தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 19, 2008

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்

Filed under: கோவை, சிறைவாசிகள், video — முஸ்லிம் @ 7:47 பிப

எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணைசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது. High Quality ஒரே File ஆக உள்ளது.

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின்

மறைக்கப்பட்ட உண்மைகள்

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO


தமிழ் முஸ்லிம் மீடியா

மே 16, 2008

தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை

Filed under: கோவை, சிறைவாசிகள் — முஸ்லிம் @ 5:29 பிப

குறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்றங்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.

”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO
இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.

எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.

”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

CLICK HERE TO VIEW THE VIDEO

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..

இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

TO DOWNLOAD THE DETAILS ABOUT CHILDS EDUCATION

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.

CHARITABLE TRUST FOR MINORITIES

A/C NO. SB 57991

UNITED BANK OF INDIA
OPPANAKKARA STREET BRANCH
COIMBATORE – 641001.
******************************
CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU,
KARUMPUKKADAI
COIMBATORE – 8
TEL. : 0091-422-2307673 / +91-9786093544

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் “தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்” என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.

அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..

நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்… (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்

ஏப்ரல் 25, 2008

உயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா?

Filed under: அபு, சிறைவாசிகள், kovai prisoners — முஸ்லிம் @ 6:52 பிப
நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார். .

உயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா?

நடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்’தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

கடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.

இதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.

கேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.

தீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.

தற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.

உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்

Filed under: அபு, சிறைவாசிகள், kovai prisoners — முஸ்லிம் @ 6:49 பிப
இறைவனின் திருப்பெயரால்

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குண்டு நீதிக்கு புறம்பாக தண்டனை விதிக்கப்பட்டு றூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முலாக் சிறைகளில் அடைபட்டு கிடப்பதை தாங்கள் அறிவீர்கள்.

கொலை கொள்ளை, மோசடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களை புரிந்து இவர்கள் சிறை செல்லவில்லை, மாறாக சமூக நலனில் அக்கறையும், தன்னலம் கருதா அர்ப்பணிப்பும் தான் இவர்களின் சிறைவாசத்திற்கான காரனமாகும்.

சிறைக்கூட சித்திரவதைகள்தந்த பரிசாக இவர்களில் நூற்றுக்கணக்கானோனர் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகின்றனர். சபூர் ரஹ்மான் என்ற ஆயுள் கைதி கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். மஸ்த்தகீர் என்பவரும் இறந்து சில வருடங்கள் ஆகின்றன.

இப்போது அபுத்தாஹிர் என்ற இளம் வயது ஆயள் கைதி சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சோக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் அல்லாத ஆயள் தண்டனைக் கைதிகள் 10 வருடங்கள் நிறைவடைந்தால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டும் 10 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை பெறாமல் உயிர் காற்றை சுவாசிக்க கூட வழியின்றி மருத்துவ மனைகளுக்கும், மண்ணரைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அரசின் இவ்வகை அப்பட்டமான போக்கை, அநீதியை கேட்போர் யார்….?

சகோதரர் அபுதாஹிருக்கு தொடாந்து டயாலிஸிஸ் செய்யப்படுகின்றது. சமுதாயம் நலமுடன் வாழ தன் அர்ப்பணித்த இந்த சகோதரரின் நலத்திற்காக சமுதாயமே உன் கரங்கள் உயர, கல்புகள் உருக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து உதவிட வேண்டுகின்றோம்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM)
தமிழகமெங்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்தி வரும் தமிழக முஸ்லிம் நல அமைப்பு

குறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

ஒக்ரோபர் 31, 2007

கோவை சிறையில் முஸ்லிம் மரணம் – மக்கள் கொந்தளிப்பு

Filed under: கோவை, சிறைக் கொடுமை, சிறைவாசிகள் — முஸ்லிம் @ 9:36 பிப
சிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணமடைந்த சபூர் ரஹ்மான்

கோவை, அக்டோபர் 31, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கு மாறாக 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அகைட்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் மக்கள் அறிந்தததே. மனித நேயத்திற்கு எதிரான இந்த கொடுஞ்செயலில் சிலர் ஏற்கனவே போதிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், சிறைக் கொடுமைகளினாலும் விடுதலையின்றி சிறையினுள்லேயே மரணமடைந்துள்ளனர்.

