தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 29, 2007

கடையநல்லூர் ஜாக் பள்ளி த.த.ஜ.விடமிருந்து மீட்கப்பட்டது.

Filed under: மஸ்ஜித் முபாரக்.ஜாக — முஸ்லிம் @ 4:06 பிப
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கடையநல்லூர் ஜாக் பள்ளி த.த.ஜ.விடமிருந்து மீட்கப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜாக்குக்கு சொந்தமானதுதான் என 3.7.07 அன்று தென்காசி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது. சட்டத்தின் துணையுடன் முறையாக மீட்கும் நிகழ்ச்சி 29.7.07 அன்று நடைபெற்றது. ஜாக் மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனி இஷா பாங்கு சொன்னார்கள். இஷா தொழுகை முடிந்ததும் மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதன் மூலம் த.த.ஜ.விடமிருந்து கடையநல்லூர் ஜாக் பள்ளி மீட்கப்பட்டு ஜாக் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

பள்ளிவாசல் மீட்பு சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணி முதல் இஜ்திமா நடத்த திட்டமிட்டிருந்தார்கள். த.த.ஜ.வினர் காலை 10 மணிக்கே கடையநல்லூர் ஆண்கள் கல்லூரி மாணவர்களையும் மேலப்பாளையம் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி மாணவிகளை பள்ளி உள்ளே கொண்டு வந்து வைத்து கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

பொறுமையுடனும் நிதானத்துடனும் காவல் துறை அதிகாரிகளின் சீரிய ஒத்துழைப்புடனும் மீட்புப் பணி நடந்தது. ஜாக் ஒரு வாரம் த.த.ஜ. ஒரு வாரம் என ஜும்ஆ நடந்து வந்தது. ஈராண்டுக்கு முன் முழுமையாக அபகரித்தது த.த.ஜ. கோர்ட்டு தீர்ப்பு உண்மையான உரிமையாளர்களான ஜாக்கின் பக்கம் ஆகி விட்டது. எனவே மீண்டும் ஜாக் ஒரு வாரம் த.த.ஜ. ஒரு வாரம் என பேரம் பேசினர்.

இறுதியில் இரண்டு தளத்தை பூட்டி விட்டு போய் விட்டனர். திறந்திருந்த தளத்தில் ஜாக் நிகழ்ச்சி நடத்தியது. உயிரே போனாலும் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்கை விட்டுக் கொடுக்க மாட்டோம். எத்தனை நாளுக்கு போலீஸ் நிற்கும். அல்லாஹ்வின் மீது ஆணையாக மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என த.த.ஜ.வினர் சத்தியம் செய்துள்ளனர்.

செய்திகள் : சகோ. பஸ்லுல் இலாஹி

ஜூலை 28, 2007

AL-ZAMIL இஸ்லாமிய கருத்தரங்கம்

Filed under: AL-ZAMIL இஸ்லாமிய கருத்தர — முஸ்லிம் @ 1:29 பிப

கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2007) அன்று தம்மாம் ராக்காவில் அமைந்துள்ள அஸ்-ஜாமில் நிறுவனத்தாரின் கேம்பில் அவர்கள் நடத்தும் 5-ம் ஆண்டு இஸ்லாமிய கருத்தரங்கம் தமிழ் மொழியில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் துனைத் தலைவர் மெளலவி உவைஸ் பாக்கவி அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்-ஜாமில் கேம்ப் நிர்வாகி மெளலவி முஹ்யத்தீன் ரஷாதி அவர்கள் கிராஆத்துடன் துவங்கி மிகச்சிறப்பாக வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழச்சிக்காக ஜீபைல் மாநகரில் இருந்து வருகை தந்திருந்த இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் மெளலவி மஹம்மத் ஜமாலுத்தீன் மதனி அவர்கள் ஷிர்க்கும் பித்ஆத்தும் என்ற தலைப்பிலும் அல்கோபர் அக்ரபியா சென்டரில் இருந்து வருகை தந்திரந்த தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் மறுமையின் கவவலை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

தம்மாம் சென்டரில் இருந்து வந்திரந்த இலங்கையை சேர்ந்த மார்க்க் அறிஞர் மெளலவி முஹம்மத் மன்சூர் முஸ்த்தஃபா அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினர்கள். இறுதியாக தம்மாம் தமிழ் தஃவா கமிட்டியை சோந்த சகோ. ஷஃபியுல்லாஹ் கான் அவர்கள் நன்றியுயுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நிகழச்சியின் இடையில் பேசிய தலைப்புக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன் நிகழச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களம் சிறுவர்களும் ஆர்வமுடன் கெடக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அல்-ஜாமில் நிர்வாகத்தினரும் அல்-ஜாமில் நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ் முஸ்லிம் சகோதரர்களும் நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தனர். நிகழச்சியின் இடையில் இருமுறை சிறப்பான சிற்றுன்டியும் அத்துடன் தேனீரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கடுமு் வெப்பத்தையும் பொருட்படுத்தாது பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

ஜூலை 24, 2007

நீதியைத்தேடி ஒரு அபலையின் பயனம்-குறும்படம் (SHORT FILM VIDEO)

நீதியைத்தேடி ஒரு அபலையின் பயனம் கோவை சிறைவாசிகள் பற்றிய குறும்படம் காண்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு இங்கு சொடுக்கவும்.

Please Click Here to Watch or Download the Short Film.

காவல்துறையின் அராஜகம்…

காக்கிகள் மற்றும் காவி உடை பயங்கரவாதிகளால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் பென்கள்..

