தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

பிப்ரவரி 29, 2008

MNP மீது காவல்துறை காட்டுமிறான்டித்தனம் TMMK தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அறிக்கை

Filed under: kadayanallur, MNP, TMMK — முஸ்லிம் @ 5:01 பிப
பேரா.ஜவாஹிருல்லாஹ்

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் 27.02.2008 இரவு மனித நீதி பாசறை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் “2006ம் ஆண்டு கோவையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்யான வழக்கில் கைது செய்து தமிழகத்தை பீதிக்கு உள்ளாக்கிய உளவுத்துறை உதவி கமிஷனர் ரத்தினசபாபதி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் போலீசார் கடையநல்லூரில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சதித் திட்டம் திட்டியதாக கடையநல்லூர் பள்ளி மூப்பன் தெருவைச் சார்ந்த ஹக்கீம் (21), அமீர் (30) அப்துல் காதர் (23) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஹக்கீம் மற்றும் அப்துல் காதரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்டதாக அமீரையும் தேடி வந்தனர். இதை கண்டித்து கடையநல்லூரில் 28.02.2008 மாலையில் மனித நீதி பாசறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி மாலையில் கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பு மனித நீதி பாசறையினர் மற்றும் பொது மக்கள் திரண்டு போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையெடுத்து போலீசாருக்கும், கூடியிருந்த மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிய நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.
இதனால், கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைதும் செய்தனர். இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலில் மறுத்த காவல்துறையினர், பின்பு கடையநல்லூர் அரசு மருத்துவமனையி;ல் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

வழக்கு பதிவதற்கு வேண்டிய காவல்துறையில் 4 பேர் தங்களுக்கும் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடையநல்லூர் காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கை நெல்லை மாவட்ட த.மு.மு.க.உடனடியாக கண்டித்து அறிக்கை விடுத்தது.

த.மு.மு.க.மாவட்ட பொருளாளர் புளியங்குடி எஸ்.செய்யது அலி மற்றும் மாவட்ட துணை செயலாளர் மவ்லவி மிஸ்பாஹி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்டவர்களை சந்திக்க முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

27.02.2008 அன்று தான் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர், முன்னால் தலைமை நீதிபதி, நீதியரசர் வெங்கடாசலய்யா நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து காவல்துறையினர் மனித உரிமை பேண வேண்டியதன் அவசியம் குறித்து வகுப்பு நடத்தினார். அந்த ஆலோசனை வகுப்புகளையும் குப்பை தொட்டியில் போட்டு, கடையநல்லூர் காவல்துறையினர் மனித உரிமை மீறல் செயலை நடத்தியுள்ளனர்.

த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இவ்விசயத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு கடையநல்லூரில் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸஸ் பெறுவதுடன் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

கடையநல்லூர் காவல்துறை அராஜகம் MNP கண்டன ஆர்ப்பாட்டம்

Filed under: kadayanallur, MNP — முஸ்லிம் @ 4:45 பிப
அருளான் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
கடையநல்லூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பி. அராஜகம்
முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு தடியடி
தமிழக அரசே நடவடிக்கை எடு.
மதுரையில் MNP கண்டன ஆர்ப்பாட்டம்

2006ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடிகுண்டு களை வைத்திருந்ததாகவும் 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து கைது செய்தவர் கோவை மாநகர உளவுத்துறை ஏ.சி. ரத்னசபாபதி. இச்சம்பவத்துடன் எம்.என்.பி. யையும் இணைத்து வெடிகுண்டு சதி நாடகத்தையும் அரங்கேற்றினார்.

ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய குரல்கள், மனித நீதிப் பாசறையின் சட்டரீதியான தொடர் போராட்டங்கள், மதுரை வைகை சட்ட நிறுவனத்தின் உண்மை அறியும் குழு நடத்திய நேரடி கள ஆய்வு, ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், தினமணி ஆகிய பத்திரிகைகள் வெளியிட்ட உண்மைச் செய்தி ஆகியவற்றின் விளைவாக தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக்குழு
(எஸ்.ஐ.டி.) விடம் ஒப்படைத்தது. இரண்டு வருட காலமாக தீவிர புலனாய்வு விசாரனை மேற்கொண்ட எஸ்.ஐ.டி. கடந்த அக்டோபர் மாதம் இவ்வழக்கின் இறுதி அறிக்கையை கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்தது.

