தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 31, 2006

பி.ஜே யும் அவரது ஃபத்வாவால் சிறை சென்றவர்களும்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:09 முப
கோவை சிறைவாசிகளும் -தமிழ்நாடு தவ்ஹீத் தலைவரும்…

இந்தப் பீஜேயின் ஏமாற்றுப்பேச்சைக்கேட்டு எத்தனை சகோதரர்கள் மாணம்மரியாதையையெல்லாம் இழந்திருக்கின்றார்கள் தெரியுமா?

எத்தனைக் குடும்பம் தெருவில்நிற்கின்றது தெரியுமா?

இன்று குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில்இருக்கின்றார்களே அந்தச் சகோதரர்கள் யாரால் உள்ளே சென்றார்கள்?

யாருடையதூண்டுதலால் உள்ளே சென்றார்கள்?

யாருடைய பேச்சைக் கேட்டு உள்ளேசென்றார்கள்?

இன்று அவர்கள் குடும்பம் பட்டினியாலும் துன்பத்தாலும் வாடிக்கொண்டிருக்கின்றதே அந்தக் குடும்பங்கள் இந்த நிலைக்கு ஆளானதற்கு என்னக்காரணம்?

இந்தப் பீஜேக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று பீ.ஜே-யால் மறுக்கமுடியுமா??

20 ஆண்டுகளுக்கு முன்பு தப்லீக் ஜமாத்தை எதிர்ப்பதற்காக அவர்கள் செய்யாத ஒருவிஷயத்தை கையிலெடுத்தார் இந்த பீஜே. அதில் முக்கியமானது ஜிஹாத் என்றபிரச்சாரம். அதாவது ஜிஹாத் செய்வதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?

ஜிஹாத் செய்வதைவிட்டும் ஏன் மக்களை திசைத்திருப்புகின்றீர்கள்?

என்றெல்லாம் கேள்வி மேல்கேள்வியெழுப்பி அவர்களை எதிர்பதற்காக வேண்டியே அவரின் ஜிஹாத் வேடத்தைஅரங்கேற்றினார். அதோடு தன்னுடன் இருப்பவர்களிடமும் ஜிஹாத் செய்யுங்கள் என்றுதூண்டினார். இவரது சுயநலத்தை அறியாத பல சகோதரர்கள், ஏதோ இவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி, இவர் பேச்சை கேட்டு ஜிஹாத் என்ற பெயரால் செய்த செயலுக்காக இன்று 8 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றார்கள். அந்தச்சகோதரர்கள் உள்ளே தள்ளப்பட்ட பிறகு இவருடைய ஜிஹாத் பிரச்சாரம் சற்று தனியஆரம்பித்தது.

அதன் பிறகு இன்னும் சில சகோதரர்களோ ஜிஹாத் என்ற பெயரால் பையத் எனும் இயக்கத்தில் இணையத் தொடங்கினர். தவ்ஹீத் சகோதரர்கள் பெரும்பாலோர் அந்த இயக்கத்தில் சேரவே தனது செல்வாக்கு குறையும் நிலைஏற்பட்டவுடன் உடனே – அந்த பையத் இயக்கத்தை எதிர்க்கும் வன்னமாக – ஜிஹாத்எதிர்ப்பு பிரச்சாரத்தை துவங்கினார். தப்லீக் ஜமாத்தை எதிர்ப்பதற்காக ஜிஹாத்பிரச்சாரத்தை தூண்டிவிட்டவர் பைஅத் அணியினரை பலவீனப்படுத்துவதற்காக ஜிஹாத்செய்வதே தவறு என்று அந்தர் பல்டி அடித்தார்.

இப்படி இவரின் சுய நலனுக்காகநேரத்திற்கு நேரம் நிறம் மாறுவதை தெரியாத அப்பாவி சகோதரர்கள் பலியாவது தான்பரிதாபம்.சென்ற 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே பீஜேயின் ஜிஹாத் எதிர்ப்புப் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த வேலையில், அவர் அது சம்பந்தமான ஒரு கேள்விக்கு பதில் சொல்லியபோது தான் உன்மையான அவரது சுயரூபத்தைப் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குகிட்டியது.

அதாவது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக 30க்கும் மேற்பட்டஇளைஞர்களை வைத்து ‘ரகசிய கேள்வி பதில் நிகழ்ச்சி’ நடத்தப்பட்டது. அதில் நானும்கலந்துக்கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் ஒரு சகோதரன் ‘நீங்கள் தான் அந்தக்கோவை சகோதரர்களை ஜிகாத் செய்யத் தூண்டினீர்கள்’ என்று சொல்கிறார்களே என்றுகேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த பீஜே, ‘ஆம்! நான் அன்று அவ்வாறுசொன்னேன் என்பது உன்மைத்தான். ஆனால் நான் அன்று சொன்னதெல்லாம் தவறுஎன்று இந்த 4 மாதங்களாக, நான் தர்ஜுமா எழுதுவதற்காக குர்ஆனை ஆய்வு செய்தபோது தான் எனக்குத் தெரிய வந்தது. காரணம் முன்பெல்லாம் நான் ஒரு வசனத்தைப்படிப்பேன். அதை ஆய்வு செய்யாமல் அப்படியே சொல்லிவிடுவேன். இப்பொழுது தான்ஜிஹாத் பற்றி நாம் முன்பு சென்னது அனைத்தும் தவறு என்று புரிந்தது’ எனக் கூறினார்.

அதாவது தான் முன்பு சொன்னெதெல்லாம் ஆய்வு செய்யாமல் தவறாக சொன்னதாகவும்இப்பொழுது தான் இவர் உன்மையிலேயே(?) ஆய்வு செய்ததாகவும் சொல்கிறார் என்றால்என்ன அர்த்தம்?

இவருடைய பேச்சை நம்பி இவர் செய்யும் சத்தியத்தை நம்பி இவரின்இன்றைய கூற்றின் படி மோசம் போன சகோதரர்களின் நிலை என்ன?

அவர்களின்குடும்பம் கதி என்ன?

இப்படி எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் சுயநலத்துக்காக நேரத்துக்குநேரம் மாறி மாறி ஃபத்வா கொடுக்கும் இவர் குடும்பத்தின் இன்றைய வசதி என்ன?

என்பதை சமுதாயம் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு பேச்சுக்காக அவர் தவறாகஃபத்வாக் கொடுத்துவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி தனது தவறானஃபத்வாவை கேட்டு, அதன் படி நடந்ததால் இன்று 8 ஆண்டுகளாக உள்ளேஇருக்கின்றார்களே அவர்களுக்காக இவர், இந்த 8 ஆண்டுகளில் எத்தனை தடவை குரல்கொடுத்திருக்கின்றார்?

எத்தனை தடவை அவர்களுக்காக போராடியிருக்கின்றார்?

அப்படிஇவர் பேச்சைக் கேட்டு ஜாமீனில் வர முடியாத அளவுக்கு 8 ஆண்டுகளாக உள்ளேஇருக்கின்றார்களே அந்தச் சகோதரர்கள். அவர்களுக்காகவும் அவர்களின்குடும்பத்திற்காகவும் இதுவரையில் எந்த உதவிக்காகவாவது போராடியிருப்பாரா?

உடனேசொல்லுவார்கள் இவர் அடிவருடிகள் ‘தற்போது ஜெயலலிதாவிடம் போய் பேசினாரேஎன்று’ அது ஏமாற்று வேலை. அங்கேயும் தனது காட்டிக்கொடுக்கும் வேலையை அவர்செய்யாமல் இல்லை. அதுமட்டுமல்ல தமுமுக காரன் அந்தப் பிரச்சனையை எடுத்து அவர்களுக்காக போரடுகிறான் என்பதற்காக இவர்கள் இதை கையில்எடுத்திருக்கின்றார்கள் உண்மையில் இவர் இப்படி அவர்கள் வெளியே வருவதில்ஆசைப்பட்டவராக இருந்தால் காவல்துரையினரிடம் அவர்களுக்கு எதிராக சாட்சிசொல்லுவாரா?

இன்னும் சில சகோதரர்களை காட்டிக் கொடுத்தாரே, அது எத்தனைப்பேருக்குத் தெரியும்?

எந்த அளவுக்கு இவர் நடந்துக் கொண்டார் என்பதற்கு சிறு உதாரணத்தை பாருங்கள்.இவர் தமுமுகவில் இருந்த பொழுது ஒரு தமுமுக சகோதரர் அதுவும் ரமநாதபுரத்தில் இஸ்லாமிய அரக்கட்டளையில் பணிபரிந்துக் கொண்டிருந்த ஒரு சகோதரர்இவரிடம் ‘ஏன் நீங்கள் மட்டும் இமாம் அலி சுட்டுக்கொள்ளப் பட்ட சம்பவம் பற்றிபத்திரிக்கையில் எழுதவில்லை? எவன் எவனோ எழுதுகிறான்? அத்தனைப் பத்திரிக்கைகாரணும் எழுதினான். ஆனால் நீங்கள் மட்டும் நமது சமுதாயத்திற்காக துவங்கப்பட்டஉணர்வு இதழில் எழுதவில்லையே ஏன்?’ என்று கேட்டதற்கு ‘அது பற்றி உங்களுக்குசொன்னா புரியாதும்மா’ என்று சொல்லி சமாளித்திருக்கின்றார்.

அதோடு பீஜே சும்மாஇருந்திருந்தாலும் பரவாயில்லை. அந்தச் சகோதரன் சிறைவாசி சம்பந்தமாக இவரிடம்கேள்வி எழுப்பியதற்காக அவர் பணிபுரிந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதைநடத்திய வலைகுடா வாழ் சகோதரர்களுக்கும் போன் செய்து ‘அந்த …… சரியில்லை.ஆந்த ஆளோட போக்கு சரியில்லை. அவர வேலைய விட்டு தூக்கிடுங்க’என்றிருக்கின்றார்.உடனே அந்த சகோதர்கள் அண்ணனின் உத்தரவுக்கு இனங்க அனைத்துஇடங்களிலிருந்தும் போன் கால்கள். உடனே அந்த சகோதரருடைய வேலைக் காலி.

ஏன்இந்த புத்தி இவருக்கு? அந்த சிறைவாசி சகோதரர்கள் பற்றி பேசினாலே உடனேபோட்டு கொடுத்து விடுவது தான் இந்த நயவஞ்சகனின் வேலை. இது சிறிய உதாரணம்தான். இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் இருக்கின்றது தெரியுமா?தமுமுக இத்தனை ஆண்டுகாலம் ஏன் சிறைவாசிகளுக்காக குரல் கொடுக்கவில்லைஎன்று சிலர் கேட்கின்றார்கள். உன்மையில் இந்த பீஜே தமுமுகவில் இருந்த பொழுதுஅதன் தலைமையை இந்த தனி நபர் சுயமாக செயல் பட விடாமல் தடுத்தார் என்பதுதான் சத்தியமான உண்மை.

குறிப்பாக சிறைவாசிகள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும்விஷயங்களிலும் சரி, அல்லது மற்ற இஸ்லாமிய சமுதாயம் ஒன்றாக ஒரு முடிவைஎடுக்கும் விஷயத்திலும் சரி. அவை அனைத்திலும் தமுமுக கலந்துக்கொள்ளாமல் தடுத்ததே இந்த பீஜே தான்;. இது போன்ற இன்னும் பல சமுதாய நலப் பணிகள்சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த சமுதாய துரோகி அந்த தமுமுக தலைமையைதடுத்து வருவதை கண்கூடாக கண்டுள்ளோம். அதை சில தலைவர்கள் சொல்லிவருத்தப்பட்டார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் அந்தத் தலைவர்கள் ஒரு பெரியசமுதாய இயக்கம் உடைந்து சிதறி விடக்கூடாது. அதன் மூலம் நமது லட்சியங்கள்பாழ்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பலமுறை இந்த சமுதாய துரோகியுடைய பேச்சைமீறாமல் தலைசாய்தார்கள்.

அவரின் சமுதாய துரோகம் அதிகமாகி உச்சக்கட்டத்தைஅடைந்தது. பீஜே வெளியேறிய பிறகு தான் முஸ்லீம்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் போராடத் துணிந்தார்கள். அதற்கு முன்பெல்லாம் இந்த பீஜே சிறைவாசிகள் பிரச்சனைஉட்பட எந்த காரியத்திலும், குறிப்பாக சமுதயத்திற்கு பயனளிக்கக்கூடிய, ஒட்டு மொத்தசமுதாயமும் ஒன்றாய் இனைந்திருக்கக்கூடிய எந்த தருனத்தையும் இவர் அனுமதிக்கவில்லை. இது நன்றாத் தெரியும். இது தான் உண்மை.

உண்மையிலேயே நமதுசகோதரர்கள் குறிப்பாக தவ்ஹீத் சகோதரர்கள் இவருடைய உண்மை நிலையைத்தெரிந்து அவரை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இவரது இந்த சமுதாய துரோகச்செயலை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. இனிமேலும் இவரது சூன்ய பேச்சில் மயங்கிசமுதாயத்திற்கு நாமும் சேர்ந்து துரோகம் செய்வோமேயானால் நாளை மறுமைநாளில்அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி எச்சரிக்கின்றோம். அதுமட்டுமல்ல அன்று இவரை நம்பிய பலர் இன்று இவரால் பல துரோகத்துக்கும் பலகொடுமைகளுக்கும், இழி சொற்களுக்கும் ஆளாகியிருக்கின்றார்களே அதே நிலைமைநாளை உங்களுக்கும் வரும் என்ற எச்சரிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.அல்லாஹ் நன்கறிந்தவன்.

வஸ்ஸலாம்.
அப்துர் ரஹ்மான்,
சென்னை.
இஸ்லாம், முஸ்லிம், லெபனான், சிரியா, பாலஸ்தீன்

ஜூலை 30, 2006

முதல்வர் அவர்களே நீதி விசாரனைக்கு உத்தரவிடுங்கள்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:50 பிப
தமிழக முதல்வர் அவர்களே!
நீதி விசாரனைக்கு உத்தரவு இடுங்கள்!!
கோவையில் அரங்கேறிய காவல்துறை நாடகம்??
உண்மைகள் உறங்குவதில்லை

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம்.