காக்கிகளோடு காவிகள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரவாதம்…

வீடியோவை காண்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு

தமிழ் முஸ்லிம் மீடியா

தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்கெதிராக நடத்தப்படும் அடக்குமுறைகளையும் எதிரொலிக்கும் ஊடகமாக இன்சா அல்லாஹ்…

,இஸ்லாம், முஸ்லிம்

ஜூலை 22, 2007

அல் ஜாமில் கேம்ப் இஸ்லாமிய கருத்தரங்கம்

5-ம் ஆண்டு இஸ்லாமிய கருத்தரங்கம்
நிகழ்ச்சி அரங்கம் : அல்-ஜாமில் கேம்ப், ராக்கா
நாள் : 13 ரஜப் 1428 (27-07-2007) வெள்ளிக்கிழமை
நேரம் : அஸர் முதல் மஃரிப் வரை
நிகழ்ச்சி நிரல்
அமர்வு தலைவர்
மெளலவி. உவைஸ் பாகவி அவர்கள்
துனைத் தலைவர் – தம்மாம் தமிழ் தஃவா கமிட்டி
வரவேற்புரை
மெளலவி. முஹ்யத்தீன் ரஷாதி அவர்கள்
சிறப்புரை 1 – தொழுகையின் அவசியம்
மெளலவி. முஹம்மத் மன்சூர் முஸ்தஃபா அவர்கள்
சிறப்புரை 2 – மறுமையின் கவலை
மெளலவி. அலி அக்பர் உமரி அவர்கள்
சிறப்புரை 3 – ஷிர்க் மற்றும் பித்-அத்
மெளலவி முஹம்மத் ஜமாலுத்தீன் மதனி அவர்கள்
நன்றியுரை
சகோ. ஷஃபியல்லாஹ் கான் அவர்கள்
தலைவர் – தம்மாம் தமிழ் தஃவா கமிட்டி
நிகழ்ச்சியினூடே கேள்வி பதில் நிகழச்சிகள் நடைபெறும். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
குறிப்பு : ICC தம்மாமிலிருந்து ராக்கா வரை சென்றுவர வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழறிந்த அனைவரும் வருகை தந்து பயன் பெறுமாறு அழைக்கின்றார்கள்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்

Filed under: கைதிகள், கோவை குண்டு வெடிப்ப, விடுதலை — முஸ்லிம் @ 6:23 முப

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்

கோவை : கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கி தனி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு வரும் ஆக.,1ல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நவுஷாத், சர்தார் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி தனி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த தனி கோர்ட், இருவருக்கும் ஜாமீன் வழங்கி, தீர்ப்பளித்தது. இருவரும் ரூ.10 ஆயிரம் செலுத்தி, சொந்த ஜாமீனில் செல்ல கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வக்கீல் அபுபக்கர் கூறுகையில், “”குற்றம் சாட்டப்பட்ட நவுஷாத், சர்தார் (எ) சைத்தான் ஆகியோருக்கு, தலா ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீன் அளித்து, தனி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவுஷாத் நேற்று விடுவிக்கப்பட்டார். சென்னை சிறையில் உள்ள சர்தார் இன்று விடுதலை செய்யவுள்ளார்.

இருவரும், ஒவ்வொரு வாய்தாவுக்கும் தவறாமல் ஆஜராக வேண்டும். கோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்டோருடன் சேர்ந்து நிற்க கூடாது. கோர்ட்டுக்கு வரும் போது, போலீஸ் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்; பேட்டி கொடுக்க கூடாது, போன்ற நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது,” என்றார். கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்தது. 174 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். வழக்கின் தீர்ப்பு ஆக., 1ல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதல் முறையாக இருவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 16, 2007

SRILANKA முஸ்லிம் பென்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களுக்கு,

இந்த விடயம் குறித்து உலகின் அணைத்து அமைப்புக்களும் எழுதியும் பேசியும் வரகையில் சகோ. ரிஷானா நஃபீக் ஒரு முஸ்லிமாக இருந்தும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் குரல் இந்த விசயத்தில் இது வரை ஓங்கி ஒலிக்காததன் காணம் என்னவென்று தெறியவில்லை. இந்த இலங்கை முஸ்லிம் பென்னிற்காக குரல் கொடுக்க கூடிய அணைத்து அமைப்புகளும் முஸ்லிம் அல்லாத தமிழ் அமைப்புக்களாகவும் தமிழ் மக்களாகவுமே உள்ளனர். இது வருத்தப்படக்கூடிய ஒரு விடயம்.

இந்த பென்னின் உயிர் காக்க வேண்டி பல ஆன்லைன் பெட்டிசன்கள் உருவாக்கப்பட்டுள்ன. நீங்களும் அதில் ஒரு கையெழுத்திட்டு செல்லுங்களேன். இரன்டு நிமிடங்கள் கூட பிடிக்காது.

ஐ பெட்டிசன் ஃபாரம் :

http://www.ipetitions.com/petition/SaveRizanaNasik/

பெட்டிசன் ஆன்லைன் ஃபாரம் :

http://www.petitiononline.com/rizana1/

அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பின் ஃபாரம் :

http://www.amnesty.org.uk/actions_details.asp?ActionID=295

நன்றி.

மரணத்தின் வாசலில் தவிக்கும்
இலங்கை இளம் பெண்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார்.

பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது.

மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.

அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.

-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.

-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.

-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

– றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.

– றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Chacking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

– கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

– இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் (அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.

மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.

அன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள். தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப் பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை.

அதாவது வேலைக்குப் போகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப் போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப் போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை. இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.

இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது’ வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப் பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது.

சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது.

இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப் பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது.

நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.

றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் (33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)

படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம்.

வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப்பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.

இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும்.

இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும்.

றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும்.

இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.

ஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக் குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒரு மாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள்.

அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.

குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.

இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச்செய்வோம்.

காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி – இமெயில் மூலமாகவோ பேக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.

தயவு செய்து, உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.

Father of the dead child,(re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi
c/o, Sri Lankan Embassy,
Po Box,94360
Riyadh-11693
Soudi Arabia

Fax.00 9661 460 8846, e mail–. lankaemb@sabakah.net.sa

என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும்.

ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ( rajesbala@hotmail.com)
நன்றி: கீற்று

SRILANKA முஸ்லிம் பென்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்

Filed under: றிஷானா நபீக், Rizana Nasik, Srilankan maid — முஸ்லிம் @ 3:02 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களுக்கு,

இந்த விடயம் குறித்து உலகின் அணைத்து அமைப்புக்களும் எழுதியும் பேசியும் வரகையில் சகோ. ரிஷானா நஃபீக் ஒரு முஸ்லிமாக இருந்தும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் குரல் இந்த விசயத்தில் இது வரை ஓங்கி ஒலிக்காததன் காணம் என்னவென்று தெறியவில்லை. இந்த இலங்கை முஸ்லிம் பென்னிற்காக குரல் கொடுக்க கூடிய அணைத்து அமைப்புகளும் முஸ்லிம் அல்லாத தமிழ் அமைப்புக்களாகவும் தமிழ் மக்களாகவுமே உள்ளனர். இது வருத்தப்படக்கூடிய ஒரு விடயம்.

