தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 19, 2008

இமயத்தை விஞ்சும் தியாகத்தின் சொந்தமே – சுதந்திர தின சிந்தனைகள் (AUDIO)

Filed under: IDMK — முஸ்லிம் @ 5:21 பிப


கடந்த 2007 ம் ஆன்டு இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட சுதந்திர தின சிந்தனைகள் ஆடியோ வெளியீடு.

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் ஐபெக் அவர்கள் இமயத்தை விஞ்சும் தியாகத்தின் சொந்தமே!! என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.

உரையை கேட்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு
CLICK HERE TO LISTEN OR DOWNLOAD
.
தமிழ் முஸ்லிம் மீடியா
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

பறக்கட்டும் நம் தேசியக் கொடி! சிறக்கட்டும் நம் தேசம்!!

Filed under: IDMK — முஸ்லிம் @ 5:17 பிப

பறக்கட்டும் நம் தேசியக் கொடி! சிறக்கட்டும் நம் தேசம்!!

FLAG

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைத் தொட்டு இருக்கிpறோம். முகில் கிழித்து அசைந்தாடும் நம் தேசியக் கொடியைப் பார்க்க விழிகள் தாவுகின்றன. சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆர்த்து எழுந்து ஜாதி மதம் இனம் மொழி கடந்து போராடினோம். ஆம், 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதி கூற்றுக்கு அர்த்தம் கொடுத்தோம். ஆகஸ்ட் 15, தித்திப்பான நாள். வெள்ளை ஆதிக்கம் வெளியேற்றப்பட்ட நாள், நம்மை நாமே ஆளுவதற்கு வழி கண்ட நாள்.

நம்முடைய தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைப்பற்றி சர்.மௌண்ட்பேட்டன் பிரபு வேதனையோடு கண்ணீர் மல்க கூறிய வார்த்தைகளை மறந்து விட முடியாது. அடிமை இந்தியாவில் பீரங்கிகளுக்கும், டாங்கிகளுக்கும் இடையில் வந்த போது, ஆம், அடிமை இந்தியாவில் வலம் வந்த போது நாங்கள் அவரைப் பாதுகாத்தோம், ஆனால் சுதந்திர இந்தியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திரத்தை நீங்கள் எங்கே காக்கப் போகிறீர்கள் என்று வேதனையோடு கூறினார். மிச்சமுள்ள தோட்டாக்கள் ஆங்காங்கே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், எதிராக வெடித்துக் கொண்டு இருக்கின்றன இன்றும். வறுமை, இல்லாமை, கல்லாமை, மூட நம்பிக்கை, ஜாதி, மத மோதல் என் தாய்த் திருநாட்டில் நடப்பது கண்டு வேதனை அளிக்கிறது. நம் தேசியக் கொடியின் மூன்று நிறங்கள் – தியாகம், பசுமை, தூய்மை போன்றவற்றை பாரத மக்களுக்கு பகர்கின்றன.

தேசியக் கொடியை ஏற்றுவோர்களே! ஆட்சியாளர்களே! அரசு அதிகாரிகளே! உங்கள் இதயத்தில் ஒன்றை ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள். தேசியக் கொடி துணியாலும், நூலாலும் நெய்யப்பட்டது அல்ல, இந்திய பன்மைச் சமுதாய மக்களின் இரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் பின்னப்பட்டது. அதை உடைக்கும் உளுத்தர்களை இனம் கண்டு ஊதையில் துரும்பு போல் ஆக்கிவிடுங்கள். ஆம், நீதி, நேர்மை, வாய்மையை உயரே பறக்க விடுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை உயரே பறக்கட்டும், மானுடம் சிரிக்கட்டும், இந்தியா உயர்ந்து நிற்கட்டும், உலகமே நம்மைப் பார்த்து படிப்பினை பெறட்டும், பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்ற பாடல் பட்டுத் தெறிக்கட்டும் எட்டுத்திக்கும் என்று சுதந்திரப் பொன்நாளை வற்றாத வாஞ்சையோடு வாழ்த்துகிறோம்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு

50/330, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

சென்னை – 600 005

தமிழ்நாடு செல்: 9943802111, 9786011679, 9344510369

ஓகஸ்ட் 12, 2008

தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி அவர்கள் கூறுவது என்ன?