தமிழர் வாழ்வை வதக்கி இடக்கினை செய்யும் தருக்கரை அடக்கடா என்றான் புரட்சிக் கவி.

அடக்க வேண்டியவர்கள் அரவணைத்து நின்றதால் தமிழ் சமூகம் பண்பாடு, தன்மானம், கலை, கலாட்சாரம், மொழி உணர்வு இவற்றை எல்லாம் படிப்படியாக இழந்து கொண்டு நிற்கிறது.

மத மோதலையும், ஜாதி மோதலையும், தூண்டி விட்டு குளிர் காய்ந்தவர்கள் தமிழகத்திலும் சமூக நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் சாய்க்க வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் அமுக்கி வாசித்தவர்கள், தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் ஆட்சியில் தலை தூக்கி இருக்கிறார்கள். ஆம், புற்றுக்குள் இருந்த அரவம் மீண்டும் தலைதூக்கி இருப்பதற்குக் காரணம் தமிழ் ஆய்ந்த தலைமகன் ஆட்சியைக் கலங்கப்படுத்தவும், முஸ்லிம்கள் டாக்டர் கலைஞருடன் கொண்டுள்ள நெருக்கத்தை தூரமாக்க துவங்கப்பட்ட சதியின் உச்சகட்டம்தான் கோவை வெடி பொருட்கள், கைது நாடக அரங்கேற்றம்.

டாக்டர். கலைஞர் அவர்களே, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற மிச்சமுள்ள தோட்டாக்கள் தமிழகத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.குஜராத், கான்பூர், மீரட், அஹமதாபாத், கோவை, மண்டைக்காடு என எரித்தவர்கள், ஆம், ஜெட்லி கமிஷன் சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளில் 700க்கு மேற்பட்ட வழக்குகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மேல் பதிவு செய்ததாக கூறுகிறது. பற்ற வைப்பதில் பலே கில்லாடிகள், காந்தியை சுட்டுக் கொன்று விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போட்டவர்கள் இவர்கள் சூழ்ச்சியில் வடமாநிலம் பற்றி எரிந்தது அன்று. இராவணன் முதல் வாலி வரை சூழ்ச்சியால் வென்றவர்கள் கையூட்டுக்கு நாக்கை தொங்கப் போடும் காவல்துறையின் கருப்பு ஆடுகளைப் பயன்படுத்தி கோவையில் சமூக நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும் எதிராக திட்டமிட்டு பொய் நாடகம் ஒன்றை உருவாக்கி ஊதி விட்டுள்ளனர். தமிழக அரசின் நற்பெயரைக் கெடுக்கும் காக்கி சட்டைக்குள் கயமைத்தனம் செய்யும் கருப்பு ஆடுகளை, தமிழக அரசு இனம் கண்டு களைய வேண்டும், மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்று வாய்மைக்கு எதிராக டாக்டர் கலைஞர் அரசின் பெயரைக் கெடுக்கும் இரத்தின சபாபதி மீது நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அதன் மூலம் உண்மைகள் உலகுக்கு எத்தி வைக்கப்பட வேண்டும்.


தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நீதி நீதி நீதி விசாரனைக்கு ஆவண செய்ய வேண்டும்.

இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்
ipftamil@yahoo.com
ipftamil@hotmail.com


ஜூலை 29, 2006

சென்னையில் பொதுக்கூட்டம் – ஒன்றிணையும் இஸ்லாமியர்கள்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:14 பிப
இறைவனின் திருப்பெயரால்…
அப்பாவி சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

சென்னை, ஜீலை 29, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பு நீங்கலாக தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான இஸ்லாமிய இயக்கங்களும் அரசியல் அமைப்புக்களும் இணைந்து நாளை 30.07.2006 அன்று மாலை 5.00 மணி அளவில் சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் தமிழகத்தின் சிறைகளில் வாடும் அனைத்து அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை போராட்டம் நடத்த இருக்கின்றன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனிப்பட்ட முறையில் அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருவதால் இதில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினர் சிறைவாசிகளின் விடுதலையில் தங்களுக்கு விருப்பமில்லை என்று தங்களது பத்திரிகையான உணர்வில் அறிவித்து விட்டதால் தங்கள் கொள்கைக்கு புறம்பாக இதில் கலந்து கொள்ள இயலாது என்று தெறிவித்துள்ளதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

தமிழகத்தில் முதல் முறையாக ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக, பிறிந்து கிடந்த பெரும்பான்மையான இஸ்லாமிய இயக்கங்களும் ஒருங்கினைந்து செயல்படுவது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெறிவிக்கின்றனர். அதே சமயத்தில் ததஜ என்ற இயக்கத்தின் நிலைப்பாடு நெருடலாக உள்ளதாகவும் இது இவ்வியக்கத்தினரை தணிமைப்படுத்தும் என்று மாற்று மதத்தவரும் கருதுகின்றனர். இந்த போராட்டமும் பொதுக்கூட்டமும் தமிழக அரசியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு வலிமை சேர்க்கும் என்பது பலரது கருத்தாகும்.

நளை நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றிய விவரம் :

தலைமை : மௌலவி ஹாமித் பக்ரி அவர்கள்
தலைவர்-ஐக்கிய சமாதானப் பேரவை

வரவேற்புரை : A.சுலைமான் சேட் அவர்கள்
பொருப்பாளர் ஐக்கிய சமாதானப் பேரவை

உரை நிகழ்த்துவோர்

மெளலானா ஸையத் மஹ்மூத் அஸ்அத் மதனீ, M.P.,அவர்கள் டெல்லி
ஜாமியத் உலமாயே ஹிந்த், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்

மெளலவி T.J.M. ஸலாஹீத்தின் ரியாஜி அவர்கள்
மாநில துனைத்தலைவர், ஜமாத்துல் உலமா சபை

வழக்கறிஞர். பாப்பா மோகன் அவர்கள்
சட்ட ஆலோசகர் சிறுபான்மை உதவி அறக்கட்டளை

A.ஃபாத்திமா முஸஃப்பர் அவர்கள்
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர்

ஜனாப். இனாயத்துல்லாஹ் அவர்கள்
ஆல் இந்தியா மில்லி கவுன்சில்

அல்ஹாஜ். பசீர் அஹ்மத் அவர்கள்
மாநிலத் தலைவர் – இந்திய தேசிய லீக்


மெளலவி சம்சுதீன் காசிமி அவர்கள்
மக்கா பள்ளி இமாம், சென்னை

மெளலவி தர்வேஷ் ரஷாதி அவர்கள்
பொதுச்செயளாலர், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்


மெளலவி ஷாகுல் ஹமிது ரஹ்மானி அவர்கள்
சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

தடா ரஃபீக் அஹ்மத் அவர்கள் – சென்னை

ஜனாப் உமர் ஃபாருக் அவர்கள்
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

ஜனாப். கேட்டை தங்கப்பா அவர்கள்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை

சே.மு. முஹம்மது அலி அவர்கள்
தமிழ் நாடு இஸ்லாமிய தொண்டு இயக்கம்

ஜனாப் K.M. ஷரீப் அவர்கள்
வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பு

மெளலவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி அவர்கள்
இந்திய யுனியன் முஸ்லிம் லீக்

மெளலவி முஹம்மத் இபுறாஹிம் மன்பஈ அவர்கள்
ஐக்கிய சமாதான பேரவை

காயல் மஹ்பூப் அவர்கள்
செயளாலர்-இந்திய யுனியன் முஸ்லிம் லீக்

A.K.பீர் முஹம்மத் அலவர்கள்
காயல் பட்டணம் ஐக்கிய பேரவை

ஜனாப். A.V.A.கஸ்ஸாலி அவர்கள்
மாநில துனை தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

துறைமுகம் சீமா பஷீர் அவர்கள்
அமைப்பு செயளாலர் ம.தி.மு.க

வழக்கறிஞர். முஸ்தஃபா அவர்கள்
மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்

மெளலவி Z.நசீர் அஹமது அவர்கள்
ஐக்கிய சமாதானப் பேரவை- மதுரை

மெளலவி சையது அஹமது ஸலஃபி
இமாம். ஜீம்மா மஸ்ஜித் இராமநாதபுரம்

நன்றியுரை

ஜனாப். முஜிபுர்ரஹ்மான் பாக்கவி அவர்கள்
இமாம் கே.கே நகர் மஸ்ஜித்


பொதுக்கூட்டப் பொருப்பாளர்கள்

M. அப்துல்லாஹ், M.H. அப்துல் வாஹித், முஹ்யித்தீன்
ஷாகுல் ஹமித், வடகரை A. முஹம்மது சாலிஹ்

வாருங்கள் சகோதரர்களே! கவலைப்படுவோம்! ஒன்றிணைவோம்!
சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை
போராட்டத்தில் அணி திரள்வோம்!
இன்ஷா அல்லாஹ் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்!!

என அழைக்கின்றார்கள் அப்பாவி சிறைவாசிகள் விடுதலை இயக்கத்தினர்.

நிகழ்ச்சி சம்பந்தமான நோட்டிஸ் டவுன்லோட் செய்ய :

பக்கம் 1

பக்கம் 2

ஜூலை 28, 2006

உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேட்டி (கோவை)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:21 பிப
உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேட்டி
சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை

செய்தியாளர் சந்திப்பின்போது உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் R.அழகுமணி M.L மற்றும் S.M.A. ஜின்னா B.A.B.L

கடந்த 26.07.2006 புதன் கிழமை அன்று கோவை பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை வெடிகுண்டு சதி என்று கடந்த 21.07.2006 அன்று கைது செய்யப்பட்டவர்களின் வழக்கறிஞர்களான மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் R.அழகுமணி M.L மற்றும் S.M.A. ஜின்னா B.A.B.L ஆகியோர் கூறியதாவது :

கோவையில் கடந்த 22.07.2006 பிற்பகல் 3 மணி முதல் கோவையில் குண்டு வைக்க சதி என்ற பெயரில் கோவை மற்றும் தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி பத்திரிக்கையில் செய்திகள் காவல் துறையினரால் பொய்யாக புனையப்பட்டு வெளியாகி வருகின்றன. மேற்படி செய்திகளின்படி ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அந்த நபர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், காவல்துறையினரால் சிறுபான்மையினருக்கு எதிராக விஷம செய்திகள் பரப்பப்பட்டன.

மேற்கண்ட செய்திகள் குறித்த உண்மை நிலையினை கண்டறியவும்,மேற்கண்ட வழக்கில் எதிரியாக காவல்துறையினரால் பொய்யாக சேர்க்கப்பட்ட ஆரூண்பாட்சாவின் மனைவி திருமதி. நசீமா என்பவர் கடந்த 21.07.2006 நள்ளிரவு சுமார் 3.00 மணியளவில் எங்களது வைகை சட்ட நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமாக தான் கோவை மாவட்டம், என்.பி. இட்டேரி, குறிச்சி பிரிவில் கதவு எண் 20ஃ122-ல் குடியிருப்பதாகவும், தன்னுடைய வீட்டில் தன்னுடைய கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரவு 11.30 மணியளவில் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பால்ராஜ், சார்பு ஆய்வாளர் திருமேனி, உளவு பிரிவு காவலர் கோபாலகிருஷ்ணன், காவல்துறை அதிகாரி அண்ணாதுரை, மற்றும் சில அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத ஆண் காவலர்கள் ஆகியோர் பெண் காவலர் துணையின்றி தனது வீட்டின் கதவை தட்டினார்கள் என்றும், பின்னர் அவர் தனது வீட்டின் கதவை திறந்ததாகவும், அப்பொழுது ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் காவல்துறை அதிகாரி அண்ணாதுரை ஆகியோரிடம் என்ன விஷயம் என்று கேட்ட பொழுது எந்த விளக்கமும் கூறாமல் தனது நெஞ்சை தட்டி தள்ளிவிட்டு வீட்டிற்குள் திபுதிபுவென நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை சட்டைக் காலரைப் பிடித்து தூக்கி வெளியே தரதரவென அழுத்து வீட்டு வாசலில் நிப்பாட்டிக்கொண்டு தன் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் கீழே இழுத்துப் போட்டு தள்ளியதாகவும்,

அப்பொழுது தூங்கிக் கொண்டிருந்த தனது ஒரு வயது குழந்தையை அதிகாரி அண்ணாதுரை காலால் உதைத்து தள்ளிவிட்டு சோதனை என்ற பெயரில் பல்வேறு சித்ரவதைகளை செய்ததாகவும், இதே போன்று தனது வீட்டின் அருகே குடியிருக்கும் ஆரூண்பாட்சாவின் சகோதரர் மாலிக் பாட்சா என்பவரின் வீட்டிற்குள்ளும் அத்து மீறி நுழைந்து அப்துல் பாட்சா மற்றும் மாலிக் பாட்சா இருவரையும் சட்டைக் காலரை பிடித்து வீட்டை விட்டு வெளியே இழுத்து சோதனை என்ற பெயரில் சட்ட ரீதியான நீதிமன்ற அனுமதியில்லாமல் பல்வேறு சித்ரவதைகள் செய்ததாகவும், தான் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், முஸ்லிம் பர்தா நாசிம் பெண்கள் வசிக்கும் வீட்டில் எதற்கு நள்ளிரவில் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு காவல் அதிகாரி அண்ணாதுரை துலுக்கச்சிகளெல்லாம் சட்டம் பேச கிளம்பிட்டாளுக, இவளுகளை உள்ளே வைத்து துவைத்தால் தான் இவளுக்கெல்லாம் அறிவு வரும் என்று கூறி வீட்டில் காவலர்களால் சிதறியடிக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைக்கும்படி கூறியுள்ளார்.