இந்த பென்னின் உயிர் காக்க வேண்டி பல ஆன்லைன் பெட்டிசன்கள் உருவாக்கப்பட்டுள்ன. நீங்களும் அதில் ஒரு கையெழுத்திட்டு செல்லுங்களேன். இரன்டு நிமிடங்கள் கூட பிடிக்காது.

ஐ பெட்டிசன் ஃபாரம் :

http://www.ipetitions.com/petition/SaveRizanaNasik/

பெட்டிசன் ஆன்லைன் ஃபாரம் :

http://www.petitiononline.com/rizana1/

அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பின் ஃபாரம் :

http://www.amnesty.org.uk/actions_details.asp?ActionID=295

நன்றி.

மரணத்தின் வாசலில் தவிக்கும்
இலங்கை இளம் பெண்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார்.

பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது.

மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.

அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.

-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.

-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.

-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

– றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.

– றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Choking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

– கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

– இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் (அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.

மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.

அன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள். தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப் பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை.

அதாவது வேலைக்குப் போகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப் போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப் போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை. இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.

இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது’ வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப் பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது.

சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது.

இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப் பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது.

நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.

றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் (33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)

படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம்.

வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப்பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.

இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும்.

இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும்.

றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும்.

இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.

ஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக் குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒரு மாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள்.

அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.

குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.

இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச்செய்வோம்.

காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி – இமெயில் மூலமாகவோ பேக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.

தயவு செய்து, உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.

Father of the dead child,(re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi
c/o, Sri Lankan Embassy,
Po Box,94360
Riyadh-11693
Soudi Arabia

Fax.00 9661 460 8846, e mail–. lankaemb@sabakah.net.sa

என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும்.

ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ( rajesbala@hotmail.com)
நன்றி: கீற்று

ஜூலை 12, 2007

இஸ்லாமும் முபாஹலாவும் – சுதர்சனுக்கு விளக்கம்

Filed under: முபாஹலா, முபாஹலா கூடுமா, mubahala — முஸ்லிம் @ 8:58 பிப

அன்பின் சகோதரர் சுதர்சன் அவர்களுக்கு,

இஸ்லாத்தைக் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போன்று அமைந்த தங்களின் கீழ்க்காணும் கேள்விகளுக்கும் இதற்கு முன்னர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் மிக்க நன்றி!

பல்வேறு தளங்களில் இக்கேள்வியை கேட்டதில் இங்கு மட்டுமே என் கேள்வி எவ்வித எடிட்டிங்கும் இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக முதலில் தோழர் முகவைத்தமிழன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் கேள்விக்கு பதிலளிக்க “முயன்றுள்ள” தோழர் அஸ்மின் அவர்களுக்கும் என் நன்றி.

ஆனால் உங்களின் பதில் என் கேள்விக்கு போதுமான பதிலாக இல்லை.

என் கேள்வி நேரடியானது.

1. “ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்கமாட்டார்” எனில், ஆண்கள் தங்களுக்குள் நடத்திய கொடுக்கல், வாங்கல் போன்ற மற்று விஷயங்களில் செய்த தவறுகளுக்கு எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளையும் பொதுவில் குற்றவாளி போன்று நிறுத்தி, அவர்கள் மீதும் சாபம் இறங்கட்டுமாக எனக் கூறுவது எவ்வகையில் சரியானது?

2. அறிவுப்பூர்வமான இஸ்லாம் இவ்விஷயத்திற்கு கூறும் அறிவுப்பூர்வமான விளக்கம் என்ன?

இதனை நான் மாற்று வார்த்தையில் கேட்பதானால்,

மஹாபாரத கதையில்…. ஓ! இ(த்)தி(போன)காசத்தில்(!), கட்டிய மனைவி திரௌபதியை மக்கள் மத்தியில் தன் சுயகவுரவத்தை காக்க பந்தயப்பொருளாக வைத்து சூதாடுகிறானே யுதிஷ்டிரன் – இந்து சனாதன தர்மம் அவதார புருஷனாக எடுத்துக்காட்டும் இவனின் செய்கைக்கும், அறிவுப்பூர்வமான மார்க்கமான இஸ்லாத்தை தூக்கி நிறுத்த அறிவுப்பூர்வமான விளக்கங்கள் அளித்து மற்றவர்களை மதம்மாற்ற முயலும் உங்களின் அறிஞர் பி.ஜெய்னுலாபித்தீன் மற்றும் அவரின் எதிரிகளாக இருந்த அந்த 8 பேர்களின் செய்கைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இதனை அறிவுப்பூர்வமாக விளக்க இயலுமா?

நன்றி,
சுதர்சன்.

தாங்கள் என்ன நோக்கத்தில் இக்கேள்வியை கேட்கின்றீர்கள் என்பது புரியவில்லை. இஸ்லாத்தைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு வேட்கையின் காரணமாக கேட்கின்றீர்கள் எனில் தங்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் இஸ்லாம் கூறும் “முபாஹலா” குறித்தும் தங்களின் கேள்விக்கு பதில் அளிக்க கோரியும் நாம் விடுத்த வேண்டுகோளை அடுத்து எம் இஸ்லாமிய சகோதரர்களிடம் இருந்து ஏறாளமான மடல்கள் தங்களது கேள்விகளுக்கு விளக்கமாக எம்மிடம் கடந்த தினங்களில் வந்து மலை போல் குவிந்துள்ளன.

