தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 2, 2008

ஏன் இந்த அவலம்?

அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி…இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?

( நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில்(பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; ( நபியின்) வீட்டையுடையவர்களே!உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(33:33)

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! த.த.ஜ இயக்கத்தின் உறுப்பினர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குக் கருணாநிதி செய்த துரோகத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டமும் அதில் பி.ஜே ஆற்றிய உரையும் த.த.ஜ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்போராட்டத்துக்கு பெண்களைத் தெருவில் இறக்கவேண்டிய நிர்பந்தம் என்ன வந்து விட்டது ? அதுவும் பல பெண்களும் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ளாத நிலையில். சில இடங்களில் ஆணும் பெண்ணும் மிக்சிங். ஏன் இந்த அவலம்! ரோட்டில் தொழுகை நடத்தவேண்டிய அவசியம் என்ன ? இறைவனுக்குச் செலுத்தவேண்டிய மிசக்சிறந்த வணக்கமாகிய தொழுகையைப் போராட்டக் கருவி ஆக்கிவிட்டார்களா ? தர்காவுக்குப் பெண்கள் செல்வதால் ஆண்களும் பெண்களும் கலந்துவிடுவதால் அநாச்சாரம் நடக்க வாய்ப்பு உள்ளது. பி.ஜே உரையில் நான் கேட்டவை இவை. ஆர்ப்பாட்டத்தில் ஆண்பெண் கலத்தலும் பெண் தனது குரலை உயர்த்திக் கோஷமிடுவதும் அநாச்சாரம் இல்லையா ?

தொழுகையில் இமாம் மறந்து விட்டதை ஒரு பெண் உணர்த்த நினைத்தால் கூட ஆண்களுக்கு சுப்ஹானல்லாஹ் என்று கூறச் சொன்ன நபி(ஸல்) அவர்கள் பெண்கள் அவ்வாறு கூற அனுமதிக்கவில்லையே ? அவள் கைதட்டுவதன் மூலம் உணர்த்தினால் போதும் என்றல்லவா கட்டளையிட்டனர் ? ஏன் ஆண்கள் இருக்கும் சபையில் பெண் தனது சப்தத்தை உயர்த்தக் கூடாது என்றுதானே ? அல்லாஹ்வைத் துதிக்கும் சுப்ஹானல்லாஹ் என்ற சப்தத்தையே பெண் உரத்துக் கூறக்கூடாது என்றால் பெண்களைக் கொண்டு அரசியல் கோஷமிடும் இயக்கம் தான் தவ்ஹீதின் பால் வழிநடத்தும் இயக்கமா ? அந்நியரின் மனைவிகளை , தாய்மார்களை , அவர்களின் பெண்களை பொதுமக்களுக்குக் காட்சிப் பொருளாக்கும் செயல் நியாயம் தானா ?

வேதனையுடன்

முக்ரின்

தொடர்புடைய கட்டுரை :

”துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்”” என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?….

….சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது…..

….ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது…..

”இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க”” என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்…..

”இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா”” என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்…..

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.