அதற்கு தான் அந்த அதிகாரியிடம் பெண்கள் வசிக்கும் வீட்டிலிருந்து வெளியே செல்லுங்கள் என்று கூறியதற்கு மறுபடியும் துலுக்கச்சிகளெல்லாம் சட்டம் பேச கிளம்பிட்டாளுக என்று தான் வைத்திருந்த லத்தி கம்பால் தன்னை அடிக்க ஓங்கியதாகவும் தான் பயந்து கொண்டு பொருட்களையேல்லாம் அடுக்கி வைத்ததாகவும், மேலும் தன்னுடைய கணவரின் அண்ணன் மாலிக்பாட்சா ஒரு மனநோயாளி என்றும், தற்பொழுது அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், மேலும் அவர் தூங்குவதற்கு மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து சாப்பிட்டு வருகிறார் என்றும், தாங்கள் இது மாதிரி எல்லாம் செய்தால் அவரது மனநிலை மிகவும் பாதிக்கும் என்று கேட்டதற்கு ஆய்வாளர் பால்ராஜ், சார்பு ஆய்வாளர் திருமேனி ஆகியோர்கள் தூங்குவதற்கு மாமியார் வீடு உள்ளது, அங்கு வந்து தூங்கச் சொல் என்று கூறி தன்னுடைய கணவரையும், அவரது அண்ணன் மாலிக் பாட்சா ஆகியோரயும் பிடறியில் ஓங்கி அடித்து மூன்று பேர்களையும் வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடுக்கி வைக்கும் வரை மேற்படி காவல் அதிகாரி மற்றும் காவலர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் தனது சொந்த வீட்டிலேயே தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் சட்ட விரோத காவலில் வைத்ததாகவும் தற்பொழுது தான் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு எங்களுக்கு தொலைபேசி தகவல் அளிப்பதாகவும் கூறினார்.

மேற்படி தகவலின் அடிப்படையில் கடந்த 22.07.2006 என்று சுமார் 11.00 மணியளவில் கோயமுத்தூர் வந்து மேற்படி எங்களுக்கு தகவல் கொடுத்த நசீமா அவர்களை நேரில் சந்தித்து மேற்படி சம்பவம் பற்றிக் கேட்ட பொழுது அவர் உயரதிகாரிகளுக்கு தந்தி கொடுத்திருப்பதாகவும், அதிகாலையில் போத்தனூர் காவல்நிலையம் சென்று பார்த்த பொழுது தனது கணவர் இல்லை என்றும், தனது கணவரை பற்றி போலீசார் தகவல் தர மறுக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் நாங்களும் மேற்படி நபர்கள் குறித்து விபரம் சேகரிக்க காலை சுமார் 11.30 மணியளவில் போத்தனூர் காவல்நிலையம் சென்று விசாரித்த பொழுது அங்கிருந்த காவலர்கள் தாங்கள் காவல்நிலையத்திற்கு யாரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து வரவில்லை என்று கூறினர்.

ஆதைத் தொடர்ந்து நாங்கள் கோவையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று மேற்கண்ட நபர்கள் குறித்து விசாரித்த பொழுது எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து மேற்கண்ட ஆரூண்பாட்சாவின் மனைவி பல்வேறு உயரதிகாரிகளுக்கு தந்திகள் அனுப்பிய வண்ணம் இருந்தார். மேலும் மேற்படி நசீமா அவர்களிடம் ஏன் உங்கள் கணவரை மட்டும் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்கிறார்கள் என்று கேட்டதற்கு தனது கணவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும், நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலுக்கு முன்பு 13.02.2006 அன்று ஜனநாயக ரீதியாக மதவாத சக்திகளுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும், அப்பொழுது போத்தனூர் காவல்நிலைய ஆய்வாளர் தனது கணவரை அடித்து சித்ரவதைகள் செய்து அவரிடமிருந்து துண்டறிக்கைகளை பறித்துக் கொண்டு தனது கணவரின் மீது தமிழ்நாடுழு நகர் காவல் சட்டத்தின் பிரிவு 71-ன் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றப்பிரிவின்படி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதம் கட்டச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு தன் கணவர் மறுத்து நான் எந்த குற்றமும் செய்யவில்லை, ஜனநாயக கடமையை தான் செய்தேன் என்று கூறியதற்கு, மேற்கண்ட போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உளவுபிரிவு காவலர்கள் செந்தில், விஜயன், பழனிச்சாமி ஆகியோர் தன்னை அடித்ததாகவும் கூறி அவர்கள் மீது காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார் என்றும், மேற்படி போத்தனூர் போலீசாரின் சட்டத்திற்கு புறம்பான செயல்களால் தான் பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு வேண்டியும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த வழக்கை வாபஸ் வாங்கும்படி அடிக்கடி போத்தனூர் காவல்நிலைய மற்றும் உளவுப்பிரிவு போலீஸ் கோபாலகிருஷ்ணன், உளவுப்பிரிவு உதவி ஆணையாளர் இரத்தினசபாபதி, ஆகியோர்கள் தனது கணவரை ஒழுங்கு மரியாதையாக வழக்கை வாபஸ் வாங்கிவிடு, இல்லையென்றால் உனதுர் வாழ்க்கையை சீரழித்து விடுவோம் என்றும் மிரட்டியதாகவும், அது குறித்து எனது கணவர் சட்ட ரீதியாக பார்த்து கொள்வதாக அவர்களிடம் கூறி அது குறித்தும், உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியுள்ளார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு கோவை காவல் துறையினர் மேற்படி ஆரூண்பாட்சா, மாலிக் பாட்சா ஆகியோருடன் அப்பாவிகளான 3 நபர்களை பிடித்து பொய்யாக வழக்கினை ஜோடனை செய்து அவர்களை பெரிய தீவிரவாதிகளை போல சித்தரித்து சட்டத்திற்கு புறம்பான காவலில் வைத்து 23.07.2006 அன்று மேற்படி நபர்களின் உறவினர்களுக்கு கைது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல், அதிகாலை 4 மணியளவில் நீதிபதியின் வீட்டில் ஆஜர் செய்துள்ளனர். மேற்படி வழக்கில் கைது செய்யப்பட் நபர்கள் அனைவரும் காவல் துறையினரால் பல்வேறு சித்ரவதைகள் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது எங்களது விசாரணையில் தெரிய வருகிறது. மேற்படி நபர்கள் நீதிபதியிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

நாங்கள் இந்த வழக்கு சம்பந்தமாக ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து கடந்த 4 நாட்களாக கோவையில் இவ்வழக்கு தொடர்பான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகின்றோம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்பொழுது கோவை மாநகரில் காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் கடந்த கால ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்றும், தற்பொழுது தமிழக பட்ஜெட் வெளிவரும் நாளில் தமிழக அரசின் பட்ஜெட் சாதனைகள் குறித்த மக்களின் கவனத்தை திசை திருப்பி அமைதியாக வாழுமத் தமிழக மக்களிடையே பீதயை உண்டாக்கி, சிறுபான்மையினர் தற்போதைய அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர் குலைத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை சிதறடித்தும், அமைதியை விரும்பும் மக்களின் மத்தியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை போன்ற ஒரு மாயை தோற்றத்தை ஏற்படுத்து தற்போதைய அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக அரசியல் ரீதியாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று தெரிய வருகிறது.

மேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு இறுதி கட்ட விசாரணையில் உள்ள நிலையில் நீதித்துறையில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துவதற்காகவும் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் தெரிய வருகிறது. மேலும் இது குறித்து விரிவான அறிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வருக்கு சமர்ப்பிக்க உள்ளோம். எனவே, மேற்படி வழக்கின் உண்டை நிலையை மக்கள் மன்றத்தில் தெளிவு படுத்தவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேசீய சிறுபான்மையோர் நல ஆணையத்திற்கும், மனித உரிமைம ஆணையத்திற்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அனுப்பியுள்ளோம்.

மேலும், எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கை மத்திய புலணாய்வு குழு (CBI) விசாரிக்க வேண்டியும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வேண்டியும், மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகவுள்ளோம் என்று தெறிவித்த வழக்கறிஞர்கள் தாங்கள் இது தொடர்பாக இந்த போலி வழக்குகளை சட்டரீதியா சந்தித்து அவற்றை போலியாக ஜோடனை செய்யப்பட் வழக்குகள் என்று நிருபிப்போம் என்றும் கூறினர்.

செய்திகள் உதவி : கோவையிலிருந்தும், மதுரையிலிருந்தும் நமது வாசகர்கள்

ஜூலை 27, 2006

பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:53 பிப

பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி, மிக பெரிய சதியிலிருந்து தப்பித்தார் ததஜ-வின் பொதுசெயலாளார் S.Mபாக்கர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,அன்பின்கினிய சகோதரார்களே! கடந்த 23-7-2006 தமிழகத்தின் காலை நாளிதழ்களில் அனைத்தும் ஒரு செய்தியை மையமாக வைத்து மரண ஓலமிட்டனர்

அதாவது கோவையில் முக்கிய இடங்களை தகர்க்க பயங்கர சதி
கோவையை தகர்க்க சதித்திட்டம்
கோவையில் குண்டு வைக்க சதித்திட்டம்
இது தான் அன்றைய செய்தி….

எல்லோருடைய பார்வையில் பொதுவான சில கேள்விகள் இருந்தாலும் நாம் நமது சிறப்பார்வை (கள ஆய்வல்ல)வுடன், இந்த செய்திகள் அனைத்தையும் திரட்டி வைத்து பிரி;ன்ட் எடுத்து பார்த்த்போது மிகபெரிய சமுதாய தூரோகிகளின் முகம் அந்த செய்தினுள் ஒளிந்திருப்பதை காண முடிந்தது. இதை பார்ப்பதற்க்கு முன்னால் கடந்தகாலத்தில் நடந்த காலசுவடுகளின் சில தகவல்களை தாங்கள் பார்வைக்கு தருகின்றேன்

பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள LIC கட்டிடத்தை குணடு வைத்து தகர்க்க சதி, என்று மிக பெரிய செய்தி ஒன்றை நாளிதழ்களுக்கு தமிழக உளவு துறையின் மூலம் பாரிமாறப்பட்டு அதற்க்கு ஆதாரமாக டிபன் பாக்ஸ் குண்டு என்று ஒன்றை காண்பித்தார்கள். உணவு கொண்டு செல்வதற்காக உள்ள டிபன் பாக்ஸில் வெடிக்குண்டா? என்றார்கள் அதற்க்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதரன்களை சுட்டிகாட்டினார்கள் அன்றைய உளவு துறையின் உலுத்துப்போன அதிகாரிகள்.

சில வருடங்களுக்கு முன்னால், மௌலவி ஹாமீத் பக்ரி மன்பஈ அவர்களை கைது செய்து உளவு துறை இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது இஸ்லாமிய டிபன்ஸ் போர்ஸ் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழகத்தின் அமைதியை குலைப்தற்க்கும் பொதுமக்களுடைய உயிர்களை எடுத்து மாநிலத்தில் அமைதியின்மையை எற்படுத்த வெடிகுண்டுகளை தயாரித்தல் வினியோகித்தல் என்று பறைசாற்றியது.

(மேற்கண்ட இரண்டு வழக்குகளும் சென்னை புறநகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தான் பதிவு செய்யப்பட்டதுள்ளது என்பது விசேஷசெய்தியாகும்)

அடுத்து தற்போது உள்ளவை…

இதில் அனைத்திலும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று உளவு துறை நுண்ணறிவு பரிவிலுள்ள நுண்கிருமி (வைரஸ்) ரத்னசபாபதி தலையீடு உண்டு (மாசனமுத்துவின் மறைமுக தொடர்பும் – யார் தெரியுமா இந்த மாசனமுத்து கோவைவாசிகளிடம் கேட்டுகொள்ளவும்)

இரண்டாவது ஆச்சாரியமானது என்வென்றால் இதில் கைது செய்யப்பட்டவர்கள் எதாவது ஒருவகையில் ததஜ-வின் தற்போதைய மாநில தலைவர் பிஜெ-யுடன் தொடர்புடையவர்கள்-என்ற அபூர்வ செய்தி நமது கண்களை ஆறத்தழுவியது.

பொதுவாக கோவையை மையமாக நடைபெறக்கூடியவைகளில் முக்கியமாக இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறவதற்க்கு முந்திய தினம் அல்லது அதே தினத்தில் தனது தலைமை தளபதியாக யார் இருக்கின்றாரோ அவரை கோவையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அண்ணன் பிஜெ-யின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயமாகும். இந்த சம்பவத்திற்க்கு முன் பிஜெ-யின் தலைமை தளபதி போர்வாள் S.M பாக்கர் அவர்கள் கோவையில் இருந்துள்ளார்கள். கைது சம்பவத்திற்க்கு பிறகு ஆள் கோவையை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நமது கிடைத்த வலுவான செய்தியாகும்.

தனக்கு அடுத்த இடத்தில் மக்கள் மத்தியில் பேச கூடியவராக இருப்பவரை பிஜெ அவர்கள் இதே முறையில் தான் மாட்டிவிட்டு ஒரேயடியாக (ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு) மட்டம் தட்டுவார் அதற்க்கு முந்தைய பக்ரியின் கைதும், அதற்க்கு முன் கோவை குண்டு வெடிப்பு அன்று பக்ரியை கோட்டைமேட்டில் இருக்குமாறு செய்ததும் (இந்த செய்தியை உறுதி செய்யகொள்ள நினைப்பவர்கள் பக்ரி அவர்கள் 100 நாட்கள் சிறைவாசகத்திற்க்கு பிறகு நெல்லை ஏர்வாடியில் அளித்த உள்அரங்க பேட்டியை காணவும்)

ஆனால் இங்கு அண்ணன் பிஜெ அவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தளபதி பாக்கர் எப்படியென்றால் தளபதி பாக்கர்-அவர்களின் கோவை சுற்றுபயணத்தில் நுண்கிருமி
ரத்னசபாதியை சந்திப்பு இல்லை ஆனால் தளபதி பாக்கர் அவர்கள் நுண்கிருமி ரத்னசபாதியை கைதுக்கு படலத்திற்க்கு முன் இரகசியமான முக்கிய இடத்தில் தனிமையில் சந்திதுள்ளார், அந்த சந்திப்பில் சில விவரங்களை (லூஸ்டாக் முறையில்) அண்ணனின் பிரதிநிதி என்ற எண்ணத்தில் நுண்கிருமி கொடுத்துவிட்டார் தளபதிக்கு. இதைகேட்ட பாக்கர் ஆடிபோனலும் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து இறுதில் கோவையைவிட்டு இரகசியமாக வெளியேறியும் விட்டார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அது இதுதானோ என்று எண்ண தோன்றுகின்றது.