இதில் இந்த மொத்த வெடிகுண்டு நாடகமும் கோவை உளவுத்துறை ஏ.சி. ரத்னசபாபதி யும் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளாலும் நடத்தப் பட்டதுதான் என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், வெடிகுண்டுகள் போலீஸாராலேயே தயார் செய்யப்பட்டது என்பதும் எஸ்.ஐ.டி. அறிக்கையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முஸ்லிம்கள் மீதும் எம்.என்.பி. மீதும் பொய் வழக்குப் போட்ட ஏ.சி. ரத்னசபாபதியையும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளையும் டிஸ்மிஸ் செய்யக் கோரி நேற்று 27.02.2008 அன்று கோவையில் எம்.என்.பி. யின் மாநிலத் தலைவர் முஹம்மது அலீ ஜின்னா அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக ரத்தினசபாபதியை டிஸ்மிஸ் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரம் நடத்த எம்.என்.பி. தலைமையகம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று 28.02.2008 அன்று காலை 6.30 மணியளவில் கடையநல்லூரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த எம்.என்.பி. உறுப்பினர்களான லுக்மான் ஹக்கீம், பள்ளிவாசல் பேஷ்இமாம் அப்துல்காதர் ஆகிய இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.கே. ரவி. காவல் நிலையத்தில் வைத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளார். டி.எஸ்.பி. அசோக் குமார்.

சட்டத்திற்குப் புறம்பாக இவர்கள் செய்த இந்த அராஜகச் செயலைக் கண்டித்து நேற்று 28.02.2008 மாலை 4.30 மணிக்கு கடையநல்லூரில் மனித நீதிப் பாசறை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி.யும் இன்ஸ்பெக்டரும் தங்கள் போலீஸ் படையின் துணையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி
நடத்தினர். இதில் 10 முஸ்லிம்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த மொத்த மனித உரிமை மீறல்களையும் அராஜகத்தையும் திசை திருப்பும் விதமாக, முஸ்லிம்கள் போலீஸாரைத் தாக்கினர் என்று கதை சொல்ல ஆரம்பித்துள்ளனர் இந்த டி.எஸ். பி.யும் இன்ஸ்பெக்டரும். ஜனநாயக ரீதியில் போஸ்டர் ஒட்டுவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் கூட அனுமதிக்காத ஒரு சர்வாதிகாரப் போக்கை கடையநல்லூர் டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டரும் மேற்கொண்டு முஸ்லிம்கள் மீது வன்முறை ஆயுதத்தைப் பிரயோகித்து வருவது இந்த தேசத்தின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
முஸ்லிம்கள் இந்த தேசத்தின் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
அரசியலைமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தவும் அடிப்படை உரிமை கூட சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கம் அரசு ஆண்டு கொண்டி ருக்கும் இந்தத் தமிழகத்தில் மறுக்கப்படுவது மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் சிறுபாண்மையினர் நலன் காக்கும் அரசு என கலைஞர் அரசை தேர்ந்தெடுத்த முஸ்லிம்கள் திகைத்து நிற்கும் அளவிற்கு இந்த அராஜகச் செயல் டி.எஸ்.பி., இன்ஸ்பக்டரால் அரங்கேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசின் மீது முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கும் திருப்பணியை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கோவை வெடிகுண்டு சதி நாடகத்தின் மூளையாக ரத்னசபாபதிக்கு துணையாக நின்று கடையநல்லூரில் முஸ்லிம்களை நசுக்கிக் கொண்டிருக்கும் டி.எஸ்.பி. அசோக் குமாரையும் இன்ஸ்பெக்டர் பி.கே. ரவியையும் தமிழக அரசு உடனடியாக இடம்மாற்றம் செய்து, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கையாக நிரந்தப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