இன்னும் பல அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் சிறை நிர்வாகத்தன் அலட்சிய போக்காலும் உரிய சிகிச்சை அளிக்காத காரணங்களினாலும் கொடுமையான பல நோயகளுக்கு ஆளாக்கப்பட்டு வாடி வருகின்றனர். இந்நிலையில்தான் இவர்களின் வழக்கு ஒரு வழியாக முடிவுக்க வந்தபோது பலர் விடுதலை செய்யப்பட்டார்கள் பலர் கொடுமையா முறையில் எவ்வித நேரடி ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் (நீதிபதி உத்ராபதி சொன்னது) கொடூரமான முறையில் முஸ்லிம்கள் என்ற காரனத்தினால் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு வெளியி வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளனர்.

அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

இந்நிலையில் பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி சிறைவாசி சபூர் ரஹ்மான் (வயது 35) அநியாயமாக கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும் விடுதலை ஆகாமல் மீண்டுமு் அநீதியாக பல ஆயுள் தண்டனை ஒரு சேர விதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் மன உளைச்சலில் இருந்த இந்த சகோதரருக்கு நேற்று (31-10-2007) சுமார் 2.00 மணியளவில் கடுமையான நெஞ்சு வலி ஏற்ப்பட்டது.சிறைவாசிகள் அனைவரும் இவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க வேண்டி கூக்குரல் எழுப்பியபோதும் சிறையில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் சித்ரா என்ற மத வெறியரின் அலட்சியத்தால் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழத்தியுள்ளனர்.

இந்நிலையில் சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்கள் மதவெறி பிடித்த சிறை காவலர்களாலும், சிகிச்சை அளிக்காமல் காலம் தாழத்திய மருத்துவ அதிகாரி சித்ராவின் அலட்சியத்தாலும் மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்) விடுதலை காணாமல் அந்த ஏக்கத்திலேயே அவரது உயிர் விடுதலையடைந்த கொடுமையான சம்பவம் கோவை மத்திய சிறையில் நடந்தது.

அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

மறைந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனைவியும் மூன்று பென் குழந்தைகளும் உள்ளனர். இவரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகின்றது. தான் விடுதலையாகி குடும்பத்தின் வறுமை போக்கலாம் என்றிருந்த நிலையில் இவரும் மரணமடைந்து இந்த குடும்பம் மற்றும் இவரது மூன்று பென் பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலைக்கு அலட்சிய போக்கை கடைபிடித்த சிறைச்சாலை நிர்வாகமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.

இவரின் மரண செய்தி கேட்டவுடன் கோவை மாநகர முஸ்லிம்கள் கொந்தளித்து போயினர், உடனடியாக அணைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதை எப்படி கையாளவது என்றும், மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மானின் குடும்பத்திற்கு எவ்வகையில் உதவுவது என்றும் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும் என்றும், அவரது உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மதவெறி பிடித்த சிறை மருத்துவ அதிகாரி சித்ரா மீதும் அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் அலட்சிய போக்கால் மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மான் அவர்களின் குடம்பத்திற்கு உடனடி நிவாரனமாக அரசு ரூ 10 லடசம் வழங்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க கோரியும், இன்னும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வேதனை அனுபவித்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைவரையும் உடணடியாக விடுதலை செய்யக் கோரியும், இனியும் இதுபோல் நிகழ்வுகள் தொடாந்து நடக்காமல் இருக்க சிறையில் 24 மணி நேரமும் சயெல்படக்கூடிய வகையில் மருத்துவமனை வசதி ஏற்ப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைக் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆடசித்தலைவருக்கும், முதல் அமைச்சருக்கு, தலைமை நீதிபதி, காவல் துறை ஆனையர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமைச் சயெலாளர், உள்துறைச் செயலாளர், சிறைத்துறை தலைவர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, முஸ்லிம் லீக், த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்திற்கு காரணமான சிறை நிர்வாகத்திரனை வண்மையாக கண்டித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைவாசிகளின் உரிமைக்காகவும், அவாக்ளின் விடுதலைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக தமிழகமெங்கும் பாடுபட்டு வரும் அமைப்பான் சிறுபான்மை உதவி அறக்கட்டலை (CTM) என்ற நிறுவனம் செய்திருந்தது.

செய்திகள் : நமது சிறப்பு நிருபர் கோவை.