ஐந்து பேரில் பாஷா சகோதர்கள் பிஜெ-யின் ததஜவில் தொடர்புடையவர்கள் என்பது கொசுறு செய்தி….

விஷயம் இது தான்….

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரும் என்ற நிலையில் உள்ளது. வரும் தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதமாக இந்தாலும் அல்லது அவர்களுக்கு எதிராக இருந்தாலும் பாதிப்பிற்குள்ளவாது சிறைவாசிகள் அல்ல காரணம் 8 ஆண்டுகள் தனது வாழ்க்கையை சிறைகூடத்தில் கழித்தவர்கள் அவர்கள். ஆனால் தீர்ப்பினால் இரண்டு வகையினருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அவர்களில் ஒரு வகை கோவை குண்டு வெடிப்பு மற்றும் கலவத்தில் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் (மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை)கள் இரண்டாவது வகையினர் பிஜெ-யும் அவருடன் உள்ள கூட்டமாகும். எனவே மேற்கண்ட இருவகையினரும் கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிப்போட வேண்டும் அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவஉதவிகள் செய்வதும் தடைசெய்யவேண்டும். காரணம் மருத்துவமனையில் இருக்க கூடியவர்களை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படலாம் இதனால் சிறைவாசிகளில் உண்மைநிலை மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் இதுவெல்லாம் மேற்கண்ட இருவகையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த இருவரின் கூட்டுசதியில் உறுவானது தான் இந்த வெடிக்குண்டு சதி வைபவம். மக்கள் இந்த சமூதய துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஏதோ இவர்களை குற்றப்படுத்தவேண்டும் என்பதற்காக இதை நாம் எழுதவில்லை மறாக காரண காரியத்துடன் நாம் எழுதுகின்றோம்.

இதில் பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து என்ற ரீதியில் ஒரு இடைசெருகல் செய்தி ஒன்று கசியவிடப்பட்டது என்றே போதும் இவர்களும் உளவுத்துறையினருக்குமுள்ள தொடர்பு.

ஹிட் லிஸ்ட்டில் பிஜே பெயர் – குமுதம் ரிப்போர்ட்டர்

காரணம் மனித நீதி பாசறையினரை கடுமையாக விமர்ச்சனம் செய்தவர்களில் ஒருவர் பிஜெ, இப்படி பகிரங்கமாக பேசியவர் தமுமுக-வின் சுனாமி கணக்குகளை சரிபார்க்க பிஜெயால் பரிந்துரை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றுதான் இந்த மனித நீதி பாசறை அத்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் அலுவலகத்தில் பிஜெயின் பிரதிநிதி இரண்டு முறை சென்றுவந்துள்ளார்கள் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அதையும் பெருமையாக தனது சைட்டிலும் உணர்விலும் வெளிட்டார்கள்.

சென்னையில் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஹோட்டல்களில் பலவருடங்களுக்கு முன் தொடர் குண்டுவெடிப்பு நடந்தவுடன் (அதில் ஒரு ஹோட்டல் தற்போது அண்ணனின் கட்டுபாட்டில்), கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், ஜிஹாத் கமிட்டி தடைசெய்யப்பட்டவுடன், அதே போல் அல்-உம்மா தடைசெய்யப்பட்டவுடன், போரளி இமாம் அலி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனஸா அடக்கம் செய்யப்பட்டவுடன், இப்படி எல்லா காலகட்டத்திலும் இஸ்லாமிய சமுதயாத்திற்க்கு எதிராக காவல் துறை நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளபோது மட்டும் ‘பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து’ என்ற செய்தி மிக பெரிய அளவில் ஊடகத்துறைக்கு உளவுத்துறையின் துரைமார்களால் கொடுக்கப்படுவதின் இரகசியம் தான் என்ன? இந்த செய்தி வெளியிட்வுடன் உடனடியாக தானியங்கி ஆயதம் தாங்கிய
காவலர்களால் புடைசூல அண்ணன் பிஜெ அவர்கள் நடமாடுவது எதனால் விளக்குவார்களா பிஜெ அல்லது பிஜெ-யின் பினாமிகள்?

ஓவ்வொரு முறையும் தமிழகத்தில் காவல்துறையால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் கைது செய்யப்படும்போதும் அவர்களிடம் இருந்து சங்பரிவார தலைவர்களை கொல்ல திட்டம் என்று ஒரு ஹிட் லிஸ்ட்டை கைப்பற்றியுள்ளதாக போலிஸ் தகவல் வெளியிடும் அப்படிப்பட்ட ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டு அண்ணன் பி.ஜே க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.. ஹிந்து தீவிரவாதிகளை கைது செய்யும்போதோ அல்லது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார நபர்களிடமிருந்தோ கைப்பற்றப்படும் ஹிட் லிஸ்ட்டில் ஒருபோதும் அண்ணன் பி.ஜே பெயர் இருந்ததாக செய்தி வந்ததில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக கைது
செய்யப்படும்போதும் ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பது ஏன்? ஆண்ணன் பி.ஜே என்ன சங்பரிவார தலைவரா அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் “சர் சங் சலக்குகளில்” ஒருவரா? சற்று சிந்தியுங்கள் மக்களே !! ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.

இந்தியாவில் பாசிச இந்து இயக்கங்களில் தலைவர்களுக்கு முஸ்லிம்களால் உயிருக்கு ஆபத்து என்ற செய்திக்கு இணையாக உளவுத்துறையினர் ஒரு முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து என்று யாரைத்தெரியுமா சுட்டிக்காட்டுகின்றார்கள்? மரியாதைக்குரிய அண்ணன் பிஜெ அவர்கள் தான் என்பது தற்போதுள்ள ஒரே ஆறுதல் செய்தி.

(குறிப்பு: கோவை சம்பவத்தில் உளவுத்துறையின் நுண்கிருமி ரத்னசபாபதி, பிஜெ-க்கு பாதுகாப்பை பலப்படுத்த நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே)

நடைபெறதாத குற்றங்களை அதாவது மிக பெரிய சதியை முறியடிப்பு, நாசவேலை முறியடிப்பு ‘கோவை தப்பியது’ ‘சென்னை தப்பியது’ என்று எப்போதுயெல்லாம் உளவுத்துறை செய்தி வெளியிடுகின்றதோ அப்போதுயெல்லாம் அதற்கு பின்னால் பல ‘இன்பார்மர்கள்’ உள்ளனர். (இப்படி நடப்பது முஸ்லிம் சமுதயத்திற்க்கு ஏதிராக மட்டுமே, இவர்களால் தமிழர் விடுதலைபடையையோ, அல்லது நக்ஷலைட்களையோ அல்லது இந்தியாவில் இதுபோன்ற அயூதம் தாக்கி போராடும் குழுவினருக்கு எதிராக இந்த முறியடிப்பு சம்வம் காண முடியாது காரணம் அங்கெல்லாம் நமது சமுதாயத்தில் உள்ளது போல் இன்பார்மர்கள் கிடையாது) என்பதும் இது உளவுத்துறையினர் தாங்களை பாதுகாத்துக்கொள்ள ‘ஜோடிக்கப்படும்’ FABRICATED CASED என்று ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் நடுநிலை கொண்ட நீதி தவறாத எமது மரியாதைக்குரிய காவல் துறையின் கண்ணியவான்கன்.

பொதுவாக காவல்துறையினர் ஒரு குறிப்பிட் வழக்கின் விவரங்களை பத்திரிக்கையாளருக்கு தெரிவிப்பதற்க்கு, செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடுசெய்வார்கள், இதற்கென்று வழிகாட்டு நடைமுறைகளை காவல்துறை பின்பற்றி வருகின்றது. அதாவது வழக்கின் தன்மையைப்பொறுத்து அந்த பகுதியின் காவல் துறையின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பார்கள், இந்த சம்வத்தில் அதற்க்கு மாறாக உயர் அதிகாரிகள் அமைதிகாத்துள்ளனர் நுண்கிருமி மட்டுமே பேசியும் கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார் இதிலிருந்த இது ஓர் மிக பெரிய ஜோடிப்பு கேஸ் என்பது விளங்கும். இதே போல் ஹாமித்பக்ரி விஷயத்திலும், சென்னை LIC தகர்க்க நடந்த சதி-கொடுங்கையூர் வழக்கிலும் இதே போல்தான் நடந்தது. இந்த சந்தேகம் நாம் மட்டும் எழுப்பவில்லை ரத்னசபாபதி நடத்திய கூட்டதில் கலந்துகொண்ட பத்திகையாளர்கள் அனைவரும் இந்த சந்ததேகத்தை எழுப்பியுள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.

பத்திரிகையாளர்களின் சந்தேகம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்தில் மக்களிடம் வலம் வரும் இஸ்லாமிய இயக்கங்களின் மீது தீவிரவாத சித்தாந்த்தை எதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்துடன் இணைந்து உளவுத்துறை செய்யும் சதிதான் இது அதற்க்கு நமது சமுதாயத்தினர் துணைபோவது தான் வேதனை. கடந்த காலங்களின் வரலாறும் இது தான் ஏன் தமுமுகவை தடைசெய்வதற்காக மத்திய மாநில அரசுகள் ஆசியுடன் அன்றைய உளவுத்துறையினர் செய்த சதிகளை நினைவு கூறவும்.

அன்புடன்
தென்காசி பட்டனத்தான்

ஜூலை 26, 2006

கோவை சம்பவம் சிபிஐ விசாரனை தேவை – தமுமுக

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:30 பிப

கோவைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட தமுமுக கோரிக்கை

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றவர்கள்
தமுமுகவின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி
மற்றும் மாநில செயலாளர் எஸ். உமர்

கடந்த சில தினங்களாக கோவையில் நடந்து வரும் சம்பவங்கள் பற்றியும் அதன் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாதிகளாக சித்தறிக்க முற்படும் காவல்துறையின் செயல்களை கண்டித்து நேரடி கள ஆய்வுப் பணிகளை செய்ய இன்று 26.07.2006 புதன் கிழமை தமுமுக வின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜனாப். எஸ்.ஹைதர் அலி அவர்களும் மாநிலச் செயலாளர் எஸ்.உமர் அவர்களும் தமுமுக தலைமையின் கட்டளையின் கீழ் இன்று கோவையில் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து நேரடி ஆய்வுகளை மேற்க்கொண்டனர். அதன் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது :

கடந்த 21.07.2006 அன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநகர் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் அளித்த பேட்டியில் கோவையில் 5 பேர் பிடிப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கு சதித்திட்டம் தீடடியதாகவும், அதன் வரைபடங்கள் கைப்பற்றியதாகவும், செய்தித்தாள்களில் வந்ததை வாசித்த கோவையில் வாழுகின்ற மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்ற வண்ணம் இருந்தது.

கடந்த 1998-ம் வருடத்திற்கு பிறகு நல்ல அரசு அதிகாரிகளின் கடும் முயற்சியால் தற்போது நல்ல அமைதியான சூழ்நிலை கோவையில் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19.07.2006 அன்று வெளியான தமிழ்முரசு பத்திரிக்கையில் இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் அளித்த பேட்டியில் “கோவை சிறைச்சாலையை தகர்க்க தீவிரவாதிகள் சதி” என்ற தலைப்பில் அளித்த பேட்டியில் தமிழக்கத்தில் 45 பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக கேரளா எல்லைகளில் குண்டுவெடிப்பு நடக்கும் ஆபத்து உள்ளதாகவும் தமிழக காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இச்செய்தி வெளியான ஒரு சில தினங்களில் சமீபத்திய கைது நடவடிக்கை பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ‘மனிதநீதிப் பாசறை’ அமைப்பை சார்ந்தவர்கள் என காவல்துறை கூறியிருந்தாலும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது எழுந்துள்ள சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க த.மு.மு.க. கடமைப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களின் விபரம் பற்றி காவல்துறை வெளியிட்ட செய்தியில் பல முரண்பாடுள் இருப்பது தெரிய வருகிறது. பத்திரிக்கையாளர்களிடம் காண்பிக்கப்பட்ட பொருள்களை வைத்து கொண்டு எந்த கட்டிடத்தையும் தகர்க்கும் வண்ணம் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் கைப்பற்றியதாக எதனையும் அவர்கள். பத்திரிக்கையாளர்களிடம் காட்டவில்லை.

மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக ஆணையாளர் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கத்திற்கும், விதிமுறைகளுக்கும் மாறாக ஆணையாளர் கரண்சின்கா அவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போன்ற அதிகாரிகளெல்லாம் மவுனமாக இருக்கும் போது உளவுத்துறை உதவி ஆணையாளர் பேட்டி அளித்தது மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் மவுனமாக இருந்தது பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் கூட பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவ்வழக்கு விசாரணை செய்ததிலும், பதிவு செய்யப்பட்ட விதத்திலும் பொதுமக்களுக்கு த.மு.மு.க. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து நீதி விசாரணை நடத்தி உண்மையை அரசுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

மேலும் கோவை மாவட்டம் ஒரு பதட்டமான பகுதி என அனைவரும் அறிந்ததே, இங்கு பணியாற்றுகின்ற காவல்துறை அதிகாரிகள் நிடுநிலையாகவும், நியாயமாகவும் சார்ந்திருப்பவர்களாக குழப்பமில்லாமல் தெளிவான முடிவு எடுக்கக் கூடியவர்களாகவும், எந்த நேரத்திலும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சிறந்த அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளை உடனடியாக மாற்றி தற்போதைய தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசை தமுமுக வலியுறுத்தும் என்றும் தெறிவித்தனர்.