பிப்ரவரி 28, 2008

அற்புத வேதம் அருள் மறை குர்ஆன் (PART-02)

Filed under: amazing book, quran software, zakariya — முஸ்லிம் @ 10:07 பிப

“அற்புத வேதம் அருள் மறை குர்ஆன் (PART-02)”

பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

Engineer. Rafiq Zakariya

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

.
தமிழ் முஸ்லிம் மீடியா

விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு, TNTJ விற்கு கோர்ட் அபராதம், கண்டனம்

Filed under: ததஜ, TNTJ, TNTJ Fraud — முஸ்லிம் @ 7:59 முப
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனம் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடைபிடிக்ககோரி வழக்கு ஐகோர்ட்டு தள்ளுபடி

சென்னை, பிப்.28.-

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடை பிடிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஆசிரியர்கள் நியமனம்

தமிழ்நாடு தவுகித் ஜமாத் மாநில செயலாளர் சையது இக்பால், வக்கீல் ஏ.சிராஜுதீன் மூலம் பொதுநலன் கருதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலா 3Ñ சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 35 காலி இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டது.

இதில், ஒரு இடம் முஸ்லிம¢களுக்கும், இன்னொரு இடம் கிறிஸ்தவர்களுக்கும் தரவேண்டும். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் மாதம் 9-ந் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகும்.

சிறுபான்மையினருக்குரிய சட்டத்தை பின்பற்ற, சென்னை பல்கலைக்கழகம் தவறிவிட்டது. முஸ்லிம்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கவில்லை.
இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் 35 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 10, 11-ந் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பட்டியல் சிண்டிகேட்டில் உள்ளது. சிறுபான்மையினருக்குரிய இடஒதுக்கீட்டை பின்பற்றாதது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் முடிவடையாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிண்டிகேட் கூட்டம் எப்போது வேண்டுமானாலும் நடத்தி பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கலாம். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றாமல், ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் காலி இடங்களை நிரப்பக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு தள்ளுபடி

இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, எம்.வேணுகோபால் ஆகியோர் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடைபிடித்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணியிடங்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடியாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் சையது இக்பால் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும். இந்த பணத்தை தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

பிப்ரவரி 27, 2008

FAKE BOMB PLOT கருப்பு ஆடு இரத்தின சபாபதியை கைது செய்ய MNP கோரிக்கை

Filed under: கோவை, ரத்தின சபாபதி, fake bomb plot, MNP — முஸ்லிம் @ 3:11 பிப
மனித நீதிப் பாசறையின் மீதும் முஸ்லிம்களின் மீதும் களங்கம் ஏற்படுத்தி வீன்பழி சுமத்தும் வகையில் பொய்யான வெடிகுண்டு வழக்கை ஜோடனை செய்த கோவை போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனித நீதிப் பாசறை அறிக்கை.

கிரைன்டர் கண்டன்சரும், பேட்டரியும் பாமாக காட்டப்பட்ட விதம்

இவ்வழக்கு எப்படி ஜோடிக்கப்பட்டது, உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்ட எப்படியெல்லாம் MNP,TMMK,ஐக்கிய ஜமாத் என பல்வேறு அமைப்புகளும் களம் இறங்கி போராடி நியாம் கிடைக்க வழி செய்தன என்பதை தெளிவாக அறிவதற்கு இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் உள்ள கட்டுரைகளை வாசியுங்கள்.

