக்கை: “மனித நீதிப் பாசறையில் அங்கம் வகிக்கும் இளைஞர்களுக்கு, அதிநவீன தானியங்கி மற்றும் கைத்துப்பாக்கியை கையாளும் பயி ற்சி, கேரளா வனப்பகுதியில் அளிக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தி முற்றிலும் தவறு. மனித நீதிப் பாசறை ஓர் மக்கள் இயக்கம். எட்டு ஆண்டுகளாக மனித நீதிப் பாசறை பல்வேறு சமுதாய நலப் பணிகளிலும், மக்கள் நலப் பணிகளிலும், தேச நலன் காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.

சுனாமி, திருச்சி வெள்ளப் பெருக்கு என இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணிகளிலும், துயர் துடைப்பு பணிகளிலும் மனித நீதிப் பாசறை ஆற்றி வரும் தொண்டுகள், அனைத்து சமுதாய மக்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. கோவையில் கட்டட இடிபாடுகளின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட எங்கள் உறுப்பினர் ஜெயினுலாப்தீன், இடிபாடுகளில் சிக்கி வீரமரணமடைந்தார். மழை காரணமாக திருப்பூர் டாஸ்மாக் கட்டட சுவர் இடிந்து விழுந்த போது, எங்கள் உறுப்பினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதை கோவை மண்டல ஐ.ஜி., ராஜேந்திரன் பாராட்டினார். சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை நினைவுகூரும் விதமாகவும், தேசப்பற்றுக்கு புத்துயிரூட்டும் விதமாகவும், 15ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மூலம் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சங் பாரிவார் சக்திகள் அவதூறு செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பக்ருதீன் தெரிவித்துள்ளார்.

தினமலர்

« Newer PostsOlder Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.