கடைசி செய்தி :

கைது செய்யப்பட்டு தீவிரவாதிகளாக காண்பிக்கப்பட்டவர்களிள் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகியும் அடக்கம். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் கைகோர்த்து போராடி வரும் நிலையில் தனது இயக்கத்தின் மாவட்ட நிர்வாகியே கைது செய்யப்பட்டும் இது குறித்து சிறிய கண்டனம் கூட தெறிவிக்காது மௌனம் காத்து வரும் ததஜ வின் செயல்கள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து நாம் ததஜ வின் முக்கிய புள்ளிகள் சிலரிடம் விசாரித்தபோது கைது செய்யப்பட்ட ததஜ வின் மாவட்ட நிர்வாகி ததஜவின் தலைமையுடன் அதிருப்தியில் இருந்ததாகவும் இவர் கைது செய்யப்பட்ட அன்று கோவை வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சில முக்கிய உளவுத்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்ற ததஜ வின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.பாக்கரின் நடவடிக்கைகளையும் சேர்த்தே கிசுகிசுக்கின்றார்கள் இப்பகுதி ததஜ வினர்.

காவல்துறையின் சில நடவடிக்கைகளும் அதை ஆமோதிப்பதுபோபல் உள்ளன. ததஜ வின் நிர்வாகி உள்பட கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டி இருந்ததாகவும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையால் சொல்லப்படும் ‘ஹிட் லிஸ்ட்டில்’ ததஜ வின் தலைவர் பி.ஜெயனுல்லாபுதீன் பெயர் முதலில் இருந்ததால் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கும்படி உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியின் உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல்துறையினர் பி.ஜெயனுல்லாபுதீன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளதாக வரும் பத்திரிகை செய்திகளை (குமுதம் ரிப்போர்ட்டர்) பற்றி காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளிடம் விசாரித்தபோது நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றனர். உண்மை என்னவோ இறைவனுக்கு தான் வெளிச்சம்.

கோவையில் நடந்த மாபெரும் அக்கிரமத்திற்கு எதிராக தங்களது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து விட்டு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து காவல் துறையை கண்டித்தும் அப்பாவிகளை விடுதலை செய்ய கோரியும் தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில் ததஜ வினர் சொந்த மக்கள் மீது ஏவி விடப்பட்ட அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்காமல் தொலைவீல் உள்ள லெபனானுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் ஆதரவு தெறிவித்து, வரும் வெள்ளியன்று ஏ.எஸ். அலாவுதீன் தலைமையில் போராட்டம் அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளதாக மக்கள் கருத்து தெறிவிக்கின்றனர்.

செய்திகள் : கோவையிலிருந்தும், சென்னையிலிருந்தும் நமது சகோதரர்கள் மற்றும் வாசகர்கள்.

பத்திரிகை துறையில் நாம்…..

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:52 பிப

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கோவையில் சில முஸ்லிம் சகோதரர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் வெடிகுண்டு சம்பவங்கள் ஏற்பட்ட காலத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த மீடியா மற்றும் மக்கள் அனைவரும் இதில் அதிக கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றது அனைவரும் அறிந்ததே. எந்த அளவிற்கு என்றால் என்.டி.டிவி நேரிடையாகவே வந்து தனிப்பட்ட நேர்காணலை நடத்தி சென்றிருக்கின்றனர். உண்மையை தெளிவாக வெளியிட்டதாகவும் பலர் வாயிலாக அறிய முடிந்தது.

இந்த நேரத்தில் ஒரு புலனாய்வு இதழுக்குரிய சுறுசுறுப்போடு செயல்பட்ட சகோ. ரைசுத்தீன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முஸ்லிம் இயக்கங்களும், ‘பயில்வான்’ தலைவர்களும் எங்கே அடுத்த இலக்கு நாங்கள் தானோ என பயந்து ஒரு அறிக்கை கூட வெளியிட முன்வராத நிலையில் இந்த வெளியீடு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. எந்த அளவிற்கு என்றால், மனித நீதி பாசைறையின் சகோதரர்களே முழு விபரங்களுக்கு சகோ. ரைசுத்தீன் வெளியீட்டை பாருங்கள் என கூறியதிலிருந்து நம்மால் அறிய முடிந்தது.

காவல்துறையின் கருப்பு ஆடுகள் சில புல்லுருவிகள் துணையோடு அவ்வபோது சில சம்பங்களை நடத்துவது வழக்கம். ஆனால் இன்றோ, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக ஆக்க முன்வந்துள்ளனர். சிலர் கேட்கலாம், விடியல் காரர்களை தீவிரவாதிகளாக்குவது முழு சமுதாயத்தையும் எப்படி குறிக்கும் என்று? எல்லா இயக்கங்களும், அதன் தலைவர்களும் பயந்து கருத்துக்கள் கூற முன்வராத நிலை நமக்கு குறிப்பால் உணர்த்துவது என்னவென்றால், குறிப்பிட்ட இயக்கத்தவர்கள் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம்களையும் சேர்த்துதான் தீவிரவாதிகள் பட்டம் சூட்டப்படுகிறது என்பது.

கலைஞர் கருணாநிதியைப்பற்றி ஒரு கருத்து உண்டு. அவர் சிறுபான்மைக் காவலன் என்று பெரும்பாலோர் குறிப்பிடுவர். இப்போது அவர் ஆட்சியில் ஏறியதும் செய்த சில செயல்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவானது போன்ற நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக, இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள், மதானிக்கு மருத்துவ உதவிகள், கோவை வழக்குகளை விரைவு படுத்தியது மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் போன்ற செயல்களை குறிப்பிடலாம். இதை பொறுக்காத காலிகளும் போலி காவிகளும் சேர்ந்து கருணாநிதி அவர்களுக்கு முஸ்லிம்கள் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்க வேண்டியே இந்த செயல் புனையப்பட்டது என்பது எல்லாருக்கும் புரிகிறது. ஆனால், தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு ஏனோ புரியவில்லை.

ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், கேரள நியூஸ், என்.டி.டிவி நியுஸ் போன்ற மீடியாக்களெல்லாம் தெளிவாக விஷயங்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டு பத்திரிகைகள் குறிப்பாக தினமலர், தினகரன், தமிழ்முரசு, மாலைமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் செய்திகளை திரித்து வெளியிடுகிறது. மற்ற பத்திரிகைகளை விட தகவல்களை அதிகமாக எடுக்கும் வாய்ப்பும் வசதியும் இவர்களுக்கு இலகுவாக இருந்தாலும் கூட உளவுத்துறையின் கைப்பாவைகளாக மாறி ஒரு சமுதாயத்தையே குற்றவாளிகளாக சித்திரிக்கிறது. இதனால் அவசியமற்ற அச்சம், கலவர அபாயம் மற்ற சகோதர சமுதயாத்தினருக்கு ஏற்பட்டு அதனால் சட்டம் ஒழுங்கு கெடக்கூடிய மோசமான சூழ்நிலையை மறந்தவர்களாக கூலிக்கு மாரடிக்கின்றனர் இந்த தமிழ் பத்திரிகைகள்.

எந்த அளவிற்கு என்றால், தினகரன் எழுதும்போது நெல்லிக்குப்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று. நெல்லிக்குப்பத்தில் நடந்தது ஒரு சிறிய கோஷ்டிமோதல். ஆனால், அங்கேயும் தீவிரவாதிகள் என்று சிலரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சில கத்திகளும், பல சிடிக்களும் பயங்கர ஆயுதங்களாக கைப்பற்றினார்கள், வெடிகுண்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. அங்கு குண்டு வெடிக்கவும் இல்லை. இது சகோதர சமுதாய மக்களுக்கு தெரியுமா? நிச்சயமாக பெரும்பாலோருக்குத் தெரியாது. இதை சாதகமாக்கி ஆதாயம் தேடுகின்றனர் தினகரன் மற்றும் தமிழ்முரசு. சன் குழுமத்தில் இருந்தா இப்படி என்ற ஒரு ஆச்சரியம் பெரும்பாலோக்கு இருக்கத்தான் செய்கிறது.

தினமலரைப்பற்றி கேட்கவே வேண்டாம். ஏதோ ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இவர்கள் தகர்க்க தயாராகிவிட்டது போன்றும், அன்று இரவே கைது செய்யாவிட்டால் எப்படி உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்டதோ அதுபோன்ற பெரிய தாக்குதலுக்கு தமிழ்நாடு உள்ளாகியிருக்கும் என்றும் தனது புழுகு வேலையை செய்ய ஆரம்பித்தது. பிடிபட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையே கதை கட்டுவது கொஞ்சம் போல பொட்டாஷ் பவுடர், முக்கால் மீட்டர் ஒயர் மற்றும் 4 எவரெடி பேட்டரி. இதைவைத்து ஒட்டு மொத்த தமிழ்நாட்டை அழிக்க முடியும் என்றால் அந்த வித்தையை அவர்கள்தான் விளக்க வேண்டும். இந்த சிறிய பொருட்களை வைத்து இப்படிப்பட்ட அபாயகரமான செயல்களை செய்ய அறிந்த இவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்து தமிழ்நாட்டை பெரும் அபாயத்திலிருந்து மீட்கவேண்டும். இந்த பயிற்சியை தினமலர் யாருக்கெல்லாம் கொடுத்துள்ளது என்று தனது ‘முறைப்படி’ விசாரிப்பில் தினமலர் கூட்டத்தை விசாரிக்க வேண்டும். இதற்காக முதல்வர், கவர்னர் மற்றும் அதிகார வர்க்கத்திற்கு கண்டிப்பாக அனைவரும் தெரியப்படுத்த வேண்டும்.

மாலைமலர், தினமுரசு போன்றவைகள் எல்லாம் தினமலர், தினகரன் போன்றவைகள் வாந்தி எடுத்ததை தின்று கொண்டு மீண்டும் வாந்தி எடுக்கிறது. காலை பத்திரிகையின் செய்திகளை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அப்படியே ஈயடிச்சான் காப்பியாக வெளியிடுகிறது. இதற்கு 2ரூபாய் விலைவேறு. கேவலம். இதற்கு பதிலாக மஞ்சள் பத்திரிகைகளாக தன்னை நிறம் மாற்றிக்கொள்ளலாம்.

இப்படி தமிழ்நாட்டின் வெகுஜன நாழிதழ்கள் இப்படி ஒரு இஸ்லாமிய விரோத போக்கை கைப்பிடிப்பது பற்றி இந்நேரத்தில் நாமெல்லாம் கவனமாக கண்காணிக்க வேண்டும். ஒரு சோவோ அல்லது ஒரு குருமூர்த்தியோ எழுதினால் அதன் போக்கு வேறு. இந்துத்துவ சிந்தாந்தத்தில் ஊறிய வெறியர்களை மேலும் வெறியேற்ற மட்டுமே அவர்கள் எழுதுகிறார்கள். இது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இந்த வெகுஜனப் பத்திரிகைகள் நடுநிலை சமுதாயத்தைதான் அதிகமாக சென்றடைகிறது. இவர்களது இந்த எழுத்துக்கள் நடுநிலை மக்களை இஸ்லாமிய விரோதப் போக்குள்ளவர்களாக மாற்றும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த பத்திரிகளுக்கு ஒவ்வொரு முஸ்லிமும் உடனடியாக தனது கண்டனங்களை தெரியப்படுத்த வேண்டும்.

லட்சகணக்கில் கூடினதை டிவியில் காணிக்கவில்லை, எனவே எல்லாரும் டிவிக்கு போன் பண்ணி திட்டுங்கள் என்ற அறிவுரை வந்தவுடன் வளைகுடா சகோதரர்கள் 300, 400 ரியால் வாங்குபவர்கள் உட்பட சேனல்களுக்கு ஐ.எஸ்.டி போட்டு பேசினதை ஞாபகப்படுத்தி பாருங்கள். இன்று ஒட்டுமொத்த சமுதாயமும் தீவிரவாதி பட்டியலில். இயக்கங்களும், தலைவர்களும் ச்ச்ச்சும்ம்ம்மாhமாhh இருக்கிறார்கள், குற்றஞ்சாட்டப்பட்ட இயக்கத்தவர்களைத் தவிர. இந்நேரத்தில் எல்லாப் பத்திரிகைகள் மற்றும் டிவி சேனல்களுக்கும் நாம் ஒரு கண்டன கடிதம் எழுத வேண்டியது கண்டிப்பானதாகும்.

இல்லையென்றால் வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். காரணம், காவல்துறையில் நுழைந்துள்ள காவி காலிகள் எப்பபாடுபட்டாவது முஸ்லிம் சிறைவாசிகளை வெளியில் விடக்கூடாது என்பதற்காக திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கு வேகம் பிடிக்கவும் எங்கே அவர்கள் வெளிவந்து விடுவார்களோ என பயந்து இப்போது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக்கி பார்க்கின்றனர். இதனால் அந்த வழக்கு பின்தங்கும் நிலை ஏற்படலாம் என நினைக்கின்றனர்.

ரத்தின சபாபதி போன்ற காவி சிந்தனை கொண்டவர்கள்தான் கோவைப்பகுதியில் காவல்துறையிலும், சிறையிலும் அதிகமாக இருக்கின்றனர். இன்னும் கடந்த ஆட்சியில் அங்குள்ள கோர்ட்டுகளில் அரசு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்தவர்களும் இப்படிப்பட்டவர்களே. இப்போது ஆட்சி மாறியதும் சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்கள் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக செய்வார்களோ என்ற அச்சம் சமுதாய ஆர்வலர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம், சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளார். எனவே ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவது நம் மீது கடமை என தவ்ஹீத் ஜமாஅத் கூறியது. (இது அவர்களை இழிவு படுத்த இங்கே எழுதவில்லை… எங்கே தவறு நடந்தது என சிந்திக்க வேண்டியது தவ்ஹீது சகோதர்கள், தலைமை, மற்றுள்ளவர்கள் சிந்திக்க வேண்டியே) ஆனால், இன்று மதானிக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளித்தவுடன் ஜெயலலிதா அதை கண்டிக்கிறார். அவரை தீவிரவாதி என்றும் குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளி என்றும் வாய்க்கூசாமல் பொய்ச்சொல்கிறார். தவ்ஹீது ஜமாஅத் சகோதரர்களே சிந்தியுங்கள். இந்த இந்துத்துவ வெறி கொண்ட பெண்மணிக்கா நீங்கள் வாக்கு கேட்டீர்கள், போட்டீர்கள். தவறிழைத்தது யார்? பொய் வாக்கு கொடுத்தது யார்? தவ்ஹீது ஜமாஅத்தா அல்லது ஜெயலலிதாவா?