கோவையில் கடந்த ஜீலை (22.07.2006) அன்று 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ழைகது செய்தனர். யாரும் எந்த புகாரும் கொடுக்காத நிலையில் இரவு நேரத்தில் திடீரென அந்த இளைஞர்களின் வீட்டில் அத்து மீறி நுழைந்து அவர்களை கைது செய்து அவர்க்ள வீட்டில் குழந்தைகள் படிக்க வைத்திருந்த வரைபடத்தையும், கிரைன்டர் கண்டன்சரையும், வீணாகிப்போன பேட்டரிகளையும் எடுத்தக்கொண்டு அவர்களை தீவிரவாதிகள் எனவும் அவர்களிடம் இருந்து கோவை மாநகரையே தகர்க்க கூடிய அளவிற்கு சக்தி பெற்ற ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் கோவை மாவட்ட உளவுத்துறை உதவி ஆணையர் ரத்ன சபாபதி கூறினார். முஸ்லிம்களுக்கெதிரான குரோதத்தையும், மனித நீதிப் பாசறைக்கெதிரான வண்மத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மனித நீதிப் பாசறையை சேர்ந்தவர்கள் என கதை கட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவை அனைத்தும் வடிகட்டிய பொய் என்பது நிரூபனமானது. தமிழக அரசும் அவர் மீது முதல் கட்ட நடவடிக்கை எடுத்து பணிமாற்றமும், இடமாற்றமும் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மனித நீதிப் பாசறை, கோவை ஐக்கிய ஜமாத், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கடுமையான தொடர் முயற்சிகளால் இவ்வழக்கு விசாரனை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வழக்கு குறித்து விசாரனை நடத்திய சி.பி.சி.ஐ.டி (SIT) சிறப்பு புலனாய்வு குழு தனது இறுதி அறிக்கையை கோவை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.

கோவை உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதி உருவாக்கிய மூன்று தனிப்படைகள் 5 முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்பதும், இந்த மூன்று தனிப்படைகளுக்கு தலைமையேற்ற ஏ.சி க்கள் திரு.குமாரசாமி, திரு. அண்ணாதுரை, திரு. ஜெய பாண்டியன் ஆகியோர்கள் தாங்களே பைப் வெடிகுண்: (Pipe Bomb) மற்றும் கையெறி குண்டு (Hand Granade) ஆகியவற்றை தயார் செய்தள்ளனர் என்பதும் போலிஸ் சாட்சிகள் மற்றும் இதர சாட்சிகள் மூலம் நரூபனம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனையில் முன் தேதியிட்ட ஆவணங்களை ரத்தின சபாபதி தூண்டுதலின் அடிப்படையில் செயல்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் பால்ராஜால் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் BDDS (Bumb Detection and Defuse Squad) எஸ்.ஐ திரு. மகேந்திரன் அவர்கள் வெடிகுண்டைக் கைப்பற்றிய இடத்திற்கு நேரில் வந்ததாகவும் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ததாகவும், மேற்படி இன்ஸ்பெக்டர் பால்ராஜே பொய்யாக மகஜரை (ஆவணங்களை) தயாரித்து அதில் அவரே எஸ்.ஐ மகேந்திரன் கையெழுத்தை போலியாக போட்டுள்ளார் என்பதும் நிபுணர்கள் (Expert opinion) மூலம் நிருபனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், வெடிகுண்டுகளை போலிசாராலேயே தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், ஆவணங்கள் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும் Nacro Analysis Test எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையிலும் நீரூபனம் செய்யப்பட்டுள்ளது.

மனித நீதிப் பாசறையின் கோரிக்கைகள்

1. ரத்தின சபாபதி மற்றும் இதற்கு துனை போன அதிகாரிகளின் கபட நாடகத்தால் தன்னுடைய எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் இந்த அப்பாவிகளுக்கு தமிழக அரசு ஈட்டுத்தொகை வழங்க வேண்டும்..

2. தமிழக காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதற்கு மாறாக “வேலியே பயிரை மேய்வது போல்” ஐந்து முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரத்ன சபாபதி மீதும் மற்றும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த விசாரனை மேற்க்கொள்ளப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக் மேற்க்கொண்டு நரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும்.

