தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 22, 2008

தமுமுக மீது பொய்வழக்கு போடும் காவல் துறை

Filed under: தமுமுக, பொய் வழக்கு — முஸ்லிம் @ 8:17 பிப
தமுமுக மீது பொய்வழக்கு போடும் காவல் துறை

தினமலர் நாளிதழுக்கு நமது மக்கள் தமிழகத்தில் வைத்துள்ள பெயர்த் தினமலம். முஸ்லிம்கள் தொடர்பான பொய் செய்திகளைப் பிரசுரிப்பது அதன் அன்றாட வாடிக்கை, அத்தகைய ஒரு செய்தி தான் கீழக்கரை பெண் தொடர்பான செய்தி. அந்தப் பெண் பெரியப்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உடனே தமுமுக நகரத் தலைவர் உட்பட நிர்வாகிகள் அந்த இருவரையும் கட்டி வைத்து அடித்ததாகவும், அப்பெண்ணைப் மானபங்கம் படுத்தியதாகவும், தமுமுக நிர்வாகிகளைக் காவல்துறை கைதுச் செய்யததாகவும் தினமலர்ப் பொய் செய்தி வெளியிட்டுள்ளது. தவறு செய்த பெண்ணையும் ஆணையும் கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் தமுமுக விடம் ஒப்படைத்தார்கள். தமுமுக அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது. கீழக்கரை காவல்நிலையத்திற்கு அன்று பொறுப்பில் இருந்த சிக்கல் ஆய்வாளர் இம்மானுவேல் ராசகுமார் என்பவர் வேண்டுமென்றேத் தமுமுகவினர் மீதுள்ள தனது சொந்தப்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமுமுகவினர் மீது வழக்குப்போட்டுத் தினமலருக்குச் செய்தியை அளித்துள்ளார். சம்பவம் நடைபெறும் போது கீழக்கரை தமுமுக தலைவர் சிராஜுத்தீன் சென்னையில் இருந்தார். அவர் மீதும் வழக்கு. தற்போது பொறுப்பில் இல்லாத முன்னாள் மாவட்டச் செயலாளர் நிஸ்பர் மீதும், தற்போது வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு தமுமுக சகோதரர்கள் மீதும்; பொய் வழக்கப் போட்டுள்ளார். ராமநாதபுர காவல்துறை கண்காணிப்பாளரிடம் தமுமுக புகார் தெரிவித்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கீழக்கரை எஸ். ஐ.யின் நச்சரிப்பால் பொய் புகார் அளித்தேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பொய் செய்தியைப் பிரசுரித்த தினமலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி : Dravida Muslium

Create a free website or blog at WordPress.com.