முதல்வர் கருணாநிதி அரசில் நடக்கும் எல்லா ஆக்கபூர்வமான மற்றும் அல்லாத செயல்கள் அனைத்தையும் ஜெயலலிதாவும், ஜால்ரா எம்.எல்.ஏக்களும் கண்டித்து வருகின்றனர். சிக்குன் குனியா கூட கருணாநிதியால்தான் என்று சொல்லாத குறை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்பாவி இளைஞர்கள் காவல்துறையினரின் சதியால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று தீவிரவாதிகளாக்கிவிட்டனர். ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும். காவல்துறையினர் அத்துமீறுகின்றனர். எனது ஆட்சியில் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என குற்றஞ்சாட்டியவர் ஆட்சியில் இன்றைய நிலை என்ன? ஒன்றுமறியா அப்பாவி இளைஞர்கள் தீவிரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டு எதிர்காலம் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சிறுபான்மை சமுதாயமும் இன்றைய ஆட்சியில் அச்சத்தோடு வாழும் சூழ்நிலை என்று சொல்லியிருந்தால் அது சரியானதாக இருக்கும். ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் உருப்படியான எதிர்கட்சி என்று நாமும் நம்பலாம். தவ்ஹீது ஜமாஅத் சகோதரர்கள் சொன்னது போல அம்மாவும் நமக்கு கொஞ்சம் ஆதரவுதான் என நம்பியிருக்கலாம்.

ஆனால், நடந்தது என்ன? கோவையில் ஆர்.டி.எக்ஸ் உடன் தீவிரவாதிகள் கைது? தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. கருணாநிதி அரசு கண்காணிக்க தவறி விட்டது என ஜெயா டிவியில் செய்தி. எங்கே ஆர்.டி.எக்ஸ் பிடிபட்டது. இந்துத்துவ வெறி கொண்ட பத்திரிகைகளே ஆர்.டி.எக்ஸ் பிடிபடாததால் கேஸ் பலக்க வழியில்லை. சின்ன கேஸில் வெளிவந்துவிடுவார்கள் என கூறிக்கொண்டிருக்க, ஜெயா டி.வியோ ஆர்.டி.எக்ஸ் பிடிபட்டது என கூறுகிறது. முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாதிகளாக்குகிறது. தஹ்வீது ஜமாஅத் சகோதரர்களே! உங்கள் தலைமையோடு இதுபற்றி விசாரிப்பீர்களா? நீங்கள் இதுபற்றி விளக்கம் அளிக்க வில்லையென்றால், சகோ.பழைய மாருதம் சொன்னது போல இதில் உங்கள் தலைமைக்கு பங்கு இருப்பது ஊர்ஜிதமாகிவிடும். இதுபற்றிய மேலதிக விபரங்களை பழைய மாருதத்திடமே கேட்போம்.

இந்த நிகழ்வில் இருந்து நமக்கு தெரியவருவது, இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பத்திரிகைத் துறையில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடமேயாகும். இதை களைய நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிது புதிதாக இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கு பதிலாக, பத்திரிகைத் துறையில் புது மாற்றங்களை ஏற்படுத்திட முன்வர வேண்டும். அதற்கான ஆயத்தங்களுக்கான சரியான தருணமிது. இப்போதே இதற்கு நாம் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் நமது சமுதாயம் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

சிந்தியுங்கள் சகோதரர்களே…… இது செயல்படுவதற்கான நேரம்.

அன்புடன்
அபு பாத்திமா
(இப்னு பாத்திமா என ஒரு சகோதரர் எழுதுகிறார். அவரை என்னோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)

சமுதாயத்தலைவர்களுக்கு மட்டும்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:33 முப
SORRY இளைஞர்களே!
இது சமுதாயத்தலைவர்களுக்கு மட்டும்

அன்பார்ந்த சமுதாய இயக்கத் தலைவர்களே!

அன்று வெள்ளை ஆதிக்கத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதினோம். இன்றோ நமக்கு எதிராக இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது இந்திய நாட்டில்.அதுவும் நமது சமுதாயத்தின் உள்ளேயே இருக்கும் சில புல்லுருவிகளால். அக்கிரமங்களை எதிர்த்து போராட சமூக அரசியல் பேரியக்கங்கள் கண்டவர்கள் (தங்களை காப்பாற்ற??) சங்பரிவாருக்கு துணைபோய் தமது சுயநலத்திற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே பலி கொடுக்கும் நிலை.

நமக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள், அரசு அதிகாரிகளின் அத்து மீறல்கள், காக்கி சட்டைக்குள் கயவாலித்தனம் பன்னும் கருப்பு ஆடுகளின் காட்டுத் தர்பார்கள், நம்மை மந்தைகளாய் வைத்துக் கொள்ள தந்திரங்கள் செய்யும் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்கள், பத்திரிக்கை என்ற போர்வையில் நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் ஆதிக்க சக்திகளின் அலறல்கள், பல் சமய மக்களிடையே நம்மைப் பற்றி தவறான விஷக் கருத்தை விதைக்கும் சூழ்நிலைகள், நம்மைப் பற்றி சந்தேகப் பார்வையோடு பார்க்கும் அவலங்கள், நினைத்த மாத்திரத்தில் நிரபராதியைக் கூட குற்றவாளியாக மாற்றும் போக்குகள், வதந்திகளைப் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லெண்ண உறவைக் கெடுக்கும் அபாயக் கரங்கள், முஸ்லிம் வியாபாரத் தலங்கள் தொடர்ந்து திட்டமிட்டு சூரையாடப்படும் நிலைகள், வெளிநாடுகளில் உழைக்கும் நம் சொந்தங்கள் தாயகம் சென்று திரும்பி வரும்போது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கும் அவலங்கள், சந்தேகக் கைதுகள், நீதி நியாயங்கள் முஸ்லிம்களுக்கு இல்லை என்ற நிலைமைகள், முஸ்லிம்கள் கல்வி இட ஒதுக்கீடு முதலியவற்றில் வந்து விடக் கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் எச்சரிக்கையாக இருக்கும் சூழ்நிலைகள், இவை எல்லாம் பகிரங்கமாக நமக்கு எதிராக சமீப காலத்தில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதற்கு எல்லாம் காரணம் பொறுப்பற்ற, சுயநலமுள்ள, இறை அச்சமற்ற சமுதாயத் தலைவர்கள் தாம். கோவை சம்பவத்திற்கும் காரணம் ‘ஜமாத்’ வைத்து நடத்தும் ஒரு
குறிப்பிட்ட தலைவர்தான் இந்த உண்மை விரைவில் வெளிவரும். இந்த நிலை தொடர இனியும் அனுமதி அளித்தால் கலவரத் தீயில் கடைசி விறகில் நீங்கள் எரிவீர்கள்.

வி.டி. ராஜசேகர் (DALIT VOICE): முஸ்லிம்களே! உங்களை கூண்டோடு அழிக்க சதித் திட்டம், முறியடிக்க நீங்கள் தயாரா??? என்று கேட்டார். சமுதாயத் தலைவர்களே! கவுரவம், பிடிவாதம், தான் என்ற அகந்தை, சுயநலம், தலைமைப் பித்து இவற்றை எல்லாம் புறந்தள்ளி அரசியலில் நாம் ஒன்று என ஓங்கி முழங்கிட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுபோல் சுயநலத்திற்காக அப்பாவி முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் என்று பொய்வழக்கு போட்டு நமது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக உளவுத்துறையில் உள்ளவர்களோடு சேர்ந்து செயல்படும் இது போன்ற ‘ஜமாத்’ தலைவர்களின் முகத்தை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். அதற்கு நமது இயக்கத் தலைவர்கள் தயங்க கூடாது.

இப்படிக்கு
பழைய மாருதம்

ஜூலை 25, 2006

தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் தற்போதைய கடமைகள்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:50 பிப

தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் தற்போதைய கடமைகள்

நெடுங்காலமாக இந்தியாவை ஜாதி வெறி, மத வெறி எனும் நோய் பீடித்து வருகின்றது. ஜாதி மதம் என்ற மாயையில் வீழ்த்தி நம்முள் ஜாதி மத கலவரங்களை மூட்டி ரத்த ஆறு ஓடச்செய்து 80 சதவிகிதத்திற்கும் அதிகமான எம் இந்திய பூர்வீக குடிமக்களை ஓர் சிறிய கூட்டம் அடிமையாக நடத்தி வருகின்றது. ஒவ்வொரு முறையும் திட்டமிட்ட மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். கோடிக்கணக்கான பெருமதியுள்ள சிறுபான்மை சமுதாயத்தின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. குஜராத்தில் எம்மக்களின் குடலுறுவிய ரத்தத் தடயங்கள் மாறும் முன் இதோ மும்பையிலும் கோவையிலும் மற்றுமோர் நிகழ்வுக்கான ஆயத்தங்கள்.

இந்தச்சூழ்நிலையில் தமிழகத்தில் நம் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தி மக்களை சமூக அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டிய நம் இயக்கங்கள் இன்று தம்மில் அடித்துக்கொண்டு அதை உலக மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றார்கள். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்தின் உரிமைக்கு குரல் கொடுக்க துவங்கப்பட்ட சில பத்திரிகைகள் தங்களின் கூட்டணி தலைவர்களின் புகழ்பாடவும் அவர்களின் ஆளுயர புகைப்படங்களை தாங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மறுமலர்ச்சி போன்ற பத்திரிகைகள் மூலையில் உறங்குகின்றன.

சமூக மறுமலர்ச்சிக்காகவும் ஒடுக்கப்பட்ட நம் இனத்தின் மீட்சிக்காகவும் துவக்கப்பட்ட பல இயக்கங்கள் தம்முள் ஏற்ப்பட்ட கலகத்தாலும் யார் பெரியவன் என்ற போட்டியில் அரசியல் சாக்கடையில் சங்கமித்ததாலும் சமூக அரசியல் பேரியக்கங்கலாகி சுய அடையாளத்தை இழந்து நிற்கின்றன. அந்தோ பரிதாபம். இந்தச்சூழ்நிலையிலும் அத்தி பூத்தாற்போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. இது வரை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் புறக்கணிக்கப்பட்டே வந்த நமது சமுதாயத்திற்கு குறிப்பிட்டு சொல்லும் வகையில் சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் இடம் கிடைத்துள்ளது. இது உண்மையில் நம்மை மகிழ்ச்சியில் ஆழத்திய செய்தி.

அதுபோல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளின் கூட்டணியில் நமது சமுதாய இயக்கங்களான தமுமுக மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் உள்ளன அதுபோல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் தங்களின் உறுப்பினர்களையும் முஸ்லிம் லீக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இடஒதுக்கீடு என்ற மிட்டாயை காட்டியே நமது சமூக ஓட்டுக்களை அரசியல் கட்சிகள் பெற்று வந்தன அதற்கு உடந்தையாக நமது சமுதாய அமைப்புக்களும் துணை நின்றுள்ளன. ஆனால் இது வரை இடஓதுக்கீடு என்ற பழம் தேர்தல் நேரத்தில் மட்டுமே காண்பிக்கப்பட்ட எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலின் போது இடஒதுக்கீடு என்ற கனியுடன் அப்பாவி முஸ்லிம் விசாரணைக்கைதிகளின் விடுதலையும் தேன்தடவிய வாக்குறுதிகளாக காட்டப்பட்டன.

இன்று திமுக பதறியேற்றவுடன் செய்த சில செயல்கள் இந்த ஆட்சியின் மீது சிறிய நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாண்டு காலமாக நாம் அரசுப்பணிகளிலும், கல்வியிலும் புறக்ககணிக்கப்பட்டே வருகின்றோம். யார் நம்மை புறக்கணிக்கின்றார்களோ இல்லையோ இந்திய ஃபாசிச கும்பல்கள் நமக்கு (முஸ்லிம்களுக்கு) எந்த விதத்திலும் இடஓதுக்கீடு கிடைக்கக்கூடாதென்பதிலும் எந்த விதத்திலும் நமது சமூகம் உயர்கல்வி பெற்றிடக்கூடாதென்பதிலும் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்தச் சுழ்நிலையில் தமிழகத்தில் நமது சமுதாயத்தின் பாதுகாவலர்கலாக தங்களை அடையாளங்காட்டும் இயக்கத்தினர் செய்ய வேண்டிய கடமைகளாக சிலவற்றை இங்கு எடுத்து வைக்க விரும்புகின்றேன் இறைவன் நாடினால் நமது இயக்கங்கள் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவற்றை செயல்படுத்தும் என்று நம்புவோம்.

மத்திய அரசால் முஸ்லிம்களின் நிலையை கண்டு ஆராய அமைக்கப்பட்ட ‘பிரதம அமைச்சரின் உயர்நிலைக்குழு’ வின் தலைவர் இராஜேந்திர சச்சார் அவர்கள் கடந்த ஏப்ரல் 16ம் நாள் தனது முதல் நிலை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்கள் அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை இங்கு நம் மக்களின் கவணத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

*அரசு உதவிகள் எதுவும் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை.

*அரசால் நடத்தப்படும் சமூக உதவி திட்டங்கள் எதுவும் முஸ்லிம்களை சென்று அடைவதில்லை.

*கல்வியிலும் வேலைவாய்ப்புக்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வங்கிகள் மூலம் அரசு வழங்கும் கடன் திட்டங்கள் அனைத்திலும் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 94.9 சதவிகித முஸ்லிம்களை அரசின் எந்த உதவியும் சென்று சேர்வதில்லை.