மற்றபடி தாங்கள் இங்கே கேட்டுள்ள பெரியவர் பி.ஜே நடத்திய முபாஹலா நிகழ்ச்சிக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இஸ்லாமிய வழிகாட்டல்களை தவறாக விளங்கியுள்ள பல முஸ்லிம்களைப் போன்று இவர்களும் “முபாஹலாவை” தவறாக விளங்கிய காரணத்தினாலேயே, தங்களை மக்கள் மத்தியில் நியாயவான்களாக சித்தரிக்க வேண்டி இப்படிப்பட்ட காரியங்களை செய்கின்றனர். இன்னும் தங்களின் கேள்விக்கு பதில் அளிப்பதாக கூறிக் எமக்கு நீங்கள் கூறிய பெரியவர் பி.ஜே அவர்களின் இயக்கத்தினரும் ஒரு மடல் அனுப்பியிருந்தனர் அம்மடலில் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக எம்மை ஒரு முபாஹலாவிற்கு அழைத்திருந்தனர் இதுதான இவர்களின் நிலை.

எனவே தாங்கள் இவர்களின் இச்செயல்களை இஸ்லாத்தோடு தயவுசெய்து தொடர்பு படுத்த வேண்டாம். “ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க இயலாது” என அறிவுறுத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளை தெளிவாக அறிந்துள்ள இத்தகையோர், “எவ்வகையில் தாய், தந்தையர்கள் செய்த தவறுக்கான தண்டனையை குழந்தைகளும் பெறும் விதத்தில் சாபம் கோர இஸ்லாம் கூறும்” என்ற சாதாரண கேள்வி மனதில் எழும் அளவிற்கு கூட சிந்தனை செய்யும் மனநிலையில் இவர்கள் இல்லை என்பதை தான் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

எப்பொழுதும் எல்லா இடத்தும் கூறப்படுவது போல், முஸ்லிம் அல்லாத மாற்று சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோள்:

“இஸ்லாத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடுங்கள். இஸ்லாமியர்களின் செய்கைகளில் தயவு செய்து தேடாதீர்கள்.”

அவ்வாறு நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடும் பொழுது, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் தான் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி அறிந்து கொள்வீர்கள்.

ஆர்வத்துடன் இஸ்லாத்தைக் குறித்து சந்தேகம் எழுப்பிய சகோதரர் சுதர்சனுக்கு நன்றிகள். தங்கள் சந்தேகங்களை தாராளமாக மேலும் கேளுங்கள். இயன்றவரை அறிந்த வகையில் விளக்க முற்படுகின்றோம்.

இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்களும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் முபாஹலாவிற்கு விளக்கம் அளித்து கட்டுரை அனுப்பக்கூடியவாக்ள் இனிமேல் கட்டுரைகள் அனுப்ப வேண்டாம் எதிர்பார்த்த அளவை விட அதிகமான கட்டுரைகள் வந்துள்ளதால் அவையே போதுமான பதிலாக அமைந்துள்ளன. தங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பித்தந்து தனி மனித செயலை இஸ்லாத்தோடு ஒப்பிட்டு நடத்திய குற்ச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

நன்றி
முகவைத்தமிழன்

*********************************************************
சகோதரர் சுதர்சனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலும் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு விளக்கமாகவும், தெளிவான பதிலாகவும் வந்து குவிந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும்.

1) இஸ்லாமிய இணையப் பேரவை (IIP) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் இணையத்தளங்கள்,எழுத்தாளர்கள் மற்றும் முஸ்லிம் வலைப்பதிவாளர்களின் கூட்டமைப்பு அனுப்பியிருந்த கட்டுரை :

அன்பின் சுதர்சன் அவர்களுக்கு

தாங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று துவங்கி முபாஹலா பற்றிய ஒரு தகவலைத் தெரிவித்து அதனோடு கிருத்துவ நம்பிக்கையையும் பொருத்தி முபாஹலாவுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது எனில் இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வான மார்க்கம் என விளக்கம் கேட்டுள்ளீர்கள்.

முஸ்லீம்களாகிய நாங்கள் வணங்கத் தகுதியான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம், வணங்கக் கூடாது. இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களில் அவரவர் கொள்கைப்படி தாங்கள் கடவுள் என்று எவைகளை எல்லாம் நம்பியுள்ளார்களோ அவைகளை வணங்குவார்கள். மேலும் படிக்க……..

2) தமிழகத்தின் பிரபல அறிஞரும் பி.ஜே என்பவருடன் பல காலம் ஒன்றாக இருந்து பின்னர் பி.ஜே யின் தவறான கொள்கை பிடிக்காமல் வெளியேறியவருமான திரு.பஸ்லுல் இலாஹி என்பவர் தமிழகத்தின் வரலாற்றில் முபாஹலா என்ற இந்த வழக்கத்தை முதலில் தோற்றுவித்தது யார் என்பதில் இருந்து இந்த முபாஹலா வின் சரித்திரப் பின்னணியை ஆராய்ந்துள்ள அருமையான கட்டுரை.

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலம் சகோதரர் சுதர்சன் அவர்கள் முபாஹலா சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது? இதுதான் சுதர்சன் அவர்கள் முஸ்லிம்களிடம் நேரடியாக வைத்துள்ள கேள்வி. இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களே விளக்கம் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். மேலும் படிக்க……..

3) துபையை வசிக்கும் தமிழக சகோதரார் திரு அஹமத் இமாம் அவர்கள் தங்களுக்கு முபாஹலா பற்றிய விளக்கத்தை குர்ஆனின் ஒளியில் விளக்கியுள்ளார்.

திரு.சுதர்சனம் அவர்களூக்கு,

நீங்கள் எழுப்பிய கேள்வி அர்த்தம் நிரம்பியது.முஹாபலா(முக்காபுலா அல்ல) என்ற பெயரில் ஒன்றும் அறியாத குடும்பத்தினர் மீது சாபம் இடுதல் இஸ்லாத்தில் இல்லாதது.மேலும் படிக்க……..

4) அத்துடன் தங்களுக்கு வலைகுடாவில் வாழும் எமது சகோதரர் திரு. அபு ஃபாத்திமா அவர்கள் ஒரு கேள்வி ஒன்றையும் வைத்துள்ளார்கள் அதையும் இங்கு தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

தன்னை மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக கூறி இஸ்லாமிய மார்க்கத்தின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பிய சகோதரர் சுதர்சன் அவர்களிடம் ஒரு சிறு கேள்வி.

தாங்கள் கேள்வி எழுப்பும் பொழுது, மதங்கள் மக்களிடையே பகைமையை வளர்க்கின்றன எனவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனவும் கூறினீர்கள்.

தங்களின் இக்குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாம் எவ்வகையிலும் உகந்ததல்ல என்பதை மிக உறுதியுடன் கூற இயலும்.

