தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 28, 2008

NCHRO செய்தி அறிக்கை

Filed under: nchro — முஸ்லிம் @ 8:43 பிப

1. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினர் நிகழ்த்திய வன்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி சதாசிவா கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசின் சார்பாக நிவாரணத்தொகை அளிக்கப்பட்டதில் குறைவான நபர்களே பயனடைந்துள்ளனர்.

மேலும் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டு தொகை அளிக்கப்பட வேண்டும் என்றம் வன்கொடுமைகள் செய்த அதிரடிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 20.04.2008 அன்று மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், சோகோ டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மகபூப்பாட்ஷா, மனித உரிமைக் குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சோ. இராசன் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதர மனித உரிமை இயக்கங்களின் சார்பாக சத்தியமங்கலத்திலிருந்து சென்னை வரை நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நடைபயணம் சத்தியமங்கலத்தில் தொடங்கிய உடனேயே தமிழக அரசு அந்தப் போராட்டத்திற்கு தடைவிதித்துள்ளது. மேலும் நடைபயணத்தில் கலந்து கொண்ட மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன், சோக்கோ டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மகபூப் பாட்ஷா, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சே. இராசன் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் தமிழக அரசின் செயலை NCHRO வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் அனைவருக்கும் இழப்பீடு வழங்கி தவறு செய்த அதிரடிப்படையினர் மீது நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டுமென NCHRO தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

2. திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போடச் சென்ற நான்கு குழந்தைகள் இறந்தது மிகவும் பரிதாபத்திற்குரியது. நோய்வராமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இத்தகைய தடுப்பூசிகள் உயிர்க் கொல்லியாக மாறுவது சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கினையும் மக்களின் மீதான அக்கறையின்மையையும் காட்டுகின்றது.காலாவதியான தட்டம்மை தடுப்பூசி மருந்தினைப் போட்ட அரசு மருத்துவர், செவிலியர் மற்றும் அசிரத்தையாக செயல்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல காலாவதியான தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டு அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்பதையும் NCHRO கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
தி. லஜபதிராய். M.L
தலைவர்,
NCHRO தமிழ்நாடு
Mobile 98432 51788

ஏப்ரல் 19, 2008

NCHRO வின் தமிழ்நாட்டிற்கான நிர்வாகிகள் தேர்வு

Filed under: MNP, nchro — முஸ்லிம் @ 9:16 முப


NCHRO வின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் தேர்வு

மனித உரிமை இயக்ககங்களின் தேசிய கூட்டமைப்பிபின் (NCHRO) தமிழ்நாடு மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று (18.04.2008) சென்னையில் நடைபெற்றது. இதில்NCHRO வின் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஓ.க. முஹம்மது ஷரீஃப் சிறப்புரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் குறித்தும், காவல்துறையின் போலி என்கவுன்டர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, NCHRO வின் தமிழ்நாடு மாநில கிளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் NCHRO வின் தமிழ்நாடு மாநில பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

1. வழக்கறிஞர் தி. லஜபதிராய் மதுரை தலைவர்



2. நிஜாமுதீன், Ex.M.L.A நாகப்பட்டிணம் துணைத் தலைவர்

3. வழக்கறிஞர், ஜஹாங்கீர் பாதுஷா, மதுரை துணைத் தலைவர்

4. முஹம்மது முபாμக், நெல்லை பொதுச் செயலாளர்

5. பேராசி. அ. மார்க்ஸ், சென்னை செயலாளர்

6. வழக்கறிஞர், ரஹமத்துல்லாஹ், மேட்டுப்பாளையம் செயலாளர்

7. வழக்கறிஞர், விவேகானந்தன், கும்பகோணம் செயலாளர்

8. வழக்கறிஞர் முஹம்மது அலீ ஜின்னா, மதுரை பொருளாளர்

9. ஷக்கூர், சென்னை மக்கள் தொடர்பு அதிகாரி (PRO)

செயற்குழு உறுப்பினர்கள்

1. வழக்கறிஞர், N.M. ஷாஜஹான், மதுரை

2. வழக்கறிஞர், நவ்ஃபல், கோயம்பத்தூர்

3. வழக்கறிஞர், முஹம்மது அப்பாஸ், மதுரை

4. வழக்கறிஞர், R. முருகன் குமார், திருநெல்வேலி

5. வழக்கறிஞர், எம்.எஸ். சுல்தான், மதுரை

6. சையது அலீ, நாகர்கோவில்

7. வழக்கறிஞர், A. சையது அப்துல் காதர், மதுரை

8. வழக்கறிஞர், ஹரிபாபு, சேலம்.

9. அ. முஹம்மது யூஸுஃப் மதுரை



கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:



1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அμசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போμணிட்டக் களத்தில் ஒரு மைல் கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனை வைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகத்தில் போலி என்கவுண்டர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதையே காட்டுகின்றது. இந்தப் போக்கை NCHRO வன்மையாகக் கண்டிக்கிறது. போலி என்கவுன்டர்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று தமிழக அμசை NCHRO கேட்டுக் கொள்கின்றது.

3. போலி என்கவுன்டரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

4. கோவையில் கடந்த 2006ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்கு, உளவுத்துறை ஏசி. ரத்தினசபாபதியின் நாடகம் என்பதும், அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ள ஆவணங்கள் காவல்துறையினμணிலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் SIT யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கோவையில் இவ்வாறு வெடிகுண்டு பீதியைக் கிளப்பி பொது அமைதியையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கும் முகமாக சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெடிகுண்டு பழி சுமத்திய ஏ.சி ரத்தின சபாபதி, மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவர்களுடைய வைப்பு நிதியிலிருந்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக்கொள்கிறது.

5. இந்திய அμசியல் அமைப்புச் சட்டம் ச்μத்து 14 வழங்கியுள்ள சமத்துவத்திற் கான உரிமை குடிமக்கள் அனைவருக்கும் ஒன்றுபோல வழங்கப்பட வேண்டும். பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தண்டனை கைதிகளை தமிழக அரசு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யும்போது சிறுபான்மைமுஸ்லிம் சமூகம், பெரும்பான்மை சமூகம் என்ற பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் அதன் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

6. இதனை வலியுறுத்தும் விதமாகவும், சமத்துவத்திற்கான உரிமை (Article 14) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் எதிர்வரும் மே மாதம் NCHRO சார்பாக தமிழகத்தில் கருத்தμங்கம் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு

தி. லஜபதிராய்,

தலைவர், NCHRO தமிழ்நாடு,

Mb: 98432 51788, Email: nchrotn@gmail.com

Create a free website or blog at WordPress.com.