ஒக்ரோபர் 26, 2007

அரசுக்கெதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

Filed under: கோவை, சிறைவாசிகள் — முஸ்லிம் @ 8:58 பிப

கோவை அக்டோபர் 27, 2007 : இன்று கோவை மத்திய சிறை முன்பாக கோவையை சேர்ந்த முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தார்களும் பெருந்திரளாக திரன்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கோவையை சேர்ந்த சுமார் 46 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆன்டு காலமாக குடுமு்பத்தினரை பிரிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை தமிழகத்தி் பிற மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு அரசு நிர்வாகத்தினர் முயற்ச்சிக்கின்றனர்.

பல்லான்டுகளாக இவர்களை பிறிந்து வாடும் இவர்களின் பாவப்பட்ட குடுமு்பத்தினருக்கு ஒரு ஆருதல் சிறையில் வாடும் தங்கள் உரவுகளை எளிதாக காண முடிகின்றதென்பதுதான். தற்போது இதிலும் மன்னை வாறிப்பூடும் விதமாக இவர்களை கோவை சிறையில் இருந்து வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றுவதென்பது மிகக் கொடுமையான ஒன்றாகும்.

ஏற்கனவே மனம் நொந்து போய் விரக்தியில் இருக்கம் இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்பத்தினர் இனி தங்கள் உரவுகளை காண பல்வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களை சித்திரவதை செய்வதும் கொடுமையான மனித உரிமை மீறலாகும்.

மனத உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகியும் அல் உம்மா அன்சாரி அவர்களின் மனைவியுமான திருமதி. சம்சுன் நிஷா அன்சாரி அவர்கள் தலைமையில் திரன்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தினரும் கோவை மத்திய சிறை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சிறைவாசிகளை எக்காரனம் கொண்டுமு் கோவையில் இருந்து இமாற்றம் செய்யக் கூடாது என்றும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமு் என்று வலியுருத்தியும் மனு ஒன்றை அளித்தனர்.

இம்மனுவின் நகல் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், உள்துறை செயளாலர் அவர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சியானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரசு சிறைவாசிகளை மாற்ற தொடாந்து மயற்சிக்கும் பட்சத்தில் இம்மக்களோடு விரைவில் தமிழகத்தின் பல முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

செப்ரெம்பர் 30, 2007

உங்கள் உதவி இவர்களுக்கு மீண்டும் தேவை!!

Filed under: சிறைவாசிகள், ctm — முஸ்லிம் @ 11:15 முப

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான்….

“ஜகாத் (எனும்) தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றிற்காக (ஜகாத்தை வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும் (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும்… (அல்-குர்ஆன் 9:60)


ஆம் சகோதரர்களே! அடிமைகளை (சிறைவாசிகளை) விடுதலை செய்வதறடகும் அல்லாஹ் ஜக்காத்தை ஆகுமாக்கியிருக்கின்றான்.

“வறுமையினால் வாடிப்போன் முகங்கள், சோகங்களை சுமந்திருக்கும் நெஞ்சங்கள் பெற்றவனை காண ஏங்கும் பிஞ்சு நெஞ்சங்கள், தளாந்த உடல்கள், சோர்ந்த உள்ளங்கள், இதுபூன்ற சொல்லொன்னாத் துயரங்கள்….

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தமிழக சிறைகளிலே 320 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி சிறைவாசிகள் தன் உற்றார் உறவினர்களை பிரிந்து தவித்தார்கள்,கடந்த வருடங்களில் உங்களைப்போன்ற கருனை உள்ளங்கள் காட்டிய கருனையினால் இவர்களின் வழக்குகள் நல்ல முறையில் நடத்தப்பட்டன, குடும்பங்களுக்கு உதவிகள் செய்தோம், குழந்தைகளின் கல்வித்தேவை நிறைவேற்றப்பட்டது, வழக்குகள் நல்ல முறையில் முறையாக நடத்தப்பட்டதால் சமீபத்தில் சுமார் 90 க்கும் மேற்ப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் இருப்போர் பலர் இவர்களின் குடும்பங்கள் அளவில்லாத துயரங்களால் விழி பிதுங்கி வழி தெறியாமல் நிற்கிறார்கள்.

இவர்களில் தண்டனை பெற்றோருக்காக உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்காட வேண்டியுள்ளது. விடுதலையானோர் போக ஏனையோரின் விடுதலைக்காகவும் மற்றும் அவர்களின் குடும்ப செலவுகளும், நம் முன் நிற்கின்றன. அத்துடன் விடுதலையானோரின் மறுவாழ்வும் நம்முன் உள்ளன.