இஸ்லாம் வளர்க்கும் பகைமை, மூடநம்பிக்கைகளை தாங்கள் பட்டியல் போட்டு காட்ட இயலுமா? பொத்தாம் பொதுவாக அனைத்து மதங்களுமே அப்படித்தான் எனக் கூறுவதை விடுத்து எந்த மதங்கள் எந்தெந்த வகையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனப் பட்டியல் போடுங்கள். அதில் தாங்கள் இஸ்லாத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கமளிக்க நாம் மிக்க ஆவலுடன் உள்ளோம்.

ஆனால் அதே சமயம், கடவுள் என்ற ஓர் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் நாத்திகம் பேசுபவர்களால் பகைமையே உருவாவதில்லை என்பது போலவும், அவர்களிடம் மூட நம்பிக்கைகள் இல்லை என்பது போலவும் தாங்கள் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட, நாத்திகம் பேசுபவர்களுக்கு இடையில் ஒருமித்த சிந்தனை இல்லாததும், அவர்களுக்கென குறிப்பிட கொள்கையில் ஒத்த கருத்து இல்லாததும் அனைவரும் அறிவர். ஏன் கடவுள் இல்லை எனக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து இன்று மாலை மரியாதைகளுடன் பூஜிக்கும் நிலையில் தான் நாத்திகர்கள் இன்று உள்ளனர்.

மற்றவர்களுடன் இவர்கள் வைத்து வளர்க்கும் பகைமையை விட, இவர்களுக்கிடையே இருக்கும் பகைமை தான் மிக அதிகம் உள்ளது. எனவே பகைமை வளர மதக்கோட்பாடுகள் தான் காரணம் எனப் பொதுவாக குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் நியாயமில்லை.

அதே போன்றே மூடநம்பிக்கைகளும். இன்று மூடநம்பிக்கைக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக மெச்சிக் கொள்ளும் பகுத்தறிவுவாதிகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதற்கு பெரியார் சிலை விவகாரமே மிகச் சிறந்த உதாரணமாகும்.

ஏன் அங்கு வரை செல்ல வேண்டும். இங்கு கேள்வியை எழுப்பிய நாத்திகவாதியான தங்கள் கேள்வியின் கருத்தில் அடங்கியுள்ள வாசகம் ஒன்றே நாத்திகவாதிகளின் அறியாமையை தோலுரிக்கின்றதே.

தாங்கள் கேள்வியை ஆரம்பிக்கும் பொழுது, “அனைவருக்கும் வணக்கம்” என்று கூறி ஆரம்பித்துள்ளீர்கள்.

“வணக்கம்” என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து தான் தங்களைப் போன்றவர்கள் அவ்வாறு கூறுகின்றார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில், வணக்கம் என்ற பெயர்சொல் ஒருவரை நோக்கிக் கூறப்படும் பொழுது, “அன்னாரை வணங்குகிறேன்” என்ற பொருளிலேயே கொள்ளப்படுகின்றது.

இவ்வுலகில் “வணங்குவதற்கு தகுதியானவர் யார்?” என்ற ஓர் கேள்வியை நாத்திகம் பேசும் தங்களைப் போன்றவர்கள் இதுவரை எழுப்பியுள்ளீர்களா?. மரியாதை கொடுக்கின்றோம் என்ற பெயரில், “வணங்குதல்” என்ற வார்த்தைக்கு எவ்வித தகுதியும் பெறாத சக மனிதர்களை நாத்திகம் பேசுபவர்கள் “வணங்கிக்” கொண்டிருக்கின்றீர்களே. இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை விளக்க முடியுமா?

இவ்வுலகில் வணங்குதலுக்கு தகுதியானவர், “யார் இவ்வுலகு அனைத்தையும் படைத்து காத்து, பராமரித்து வருகிறாரோ அவர் மட்டுமே” என இஸ்லாம் கூறுகின்றது. “ஒருவரை வணங்க வேண்டும் எனில், யார் என்றே தெரியாத அந்த சக்தியை மட்டுமே வணங்க வேண்டும்” எனவும், எவ்வகையிலும் சக மனிதனை வணங்குதல் கூடாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.

மற்ற அனேக மதங்கள் கண்டவை அனைத்தையும் வணங்கக் கூறுகின்றது. அல்லது மற்ற மதத்தினர் அவ்வாறு வணங்குகின்றனர். அதே போன்றே கடவுள் இல்லை எனக் கூறும் நாத்திகவாதிகளான தங்களைப் போன்றவர்களும் மனிதர்களை வணங்குகின்றனர். இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை சற்றி விளக்க முடியுமா?

அறிவு ரீதியாக தங்களைப் போன்றவர்கள் சிந்திப்பர் என்பதனாலேயே தங்களிடம் பதிலாக இக்கேள்வி வைக்கப்பட்டது. அல்லாமல் தங்களின் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது தங்களை வருத்தப்படுத்தும் நோக்கிலோ அல்ல. ஒரு தவறு கண்ட பொழுது எவ்வாறு தாங்கள் இங்கு “முபாஹலா” குறித்த கேள்வியை எழுப்பினீர்களோ, அதே போன்றே சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கேள்வியை தங்கள் முன் வைக்கின்றேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நன்றி

அபு ஃபாத்திமா

விருந்தாக்கப்படும் தமிழ் முஸ்லிம் பென்கள் (EXCLUSIVE ARTICLE)

Filed under: தமிழ் முஸ்லிம் பென், நமது முற்றம் — முஸ்லிம் @ 2:57 பிப
இறைவனின் திருப்பெயரால்

யாருக்காக கைதாகின்றார்கள்? கணவனுக்காகவா? எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்?

போராட்டமா? விருந்தா?
கட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்
நமது முற்றம் ஏப்ரல் 2007.

அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.

உண்ணாவிரதப் போராட்டமா? நடை பயணமா? ஊர்வலமா? எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.

பெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.

ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

கொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!

”தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது”” என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.

”பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்”” (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பெண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து போராட்டம் நடத்த இஸ்லாம் சொல்லவில்லை. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஆண்களிடம் தான் கொடுத்திருக்கிறான். ஆனால் அரசியல் லாபங்களுக்காக, தங்களுடைய சுயநலத்திற்காக முஸ்லிம் பெண்களை முச்சந்தியில் நிறுத்தி, ”இது தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி”” என்று மார்தட்டி சமுதாயத்தின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் சில அநியாயக்காரர்கள்.