3. தமிழக அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் போலியாக புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முஸ்லிம்கள் மீது அவதுர்று சுமத்தி, மனித உரிமைப் பணிகளையும் சமூக சேவைகளையும் செய்து கொண்டு வரும் மனித நீதிப் பாசறையின் மீது களங்கம் கற்பித்து, தமிழகத்தை பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதியை மீண்டும் அதே ஊரில் பணியில் அமர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும், முஸ்லிம்கள் மத்தியில் அடுத்து என்ன நாடகம் அரங்கேறுமோ என்ற அச்சத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு இதை கவணத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.

4. மனித நீதிப் பாசறையின் மீதும் கோவை முஸ்லிம்கள் மீதும் இப்பொய்வழக்கு போடுவதற்கு காரணம் என்ன என்பதையும் இதன் பின்னணியில் தேச விரோத சக்திகளின் தூண்டுதல் உண்டா என்பதையும் தமிழக அரசு கண்டறிந்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராகவும் இப்பொய் வழக்கு மூலம் சாதிக்க நினைத்த மற்றும் தூண்டுதலின் பின்னணி என்ன என்பதை கண்டறிதல் வேண்டும் எனவும் தனது அறிக்கையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் திரு.எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கோரியுள்ளார்கள்.

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையின் அறிக்கை :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்களுக்கும் மற்றும் நமது தளத்தை தொடர்ச்சியாக வாசித்து வரும் சகோதர சகோதரிகளுக்கு நன்கு அறிந்த விசயம் முதன் முதலில் காவல் துறையின் கருபு்பு ஆடு திரு.ரத்தின சபாபதியால் புணையப்பட்ட இந்த நாடகத்தை அம்பளத்துக்கு கொண்டு வந்தது நமது தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலமாகத்தான் என்பதை யாரும் மறக்க மாட்டீர்கள்.

இந்த சம்பவம் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட இந்த சகோதரர்கள் வெளியில் வரவேண்டும் என்பதற்காகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக பல சகோதரர்கள் ஆர்வமாக இருந்தார்க் அவர்களின் உதவியுடன் ரத்தின சபாபதியின் தோலுரிக்கப்பட்டு அவரின் உண்மை முகம் பல கட்டுரைகளின் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டது. இன்னும் பல நமது சமூக இயக்கங்களையும் தொடர்பு கொண்டு இயக்க பேதம் பாராமல் ஒற்றுமையாக இந்த பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டும் என்று வலியுருத்தப்பட்டது.

நிகழ்வின் உச்சகட்டமாக அரசில் அங்கம் வகித்தும் சமுதாய ஒற்றுமை கருதி தமுமுக வும் மனித நீதிப் பாசறையினருடன் கைகோர்த்து ரத்தின சபாபதி எனும் இந்த நுன்கிருமிக்கெதிராக களம் இரங்கியது. தமுமுக வின் பொதுச்செயளாலரும், வக்ஃப் வாரியத் தலைவரும் ஆன திரு.ஹைதர் அலி மற்றுமு் திரு உமர் அவர்களும் நேரடியாக கோவை வந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்ததோடு இவ்வழக்கில் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அரசை வலியுருத்தினர். பிரபல மனித உரிமை ஆர்வலர் திரு.கோ. சுகுமாறன் போன்ற பல மனித உரிமை ஆர்வலர்களையும் அமைப்புகளையும் நாம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இவ்வழக்கில் நீதி விசாரனை நடத்த வேண்டி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டினோம்.

பல்வேறு தரப்பினரின் முயற்சியின் விளைவாக கடந்த ஆகஸ்ட் 01, 2006 அன்று தமிழக முதல்வர் திரு.மு.கருனாநிதி அவர்கள் இந்த வழக்கில் தொடாபுடைய காவல்துறையின் கருப்பு ஆடு இரத்தின சபாபதியை இடமாற்றம் செய்தும் நீதி விசாரனை நடத்த வேண்டியும் உத்தரவிட்டர். இனறு அந்த நீதி விசாரனையின் அறிக்கையில் நாம் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதி வந்தோமோ அதுவே உண்மை என அறியத் தரப்பட்டுள்ளது. காவல் துறையின் கருப்பு ஆடகளின் முகத்திரை கிழித்து எறியப்பட்டுள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கு.