Filed under: IDMK — முஸ்லிம் @ 9:01 முப

IDMK தலைவரின் தமிழன் TV பேட்டி (ஆடியோ) FULL INTERVIEW

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த சகோதரர்களே!

கடந்த 03.08.2008 அன்றைய கல்ஃப் நியூஸ் (GULF NEWS) பத்திரிகையில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் டெல்லியில் கடந்த 02.08.2008 அன்று இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தால் (IICC) நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பேசியதாக சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் கூறுவது என்ன?

முஸ்லிம்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்த தவறி விட்டார்கள் அன்றியும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முஸ்லிம்களை கைவிட்டதில்லை. காரணம்,,

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் எல்லா குடிமக்களுக்கும், இந்திய பிரஜைகளுக்கும் சரிசமமான அந்தஸ்து வழங்கி இருக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம் முஸ்லிம்களாகிய நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை முறைப்படி நம் சமுதாய நன்மைகளை கருத்தில்கொண்டு தீர்க்கமாக சிந்தித்து சட்டரீதியாக அடைய முயற்சிக்க வேண்டும்.

அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்த முயற்சியுடன் அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை மற்ற சமுதாயத்திரைப்போல் பெற்று சமூக, பொருளாதார, அரசியலில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

தீர்வு : அனைத்து தரப்பு முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு அரசியல் ரீதியாக நம் வாக்குகளை ஒன்றினைத்து சட்டம் இயற்றும் சபைகளில் நம் பிரதிநிதிகளை அதிகமதிகமான அளவில் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று அனுப்பி நம் இழந்த உரிமைகளைப் பெறவும், இருக்கின்ற உரிமைகளை தக்க வைத்துக்கொள்ளவும், கல்வி-உயர்கல்வி, குறிப்பாக அரசாட்சி செய்யும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ் போன்ற கல்வி இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் உரிய இடத்தை எட்டவும் அரசாங்க அதிகாரிகளாகவும், பொது நிறுவனங்களில் இயக்குநர்களாகவும் அமர்வதற்கான ஏற்பாடுகளை சமுதாயத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டும். இதற்கு முதற்படியாக இந்திய தேசிய மக்கள் கட்சியை அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கிய உரிமைக்கு ஏற்ப, தலைமை தேர்தல்கமிஷனின் தக்க அங்கீகாரத்துடன் அமைத்துள்ளோம். தமிழகத்தில் 48 அரசியல் கட்சிகள் தேர்தல்கமிஷனின் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உட்பட, ஆனால் அந்தோ பரிதாபம் முஸ்லிம் லீக் உட்பட, தமுமுக, ததஜ மற்ற லீக்குகள் என்று எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் எந்த அங்கீகாரத்தையும் பெறாமலேயே களத்தில் கவிபாடிக்கொண்டு நிற்கின்றன. இப்படி இருந்தால் தலைமைநீதிபதி அஹமதி கூறுவதைப்போன்று எப்போது நமது அங்கீகாரத்தை எப்படி அடைவது?

தீர்ப்பு உங்கள் கையில்.

இவண்,
அப்துல் ரவூப்.
அபுதாபி

ஜூலை 25, 2008

அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள்

Filed under: அபுதாபி, வீடியோ, IDMK, video — முஸ்லிம் @ 10:20 பிப
WWW.IDMK.ORG

கடந்த 24.06.2008 அன்று அபுதாபியில் உள்ள கேரளா அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கு கொண்டது ஞாபகம் இருக்கலாம். அந்ந நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் மிகச் சிறப்பான் உரை ஒன்ற ஆற்றினார்கள். மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி, இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. குத்புதீன் ஐபக், திரு. வருசைக் கனி ஆகியோர் ஆற்றிய உரையின் வீடீயோ தொகுப்பு இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை காணவோ, டவுன்லோட் செய்யவோ கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.

அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள்

திரு. வருசைக் கனி, திரு. அப்துல் ரவூப் பாக்கவி, திரு. குத்புதீன்

ஜூலை 23, 2008

IDMK புகைப்பட காட்சிகள் – (சி.டி வெளியீட்டு நிகழ்ச்சி துபாய்)

Filed under: துபாய், புகைப்படங்கள், IDMK, pictures — முஸ்லிம் @ 8:42 பிப

கடந்த 20.06.2008 அன்று துபாய் மன்டல இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கட்சி உள்ளரங்க பொதுக்கூட்டம் மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழச்சியில் துபாய் மாகானத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களில் பணிபுறியும் முக்கிய புள்ளிகளும், பொறியாளர்களும், அறிவு ஜீவீகளும் கலந்து கொண்டனர். நிகழச்சியின் புகைப்படத் தொகுப்பை கீழே சொடுக்கி காணவும்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின்
கொள்கை விளக்கப் பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா
புகைப்படக் காட்சிகள் – துபாய் மாகாணம்

சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை

Filed under: சுதந்திரம், IDMK, ilahi, Riyadh TMMK — முஸ்லிம் @ 9:43 முப
“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை”

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் …..தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை.

” உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக” என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. “ஐடிஎம்கே” அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.

தமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ

{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே!) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே! ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே!

ஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு! இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும்? என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.

தமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும்? இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ்ளத் தெளிவாக புரியும்.

* ஜமாஅத்தே இஸ்லாமியா? மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.

* தௌஹீத் ஜமாஅத்தா? பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.

* சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)

* தரீக்கா குரூப்பா? முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.

* தப்லீக் ஜமாஅத்தா? தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.

மேலே சொன்ன இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

நீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிலை சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்

பாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது! அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையம் அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

எம்.ஏ.முஹம்மது அலீ

நன்றி : க.அ. முகம்மது பஸ்லுல் இலாஹி அவர்களின் வலைப்பதிவு

ஜூலை 22, 2008

குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

Filed under: அரசியல், IDMK — முஸ்லிம் @ 6:04 முப
இந்திய தேசிய மக்கள் கட்சியின் எழுச்சிமிகு கொள்கைப் பாடல்களை கேட்பதற்கு அல்லது டவன்லோட் செய்வதற்கு இங்கு சொடுக்கவும்.
www.idmk.org
‘குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் கழிப்பறை கட்டியதில் தான் முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். தலித்களைவிட கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் மிக, மிக பின் தங்கி உள்ளனர். இதற்கு காரணம் தகுதியற்ற தலைமைத்தனம் என்ற பிரண்ட்லைன் கூற்றை மறந்துவிட முடியாது. முஸ்லிம் லீக்கை குறை சொல்லி உரிமை, உணர்வு என வார்த்தைகளில் உஷ்ணத்தை ஏற்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், என போலி வேஷம் போட்டு ஆரவாரத்தோடு புறப்பட்ட த.மு.மு.க விழலுக்கு இறைத்த நீராய் 60 ஆண்டு முஸ்லிம் லீக்கின் ஏமாற்றும் வேலையை கச்சிதமாய் செய்து இருக்கிறது. ஆம் 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கும் சாதனையை வெற்றிகரமாய் நிகழ்த்தி இருக்கிறது. கோவை 19 உயிர்கள் பலி, கப்ருஸ்தான் இடிப்பு, பள்ளி உடைப்பு, மீரட், மண்டைக்காடு, கான்பூர், குஜராத், என சமூகத்தின் அவலங்களை காட்சி பொருளாய் கடை விரித்து, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றவர்கள்….

இன்று அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் சூது வலையில் சிக்கி, உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அரசியல் இல்லை, தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர்பல்டி, இட ஒதுக்கீட்டு துரோகத்திற்கு பாராட்டு, அரசியல் ஹராம், ஈடுபட மாட்டோம் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மேடைதோறும் விளம்பிய காட்சி, நடிப்பதில் நடிகர்களை மிஞ்சிய மாட்சி, லட்சியத்தை மாற்றி, மாற்றி பேசுவதிலும் தன்னை நம்பி வரும் தொண்டர்களை முட்டாளாக்கி வைத்துக் கொள்வதில் அரசியல்வாதிகளை விஞ்சிய அரசியல் வியாதிகள் த.மு.மு.க என்றால் மிகையில்லை. இளைஞர்களே சிந்தியுங்கள்.

சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக் கொண்டு சமூகத்தை ஏய்த்தவர்கள், ஒற்றுமையை உடைத்து இமாலய சாதனையைச் செய்தவர்கள், மற்றவர்களின் பார்வைகளில் இஸ்லாமிய சமூகத்தை சர்க்கஸ் கோமாளிகளாக காட்சி அளிக்க வைத்தவர்கள். இவர்களின் குழப்பத்தின் உச்சகட்டத்தை கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் தஞ்சம் புக வேண்டிய நிலையை ஏற்படுத்தியவர்கள். இன்று எங்கே நம் த.மு.மு.க கூடாரம் கலைந்து விடுமோ! என அஞ்சி அற்புதமான வாய்ப்புகளை விட்டு விட்டு அரசியலைப் புறக்கணித்த துறவிகள், இந்திய தேசிய மக்கள் கட்சியை (ஐனுஆமு) ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். தி.மு.க.விற்கே எங்கள் ஆதரவு என நஞ்சு வைக்கும் வஞ்சகர்களின் வாயில் கதவைத் தட்டி இருக்கிறார்கள். வாழ்க என சொல்ல இதயம் வலிக்கிறது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுத்திட, சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமித்திட சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட, நம்மைக் கருவருக்கும் அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்து வஞ்சம் செய்யும் சமுதாயத் தலைவர்கள் (ளழசசல) துரோகிகளின் தூக்கு கயிற்றை அறுத்து எரிந்திட சமுதாயத்து எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள், இவற்றிற்கு வடிவம் கொடுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக களப்பணியாற்றி தலித், கிருஸ்துவ, முஸ்லிம்களை அரவணைத்துச் சென்றிட முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சியைத் துவக்கி சென்னையில் தலைமையகம் அமைத்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலையை முடித்து, துண்டு பிரசுரம், சி.டி.க்கள், கலந்துரையாடல், பொதுக்கூட்டம், கருத்து பரிமாற்றம், உலமாக்கள், அறிவு ஜீவிகள் சந்திப்பு, என சமூகத்தின் சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற அமைப்புகளை எல்லாம் ஒன்றினைத்து எதிர்கால பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிய களத்தில் நிற்கும்போது ஆம் கனிபறிக்க மரம் ஏறும் போது கருநாகம் காலைச் சுற்றுமாம்.

அதுபோன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவற விட்டு விட்டு, மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க அன்று மார்க்கத்தில் குழப்பம், இன்று அரசியலில் குழப்பம் செய்ய வருகின்றனர். இளைஞர்களே எச்சரிக்கை. ஜமாத்தார்களே, சமுதாயப் பெரியவர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ள நரி செயல்கள் ஒடுங்கட்டும். அதன்மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும், மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித் தன்மை தமிழ்த் தரணியில் சிறக்கட்டும், வருங்கால சந்ததிகள் நம்மைப் போற்றட்டும்.

குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல முற்றுப்புள்ளி வைப்போம். வாரீர்! வாரீர்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
50ஃ330இ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005
தமிழ்நாடு செல் : 994380211, 9344510369, 9786011679, 9443021050

ஜூலை 14, 2008

வஞ்சிக்கப்பட்டோரே! அரசியல் வாழ்வுரிமைக்கு அழைக்கிறது IDMK

Filed under: IDMK — முஸ்லிம் @ 9:25 பிப
வஞ்சிக்கப்பட்டோரே! அரசியல் வாழ்வுரிமைக்கு அழைக்கிறது IDMK

என் இனிய சமூகத்தின் இளவல்களே! ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளே!

தாழ்ந்தவர்கள் என்பது உன்னைப் பொறுத்தது. தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. நீ திட்டமிட்டு வஞ்சகத்தின் வளையில் வீழ்த்தப்பட்டு இருக்கிறாய்.

கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடியின் தவப் புதல்வர்களே! வீரம் விளைகின்ற மண்ணுக்கு சொந்தக்காரர்களே! வேகாத பொருளை வெள்ளித் தட்டில் கொடுப்பதைப் போன்று சில சீட்டுக்களை ஒதுக்கியதால் உன் ஓலம் ஓய்ந்து விட வில்லை. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 5 தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் அன்று. மாட்டுக்கு உள்ள மரியாதைக் கூட உனக்கு இல்லை.

சில அரசியல் கட்சிகளின் முகவரியும், முகமும் தெரியாத காரணத்தினால் எலி வந்து கருவாட்டை நாடி பொறியில் மாட்டிக் கொள்வதைப் போன்று மாட்டிக் கொண்டு நிற்கிறாய். காயம் தேடும் காக்கைகளின் கொடூர செயல்களில் இருந்து உன்னைக் காத்துக் கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்வைக் குருவிகளாக அங்கொன்றும், இங்கொன்றும் காட்சிப் பொருளாய் நிறுத்தப்பட்டு இருக்கிறாய். ஆகையால்தான் சோகங்களை எண்ணிக் கொண்டு கண்ணீரைச் சிந்திக் கொண்டு நிற்கிறாய். தன்னை உணராதவனை மற்றவர்கள் அசைக்கிறார்கள், ஆம், உண்மையில் நீ அசைக்கப்படுகிறாய். அரசியலில் அடிமைப் படுத்தப் படுகிறாய்.

மானுடத்தை மானுடமாய்ப் பார்க்கின்ற மார்க்கத்தை இதயத்தில் இருத்திக் கொண்டதால் மானுடம் எங்கே காயப்படுகிறரோ அங்கே எங்கள் இதயங்கள் சலனப்படுகின்றன. அங்கே உரிமைக்குரல் எழுப்புகின்றன. உன்னை விலை பேசும் எத்தர்களை இனம் கண்டு ஒதுக்கிவிட்டு, ஆம், செத்த மீனைக் கடல் கருவாடு என்று ஒதுக்கிவிடுவது போல் ஒதுக்கி விட்டு அரசியல் உரிமைக்கு வஞ்சிக்கப்பட்ட சமூகங்களை இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) அழைக்கிறது.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
WWW.IDMK.ORG

ஜூலை 10, 2008

கீழக்கரையில் IDMK கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

Filed under: IDMK, keelakarai — முஸ்லிம் @ 11:19 முப
இந்திய தேசிய மக்கள் கட்சியின்

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும்

மத நல்லிணக்க விழா அழைப்பிதழ்

பெரிதாக்குவதற்கு புகைப்படத்தின் மேல் கிளிக் செய்யவும்

ஜூலை 3, 2008

திருச்சியில் IDMK அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி

Filed under: திருச்சி, IDMK — முஸ்லிம் @ 10:26 முப

ஓர் இறை! ஓர் குலம்!!

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுப்போம்;!!
சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமிப்போம்!!
வருங்கால சந்ததிகளுக்கு சரித்திரம் படைப்போம்!!!

திருச்சியில் திருப்புமுனை ஏற்படுத்த
இந்திய தேசிய மக்கள் கட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தேதி : 06-07-2008, ஞாயிறு
நேரம் : மாலை 6.30 மணி
இடம் : ஜெம் மஹால், சிங்காரத்தோப்பு,திருச்சி

தலைமை:

சகோ. முஹம்மத் இக்பால்
மாநில துணைப் பொதுச்செயலாளர், இந்திய தேசிய மக்கள் கட்சி

சிறப்புரையும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்
சகோ. குத்புதீன் ஐபக் M.A
மாநில தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி

உங்கள் கண்டனக் கணைகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

வீழ்ந்த சமூகத்தை அரசியலில் வீறுகொண்டு எழுப்பிட வாருங்கள் உங்கள் வாதங்கள் வலிமையான சமூகத்தை உருவாக்கட்டும்.

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369, 9443021050

WWW.IDMK.ORG

Older Posts »

Create a free website or blog at WordPress.com.