”அலீயே! (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல!”” (திர்மீதி).

இது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ். ஆனால் என்ன நடக்கிறது?
பருவ வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்களெல்லாம் எப்போதடா வெளியே சாடலாம் என்று காத்திருந்து, தங்கள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் ரோட்டுக்கு வந்து கொடி பிடிக்கின்றனர். பர்தா தங்களின் பாதுகாப்பிற்காக அல்ல, வெளியே பாய்வதற்காக என்பதை இவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

கணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து…? எத்தன பேரு இடிப்பான்? எத்தன பேரு தடவி பார்ப்பான்?

அண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள்? வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது? அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா?.

பூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் – இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்களையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா? மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.
டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.

”இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா”” என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.

அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?

”துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்”” என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?

”எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்””;. என்பது நபிகளாரின் ஹதீஸ்.

வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவன் அனுப்பித் தருகின்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களை வீதிக்குப் போராட வருகின்ற அம்மணிகள் பீய்ச்சிக் கொண்டு வருவது யாருக்காக?

அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி…இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?

இவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா? அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா?

”அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்”” என்பது நபிகளின் கட்டளை!

குயில்கள் கூவினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்?

கூடி நிற்கின்ற கூட்டத்தின் மத்தியில் அச்சம், நாணம், அடக்கம் அத்தனையும் துறந்து ஆரவாரக் கூச்சலிடுகின்ற இந்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்து இபிலீஸ் சந்தோஷப்பட மாட்டானா?

கட்டாயம் சந்தோஷப்படுவான்!

இந்த பெண்களை அழைத்து வந்த இப்லீஸ்களும் சந்தோஷப்படுவார்கள். ”இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க”” என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.

2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்னால் முஸ்லிம்கள் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து போலிஸார் தடியடி நடத்தினார்கள். ஆலிம்கள் உட்பட ஏராளமானவர்கள் தடகள பந்தயத்தில் கலந்து கொண்டவர்களைப்போல தலைதெறிக்க ஓடினார்கள். பலர் அடி பட்டார்கள், ஓட முயாமல் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினார்கள். ஆப்தீன் என்ற முதியவர் ஓடிவரும்போது ஒரு காரில் மோதி படுகாயம் அடைந்து சில நாட்களில் இறந்து போனார். ஆர்ப்பாட்டம் நடந்த இடம் போர்க்களமாக காட்சி தந்தது. வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று 80 பேர் மீது குற்றம் சுமத்தப்படடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இன்று வரை அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.

அந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து…கணவர்களோ வெளிநாட்டில்…இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்?

இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும்? எத்தனை பெண்களால் ஓடமுடியும்? எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும்? எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள்? எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்?

மூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

யார் அடிப்பட்டால் என்ன? யார் செத்தால் என்ன? தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள்? அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.
இப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.

தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.

ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல! மனித நாகரீகமுமல்ல.
இது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.

இதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.!

இஸ்லாம் முஸ்லிம்

ஜூலை 11, 2007

முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா? சுதர்சனுக்கு பதில்

Filed under: பி.ஜே, பிராடு, முபாஹலா, TNTJ — முஸ்லிம் @ 9:57 பிப

அன்பின் சகோதரர் சுதர்சன் அவர்களுக்கு,

இஸ்லாத்தைக் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போன்று அமைந்த தங்களின் கீழ்க்காணும் கேள்விகளுக்கும் இதற்கு முன்னர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் மிக்க நன்றி!

பல்வேறு தளங்களில் இக்கேள்வியை கேட்டதில் இங்கு மட்டுமே என் கேள்வி எவ்வித எடிட்டிங்கும் இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது.அதற்காக முதலில் தோழர் முகவைத்தமிழன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் கேள்விக்கு பதிலளிக்க “முயன்றுள்ள” தோழர் அஸ்மின் அவர்களுக்கும் என் நன்றி.

ஆனால் உங்களின் பதில் என் கேள்விக்கு போதுமான பதிலாக இல்லை.

என் கேள்வி நேரடியானது.

1. “ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்கமாட்டார்” எனில், ஆண்கள் தங்களுக்குள் நடத்திய கொடுக்கல், வாங்கல் போன்ற மற்று விஷயங்களில் செய்த தவறுகளுக்கு எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளையும் பொதுவில் குற்றவாளி போன்று நிறுத்தி, அவர்கள் மீதும் சாபம் இறங்கட்டுமாக எனக் கூறுவது எவ்வகையில் சரியானது?

2. அறிவுப்பூர்வமான இஸ்லாம் இவ்விஷயத்திற்கு கூறும் அறிவுப்பூர்வமான விளக்கம் என்ன?

இதனை நான் மாற்று வார்த்தையில் கேட்பதானால்,

மஹாபாரத கதையில்…. ஓ! இ(த்)தி(போன)காசத்தில்(!), கட்டிய மனைவி திரௌபதியை மக்கள் மத்தியில் தன் சுயகவுரவத்தை காக்க பந்தயப்பொருளாக வைத்து சூதாடுகிறானே யுதிஷ்டிரன் – இந்து சனாதன தர்மம் அவதார புருஷனாக எடுத்துக்காட்டும் இவனின் செய்கைக்கும், அறிவுப்பூர்வமான மார்க்கமான இஸ்லாத்தை தூக்கி நிறுத்த அறிவுப்பூர்வமான விளக்கங்கள் அளித்து மற்றவர்களை மதம்மாற்ற முயலும் உங்களின் அறிஞர் பி.ஜெய்னுலாபித்தீன் மற்றும் அவரின் எதிரிகளாக இருந்த அந்த 8 பேர்களின் செய்கைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இதனை அறிவுப்பூர்வமாக விளக்க இயலுமா?

நன்றி,
சுதர்சன்.

