தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 25, 2008

IFT ன் மானுட வசந்தம் தற்போது இணையத்திலும்…

Filed under: மானுட வசந்தம், I.F.T — முஸ்லிம் @ 9:09 பிப

அஸ்ஸலாமு அலைக்கும்!

இஸ்லாத்தை பற்றியும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றியும் நமது சகோதர சமுதாய மக்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கும் கூட எத்தனையோ கேள்விகளும் சந்தேகங்களும் உண்டு. அவற்றை தீர்த்து வைக்கும் முகமாக மருத்துவர்.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் IFT (Islamic Foundation Trust) மூலமாக தொலைகாட்சியில் மானுட வசந்தம் என்ற நிகழ்சியை ஒளி பரப்புகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி இணையதள பயன்பாட்டாளர்களுக்காக http://www.youtube/ ல் கீழ்காணும் இணைப்புகளில் முதல் கட்டமாக பதிவேற்றம் செய்யப்பற்றுள்ளது, அதனை கண்டு பயன் பெற்று , நமது சகோதர சமுதாய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் இந்த இணைப்புகளை இ-மெயில் அனுப்பினால் பயனுள்ளதாக அமையும். இனி இன்ஷா அல்லாஹ் பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்சிகளை தங்களுக்கு இ-மெயில் மூலம் தெரியப் படுத்த விரும்பினால் இந்த இணைப்பில் உறுப்பினராக சேரவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை “தா:.வா” என்ற முறையில் அங்கீகரித்து இதனை உருவாக்கியவர்களுக்கும், துணை புரிந்தவர்களுக்கும், உங்களுக்கும் , எனக்கும் நல்லருள் புரிவானாக!

(சுவாமி தத்வபோதானந்தா அவர்கள் இஸ்லாத்தை பற்றி )

(A.அன்பரசு I.A.S அவர்கள் இஸ்லாத்தை பற்றி )

(புதுவை சட்டமன்ற துணைத்தலைவர் A.V.S. சுப்பிரமணியம் இஸ்லாத்தை பற்றி)

(Dr. K.V.S. ஹபீப் முஹம்மது அவர்கள் துவக்கவுரை)

(முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கிறார்களா?)

(இன்றைய சூழ்நிலையில் இனி ஒரு இறைதூதர் வருவாரா?)

(இஸ்லாத்தில் ஜீவனாம்சம்)

(உலகை இறைவன் படைத்தது விளையாட்டிற்காகவா?)

(ஒற்றுமையாக இருக்க வழி)

குறிப்பு : மேலே உள்ள தகவல் thamizhmuslim <thamizhmuslim@gmail.com> என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்டது. தகவலுக்காக இங்கு பதியப்பட்டுள்ளது.

நவம்பர் 24, 2007

IFT பெண்களால் நடத்தபெறும் இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி

Filed under: I.F.T — முஸ்லிம் @ 2:02 பிப

சென்னையில் பெண்களுக்காக பெண்களால் நடத்தபெறும் இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி

சென்னையில் புரசைவாக்கம் ஹோட்டல் சில்வர்ஸ்டாரில் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி 24.11.2007 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு துவங்குகிறது.

இக்கண்காட்சியை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ. தமிழரசி ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்கிரா தலைமை தாங்குகிறார். மத்திய சென்னை மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா ஜலால் முன்னிலை வகிக்கிறார்.

புத்தகக் கண்காட்சி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை நடைபெறும்.

புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய சென்னை மகளிர் அணியினர் ஏற்பாடுசெய்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு 26651031 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.