*ஒட்டுமொத்த ஏழை முஸ்லிம்களில் 1.9 சதவிகித முஸ்லிம்களே அரசால் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச உணவு என்ற அரசு திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர் மற்றவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*நகர்ப்புரங்களில் 60 சதவிகித முஸ்லிம்களும் கிராமப்புரங்களில் 54.6 சதவிகித முஸ்லிம்களும் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*தேசிய அளவில் 40.8 சதவிகிதா முஸ்லிம்கள் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*மொத்த முஸ்லிம்களிள் கிராமங்களில் 3.1 சதவிகிதத்தினரே இளநிலைப்படிப்பை முடித்துள்ளனர்.

*மொத்த முஸ்லிம்களில் நகர்பபுரத்தில் 1.2 சதவிகிதத்தினரே முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்கள்.

*60.2 சதவிகித முஸ்லிம்களுக்கு நிலமே கிடையாது.

*கல்வியில் முஸ்லிம்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது.

*ஒருவித மாச்சர்யத்திற்கு நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

*பல மாநிலங்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

*இப்படிப்பட்ட மாநிலங்களில் முஸ்லிம்களால் சொத்துக்களை வாங்கிடவோ விற்றிடவோ இயல்வதில்லை.

*முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அரசு உதவிகள் வேண்டுமென்ற வழங்கப்படுவதில்லை.

*முஸ்லிம்கள் அதிகமாக வாழுமிடங்களில் அரசு கல்விக்கூடங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன.

இதுபோல் நீழ்கின்றது இந்தக்குழுவின் அறிக்கை. ஆக அரசு இடஓதுக்கீடு அளிக்கின்றதோ இல்லையோ அரசு வேலைவாய்புக்களில் முஸ்லிம்கள் அமர்த்தப்படுகின்றார்களோ இல்லையோ நமது இயக்கங்கள் மீது கீழகண்டவை கடமைகளாகியுள்ளன இவற்றை செய்தாலே ஓரளவிற்கு நமது தேவைகளை நாமே நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தமுமுக, ததஜ, முஸ்லிம் லீக் மற்றுமுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கடமைகள் :


இன்று நமது சமுதாயப் பிரதிநிதிகள் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமர்ந்திருக்கின்ற நிலையில் ஆளுங்கட்சியோடு கூட்டணியில் உள்ள இயக்கங்கள் என்ற நிலையில் தமுமுக வும் முஸ்லிம் லீக்கும் செய்ய வேண்டியவை.

முதலில் நமது சமுதாயத்தின் படித்த இளைஞர்கள் தங்கள் இயக்கங்களின் கிளைகள் மூலம் தமிழகமெங்கும் அடையாளங்காணப்பட வேண்டும்.
அவர்கள் கல்வி வாரியாக தரம் பிரிக்கப்படவேண்டும்.

அரசிலும் மற்ற இடங்களிளும் தங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகமெங்கும் காலியாகவுள்ள அரசுப்பணியிடங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதை மிக எளிதாக ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தொடர்ச்சியாக கண்கானித்தாலே அறியலாம்.

அடையாளப்படுத்தப்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான கல்வியிறிவும் திறமையும் உள்ள ஏற்கனவே தமிழகம் முழுவதும் அடையாளங்காணப்பட்ட நமது சமுதாய இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும்.

அரசில் நமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை எவ்வகையிலேனும் அப்பணியில் அமர்த்த வேண்டும். தேவையெனில் நமது சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து அவர்களின் சிபாரிசின் மூலம் இவ்விளைஞர்களை பணியில் அமர்த்திட வேண்டும்.

அதுபோல் தமிழகம் முழுவதும் உயர்நிலைக்கல்வியை முடித்துவிட்டு மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்களை நமது சமுதாய இயக்கங்களின் கிளைகள் மூலம் கிராம, நகர வாரியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் மேல்டிப்புக்காண கல்வி உதவித்தொகை தங்குமிட வசதி போன்ற அனைத்து வசதிகளும் தங்கள் ஒவ்வொரு மாவட்ட கிளை நிர்வாகத்தின் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவ்வுதவிகள் அம்மாணவர்களுக்கு கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியை அவ்வுதவி கொண்டு தொடர்ந்திட செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும் வரை தொடாந்து உதவிகள் கிடைக்கின்றதா என்று கண்கானிக்க வேண்டும்.

இன்று நமது தமிழகத்தில் முஸ்லிம் கமுதாயத்தில் ஒரு வேதனையான நிலை நிவுகின்றது என்னவென்றால் முஸ்லிம்சமுதாயத்தின் பெண்களே அதிகம் கல்வி கற்க கூடியவர்களாகவும் ஆண்கள் அவ்வளவு தூரம் கல்வியல் நாட்டமில்லாமலும் இருக்கும் நிலை. இதை நமது இயக்கங்கள் மாற்ற முயல வேண்டும். கிராமம், கிராமமாக, நகரம் தோறும் தங்கள் இயக்கத்தின் தொண்டர்களை கொண்டு கல்வியின் அவசியத்தை நமது சமுதாய ஆண்களிடமும் இளைஞர்களிடமும் விளக்க வேண்டும் அவர்களிடம் நிலவும் வெளிநாட்டு வேலை என்ற மாயையை போக்க வேண்டும். உள்நாட்டிலேயே ஏதாவது வேலை செய்ய வற்புறுத்த வேண்டும். அதற்குண்டான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும். நமது மாணவர்களை மேற்கல்வி படிக்க ஊக்கம் கொடுக்க வேண்டும்.


தணியார் துறைகளிலும் நமது இளைஞர்களை வேலையில் அமர்த்த ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக வேண்டி தணியார் துறை வேலை வாய்ப்புகளை கணக்கிட்டு அதற்கு நமது இளைஞர்களை தோந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டும் அதற்கு நமது இயக்கங்கள் தமது அனைத்து அதிகாரங்களையும் பயண்படுத்த வேண்டும்.

முக்கியமாக காவல் துறைக்கும் இராணுவத்துக்கும் ஆள்
எடுக்கும் போது நமது இளைஞர்களை திரளாக சென்று விண்ணப்பிக்க செய்ய வற்புறுத்துங்கள். தமிழகத்தின் காவல்
துறையிலும் பாதுகாப்பு துறையிலும் படித்த தகுதியான நமது இளைஞர்களை வேலையில் சேர்க்க முற்படுங்கள். இந்த 5 ஆண்டுகால ஆட்சிக்குள் தமிழகத்தில் குறைந்த பட்சம் 50 முஸ்லிம்களை ஆய்வாளர், துணை ஆய்வாளர் எனவும் சுமார் 500 முஸ்லிம்களை காவலர்களாகவும் ஒன்றிரண்டு முஸ்லிம்களை உயர் மட்ட அதிகாரிகள் பணிக்கும் நியமிக்க தங்களது அனைத்து அதிகாரங்களையும பயன்படுத்தி நமது இயக்கங்கள் முயல வேண்டும். இதுவே ஒரு மாபெரும் வெற்றியாகும். இதை ஐந்து வருடங்களுக்கும் மிக எளிதாக நிறைவேற்றலாம்.

காவல்துறையிலும், இராணுவத்திலும் நமது இளைஞர்களை அதிகளவில் பணியில் சேர்ப்பதன் மூலம் குஜராத் மற்றும் கோவையில் நடந்தது போன்ற சம்பவங்கள் நடக்காது தவிர்க்கலாம் அல்லது இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் நமது சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையாவது ஓரளவிற்கு குறைக்கலாம். குஜராத்திலும் கோவையிலும் இவ்வளவு சேதம் சமது சமூகத்திற்கு ஏற்ப்பட்டதன் முக்கிய காரணம் காவல்துறையிலும் இரானுவத்திலும் முஸ்லிம்கள் இல்லாது போனதால் மிக எளிதாக இவர்கள் காவிமயமாக்கப்பட்டதே. ஒருவேலை நாம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இத்துறையில் இருந்திருப்போமேயானால் இவ்வளவு அழிவு நமது சமூகத்திற்கு ஏற்படாமல் தடுத்திருக்க இயலும். அதை மனதில் கொண்டு இந்த குறிப்பிட்ட துறைகளிள் நமது விகிதாச்சாரத்தை அதிகரிக்க நமது இயக்கங்கள் முயல வேண்டும்.

இதில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் ஒரு குஜராத்தோ அல்லது கோவையோ நடக்காமல் தடுக்கலாம் அல்லது கோவையில் சமீபத்தில் நடந்த நிகழ்வு போல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து (அதிலும் மனநிலை பாதித்தவரும் அடக்கம்) தீவிரவாதிகளாக காட்டிய சம்பவங்களை தடுக்க இயலும். நமது சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் இந்த துறையில் இருந்திருந்தால் ரத்தின சபாபதி போன்றோர் இதைச்செய்வதற்கு தயங்குவார்கள். இதற்கு நமது இயக்கங்கள் முனையவேண்டும். நமது இளைஞர்களும் இதுபோன்ற பணிகளிள் தங்களை இனைத்து கொள்ள தங்களை தயார் படுத்திட வேண்டும்.

வெளிநாட்டிற்கு அனுப்ப முனையும் பெற்றோரை எதிர்த்து தங்கள் இளமையை நமது தாய் நாட்டிற்காகவும் நமது சமுதாயத்தை பாதுகாக்கவும் தியாகம் செய்யுங்கள். இந்திய சுதந்திரத்திற்காக நமது நமுதாய முன்னோர்கள் செய்த தியாகத்தை காட்டிலும் அதிகமான தியாகம் இன்று நமது இந்திய திருநாட்டை ஃபாசிச சக்திகளிடம் மீட்க தேவைப்படுகின்றது. மீண்டும் ஓர் சுதந்திரத்தை அடையவும் நமது நாட்டை ஃபாசிச சக்திகளிடம் இருந்து மீட்கவும் நமது நாட்டின் இராணுவத்திலும் காவல்துறையிலும் தங்களை இணைத்து அனைத்து தியாகங்களுக்கும் தயாராகுங்கள். நமது இந்தியாவின் மதச்சர்பின்மையையும் இறையான்மையையும் என்றும் காப்போம்.

நம் சமுதாதாயத்தின் அழிவிற்கும் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று நமக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்களாகும். ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக கூறுவதன் மூலம் அதை உண்மைப்படுத்தலாம் சியோனிஸ்ட்டுகள் தங்கள் காரியங்களை சாதிக்கவும் தங்கள் பொய்களை உண்மைப்படுத்தவும் எதிரிகளை வெற்றி கொள்ளவும் ஊடகங்களையே தங்களின் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர்.

உதாரணம் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது, முதலில் ஊடகங்கள் வாயிலாக ஈராக்கில் அணு ஆயுதம், உயிரியல் ஆயுதம் மற்றும் கெமிக்கல் ஆயுதங்கள் இருப்பதாகவும் அதனால் உலகிற்கு பயங்கர ஆபத்தென்றும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்கள் ஊடகங்கள் வாயிலாக கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி ஈராக்கை ஆக்கிரமித்தனர்.

இன்று ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், மக்களால் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என்றும் யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வரும் ஹிஸ்புல்லாஹ் உள்பட அனைத்து போராளி அமைப்புக்களையும் தீவிரவாதிகள் என்று கூறி தடைவிதித்ததோடு அதே பொய்யை தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக திரும்ப திரும்ப கூறி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்த சமயம் தனது கள்ளக்கு குழந்தை இஸ்ரேலை விட்டு குண்டு மழை பொழிய செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றது அமெரிக்கா.

இதுபோல் உலகெங்கும் நமது முஸ்லிம் இனத்தை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு யூத, கிருத்துவ, ஃபாசிச பயங்கரவாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் ஊடகம். இதன் வாயிலாகவே செசன்யாவிலும், ஃபாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும் இந்தியாவிலுமாக நமது மக்கள் காழ்ப்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்படுகின்றார்கள் இதை வெளிக்கொணர கூட நம்மிடம் போதிய ஊடக வசதியில்லாத நிலை.

இந்தியாவில் ஃபாசிச பயங்கரவாதிகளால் முஸ்லிம் இனத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அனைத்தும் ஊடகங்களின் துணை கொண்டே செய்யப்பட்டன. மகாத்மா காந்தியை கோட்சே என்ற இந்து தீவிரவாதியை கொண்டு படுகொலை செய்து விட்டு அன்றைய ஒரே ஊடகமான ரேடியோவின் மூலம் முஸ்லிம்கள் மகாத்மாவை படுகொலை செய்துவிட்டார்கள் என்ற பொய்யை திரும்ப திரும்ப ஒலிபரப்பியதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குஜராத்தில் நடந்ததும் அதுவே ரயிலை முஸ்லிம்கள் எரித்துவிட்டார்கள் என்ற செய்தியை இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்கள் மூலமும் பரப்பி திட்டமிட்டு நம்மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டார்கள். கோவையில் நடந்ததும் இதுவே இன்றும் திட்டமிட்டு தமிழகத்தில் நமது சமுதாய இளைஞர்களை ஊடகங்களின் வாயிலாக தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் ஃபாசிச பயங்கரவாதிகள் அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

நாம் அதற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யக்கூட வக்கற்றவர்களாக உள்ளோம். நாம் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றோம் நம்மீது இனப்படுகொலை ஏவிவிடப்படுகின்றது ஃபாசிச பயங்கரவாதிகள் அரச இயந்திரங்களின் துணை கொண்டு நம்மை அழிக்கின்றர்கள் என்று நமக்கு நேர்ந்த பாதிப்புக்களை பட்டியலிட்டு உலக மக்களின் முன் வைத்து நியாயம் தேடக்கூட உரிய ஊடகங்கள் நம்மிடம் இல்லை. நமக்கெதிராக செய்யப்படும் பொய்யபிரச்சாரங்களுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யவும் நாம் தீவிரவாதிகள் அல்ல எல்லோரையும் போல் அப்பாவி மக்களே என்று கூறி நமக்கெதிராக நடக்கும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து நம் மக்களை விழிப்புணர்ச்சி அடைய செய்யக்கூட நம்மிடம் போதிய ஊடகங்கள் இல்லை. இருக்கும் ஓரிரு ஊடகங்களும் இயக்கம் சார்ந்தவையாக உள்ளன அவற்றிற்கு தங்கள் இயக்கங்களின் கொள்கைகளை விளக்கவும் தமக்கிடையே நடக்கும் சண்டைகளை செய்திகளாக்கி நமது சமுதாயத்தை பிளவு படுத்தவுமே பக்கங்கள் போதவில்லை.

