தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 8, 2008

ஒகேனேக்கல் விவகாரம் – அரசிற்கு துனை நிற்போம் MNP தலைவர் அறிவிப்பு

Filed under: madurai, MNP — முஸ்லிம் @ 1:19 பிப

மதுரை ஏப்ரல் 08, மனித நீதிப் பாசறையின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று 07-04-2008 அன்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மனித நீதிப் பாசறையின் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது..

1. நேற்று சேதுக்கால்வாய் திட்டத்தை தடுத்து நிறுத்தியதன் மூலம் தமிழக முன்னேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டை. இன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுத்தி நிறுத்தி தமிழக மக்களின் தாகம் தீர்ப்பதற்கும் ஒரு முட்டுக்கட்டை என தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவித்து வரும் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் விஷயத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் மனித நீதிப் பாசறை உறுதுணையாக நிற்கும்
என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2. கடந்த 2000வது ஆண்டில் பாளை கிரசண்ட் நகர் பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட புளியங்குடி அப்துல் ரசீத் வழக்கில் நீதி விசாரனை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும். அவரது மகன் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய கருணைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. எனவே 2 லட்சம் கருணைத் தொகை, அவரது குடும்பத்திற்கு அரசு வேலை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. கடையநல்லூர் சமீபத்தில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த மனித நீதிப் பாசறை,மற்றும் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் தடியடி நடத்திய புளியங்குடி சμக டி.எஸ்.பி. அசோக்குமார், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீது தமிழக அμசு துறை சார்ந்த நடவடிக்கையும் இடமாற்றமும் செய்யுமாறு மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.

4. தமிழக முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையான உலமாக்கள் நலவாரியத்தை தமிழக அரசு உடனே ஏற்படுத்த வேண்டும் என இச் செயற்குழு தமிழக அμசைக் கேட்டுக் கொள்கிறது.

மார்ச் 16, 2008

வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு தடுத்த முஸ்லிம்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு கண்டித்து MNP ஆர்ப்பாட்டம்

Filed under: வக்ஃப் வாரியம், madurai, MNP, Wakf Board — முஸ்லிம் @ 7:42 பிப
அநீதிக்கெதிராக ஆர்பரிக்கும் மனிதநீதிப்பாசறையினர்

16.03.2008 அன்று காலை 11 மணியளவில் மனித நீதிப் பாசறை மதுரை மாவட்ட தலைவர் திரு. ஏ.முகம்மது காலித் அவர்க் தலைமையில் மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமத்தில் ஃபாசிச வெறியர்களான ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி தீவிரவாத கும்பல் மரணமடைந்த பென்னின் உடலை அடக்க சென்ற அப்பாவி முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலைவெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் தாக்குதலுக்குள்ளான அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ள மதவெறி படித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. டி.எஸ் அன்பு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதியோர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யக் கோரியும் மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நீதிப் பாசறையி்ன் மாநில பேச்சாளர் திரு. கே. சையது இப்றாஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். சட்டக் கல்லூரி மாணவர் திரு. ராஜா முகம்மது நன்றியுரை கூறினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளில் இருந்தும் நூற்றுக்காணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

திருவாலவாயநல்லூர் முஸ்லிம் ஜமாத்தினர் அனைவரும் மதவெறி கொண்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. அன்பு அவர்களால் பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதால் ஜமாத்தின் முன்னால் செயலாளர் திரு. சேட் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து நமக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது. உடனடியாக வக்ஃப் வாரியத் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்களும், அரசில் இசுலாமியர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமுமுக வும் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்த ஃபாசிச வெறியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுருத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இறைவன் மிகப் பெரியவன்
முஸ்லிம் ஜமாத்
திருவாலவாயநல்லூர் – 625221
திருவாலவாயநல்லூர் அஞ்சல் –
வாடிப்பட்டி தாலுகா – மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான அடக்கஸ்த்தளமான கப்ரஸ்தான் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தபோது ஆர்.எஸ்.எஸ் ஃபாசிச சிந்தனை கொண்ட சில விஷமிகளா எதிர்த்து வந்தனர். இந்த எதிர்ப்பை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது தற்போது ஆர்.டி.ஓ விசாரனையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் 14.03.2008 அன்று முஸ்லிம் பெண்மணி ஒருவர் வஃபாத்தானார் (மரணித்தார்). அந்த ஜனாஸாவை(பிரேதத்தை) 15.03.2008 அன்று அடக்கம் செய்ய எடுத்துச் சென்றோம். அப்போது அர்.எஸ்.எஸ மற்றும் இந்து முன்னணியை சோந்த சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 1 சிறுவார் உட்பட 5 முஸ்லிம்க் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் பின்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் அன்பு, ஜமாத் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உட்பட 28 முஸ்லிம்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இதில் பலர் வயோதிகர்கள். ஆனால் எதிர் தரப்பில் ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவு அன்பு இந்து முன்னணிக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு நடக்கும் இத்தகைய கொடுமைகளையும் பல அதிகாரிகளிடம் கொண்டு சென்றுள்ளோம்.

குறிப்பாக வக்ஃபு வாரியத்திடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று பல மாதமாகி விட்டது வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியை நேரடியாக சந்தித்து வக்ஃபு நிலத்தை மீடு்க வேண்டும் என்று மனு நாம் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெறியவில்லை.


எனவு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பொய்வழக்குகளையும் கவணத்தில் கொண்டு பள்ளிவாசல் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் ஒருதலைப்பட்சமாக நடக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ் அன்பு மீது நடவடிகடகை எடுக்கவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஜமாத்தின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

இவன்
சேட்
முன்னாள் செயலாளர்

Create a free website or blog at WordPress.com.