இது நமது சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டங்களின் எந்த ஒரு கால கட்டத்திலும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பங்கெடுக்கவில்லை என்பதை சமுதாயம் கட்டாயம் அறிய வேண்டும். இவர்களைத் தவிர அனைத்து தரப்பினரும் இணைந்து போராடியதன் விளைவு குறைந்தபட்சம் இந்த சி.பி.சி.ஐ.டி யின் விசாரனை அறிக்கை இந்த சமுதாயத்துக்கு எதிராக பின்னப் பட்ட சதிவலையின் உண்மை முகத்தினை உலகம் அறியத் தந்துள்ளது. இன்னும் இதன் பின்னால் உள்ளவர்கள், உண்மை குறிக்கோள் என்ன என்பது தெறிய வரவில்லை.

தமிழக அரசும் முதல்வர் கலைஞர் அவர்களும் தனது ஆட்சிக்காலத்திற்குள்ளாகவே அப்பாவி இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தறித்து ஒரு சமுதாயத்திற்கெதிராக மக்களை திசை திருப்பி, தமிழகத்தை கலவரக் காடாக்க சதி செய்த சமூக விரோதி தமிழக காவல்துறையின் கருப்பு ஆடு ரத்தின சபாபதியையும் அவருக்கு துனை நின்ற அதிகாரிகளையும் உடனடியாக நடவடிக்க எடுத்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இன்னும் இந்த சம்பவங்களுக்கு பின்னால் உள்ளவர்களையும் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். தமிழக முதல்வர் செய்வார் என் எதிர் பார்ப்போம். தமிழக முஸ்லிம் அமைப்புகள் இனிவரும் காலங்களிலும் தமிழக முஸ்லிம்களுக்கெதிராக ஃபாசிச சக்திகளால் தொடுக்கப்படும் தாக்குதல்களை இயக்க பேதம் பார்க்கமல் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும்.

நன்றி
முகவைத்தமிழன்

தொடர்புடைய கட்டுரைகள்

1. MNP தீவிரவாதிகள் காவல்துறையின் சதி? EXCLUSIVE

2. கோவை சம்பவம் சிபிஐ விசாரனை தேவை – தமுமுக

3. மனித நீதி பாசறை செய்தியறிக்கை (PRESS RELEASE)

4.தமிழக அரசை கலங்கப் படுத்த சதி!!

5. பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி?

6. உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேட்டி (கோவை)

7. முதல்வர் அவர்களே நீதி விசாரனைக்கு உத்தரவிடுங்கள்!!

8. ரத்தின சபாபதி கைதாவாரா? CBCID விசாரனை

9..இரத்தின சபாபதி மாற்றம்-நீதி விசாரணைக்கு கலைஞர் உத்தரவு

10. மனித நீதி பாசறை செய்தியறிக்கை (PRESS RELEASE)

11.தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது

பிப்ரவரி 26, 2008

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் (VIDEO)

Filed under: இம்தாதி, ஹிஜ்ரத், hijrat, imthadhi, video — முஸ்லிம் @ 9:53 பிப

“ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்”

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

நெல்லை தமுமுக பொதுக்குழு தீர்மானங்கள்

Filed under: நெல்லை தமுமுக — முஸ்லிம் @ 5:18 பிப

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்கரன்கோவில் கலைஞர் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 24.02.2008 அன்று நடைபெற்றது.

இப்பொதுக் குழுவை மாநில துனைச் செயளாலர் எஸ்.மைதீன் சேட்கான் தலைமை ஏற்று நடத்தினார். இதில் மாவட்ட தலைவர் பாளை ரஃபீக், மாவட்ட செயளாலர் ஐ.உஸ்மான் கான், மாவட்ட பொருளாலர் புளியங்குடி செய்யது அலி, மாவட்ட துனை தலைவர் மைதீன் பாரூக், மாவட்ட துனை செயளாலர்கள் மெளலவி மிஸ்பாஹி, மீரான் மைதீன், அன்சர், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர மற்றும் கஜளைக் கழக நிர்வாகிகளுடன் தலைகைம் கழக பேச்சாளர் மெளலவி காசீம் பிர்தெளசி ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்களை வாசிப்பதற்று கீழே சொடுக்கவும். .