இவர்களின் துயரங்களையும், குடும்பங்களின் சுமைகளையும் துடைத்தெறிந்திட வாருங்கள் கைகோர்ப்போம்!! சிறுபான்மை உதவி அறக்கட்டளை செய்து வரும் சிறைவாசிகள் குடும்ப உதவிகளை நேரடியாக வந்து கண்டோர் பலர்!! இதனுடைய கடுமையான உழைப்பின் விளைவு பல ஆண்டு காலமாக சிறைகளில் அடைந்து கிடந்த பலர் இன்று விடுதலை!! இவர்கள் ஒவ்வொருவர் விடுதலையிலும் உங்கள் பங்கு உள்ளது. ஆம் உங்கள் உதவிகளை கொண்டே இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்!! இறைவன் மகா பெறியவன்!! எல்லாப் புகழும் அவனுக்கே!!

இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்ப பென்கள் இணைந்து உருவாக்கியதுதான் “சிறுபான்மை உதவி அறக்கட்டளை” வழக்கு நிதிகள், மருத்துவ செலவுகள், திருமன உதவிகள், வீட்டு வாடகைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற பல அறிய உதவிகளை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு தமிழகமெங்கும் செய்து வருகின்றது. இன்னும் மீதமுள்ளன பல பணிகள்!! விடுதலையானோர் போக எஞ்சியுள்ளோரின் விடுதலைக்கா வழக்காட வேண்டியுள்ளது, விடுதலையானோரின் மறுவாழ்வுக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது!! இச்சேவையில் உங்களையும் நீங்கள் இந்த புனித ரமழான் மாதத்தில் இணைத்து கொள்ள வேண்டாமா? எஞ்சியுள்ள உங்கள் சகோதரர்களும் விடுதலை அடைந்திட வேண்டாமா?

கருனையுள்ளம் கொண்ட எமது இஸ்லாமிய சகோதரர்களே இவ்வருடமும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை உங்களிடம் உங்கள் சகோதர சகோதரிகளின் தேவைக்காக உதவி கேட்டு நிற்கின்றது…நீங்கள் எல்லா வருடங்களையும் போல உதவிடுவீர் என்ற நம்பிக்கையில்!!

உங்கள் ஜக்காத் மற்றும் சதக்காக்களை எமக்கு அனுப்பித் தந்திடுவீர் உமது சகோதரர்களின் விடுதலையில் பங்கேற்றிடுவீர்….உங்கள் உதவிகள் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும், அவர்களின் குடும்ப உதவிகளுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மட்டுமே செலவளிக்கப்படுகின்றது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். எப்போது நீங்கள் அழைத்தாலும் உங்களுக்கு எமது சேவைகளையும் செலவுகளையும் விளக்க கடமைப்பட்டுள்ளோம்.

உங்கள் உதவிகளை எமக்கு அனுப்ப வேண்டிய முகவரி :

சிறுபான்மை உதவி அறக்கட்டளை (Govt. Regd. 882/2001)
ரஹீம் பிளாஸ்ட்டிக் ஹவுஸ்,
ஞானியார் நகர்,
சாரமேடு, கரும்புக்கடை,
கோவை – 8
தொலைபேசி : +91 422 2307673
மொபைல் : +91 944 365 4473 (தங்கப்பா)

CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH, TAMILNADU
Saving Account No. #57991#
OR
You can send your donation (by online) to our
ICICI Bank Account No: #605301208490#
Mill Road, coimbatore-1 branch.
Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”

.
Related Link : இவர்களின் அவலம் மாறுமா?

ஜூன் 2, 2007

உயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா?

Filed under: அபுத்தாஹிர், சிறைவாசிகள் — முஸ்லிம் @ 10:13 பிப

நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார்.

உயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா?

நடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்’தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

கடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.

இதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.

கேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.

தீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.

தற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.

உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

இஸ்லாம் முஸ்லிம்

மே 6, 2007

நீதியைத்தேடி…(கவிதை)

Filed under: கவிதை, சிறைவாசிகள், நீதியைத்தேடி — முஸ்லிம் @ 9:13 முப

ஆயிரக்கணக்கானோரை விசாரித்து முடித்தும், தமக்கெதிரான சாட்சியங்கள் ஏதுமில்லா சூழலிலும், வாழ்க்கையை இழந்து விரக்தியின் விளிம்பில் விசாரணைக்கைதிகளாய் கோவைச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய “நீதியைத் தேடி!” மற்றும் “கைதியின் கதை!” ஆகிய குறுந்தகடுகள் கண்டதால் மனதில் விம்மியெழுந்த எண்ண அலைகளை கவிதை உருவில் இங்கே வெளிப்படுத்தியுள்ளேன் – ஆக்கம்: இப்னு ஹனீஃப்

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்
தூரிகை கொண்டு வரையப்பட்ட
ஓவியமோ காவியமோ அல்ல இது!
எங்களது உடலில் இன்னும்
உயிர் உள்ளது என்ற
மறக்கப்பட்ட உண்மைக்கு
எஞ்சியுள்ள ஒரே சான்று!

எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
வேதனையை வெளிபடுத்த இந்த
உள்ளத்திற்கு கண்ணில்லையே,
கண் கட்டப்பட்ட இவ்வுலக
நீதி தேவதையைப் போல்…
ஆகையால்தான் வேதனை, வெளியே
தெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!

வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்
இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,
பானையில் இருந்தால்தானே
அகப்பையில் வரும்? – தற்போது
எங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!
ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்
நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?

இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!
அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லை
சிறு வித்தியாசங்கள் இங்கு பல,
இருவரும் இருக்கின்றனர்
சமமாக!? – இவ்வுலகில்,
நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,
சிறைக்கு உள்ளும், வெளியிலும்!

நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!
“அந்த இனிமையான மணித்துளிகளின்
நினைவுகள் போதும், மீண்டும்
நாம் சந்திக்கும் வரை, அல்லது
சத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை”
எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனை
நாட்கள் உதவும் அறியோம் இறைவா!

நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பது
பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவே
என்ற எங்கள் நம்பிக்கையை, உன்
நீதித் தாராசில் நிறுத்திப்பார்! – அநீதி
இழைக்கப்பட்டோர் உன்னிடம்
எதிர்பார்ப்பை கைவிட்டு
களத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சில
முத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்று
எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!
இப்போது அவர்களின்
எதிர்பார்ப்புகள் அநியாயமாக
மறக்கவும், மறுக்கவும் பட்டு
வேதனை மட்டுமே தொடர்கதையாக!

நீதி தேவதையே, நீ கண் திறக்க
மாட்டாயா என்று கேட்பவர்கள்
குரல் ஓலமாய் மாறும் முன், உன்
நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!
அதுவே உன்னுடைய உடலில்
உயிருள்ளது என்பதற்கு எஞ்சி
இருக்கும் கடைசி வாய்ப்பு!!

நன்றி : சத்தியமார்க்கம்

மார்ச் 18, 2007

செய்திகள் – நீதியைத்தேடி கருத்தரங்கம்

கோவை குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்: முன்னாள் நீதிபதி

கோவை மார்ச்-11 “நீதியைத் தேடி” கருத்தரங்கின் புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கு சொடக்கவும் :

புகைப்படத் தொகுப்பு – 1

புகைப்படத் தொகுப்பு – 2

முகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு

கோவை, மார்ச் 12: இந்திய தண்டனைச் சட்டத்தில் விசாரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு 9 ஆண்டுகளாக ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தெரிவித்தார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், 9 ஆண்டுகளாக தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் நீதியைத் தேடி கருத்தரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி

கருத்தரங்கில் அவர் பேசியது:

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

ஆனால், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீவிரவாதச் சட்டத்தில் கைதானவரர்களுக்கு விசாரணையின்போதே ஜாமீன் வழங்கப்பட்டது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்.

அரங்கினுல் கூடிய பென்கள் கூட்டம்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தவணை முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர் என்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலர் கே.ஜி.கண்ணபிரான்: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை பாரபட்சமாகச் செயல்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

கேரள மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.பலராமன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கேரளம் வருவதற்கு தமிழக அரசு 2003-ல் விதித்த தடையை நீக்க வேண்டும்.

அவரது உடல் நிலையை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அவர் மீதுள்ள பிற வழக்குகளை விரைந்து முடிக்க கேரள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.

ஆனால், அவரை கோவையிலிருந்து கேரளம் அழைத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ப.பா.மோகன் வரவேற்றார். முஸ்லிம் சிறைவாசியின் குடும்ப நிலையைச் சித்தரிக்கும் குறுந்தகட்டை தமிழக, புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.திருமலைராஜன் வெளியிட்டார்.

தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பியுசிஎல் மாவட்டச் செயலர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்குக் கூட தண்டனைக் குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்குவதில்லை. எனவே, 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகள் : நன்றி தினமனி

காரைக்குடி, இஸ்லாம் , முஸ்லிம்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.