தாங்கள் என்ன நோக்கத்தில் இக்கேள்வியை கேட்கின்றீர்கள் என்பது புரியவில்லை. இஸ்லாத்தைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு வேட்கையின் காரணமாக கேட்கின்றீர்கள் எனில் தங்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் இஸ்லாம் கூறும் “முபாஹலா” குறித்தும் தங்களின் கேள்விக்கு பதில் அளிக்க கோரியும் நாம் விடுத்த வேண்டுகோளை அடுத்து எம் இஸ்லாமிய சகோதரர்களிடம் இருந்து ஏறாளமான மடல்கள் தங்களது கேள்விகளுக்கு விளக்கமாக எம்மிடம் கடந்த தினங்களில் வந்து மலை போல் குவிந்துள்ளன.

மற்றபடி தாங்கள் இங்கே கேட்டுள்ள பெரியவர் பி.ஜே நடத்திய முபாஹலா நிகழ்ச்சிக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இஸ்லாமிய வழிகாட்டல்களை தவறாக விளங்கியுள்ள பல முஸ்லிம்களைப் போன்று இவர்களும் “முபாஹலாவை” தவறாக விளங்கிய காரணத்தினாலேயே, தங்களை மக்கள் மத்தியில் நியாயவான்களாக சித்தரிக்க வேண்டி இப்படிப்பட்ட காரியங்களை செய்கின்றனர். இன்னும் தங்களின் கேள்விக்கு பதில் அளிப்பதாக கூறிக் எமக்கு நீங்கள் கூறிய பெரியவர் பி.ஜே அவர்களின் இயக்கத்தினரும் ஒரு மடல் அனுப்பியிருந்தனர் அம்மடலில் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக எம்மை ஒரு முபாஹலாவிற்கு அழைத்திருந்தனர் இதுதான இவர்களின் நிலை.

எனவே தாங்கள் இவர்களின் இச்செயல்களை இஸ்லாத்தோடு தயவுசெய்து தொடர்பு படுத்த வேண்டாம். “ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க இயலாது” என அறிவுறுத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளை தெளிவாக அறிந்துள்ள இத்தகையோர், “எவ்வகையில் தாய், தந்தையர்கள் செய்த தவறுக்கான தண்டனையை குழந்தைகளும் பெறும் விதத்தில் சாபம் கோர இஸ்லாம் கூறும்” என்ற சாதாரண கேள்வி மனதில் எழும் அளவிற்கு கூட சிந்தனை செய்யும் மனநிலையில் இவர்கள் இல்லை என்பதை தான் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

எப்பொழுதும் எல்லா இடத்தும் கூறப்படுவது போல், முஸ்லிம் அல்லாத மாற்று சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோள்:

“இஸ்லாத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடுங்கள். இஸ்லாமியர்களின் செய்கைகளில் தயவு செய்து தேடாதீர்கள்.”

அவ்வாறு நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடும் பொழுது, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் தான் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி அறிந்து கொள்வீர்கள்.

ஆர்வத்துடன் இஸ்லாத்தைக் குறித்து சந்தேகம் எழுப்பிய சகோதரர் சுதர்சனுக்கு நன்றிகள். தங்கள் சந்தேகங்களை தாராளமாக மேலும் கேளுங்கள். இயன்றவரை அறிந்த வகையில் விளக்க முற்படுகின்றோம்.

இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்களும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் முபாஹலாவிற்கு விளக்கம் அளித்து கட்டுரை அனுப்பக்கூடியவாக்ள் இனிமேல் கட்டுரைகள் அனுப்ப வேண்டாம் எதிர்பார்த்த அளவை விட அதிகமான கட்டுரைகள் வந்துள்ளதால் அவையே போதுமான பதிலாக அமைந்துள்ளன. தங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பித்தந்து தனி மனித செயலை இஸ்லாத்தோடு ஒப்பிட்டு நடத்திய குற்ச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

நன்றி
முகவைத்தமிழன்

*********************************************************

சகோதரர் சுதர்சனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலும் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு விளக்கமாகவும், தெளிவான பதிலாகவும் வந்து குவிந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும்.1) இஸ்லாமிய இணையப் பேரவை (IIP) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் இணையத்தளங்கள் மற்றும் முஸ்லிம் வலைப்பதிவாளர்களின் கூட்டமைப்பு அனுப்பியிருந்த கட்டுரை :

அன்பின் சுதர்சன் அவர்களுக்குதாங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று துவங்கி முபாஹலா பற்றிய ஒரு தகவலைத் தெரிவித்து அதனோடு கிருத்துவ நம்பிக்கையையும் பொருத்தி முபாஹலாவுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது எனில் இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வான மார்க்கம் என விளக்கம் கேட்டுள்ளீர்கள்.

முஸ்லீம்களாகிய நாங்கள் வணங்கத் தகுதியான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம், வணங்கக் கூடாது. இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களில் அவரவர் கொள்கைப்படி தாங்கள் கடவுள் என்று எவைகளை எல்லாம் நம்பியுள்ளார்களோ அவைகளை வணங்குவார்கள். மேலும் படிக்க……..

2) தமிழகத்தின் பிரபல அறிஞரும் பி.ஜே என்பவருடன் பல காலம் ஒன்றாக இருந்து பின்னர் பி.ஜே யின் தவறான கொள்கை பிடிக்காமல் வெளியேறியவருமான திரு.பஸ்லுல் இலாஹி என்பவர் தமிழகத்தின் வரலாற்றில் முபாஹலா என்ற இந்த வழக்கத்தை முதலில் தோற்றுவித்தது யார் என்பதில் இருந்து இந்த முபாஹலா வின் சரித்திரப் பின்னணியை ஆராய்ந்துள்ள அருமையான கட்டுரை.

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலம் சகோதரர் சுதர்சன் அவர்கள் முபாஹலா சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது? இதுதான் சுதர்சன் அவர்கள் முஸ்லிம்களிடம் நேரடியாக வைத்துள்ள கேள்வி. இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களே விளக்கம் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். மேலும் படிக்க……..

3) துபையை வசிக்கும் தமிழக சகோதரார் திரு அஹமத் இமாம் அவர்கள் தங்களுக்கு முபாஹலா பற்றிய விளக்கத்தை குர்ஆனின் ஒளியில் விளக்கியுள்ளார்.