நெல்லை பொதுக்குழு தீர்மானம் பக்கம்-01
.
நெல்லை பொதுக்குழு தீர்மானம் பக்கம்-02

பிப்ரவரி 25, 2008

ரியாத்தில் MNP நடத்திய மாற்றுமத சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Filed under: ஈத் மிலன், MNP, non muslim programe, riyadh mnp — முஸ்லிம் @ 8:58 பிப
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்…

ரியாத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


மனிதநீதிப்பாசறையின் சார்பாக, பதியா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தின் உதவியுடன் மாற்று மத சகோதரர்களுக்கு (ஈத்மிலன்) பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 21-2-2008 அன்று இரவு 8:15 மணியளவில் பத்ஹா லாவண்யா ரெஸ்டாரண்ட் அரங்கில் நடைபெற்றது.


சகோதரர் கவுஸ் அவர்கள் இறைவசனம் ஓத சகோதரர் ரமுஜூதீன் அவர்களின் வரவேற்புரையோடு துவங்கிய நிகழ்ச்சிக்கு மனிதநீதிப் பாசறையின் ரியாத் மாநகரப்பொருப்பாளர் சகோதரர் ஜூனைத் அவர்கள் தலைமை தாங்கினார். பதியா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தைச்சார்ந்த டாக்டர் அஷ்ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஹஸன் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்.

ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரத்தின் தலைவர் மௌலவி ஷிஹாபுதீன் மண்னானி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன்தான் நமக்கு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் வழங்கினான். அவனின் வழிகாட்டுதலின்படியே நாம் வாழவேண்டும். இறுதியில் அந்த இறைவனின் நாட்டப்படியே நாம் இறக்க வேண்டும் என்கிற உண்மைகளை உள்ளடக்கி நடப்பு நிகழ்வுகளை உதாரணமாக்கி ‘இஸ்லாம் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் அறிவகம் அழைப்புக்குழுவின் பொருப்பாளர் மௌலவி அப்துல்காதர் ஹஸனி அவர்கள் உரையாற்றினார். மாற்று மத சகோதரர்களின் கேள்விகளுக்கு மௌலவி அப்துல்காதர் ஹஸனி மற்றும் சகோதரர் ரஃபீக் அவர்களும் அழகிய முறையில் பதிலளித்தார்கள்.


சிறப்பு விருந்தினர்களுக்கு அறிவகத்தின் சார்பாக நினைவுப்பரிசுகளை மனிதநீதிப்பாசறையின் பொருப்பாளர் வழங்கினார். நிகழ்ச்சியில் ரியாத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் 150 க்கும் மேற்பட்ட மாற்றுமத சகோதரர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு அறிவு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் உண்மைப்படுத்தப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்பதை ஏற்றுக்கொண்ட மனநிலையில் பிரிந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் பரிசுகள், இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களும், சி.டி. க்களும் வழங்கப்பட்டன. சகோதரர் சையத் ஷாகுல்ஹமீத் அவர்களின் நன்றியுரையோடும், இரவு விருந்து உபசரிப்போடும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

பிப்ரவரி 24, 2008

த.த.ஜ நடத்திய புரட்சி திருமணம்

மேலப்பாளையம் த.த.ஜ.வின் புரட்சித் திருமணம்.

திருமணங்கள் வித விதமாக நடை பெற்று வருகின்றன. ஆடம்பரங்களை ஒளிப்பதில் முன்னணியில் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் த.த.ஜ. பல விதமான எளிய திருமணங்களை நடத்தி வந்துள்ளது. அதில் ஒன்றுதான் 17.2.2008 அன்று நடந்த த.த.ஜ.வைச் சார்ந்த ஹைதர் என்பவனுக்கு நடந்த புரட்சித் திருமணம்.