இவற்றையெல்லாம் நாமும் நமது இயக்கங்களும் உணர வேண்டும் இன்றைய நமது சமுதாயத்தின் முக்கிய தேவை நமக்கென ஒரு செய்தி நாளிதழ் கேரளாவில் முஸ்லிம் லீக்கின் “சந்திரிக” வைப் போலவும் ஜமாத் இஸ்லாமியின் “மாத்யமம்” பத்திரிகைகளை
போலவும் தமிழகத்தில் அனைத்து தரப்பும் படிக்கக்கூடிய ஊடகம் ஒன்று நமக்கு முக்கியத்தேவை.அதுபோல் முஸ்லிம்களால் கேரளத்திலும் அண்டை மாநிலங்களிளும் நடத்தப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் போல் தமிழத்திலும் நமக்கு ஓர் தொலைக்காட்சி அலைவரிசைவேண்டும். இதையெல்லாம் நமது இயக்கங்களோ அல்லது சமூக அக்கறை மிக்க முஸ்லிம்
தொழிலதிபர்களோ ஆரம்பிக்கலாம் அப்படி செய்யும் பட்சத்தில் நமது ஒட்டுமொத்த சமுதாயமும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாமும் நமது சகோதர கேரள முஸ்லிம்களை போன்று அனைத்து தரப்பினரும் வாசிக்கும் தினசரிகளையும் அனைத்து தரப்பினரும் காணும் தொலைக்காட்சி அலைவரிசையையும் கொண்டிருந்தால் நமக்கெதிராக இன்று ஊடகங்களின் துணை கொண்டு ஃபாசிச பயங்கரவாதிகளால் செய்யப்படும் பிரச்சாரங்களை முறியடிக்கலாம். நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒற்றுமைப்படுத்தி தமிழகத்தின் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக மாறலாம். நமது சமுதாய மக்களை விழிப்படையச்செய்து நமக்கெதிராக திட்டங்கள் தீட்டி செய்ல்படுத்திவரும் ஃபாசிச பயங்கரவாதிகளின் திட்டங்களை முறியடித்து நம் சமுதாயத்தை காக்கலாம். இதற்கு முக்கிய தேவை ஊடகங்கள். இதன் அவசியத்தை நமது சமுதாயம் கட்டாயம் உணர வேண்டும்.

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள ததஜ போன்ற நமது சமுதாய அமைப்புக்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றது என்ற நிலையில் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும். கோவையிலும் தமிழகத்தில் பிறபகுதிகளிளும் நடந்த சம்பவங்கள் போன்று காவல்துறையும் ஃபாசிச சக்திகளும் நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் போது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி முஸ்லிம்களின் ஓட்டுக்களால் 70க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி இதுபோன்ற அநியாயங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வலியுருத்த வேண்டும்.

அப்படி நமக்கு ஆதரவாக இடஒதுக்கீட்டிற்காகவும் நம்மீது நடத்தப்படும அநியாயங்களுக்கெதிராகவும் குரல் கொடுக்க மறுத்து நமக்கெதிராக செயல்படும் பட்சத்தில் அக்கூட்டணியிலிருந்து விலகி அக்கட்சி நமக்கு செய்த துரோகங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அக்கட்சிக்கெதிராக கடுமையான முறையில் போராட தயங்க கூடாது. சமீபத்தில் தனது வாக்குறுதியை மீறி முஸ்லிம்களுக்கெதிராகவும் அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்கெதிராகவும் மீண்டும் பொடாவை கொண்டுவந்து முஸ்லிம்களுக்கெதிராக பிரயோகிக்க வேண்டும என்பதுபோலவும் குரல் கொடுத்து வரும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவிற்கு அவருடன் இருக்கும் நமது சமுதாய இயக்கங்கள் கண்டனம் கூட தெறிவிக்காதது மிக வருத்தமான விஷயம்.

நமக்கெதிராக அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்படும்போது நாம் இயக்க பேதம் பார்க்காமல் இனம் என்ற அடிப்படையில் நமது அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் நமது பலம் என்வென்பதை நமது
எதிரிகள் உணர்வார்கள். அதைவிடுத்து விடியல்காரன்தானே என்று தமுமுக சும்மாயிருப்பதும் தமுமுக செய்யும் அனைத்தையும் குறைகூறி ததஜ சும்மாயிருப்பதும்
ஒருவர் மீது ஒருவர் போலிசில் பொய்ப்புகார் கூறுவதும் ஒருவர் பத்திரிகையில் மற்றவரின் காரியங்களை குறைகூறி மற்றவர்களை குற்றவாளிகளாக சித்தறிப்பதும் (உதாரணம் :
உணர்வின் பொதக்குடி சம்பவம் ஒரு நடுநிலை ரிப்போர்ட்) நமது சமுதாயத்தை பலகீனப்படுத்தவே செய்யும்.

கோவை சம்பவம் தொடர்பாக நியாயம் கோரி தமுமுக, மனித நீதி பாசறை போன்ற அமைப்புக்கள் ஒருங்கிணைந்து போராடவிருப்பதாக வரும் செய்திகள் மகிழ்ச்சியை தருகின்றன. மற்ற அமைப்புக்களையும் ஒருங்கினைத்து போராட முயலுங்கள் ஒரு சில அமைப்புக்கள் தங்களோடு ஒருங்கிணைய மறுத்து ஃபாசிச சிந்தனையுடையோரின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருப்பதும் ஜெயலலிதா போன்றோர் ஃபாசிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்களை கூறி செயல்படும்போது அவர்களுடன் கூட்டணியல் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காது மௌனம் காப்பதும் கடுமையான சந்தேகங்களை உண்டாக்குகின்றன்.

இதுபோல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளை கண்டிக்காது வியாக்கியானம் பேசி ஃபாசிச சக்திகளுக்கு துணைபோவோருடன் கூட்டணி சேர்ந்து சுயநலப்போக்கோடு செயல்படும் போலி சமூக அரசியல் இயக்கங்களின் துரோகங்களை மக்கள் மன்றத்தில் வைத்து அவர்களை தனிமைப்படுத்த நமது சமுதாயத்தின் அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.

இதுபோல் நமது வேதம் கூறியதைப்போன்று ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து நாம் அனைவரும் இயக்க பேதம் பாராமல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளுக்கெதிராக போராடி
ஃபாசிச சக்திகளின் செயல்களுக்கு ஒத்து ஊதும் நம்முள் இருக்கும் எட்டப்பர்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை நாம் அனைவரும் இணைந்து சமுதாயப்பகிஷ்காரப்படுத்தினால் நம்முள் காட்டிக்கொடுப்பவர்களும், நமது சமுதாயத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களும் உருவாகமாட்டார்கள். நாம் அனைவரும் இனைந்து நான் மேலே கூறிய காரியங்களை ஐந்துவருட திட்டமாக செயல்படுத்தி அதில் வெற்றி பெற்றால் நாம் இடஒதுக்கீடு கேட்டு போராட தேவையில்லை, வேண்டிய இட ஒதுக்கீட்டை நாமே உருவாக்கி கொள்ளலாம்.

தமிழகத்தின் அரசியலில் முஸ்லிம்கள் தவிர்க்க இயலாத சக்தி என்பதை அனைவரும் உணர வேண்டும். சுய லாபங்களுக்காக வெற்றி தோல்வியை தீர்மானிப்பது முஸ்லிம்கள் இல்லை அது பெரும்பான்மை சமுதாயம் என்பது போன்ற சுயநல பேச்சுக்களையும் அறிக்கைகளையும் நிறுத்தி நமது சமுதாயத்தை திசைக்கு ஒன்றாக பிற்த்து ஓட்டுக்களை சிதறடித்து பலகீனப்படுத்தும் செயல்களை நிறுத்தி தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் நாடார் சமுதாயம் மற்றும் முக்குலத்தோர் சமுதாயம் ஒருங்கிணைந்து தங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக வாக்களிக்க கூடிய கட்சியை மட்டும் ஆதரிக்கின்றதோ அதுபோல் நமது கோரிக்கைகள எந்த கட்சி நிறைவேற்றுவதாக வாக்களிக்கின்றதோ அந்தக்கட்சிக்கு மட்டும்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்காளர்களும் வாக்களிப்பார்கள் அவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி என்ற ஒரு நிலையை தமிழகத்தில் நாம் கொண்டுவர முயல வேண்டும்.

அப்படி ஒரு நிலை வருமானால் தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய மாபெரும் சக்தியாக ஒரே சமூகமாக நமது இஸ்லாமிய சமூகம் அமையும் அன்று இடஒதுக்கீடு தானாக நமது கால்களில் விழுந்து கிடக்கும். நமக்கெதிராக ஜெயலலிதாக்கள் குரல் கொடுக்க தயங்குவார்கள், மாசானமுத்துக்களும், ரத்தின சபாபதிகளும் ஃபாசிச சித்தாந்தத்தை மூட்டைகட்டிவிட்டு பாய்களுக்கு பாய்விரிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை சுயநலன்களை மறந்து நாம் ஒன்று கூடினால் இன்ஷா அல்லாஹ்.. இதை இயக்கங்கள் உணர்வார்களா?

கனவுகள் நினைவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை, நம் இயக்கங்களும் மக்களும் அதற்காக ஒருங்கிணைவார்கள் இறைவன் நாடினால் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன்.

குறிப்பு : சிறந்த அறிஞர்களும் சிந்தனையாளர்களும் நமது சமூகத்தில் உள்ளார்கள் அப்படிப்பட்டவர்கள் நமது சமூகத்தின் வெற்றிக்கான தங்களது செயல்திட்டங்களை கட்டுறைகளாக்கி தருவீர்களானால் நான் இங்கு பிரசுரிக்க தயாராக உள்ளேன். என்னை மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
முகவைத்தமிழன்

ஜூலை 24, 2006

தமிழக அரசை கலங்கப் படுத்த சதி!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:38 பிப
காவல் துறையில் கருப்பு ஆடுகள்!
தமிழக அரசை கலங்கப் படுத்த சதி!!
வாய்மையே வெல்லட்டும்??

இந்திய தேசத்தின் அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம் தமிழகம். அண்டை மாநிலத்தாரைக் கூட கரம் நீட்டி வரவேற்கும் மாண்பு உடையவர்கள் தமிழர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சங்க நாதம் உரக்க முழங்கும் பூமி. அண்ணன், தம்பி, மாமன், மச்சான் உறவு பாராட்டி திசை இல்லை, தேசம் இல்லை, எல்லை இல்லை, உறவு எல்லாம் உயிர், மதம், ஜாதி இனம் கடந்து மானுடத்தை நேசித்த மக்கள் வாழும் நாடு தமிழ்நாடு.

சமீபகாலமாக சமூக பொருளாதார அரசியல் பிராந்திய நெருக்கடிகளின் காரணமாக சில நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை முடிச்சுப் போட்டு தமிழக முஸ்லிம்களின் மேல் தீக்குச்சி கொளுத்திப் போடும் சங்பரிவாரத்தின் ஆர்.எஸ்.எஸ் வேலையை காவல்துறையே முன் நின்று கோவையில் அரங்கேற்றி இருக்கிறது. இந்திய மக்கள் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.

தமிழகம் பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா பிறந்த மண். நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என சாற்றிய புலவர்கள் உலவிய மண். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறை அப்பாவி இளைஞர்கள் மீது பழி சுமத்தி முஸ்லிம்களின் மேல் தவறான சித்திரத்தை வரையத் தொடங்கியது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? சங்பரிவாரத்தின் சர்வாதிகார ஆட்சியா? என்று கேட்கும் நிலை.

சமூக நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும், திராவிட இன உணர்விற்கும், அரசியல் சட்டத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும், எதிரானவர்கள் சங்பரிவாரத்தினர் என்பது நாடறிந்த அறிவு ஜீவிகளின் ஒருமித்த கருத்து. தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் பொறுப்பேற்றவுடன் நல்ல முற்போக்கு திட்டங்களை அறிவித்தவுடன் (குறிப்பாக எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், நீண்ட நாட்கள் சிறையில் வாடும் முஸ்லிம்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு, கோவை வழக்கை விசாரிக்க துரிதமாக்கியது) பொறுத்துக் கொள்ள முடியாமல் கவனத்தை திசை திருப்ப சங்பரிவாரத்தினர் துணையுடன் காவல் துறையின் கருப்பு ஆடுகள் தமிழக அரசை கலங்கப்படுத்த செய்யப்பட்ட நாடகம்தான் கோவையில் மீண்டும் வெடிபொருட்கள் என்ற கூப்பாடு. பன்மைச் சமுதாய மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு குற்றங்களை கண்டு பிடிக்க வேண்டிய காவல்துறை குற்றங்களை உற்பத்தி செய்யும் துறையாக மாறி இருக்கிறது.

கவிஞர் கண்ணதாசனின் காவல் துறை பற்றிய கருத்தை புறம் தள்ளி விட முடியாது. என் வீட்டு சைக்கிளைக் காணவில்லை, திருடனிடம் இருக்கிறதா? அல்லது போலீஸ்காரனிடம் இருக்கிறதா? என்று தெரியவில்லை என்று நொந்து கேட்டார். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் காவல்துறையின் கருப்பு ஆடுகளாக இருந்தாலும் சரி, அல்லது குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும். தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு இட வேண்டும். காவல்துறையின் கருப்பு ஆடுகள் களையப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா பதித்த தமிழக அரசின் வாய்மை நிலைநாட்டப் பட வேண்டும் என இந்திய மக்கள் பேரவை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்
ipftamil@yahoo.com
ipftamil@hotmail.com
Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.