திரு.சுதர்சனம் அவர்களூக்கு,

நீங்கள் எழுப்பிய கேள்வி அர்த்தம் நிரம்பியது.முஹாபலா(முக்காபுலா அல்ல) என்ற பெயரில் ஒன்றும் அறியாத குடும்பத்தினர் மீது சாபம் இடுதல் இஸ்லாத்தில் இல்லாதது.மேலும் படிக்க……..

4) அத்துடன் தங்களுக்கு வலைகுடாவில் வாழும் எமது சகோதரர் திரு. அபு ஃபாத்திமா அவர்கள் ஒரு கேள்வி ஒன்றையும் வைத்துள்ளார்கள் அதையும் இங்கு தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

தன்னை மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக கூறி இஸ்லாமிய மார்க்கத்தின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பிய சகோதரர் சுதர்சன் அவர்களிடம் ஒரு சிறு கேள்வி.தாங்கள் கேள்வி எழுப்பும் பொழுது, மதங்கள் மக்களிடையே பகைமையை வளர்க்கின்றன எனவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனவும் கூறினீர்கள்.

தங்களின் இக்குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாம் எவ்வகையிலும் உகந்ததல்ல என்பதை மிக உறுதியுடன் கூற இயலும்.

இஸ்லாம் வளர்க்கும் பகைமை, மூடநம்பிக்கைகளை தாங்கள் பட்டியல் போட்டு காட்ட இயலுமா? பொத்தாம் பொதுவாக அனைத்து மதங்களுமே அப்படித்தான் எனக் கூறுவதை விடுத்து எந்த மதங்கள் எந்தெந்த வகையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனப் பட்டியல் போடுங்கள். அதில் தாங்கள் இஸ்லாத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கமளிக்க நாம் மிக்க ஆவலுடன் உள்ளோம்.

ஆனால் அதே சமயம், கடவுள் என்ற ஓர் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் நாத்திகம் பேசுபவர்களால் பகைமையே உருவாவதில்லை என்பது போலவும், அவர்களிடம் மூட நம்பிக்கைகள் இல்லை என்பது போலவும் தாங்கள் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட, நாத்திகம் பேசுபவர்களுக்கு இடையில் ஒருமித்த சிந்தனை இல்லாததும், அவர்களுக்கென குறிப்பிட கொள்கையில் ஒத்த கருத்து இல்லாததும் அனைவரும் அறிவர். ஏன் கடவுள் இல்லை எனக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து இன்று மாலை மரியாதைகளுடன் பூஜிக்கும் நிலையில் தான் நாத்திகர்கள் இன்று உள்ளனர்.

மற்றவர்களுடன் இவர்கள் வைத்து வளர்க்கும் பகைமையை விட, இவர்களுக்கிடையே இருக்கும் பகைமை தான் மிக அதிகம் உள்ளது. எனவே பகைமை வளர மதக்கோட்பாடுகள் தான் காரணம் எனப் பொதுவாக குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் நியாயமில்லை.

அதே போன்றே மூடநம்பிக்கைகளும். இன்று மூடநம்பிக்கைக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக மெச்சிக் கொள்ளும் பகுத்தறிவுவாதிகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதற்கு பெரியார் சிலை விவகாரமே மிகச் சிறந்த உதாரணமாகும்.

ஏன் அங்கு வரை செல்ல வேண்டும். இங்கு கேள்வியை எழுப்பிய நாத்திகவாதியான தங்கள் கேள்வியின் கருத்தில் அடங்கியுள்ள வாசகம் ஒன்றே நாத்திகவாதிகளின் அறியாமையை தோலுரிக்கின்றதே.

தாங்கள் கேள்வியை ஆரம்பிக்கும் பொழுது, “அனைவருக்கும் வணக்கம்” என்று கூறி ஆரம்பித்துள்ளீர்கள்.

“வணக்கம்” என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து தான் தங்களைப் போன்றவர்கள் அவ்வாறு கூறுகின்றார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில், வணக்கம் என்ற பெயர்சொல் ஒருவரை நோக்கிக் கூறப்படும் பொழுது, “அன்னாரை வணங்குகிறேன்” என்ற பொருளிலேயே கொள்ளப்படுகின்றது.

இவ்வுலகில் “வணங்குவதற்கு தகுதியானவர் யார்?” என்ற ஓர் கேள்வியை நாத்திகம் பேசும் தங்களைப் போன்றவர்கள் இதுவரை எழுப்பியுள்ளீர்களா?. மரியாதை கொடுக்கின்றோம் என்ற பெயரில், “வணங்குதல்” என்ற வார்த்தைக்கு எவ்வித தகுதியும் பெறாத சக மனிதர்களை நாத்திகம் பேசுபவர்கள் “வணங்கிக்” கொண்டிருக்கின்றீர்களே. இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை விளக்க முடியுமா?

இவ்வுலகில் வணங்குதலுக்கு தகுதியானவர், “யார் இவ்வுலகு அனைத்தையும் படைத்து காத்து, பராமரித்து வருகிறாரோ அவர் மட்டுமே” என இஸ்லாம் கூறுகின்றது. “ஒருவரை வணங்க வேண்டும் எனில், யார் என்றே தெரியாத அந்த சக்தியை மட்டுமே வணங்க வேண்டும்” எனவும், எவ்வகையிலும் சக மனிதனை வணங்குதல் கூடாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.

மற்ற அனேக மதங்கள் கண்டவை அனைத்தையும் வணங்கக் கூறுகின்றது. அல்லது மற்ற மதத்தினர் அவ்வாறு வணங்குகின்றனர். அதே போன்றே கடவுள் இல்லை எனக் கூறும் நாத்திகவாதிகளான தங்களைப் போன்றவர்களும் மனிதர்களை வணங்குகின்றனர். இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை சற்றி விளக்க முடியுமா?

அறிவு ரீதியாக தங்களைப் போன்றவர்கள் சிந்திப்பர் என்பதனாலேயே தங்களிடம் பதிலாக இக்கேள்வி வைக்கப்பட்டது. அல்லாமல் தங்களின் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது தங்களை வருத்தப்படுத்தும் நோக்கிலோ அல்ல. ஒரு தவறு கண்ட பொழுது எவ்வாறு தாங்கள் இங்கு “முபாஹலா” குறித்த கேள்வியை எழுப்பினீர்களோ, அதே போன்றே சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கேள்வியை தங்கள் முன் வைக்கின்றேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நன்றி

அபு ஃபாத்திமா

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.