வீட்டில் வழக்கம் போல் எரியும் விளக்குகள் மட்டுமே எரிந்தது. திருமணம் என்பதற்காக ஒரு சிறு விளக்கு கூட கூடுதலாக இடம்பெறவில்லை அந்த அளவுக்கு எளிமை புதுமை புரட்சி. த.த.ஜ.வைச் சார்ந்த இந்த ஹைதர் என்பவன் மேலப்பாளையம் அல் இர்சாத் பெண்கள் கல்லூரியில் வாட்ச் மேனாக வேலை செய்து வந்தான்.

இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் வாட்ச் மேனாக இருந்தவன் அந்த கல்லூரி பேராசிரியைகளை வாட்ச் பண்ணி வந்திருக்கிறான். இவனது வலையில் ஒரு பேராசிரியை வீழ்ந்து விட்டார். அவர்களது பாசையில் உஸ்தாதாவை மடக்கி விட்டான்.

ஹாமீம்புரத்திலிருக்கும் மடங்கிய உஸ்தாதாவின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து இருக்கிறான் அல் இர்சாத் பெண்கள் கல்லூரி வாட்ச் மேன் ஹைதர் பல நாள் திருடன் ஒரு நாள் கையும் களவுமாக அகப்பட்டு விட்டான். அல் இர்சாத் பெண்கள் கல்லூரி உஸ்தாதாவுடன் பிடிபட்ட அல் இர்சாத் பெண்கள் கல்லூரி வாட்ச் மேன் ஹைதர் விஸிட் விஸா எடுத்து துபை ஓடி விட்டான்.

துபையில் தூய தவ்ஹீது வாதியாய் வலம் வந்து விஸா முடிந்து ஊர் வந்துள்ளான்.ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கியவனை மடக்கி பிடித்து கட்டி வைக்கப்பட்டதுதான் அந்த புரட்சி திருமணம்.

இந்த திருமணத்துக்கு லுஹா வர மறுத்து விட்டார். ஏற்கனவே மேலப்பாளையம் அல் இர்சாத் பெண்கள் கல்லூரியில் உஸ்தாதாவாக வேலை செய்த விதவைப் பெண்ணை கணக்கு பண்ணினார் என்ற குற்றச்சாட்டு லுஹா மீது உள்ளது. எனவே இந்த திருமணத்துக்கு லுஹா வரவில்லை. மஸ்ஜிதுர்றஹ்மான் நிக்காஹ் புக்கும் பயன்படுத்தப்படவில்லை

இது கட்டி வைக்கப்பட்ட திருமணம். வீட்டில் வழக்கம் போல் எரியும் விளக்குகள் மட்டுமே எரிந்தது. எனவே நபி வழி என்கின்றனர். இப்படித்தான் அல் இர்சாத் பெண்கள் கல்லூரி முதல்வர் சுலைமான் திருமணமும் நடந்தது என்கின்றனர்.அவர் ஒரு உஸ்தாதாவை திருமணம் செய்யும்போது இப்படித்தான் அவர் வீட்டிலும்.வீட்டில் வழக்கம் போல் எரியும் விளக்குகள் மட்டுமே எரிந்ததாம் இது நபி வழி அல்ல அல் இர்சாத் பெண்கள் கல்லூரி முதல்வர் சுலைமான் வழி உஸ்தாதாக்கள் நிலையே இது என்றால் மாணவிகள் கதி என்ன?

இப்படிக்கு,
சப்பாணி ஆலீம் தெரு மாப்பிள்ளை
மேலப்பாளையம்

பிப்ரவரி 23, 2008

அற்புத வேதம் அருள் மறை குர்ஆன் (PART-01)

Filed under: amazing book, quran software, zakariya — முஸ்லிம் @ 9:03 முப

“அற்புத வேதம் அருள் மறை குர்ஆன் (PART-01)”

பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

Engineer. Rafiq Zakariya

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

.
தமிழ் முஸ்லிம் மீடியா
Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.