தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் ‘சிராஜுல் உம்மத்’ முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் ‘இஸ்லாத்தில் மருத்துவம்’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் – 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் – 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10, 2008

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

Filed under: ஈமான், கடல், கண்காட்சி, கீழக்கரை — முஸ்லிம் @ 8:15 பிப

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட
பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை
இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம்
கூறியதாவது :

வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர்
கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்
மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி
பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம்,
கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ்
உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில்
பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.

பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா
நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட
அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும்.
இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம்
உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.

தகவல் :

கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்

மார்ச் 30, 2008

துபாய் ஈமான் அமைப்பு நிகழ்ச்சியில் மௌலவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத்


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.

சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி

தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888

http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
http://www.muduvaihidayath.blogspot.com
http://www.indianmuslimassociation.blogspot.com

மார்ச் 23, 2008

ஈமானில் உறுதி வேண்டும் – மெளலவி.அலி அக்பர் உமரி(வீடியோ)

Filed under: ali akbar, அலி அக்பர், இமான், ஈமான், eman, IMAN — முஸ்லிம் @ 9:37 பிப

“ஈமானில் உறுதி வேண்டும்”

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.

Al-Sheikh. Ali Akbar Umari

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

மார்ச் 10, 2008

ஈமானை பலப்படுத்துவோம் (VIDEO)

Filed under: ஈமான், ஜமால் மதனி, video — முஸ்லிம் @ 10:22 பிப

“ஈமானை பலப்படுத்துவோம்”

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

ஒக்ரோபர் 5, 2007

துபாய் ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

Filed under: இஃப்தார், ஈமான், துபை — முஸ்லிம் @ 9:49 பிப
துபாய் ஈமான் நோன்பு திறப்பு சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர்



துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு சார்பில் வருடந்தோறும் ரமலான் முழுவதும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியை வழங்கி வருவதே இதன் சிறப்பம்சம். தினந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிகு நிகழ்ச்சியை அறிந்த துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி தானும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவலாய் இருப்பதை தெரிவித்தார்.

இதனையடுத்து ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வியாழன் மாலை வருகை புரிந்த கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி , கன்சல் திருமிகு பி.எஸ். முபாரக் ஆகியோரை ஈமான் அமைப்பின் கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர்கள் அல்ஹாஜ் அஹமது முகைதீன் , அல்ஹாஜ் அப்துல் கத்தீம் , அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் , பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி , பொருளாளர் மீரான் முஹைதீன் , கல்விக்குழுச் செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா , மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் , விழாக்குழுச் செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் , ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் , ஜமாஅத ஒருங்கிணைப்பாளர் கீழை ஹமீது யாசின் , சுவாமிமலை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

நோன்புக் கஞ்சியை அருந்தி மகிழ்ந்த கன்சல் ஜெனரல் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சியை தயாரித்து வழங்கும் குழுவினரைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு செய்து வரும் சமுதாயப் பணிகள் சிறப்புற வாழ்த்தினார்.

செய்தி : முதுவை ஹிதாயத்

ஓகஸ்ட் 8, 2007

DUBAI ல் ஈமான் நடத்தம் மிராஜ் இரவு நிகழ்ச்சி

Filed under: ஈமான், Dubai Miraj, IMAN — முஸ்லிம் @ 10:29 முப
துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கும் துபாய் ஈமான் அமைப்பு அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அருளப்பெற்ற அஹ்மது நபி ( ஸல் ) அவர்களின் புனித மிராஜ் இரவையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை இஷாத் தொழுகைக்குப் பின்னர் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சி துபை தேரா பகுதியில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்தப்படுகிறது.

ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹபிதின் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலவி அல்ஹாஜ் எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ ”புனித மிராஜ் இரவு’ குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்புரைக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு பள்ளியின் மேல் தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888 மற்றும் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ ஹமீது யாசின் 050 475 3052/042661415 ( மாலை 6 மணிக்கு மேல் ) ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் :
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.